- முட்டை – 2
- வெங்காயம் சிறியது – 1
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- ப.மிளகாய் – 2
- அரைத்த மிளகு – 1/4 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- எண்ணெய் – 3-4 மேசைக்கரண்டி
வெங்காயம் மற்றும் மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மஞ்சள் தூள், அரைத்த மிளகு மற்றும் 1/8 தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து கலக்கவும்.
அனைத்து முட்டைகளையும் அடித்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் மற்றும் மசாலா கலவையை சேர்த்து அடிக்கவும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடாக்கி பாதி எண்ணெய் சேர்க்கவும்.
முட்டை கலவையை இரண்டாக பிரித்துக்கொள்ளவும்.
பாதியை கடாயில் ஊற்றவும்.
இரு புறமும் வறுக்கவும். திருப்பும் போது கவனம் தேவை.
ஆம்லெட் தயார்