SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
நவகிரகங்கள்
  • 2019-10-06 00:00:00
  • 1

நவகிரகங்கள்

நவகிரகங்கள்
நவகிரகங்கள் என்றால் ஒன்பது கிரகங்கள் என்று பொருள்

 

நவகிரகங்கள் என்றால் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு மற்றும் கேது ஆகியனவாகும்.

 

உருவ அமைப்பு உள்ள கிரகங்களாகிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனியுடன், உருவ அமைப்பில்லாத ராகு மற்றும் கேதுவை சேர்த்து ஒன்பது கிரகங்கள் எனப்படும். இந்த ஒன்பது கிரகங்கள் அமைந்துள்ள வீதம், அதன் பலம் முதலியவை தான் ஒரு மனிதனின் தலை விதியை தீர்மானிக்கிறது என்று ஜோதிடம் கூறுகிறது.

வைதீக பிரதிஷ்டை, ஆகமப் பிரதிஷ்டை என இரண்டு வடிவங்களில் நவகிரகங்களின் வரிசைகளை அமைப்பர். அதற்கேற்ப அனைவரும் பூஜை செய்யலாம் என்றும், இல்லை இல்லை இதை சிலர் மட்டுமே பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றார். உபநிஷத்துகளுக்கும் முன் காலத்தில் நவகிர்க வழிபாடு காணப்படவில்லை என்று சில குறிப்புகள் சொல்கின்றன.

வைணவத்தில் நவகிரகங்கள்
வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது! (மதுரை கூடலழகர் ஆலயம், மற்றும் சில ஆலயங்கள் தவிர); இதனால் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகி விடாது! அங்கும் நவக்கிரகங்களைக் குறித்து பூசைகள் – பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு. சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூசையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்று விடும்!

வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்! பரிவார தேவதைகள், நித்ய சூரிகள் – இவர்களுக்கு எல்லாம் தனியாகச் சன்னிதி கிடையாது! இவர்கள் எல்லாம் பெருமாளின் இடத்திலேயே இருந்து கொண்டு, அவரை அரூபியாகச் சேவித்து இருப்பதாக ஐதீகம்! அவ்வளவு ஏன்? படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) க்குக் கூட எத்தனை ஆலயங்களில் தனியாகச் சன்னிதி இருக்கு?

ஆனால் அடியார்களுக்கும், ஆழ்வார் ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும்! – இதுவே அடியவர் பெருமை!

பெருமாளின் அதிகாரிகளைக் காட்டிலும் அடியவர்களுக்கே களம் அமைத்துத் தரப்படுகிறது! ஏன்?

அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும் வலுவும் முன்னிறுத்தப்படும்! அடியவரை முன்னிறுத்தினால் அன்பும் பக்தியும் தானே வளரும்! – அதனால் தான் இது போன்றதொரு அமைப்பு! பெருமாள் ஆலயங்களின் அமைப்பு ஒரு குடும்பம் வாழும் வீட்டைப் போன்றது! அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம்!

நவக்கிரகங்களும் இறைவனின் அதிகாரிகள்; அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள்! அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு! ஆனால் வெளிப்படையாக முன்னிறுத்தப்படுவதில்லை! அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் ஆண்டளக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.அவர் உருவத்திலேயே, இவர்களும் அடங்கி விடுகிறார்கள்! அவதாரங்களில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு! 108 திவ்யதேசங்களில், ஒன்பது திவ்யதேசங்கள், நவக்கிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன (திருநெல்வேலி-தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)

நவகிரகங்களின் அமைப்பு
அனைத்து சிவாலங்களிலும்,ஈசானிய மூலையில்(வடகிழக்கு) நவக்கிரகங்கள் மேற்குதிசை முகப்பாக அமைந்திருக்கும்.நடுவில் இருக்கும் கிரகம் சூரியன்.சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரனும்,மேற்கில் சனியும்,வடக்கில் குரு,தெற்கில் செவ்வாய்,வடகிழக்கில் புதன்,தென் கிழக்கில் சந்திரன்,வட மேற்கில் கேது,தென் மேற்கில் ராகுவும் அமைந்திருப்பர்.

சூரியன் கிழக்கு முகமாக இருப்பார். சந்திரன்-மேற்கு; செவ்வாய்- தெற்கு; புதன்-வடக்கு; குரு-வடக்கு; சுக்கிரன்-கிழக்கு; சனி-மேற்கு; ராகு-தெற்கு; கேது-தெற்கு. இந்த முறையில் அமைந்திருப்பார்கள்.ஒவ்வொரு நவக்கிரகமும் தனித்தலத்தில்தான் தன் வாகனத்துடன் காட்சியளிப்பார்கள்.சிவாலங்களில் இருக்கும் நவக்கிரகங்கள் பெரும்பாலும் தன் வாகனத்துடன் காட்சியளிப்பதில்லை

நவக்கிரகங்களை 7 முறை கடிகார சுற்றிலும்,2 முறை எதிர் சுற்றிலும் வலம் வந்து வணங்கவேண்டும்.ஏனென்றால் சூரியன் முதலான ஏழு கிரகங்கள் இடமிருந்து வலமாக சுற்றும் ஆனால் ராகு,கேது இரு கிரகங்களும் வலமிருந்து இடமாக சுற்றும்.

நவக்கிரக ஸ்லோகம்:
சூரியனே போற்றி, சந்திரனே போற்றி, செவ்வாயே போற்றி, புதனே போற்றி, குருவே போற்றி, சுக்கிரனே போற்றி, சனியே போற்றி, ராகு&கேதுவே போற்றி போற்றி என சொல்லிகொண்டே நவக்கிரகத்தை வழிபடலாம்.

நவக்கிரக ஸ்தலங்களை தரிசிக்கும் முன் வணங்கவேண்டிய ஆலயம்
திருமங்கலக்குடி : நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய தலம் ” திருமங்கலக்குடி “. இத் தலம் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது. மூலவராக ” பிராணவரதேஸ்வரரும்”. அம்பாளாக ” மங்கள நாயகியும் ” அருள் புரியும் இத் திருத் தலம், மங்கலக்குடி, மங்கல விநாயகர், மங்கல நாதர், மங்கல் நாயகி, மங்கல தீர்த்தம் என ” பஞ்ச மங்கல ஷேத்ரமாக” வழிபடப்படுகிறது.. திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப் பெற்ற புண்ணிய பூமி இது.”மங்கலக்குடி ஆளும் ஆதிபிரான் அடிகள் அடைந்து ஏத்தவே கோளும் நாளவை போயலும் குற்றமிலார்கலே”எனப் புகழ்ந்துள்ளார் திருஞானசம்பந்தர்

நவக்கிரகங்களிடம் காலவ முனிவர் வரம் வேண்டுதல்
ஒரு சமயம் இமயமலை சாரலில் தவம் செய்து கொண்டிருந்தார் “காலவர் ” என்ற மகா முனிவர் ஒருவர். முக்காலமும் அறிந்தவர். அவரிடம் வந்த துறவி ஒருவர் தன்னை பற்றிய வருங்காலத்தை தெரிவிக்குமாறு கேட்டார். அத்ற்கு காலவரோ ” துறவியே, எனது ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்ட உமது வருங்காலம் பற்றி கூற ஒன்றும் இல்லை” எனக் கூறினார். அதற்கு துறவியோ ” முனிவரே அனைவரது வருங்காலம் பற்றி கூறும் உமது எதிர்காலம் பற்றி உமக்கு ஏதும் தெரியுமா” என வினவ. காலவர் ” நீர் யார் ? ” எனக் கேட்டார். துறவி ” நான் தான் கால தேவன் ” எனக் கூறி மறைந்தார். காலவ முனிவரும் தன் வருங்காலம் எப்படி இருக்கும் என தனது ஞானதிருஷ்டியால் காண, தன்னை , முன் வினைப் பயனால் ” குஷ்ட நோய் ” பிடிக்கபோவதை உணர்ந்தார். முன்வினைப் பயங்களுக்கு வினைகளை தருபவர்கள் நவக்கிரகங்களே என்றெண்ணி, அவர்களை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தை மெச்சிய நவகிரகர்கள் என்ன வரம் வேண்டு எனக் கேட்க, தன்னை குஷ்ட நோய் பீடிக்காமல் காத்தருள வேண்டினார். நவக்கிரக நாயகர்களும் அவ்வாறே ஆகட்டும் என ஆசீர்வதிதனர். இதனை அறிந்த பிரம்ம தேவர் நவகிரகங்களின் மேல் கடும் சினம் கொண்டார்.

நவக்கிரகங்கள் பிரம்மனிடம் சாபம் பெறுதல்
நவக்கிரகங்களே, தேவர்களாய் இருப்பினும் தனித்து இயங்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. சிவனின் ஆணைப்படியும், கால தேவனின் துணையுடனும் மட்டுமே நீங்கள் அவரவர் வினைக்கேற்ப நன்மை, தீமைகளை அளிக்க வேண்டும். இதை மீறி காலவ முனிவரை நீங்கள் காத்ததால், அத் தொழு நோய் உங்களை பிடிக்கும் என்றார் பிரம்ம தேவர். கலங்கின நவகிரகங்கள். பிரம்மனின் திருவடி பற்றி சாப விமோஷனம் கேட்டனர். மனமிறங்கிய நான்முகனும் அவர்களிடம், “அர்க்கவனம் என்ற தலம் சென்று அங்கு வீற்றிருக்கும் பிராணவரதரையும், மங்கல நாயகியையும் வழிபடுங்கள். கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்று கிழமை தொடங்கி 12 ஞாயிற்று கிழமைகள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமைகள் தோறும் நீராடி, வெள்ளெருக்கு இலையில் ஒரு பிடி தயிர் அன்னம் வைத்து உண்ணுங்கள் ” என்றார். மற்ற நாட்களில் உண்ணா நோன்பு இருக்க சொன்னார்.

நவக்கிரகங்களும் அவ்வாறே அர்க்கவனம் வந்து அப்பனையும், அம்மையையும் வழிபட்டனர். பிரம்மனது சாபத்தால் தொழு நோய் அவர்களை பற்றியது. அச் சமயம் அங்கு வந்த அகத்திய முனிவர், வழிபாடு முறை பற்றி விளங்கச் சொன்னார். அர்க்கவனத்தின் வட கிழக்கு பகுதியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடச் சொன்னார். கடுமையான உண்ணா நோன்பும், திங்கட் கிழமைகள் மட்டும் எருக்க இலையில் சிறிது தயிர் அன்னம் புசிக்க சொன்னார். அர்க்கவனத்தில் இருந்த ஒன்பது தீர்த்தங்களையும் ஆளுக்கு ஒன்றாக தேர்ந்து எடுத்து நீராடச் சொன்னார். எருக்க இலையில் தயிர் அன்னம் உண்ணும் பொழுது, அந்த இலையின் ஒரு அணுப் பிரமான அளவு அன்னத்தில் கலக்கும். அதுவே குஷ்ட நோய் தீர்க்கும் எனவும் விளக்கினார்.

நவக்கிரகங்கள் தங்கள் சாபம் நீங்கப் பெறுதல்
இவ்வாறு 78 நாட்கள் கடும் தவம் செய்த பின்னர், 79 ஆம் நாள்பிராணவரதரும் மங்கல நாயகியும் நவக்கிரகங்களுக்கு காட்சி தந்து ” நவக்கிரகர்களே, உமது தவம் மெச்சினோம். உம்மை பற்றிய தொழு நோய் முழுவதும் நீங்கட்டும். இந்த அர்க்க வனத்தின் வட கிழக்கு பகுதியில் ஒர் ஆலயம் உண்டாக்கி, உம்மை வந்து வழிபடுபவரது நவக்கிரக தோஷங்களை தீர்ப்பீராக. இத் தலம் நவக்கிரகர்களுக்கு உரிய பரிகார தலமாக விளங்கட்டும் ” என அருளினார்.

காலவ முனிவர் நவக்கிரகங்களுக்கென ஆலயம் அமைத்தல்
இதனிடையே, தன்னால் நவக்கிரகர்கள் தொழு நோயால் பிடிக்கப்பட்டதை அறிந்த காலவ முனிவர், ஓடோடி வந்து நவக்கிரகர்களிடம் சரணடைந்து மன்னிப்பு கேட்டார். நவ நாயகர்களும் அவரை மன்னித்து தாங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வினாயகரை வழிபட்டனர். சாப பிணியான கோள் தீர்த்ததால் இவர் ” கோள் தீர்த்த வினாயகர் ” என வழிபடலானார். பின்னர் காலவ முனிவரிடம், இறைவன் ஆணைப்படி தங்களுக்காக தனி சன்னதிகள் கொண்ட ஆலயம் ஒன்றை உருவாக சொன்னார்கள். முனிவரும் அவ்வாறே, திருக் கோயில் ஒன்றை அமைத்து நவக் கிரக நாயகர்களை தனி சன்னதிகளில் பிரதிஸ்டை செய்தார்.
பிராண வரதேஸ்வரரும் , மங்களாம்பிகையும் எழுந்தருளியுள்ள திருத்தலம் ” திருமங்கலக்குடி ” என்றும், நவக்கிரக நாயகர்கள் தனி சன்னதிகள் கொண்டு அருளும் தலம் ” சூரியனார் கோவில் ” என்றும் வழிபடலாயிற்று. சூரியனார் கோவில் வழிபாட்டை திருமங்கலக்குடியில் இருந்துதான் துவங்க வேண்டும். நவக்கிரக வழிபாட்டில் முதல் திருத் தலமாக விளங்குவது இத் திருமங்கலக்குடி.

மாங்கல்ய பலம் அருளும் மங்கலநாயகி
அந்நாளில் அரசனுக்கு சேர வேண்டிய வரிப் பணத்தை கொண்டு மந்திரி ஒருவர் கோவில் கட்டும் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வந்தார். ஒரு நாள் இதனை அறிந்த மன்னன் ” தனக்கு சேர வேண்டிய பணத்தை கொண்டு எனக்கே தெரியாமல், என் அனுமதியில்லாமல் ஆலயம் கட்டுவதா? ” என சினம் கொண்டு அமைச்சரை சிரச் சேதம் செய்ய ஆணையிட்டான். ஆணையும் நிறைவேறியது. துடிதுடித்துப் போன அமைச்சரின் மனைவி, இத் தலம் வந்து அம்மையிடம் ” தனது கணவனை உயிர்ப்பித்து தருமாறு ” வேண்டினாள். அம்மையும் அவ்வாறே அமைச்சரை உயிர்ப்பித்து தந்தாள். அமைச்சரின் மாங்கல்ய பலத்தினை தந்திட்ட இத் தல அம்பாள் “மங்கலநாயகி” எனவும், இறைவன் பிராணனை திரும்ப தந்ததால் ” பிராணவரதேஸ்வரர் ” எனவும் வழிபடப்படுகின்றனர்.
பஞ்சமங்கள ஷேத்திரம்

நவக்கிரகங்களின் தோஷங்களையே நீக்கிய இத் திருத் தலத்தினை வழிபட்ட பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும். நோய்கல் தீர்க்கும் திருத்தலம் இது. வியாதி உள்ளவர்கள், கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு துவங்கி தொடர்ந்து 11 ஞாயிற்று கிழமைகள் வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னம் நைவேத்யம் செய்து வழிபட்டு அப் பிரசாதத்தினை உட்கொண்டால் வியாதிகள் அனித்தும் முற்றிலும் நீங்கப் பெறலாம். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்கள நாயகி, மங்கள தீர்த்தம் மற்றும் மங்கள கோயில் என “பஞ்சமங்கள ஷேத்திரமாக” விளங்கும் திருத்தலம் இது

நவக்கிரகங்களின் தோஷம் தீர
அதிகாலையில் எழுந்து 6 மணிக்குள் நீராடி சூரியனைப் பார்த்தபடி நின்று இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்துவர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.

ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை அன்று இதைத் துவங்கவும்.

மந்திரம் :-
நமக்காக ஜெபிக்கும் போது

ஓம் நமோ பகவதே பாஸ்கராய மம சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா||

பிறருக்காக ஜெபிக்கும் போது
ஓம் நமோ பகவதே பாஸ்கராய ……………….. சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா||

( ……………. என்ற இடத்தில் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவருடைய அல்லது அந்த குடும்பத்தின் பெயர் )

யந்திரம் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.

 

நவகிரகங்கள் பற்றிய

முழு தொகுப்பை இங்கே காணலாம். நவகிரகங்கள்

Android மொபைலுக்கான செயலியை இங்கே தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம். நவகிரகங்கள்

 
 
 


Similar Posts : ரிஷப லக்னம், சனீஸ்வரர், பத்தாம் வீட்டில் புதன் குரு, 12 ல் சுக்கிரன், சந்திரன்,

See Also:நவகிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் ராகு கேது சுக்கிரன் குரு சனி

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
இதய நோய் உண்டாக்கும் ஜோதிட அமைப்பு
2020-10-06 00:00:00
fantastic cms
Sun in 6th House
2020-10-06 00:00:00
fantastic cms
பல நோய் உண்டாக்கும் ஜாதக அமைப்பு
2020-10-06 00:00:00
fantastic cms
இரத்த சம்பந்தமான நோய் உருவாக்கும் ஜாதக அமைப்பு
2020-10-06 00:00:00
fantastic cms
October 11 2018 Venus transition
2020-10-06 00:00:00
fantastic cms
ஜாதகம் உண்மையா
2020-10-06 00:00:00
fantastic cms
மூளை நோய் மற்றும் நரம்புத் தளர்ச்சி உண்டாக்கும் ஜாதகம்
2020-10-06 00:00:00
fantastic cms
காம நோய் உண்டாக்கும் ஜாதகம்
2020-10-06 00:00:00
fantastic cms
ஆபத்தான் நோய் ஏற்படுத்தும் ஜாதகம்
2020-10-06 00:00:00
fantastic cms
மன நோய் உண்டாக்கும் ஜாதகம்
2020-10-06 00:00:00
  • Abishegam
  • After Death
  • Aquarius
  • Astrological predictions
  • Astrology
  • astrology software
  • astronomy
  • bangle
  • Basics
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology software for windows
  • Bodhidharma Birth
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharmas Guru
  • Cancer
  • Chandran
  • Chhajju Bania
  • Chhajju Bania's NDE
  • Chicken Biryani in English
  • Mercury
  • Moon
  • prediction
  • software
  • குங்குமம்

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com