SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
மருத்துவ ஜோதிடம்
  • 2019-10-06 00:00:00
  • 1

மருத்துவ ஜோதிடம்

ஜாதகத்தைக் கொண்டு ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுமா என்று கணிக்க முடியுமா??

ஜோதிடம் என்பது சமுத்திரம். அதில் ஒவ்வொரு துறையும் கடல் போன்றது. வடமொழியிலும், தமிழிலும் ஜோதிட விதிகளை எழுதிய விற்பன்னர்கள் பல லட்சங்களுக்கும் மேற்பட்ட விதி முறைகளை எழுதி வைத்துள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் சில முக்கியமான விதிகளை மட்டுமே ஒருவர் தன் மனதில் வைத்துக் கொள்ள முடியும். எல்லாவறையும் கற்று பண்டிதன் ஆவது நடைமுறைச் சாத்தியம் இல்லாத ஒன்று. அர்வம், தன் முனைப்பு, முயற்சி, நேரத்தைச் செலவிட்டுக் கற்றுக் கொள்ளுதல், படித்தவற்றை திரும்பத் திரும்பப் படித்து மனதில் உருவேற்றுதல், ஆகியவை இருந்தால் தான் ஒரளவு தெரிந்து கொள்ளலாம்.

ஒருவருடைய ஜாதகத்தைக் கொண்டு அருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுமா என்றும், அந்த உடல்நலக் குறைவு எந்தப் பகுதி அல்லது எந்த உறுப்பால் அவருக்கு பாதிக்கப்படலாம் என்றும் ஜோதிடத்தைக் கொண்டு கூற முடியும். அவ்வாறு பயன் படுத்தப் படும் ஜோதிட முறையை தான் மருத்துவ ஜோதிடம் எனப்படும்.

ஒரு ஜாதகருக்கு வரவிருக்கும் நோய்களை பற்றி அவரது பிறப்பு ஜாதகத்தைக் கொண்டே அறிய முடியும். நம்மை ஆட்டிப்படைக்கும் ஒவ்வோர் கிரகத்திற்கும் ஒவ்வோர் நோயைக் கொடுக்கும் தன்மை உண்டு.உதாரணமாக,

  • சூரியன் – உஷ்ணக்காரன் ஆகையால் உஷ்ணம் சம்மந்தமான நோயைக் கொடுப்பார். இருமல், வலிப்பு, கண், சம்மந்தப்பட்ட நோய் ஏற்படலாம்;. பார்வை குறைபாடு ஏற்படலாம்.
  • சந்திரன் – ஜலதோஷம், வாதம், ரத்தம் சம்மந்தமான நோய், சீதளம், தோல், சம்மந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம்.
  • செவ்வாய் – ரத்தக்காரன் என்பதால் ரத்தம் சம்மந்தமான நோய்கள், ரத்தப்புற்று நோய், பிளட் பிரஷர். கண் எரிச்சல், தீக்காயம், விஷம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படலாம்.
  • புதன் – நரம்பு தளர்ச்சி, நரம்பு சம்மந்தப்பட்ட நோய், தோல் பிரச்சினைகள், கண், மூக்கு, கழுத்து, இவற்றில் ஏற்படும் நோய், சளி இருமல் தொல்லை, வெண்குஷ்டம் போன்ற நோய்கள் ஏற்படலாம்.
  • குரு – சர்க்கரை நோய்,காது சம்மந்தப்பட்ட நோய், பித்தம் சம்மந்தப்பட்ட நோய் என்பன ஏற்படலாம்.
  • சுக்கிரன் – கிட்னி சம்மந்தமான நோய், பெண்கள் சம்மந்தமான நோய், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், வாத நோய் என்பன ஏற்படலாம்.
  • சனி – வாத நோய், வலிப்பு நோய், யானைக்கால் வியாதி, காலல் ஏற்படும் உபத்திரவம், வயிற்றுவலி, சளி, குளிர்காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
  • ராகு – இதய நோய், விஷம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், புற்று நோய், குடல் நோய், குஷ்டம் மற்றும் தோலில் ஏற்படும் பிரச்சனைகள் என்பன உண்டாகலாம்.
  • கேது – வெட்டுகாயம், அம்மை, அஜூரணம், வயிற்றுவலி, விஷம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், புண், உடல் வலி என்பன உண்டாகலாம்.

ஆகையால், பன்னிரு ராசிகளுக்கும் ஒவ்வொரு வகையான நோய்த் தன்மை உண்டு.

லக்கினம், இரண்டாம் வீடு, மூன்றாம் வீடு, பன்னிரண்டு ராசி வீடுகளும் நமது உடலின் ஒவ்வொரு பாகத்தை குறிக்கின்றது. அதாவது

லக்கினம் ஒருவரின் தலை,
2ம் வீடு கண், என்பன போலவும்

  • மேஷம் – முகம், மூளை – பித்தம் சம்பந்தமான நோய்கள், தலை சுற்றல், மூளைப் பகுதியினில் இரத்த அழுத்தம், மூளை வீக்கம், மூளைக் காய்ச்சல், முக வாட்டம், முகத்தில் தழும்புகள், தூக்கமின்மை.
  • ரிஷபம் – கழுத்து, தொண்டை, உள்நாக்கு – கபம் சம்பந்தமான நோய்கள். கண் வலி, கண் வீக்கம், கழுத்தினில் சுளுக்கு, பேச்சுத் திறன் குறைதல், தொண்டை வீக்கம், தொண்டைப் புண், உள் நாக்கு வளர்தல், சளி-இருமல், வாய்ப்புண்.
  • மிதுனம் – தோள், விரல், கை, மூக்கு, நுரையீரல், நெஞ்சுக்கட்டு, தொண்டை – வாத சம்பந்தமான நோய்கள். காது கேளாமை, வலது காதில் தொந்தரவு, நெஞ்சு வலி, நுரையீரலில் புற்று நோய், சளித் தொந்தரவு, சுவாசம் தடைபடுதல், மூக்கில் காயம் – உபாதை, வாதம், பித்தம், கபத்தின் கலப்பால் உண்டாகிற நோய்கள்.
  • கடகம் – வயிறு, மார்பகம், நெஞ்சு – கபம் சம்பந்தமான நோய்கள். இதய நோய், இரத்தக் குழாய்களில் வெடிப்பு, வயிறு வலி, வாய்வு உபத்திரம், அஜிரணக் கோளாறு, காமாலை, நுரையீரலில் கட்டி, தோள் பட்டை வலி, கவலை கூடுதல், உறக்கம் இன்மை, மனம் பேதலித்தல்.
  • சிம்மம் – இருதயம், முதுகு, முதுகுத்துண்டு – பித்த சம்பந்தமான நோய்கள். இதய நோய், இதய வால்வு செயல் இழத்தல், செரிமானம் இன்மை, புளித்த ஏப்பம், முதுகுத் தண்டு வட வலி, செரிமானம் இன்மையால் வாந்தி-பேதி, முதுகு கூண் விழுதல்.
  • கன்னி – சிறுகுடல், பெருகுடல் -வாத சம்பந்தமான நோய்கள், அடி வயிற்றில் உஷ்ணம், வயிற்றில் இரத்தம் உறைதல், நுரையீரலில் வலி, குடற் புண், இரத்த மூலம், வாந்தி, தலைச்சுற்றல், சிறுநீர் – ஆசன வாயில் புண், மலப் பாதையில் மலம் கழிவதில் தடை
  • துலாம் – கிட்னி, தோல் – கபம் சம்பந்தமான நோய்கள். கர்ப்பப்பைக் கோளாறு, கர்ப்பம் அடிக்கடி கலைதல், மூத்திரப்பை செயல் குறைதல், தோல் ஒவ்வாமை, தோலில் வெடிப்பு, வெடிப்பு, இடுப்பு வலி, குடல் வால்வு பாதிப்பு, பெண்களுக்கு அட்ரீனல் பாதிப்பு, பாதம்-விரல்களில் வலி, வாதம்-பித்தம், கபத்தின் கலப்பால் உண்டாகிற நோய்கள்.
  • விருச்சிகம் – ஆண் பெண் இன உறுப்புக்கள், ரத்தம், காது – பித்தம் சம்பந்தமான நோய்கள், பால் (காம) உணர்வு அதிகம் ஆகுதல், பால்வினை உணர்வு, மூலம், அடி வயிற்றில் வலி, வாய்வுப் பிரச்சினை, நரம்பு தளர்ச்சி, அதிக தூக்கம், சிறுநீர் துவாரத்தில் அடைப்பு, குடல்வாய் நோய், ஹிரண்யா, விந்து – சுரோணிதம் பலம் குறைதல்.
  • தனுசு – இடுப்பு, தொண்டை, கல்லீரல் – வாத சம்பந்தமான நோய்கள், மூக்கு-தொண்டையில் புண், இடுப்பு வலி, இடுப்பில் புண், தொடை பெருத்தல், இரத்தக் குழாய்களில் அடைப்பு, மூட்டுப் பிடிப்பு.
  • மகரம் – பல், எழும்பு, முட்டி, தோல் – வாத சம்பந்தமான நோய்கள், எலும்பு பலம் குறைதல், முழங்கால் வலி, கீழ்வாத நோய்கள், மூட்டு பிசகுதல், தோல் நோய், நுரையீரல் நோய், மூச்சுத் திணறல், எலும்பு முறிவு உடைந்து போதல்.
  • கும்பம் – கீழ்க்கால், கணுக்கால், ரத்த ஓட்டம் – வாதம் சம்பந்தமான நோய்கள், இடது காது வலி, இரத்த அழுத்தம், இரத்தக் கசிவு, இரத்த நாளங்களில் குறைபாடு, கணுக் கால்களில் பிரச்சினை, கீழ்க்கால்களில் வீக்கம், புண், தமணி கெட்டி ஆகுதல், தசைப் பிடிப்பு, வாதம்-பித்தம்-கபத்தின் கலப்பால் உண்டாகிற நோய்கள்.
  • மீனம் – பாதம், பாத விரல், நுரையீரல், குடல், மூத்திரம் முதலிய கழிவுகள் என்பவற்றை குறிக்கின்றது. – வாதம் சம்பந்தமான நோய்கள், மதுவினால் உண்டாகிற நோய்கள், பாதங்கள் வீங்குதல், குதிங்கால் வாதம், பாத விரல்கள் சுருங்குதல், உரிய காலத்தில் மல-ஜலம் போகாது இருத்தல், காலில் ஆணி, காலில் புண், மூட்டு வலி, உடற்சோர்வு.

மேலும் சில கிரக சேர்க்கைகளாலும் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. பொதுவாக ரோகஸ்தானம் எனக் குறிக்கப்படுவது ஆறாம் வீடு. லக்கினத்திற்கு ஆறாம் வீடு நோயைக் குறிக்கும். மேலும் எட்டாம் வீடு ஆயுள் ஆரோக்கியத்தை குறிக்கும். எனவே ஒருவரது ஜாதகத்தில் 6ம், 8ம் வீடுகள் அதிலுள்ள கிரகம் அதன் ஆதிபத்தியம் பெற்ற கிரகம், மேலும் அவ்வீடுகளை பார்க்கும் கிரகம் என்பவற்றைக்கொண்டு ஒருவரது நோயை சரியாகக் குறிப்பிட முடியும். அப்படி நோய் தரக்கூடிய கிரகத்தின் தசா புக்தி காலத்தில் அந்த நோய் அதிகரிப்பதையும் பின் குறைவதையும் காண முடியும், கணித்து கூறவும் முடியும். அதே போல் வரக்கூடிய நோயினால் பாதிக்கக்கூடிய உறுப்பு எது எனவும் கண்டறிய முடியும். உதாரணமாக சர்க்கரை நோய் என எல்லோரையும் வாட்டி வதைக்கும் நோய்க்குண்டான கிரகங்கள் ஒருவருடைய ஜாதக்த்தில் இருந்து அவருக்கு சர்க்கரை நோய் ஏற்ப்டடுள்ளது என வைத்துக்கொள்ளுவோம், அக்கிரக அமைப்பு நேத்திரஸ்தானம் எனும் இரண்டாம் வீட்டுடன் தொடர்பு ஏற்படின் அவருக்கு சர்க்கரை நோயினால் எதிர்காலத்தில் கண்பார்வை பாதிக்கப்படும் என நம்பலாம். 5ம் வீட்டுடன் தொடர்பு ஏற்படின் அவருக்கு சர்க்கரை நோயினால் வயிற்றிலுள்ள உறுப்புக்கள் கிட்னி போன்றவை பாதிக்கப்படும். சனியுடன் தொடர்பு ஏற்படும் பட்சத்தில் பாதங்கள் கால் பகுதிகள் பாதிப்படையும் என முன்கூட்டியே ஜாதகத்தை ஆராய்ந்து கூறமுடியும். மேலும் ஒருவருக்கு வரக்கூடிய நோய்களுக்கு அறுவைசிகிச்சை தேவையா அல்லது ஆங்கில மருத்துவத்தால் சரிவர முடியுமா அல்லது நாட்டு வைத்தியம் சரிவருமா என்பதையும் கணக்கிட முடியும். செவ்வாயின் தொடர்பையும் தெசா புக்தியையும் கணித்து அறுவைச் சிகிச்சையையும் அதற்கான காலத்தையும் சிபாரிசு செய்யலாம். குருவின் தெசா புக்தியை வைத்து அறுவை சிகிச்சையின்றி மருந்து மாத்திரையினால் சரி செய்யலாம் அல்லது நாட்டு வைத்தியம், மூலிகை வைத்தியம், சித்த மருந்தினால் சரி செய்யலாம் என முடிவு செய்யலாம். எந்த கிரகம் பகைப் பெற்று கெட்ட ஆதிபத்தியம் பெருகிறதோ அது அமர்ந்த பாவத்தின் உறுப்பினை பாதிக்க செய்யும்.

ஒருவரது ஜாதகத்தில் 5ல் சனி இருப்பின் நோய் வர வாய்ப்புண்டு. குழந்தை தாமதமாக பிறக்கலாம். நோயைக் கண்டறிய நீண்ட காலம் செல்லலாம். பல பரிசோதனைகள் செய்ய நேரிடலாம். ஜாதகத்தில் 5ல் செவ்வாய் இருப்பின் அநேகமாக வயிற்றுப் பகுதியில் சத்திர சிகிச்சை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். வுயிற்றுப் பகுதிக்கு ஆங்கில மருத்துவ உதவிகள் தேவைப்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்படலாம். பிரசவத்திற்கு சத்திர சிகிச்சை தேவைப்படலாம். சூரியன், சனி சேர்க்கை அல்சர் தொந்தரவைக் கொடுக்கும். சனி சுக்கிரன் சேர்க்கை கழிவு அகற்றும் சம்மந்தமான நோயைக் கொடுக்கும்.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினம் பலவீனப்படுவதும் சந்திரன் பலவீனப்படுவதும் ஆரோக்கிய குறைவை ஏற்படுத்தும். லக்கினம் 5ம், 8ம் வீடு அந்த அதிபர்கள், இவர்களுடைய தொடர்பு ஆரோக்கியத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம்.
குரு சுக்கிரன் போன்றவர்களின் அமைப்பையும் சந்திரன் அமைப்பையும் வைத்து நீர் ராசிகளையும் கணித்து ஒருவருக்கு நிரிழிவு நோய் வருமா எனவும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதா எனவும் அது எப்போது வரும் என்பதையும் ஜாதகத்தில் அறிந்து கொள்ள முடியும்.
புற்று நோயைக் குறிக்கும் கிரகம் இராகு, குரு. இக்கிரக சேர்க்கையை வைத்து புற்று நோய் ஏற்படும் வாய்ப்பை அறியலாம். இக்கிரகங்களின் நிலையுடன் செவ்வாயின் நிலைமையை ஆராய்ந்து இரத்த புற்று நோயையும் சத்திர சிகிச்சை பற்றியும் அவை சேரும் வீட்டை வைத்து எங்கு புற்று நோய் தாக்கும் என்பது பற்றியும் அத்தெசா புக்தியை வைத்து எப்போது பாதிப்பு அதிகம் என்பது பற்றியும் ஓரளவு கணிக்க முடியும்.

சில உதாரணங்கள் :

  1. புதன் + செவ்வாய் – புதன் நரம்பு காரகன், எதிரி செவ்வாய் உடன் ஒரு ஜாதகத்தில் சேர்ந்து இருதால் ஜாதகருக்கு வலிப்பு நோய் தொல்லை இருக்கும். இவர்கள் இருவரும் சேர்ந்து கடகம் ராசியில் இருந்தால், கடகம்- நீர் ராசி மேலும் அது மார்பகத்தைக் (நெஞ்சு) குறிக்கிறது. ஆதலால் நெஞ்சில் சளி பிரச்சனை இருக்கும். அதே ஜாதகத்தில் கடகத்தின் அதிபதி சந்திரன் காற்று ராசியில் இருந்தால், சுவாச பிரச்சனையும் இருக்கும். இந்த ஜாதக அமைப்பு இருந்தால் (சந்திரன்,செவ்வாய்,புதன் சம்மந்தம்) ஆஸ்துமாவை தரும்.
  2. ஒரு ஜாதகத்தில் ராகு அஷ்டமாதிபதி உடன் சேர்ந்து ஆறில் அமர்ந்தால் தீர்க்க முடியாத நோயைத் தருவார். ராகு- புற்று நோய்க்கு உரியவர். ஆதலால் இந்த சேர்க்கை (அஷ்டமாதிபதி+ராகு ஆறில்) கொண்ட ஜாதகருக்கு தொண்டையில் புற்று நோய் வர வாய்ப்பு உண்டு.
  3. தனுசு லக்னம் மற்றும் தனுசு ராசி கொண்ட ஒரு ஜாதகத்தில் செவ்வாயும், இராகுவும் ஒன்றாக இருந்தால் அந்த ஜாதகருக்கு செவ்வாய் திசையில் தைராய்டு பிரச்சனை வரும்.
  4. Sithars Astrology மென்பொருளின் உதவியுடன் ஜாதகர், தன் கிரக அமைப்பை கொண்டு கீழ்க்கண்ட நோய்களை அறிந்துக் கொள்ள, ஜோதிட வல்லுனர்கள் மற்றும் ஜோதிட விற்பன்னர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் உதவியுடன் செயல்ப்பட்டு வருகிறது. அடுத்து வரும் ஒவ்வொரு பதிப்புகளிலும் இவை இணைக்கப்பட்டு வெளிவரும்.

  5. Diabetes
  6. Leprosy
  7. Bone Related Problem
  8. Tuberculosis
  9. Piles
  10. Tumor & Cancer
  11. Male Related Problems
  12. Heart Related Problems
  13. Sex Disease
  14. Blood Related Problems
  15. Eyes Related Problems
  16. Neck Related Problems
  17. SexRelatedProblems
  18. KidneyRelatedProblems
  19. Ladies Related Problems
  20. Nose Related Problems
  21. Teeth Related Problems
  22. Leg and Foot Related Problems
  23. Arthralgia
  24. Injury, Wound and Accidents
  25. Skin Related Problems
  26. Fear From Water and Fire
  27. Fear From Electric
  28. Hand and Arm Related Problems
  29. Headache and Migraine
  30. Tumor & CancerProblems
  31. Tridosh (Vatta, Pitta and Cough) Related Problems
  32. Breath Related Problems
  33. Mouth Related Problems
  34. Jaundice Problems
  35. Constipation Problems
  36. AIDS
  37. Sleeping Sickness Related Problems
  38. Malnutrition Related Problems
  39. Hepatitis
  40. Fever
  41. Ringworm
  42. Measles
  43. Dog Bite
  44. Snake Bite
  45. Influenza
  46. High Blood Pressure (Hypertension )Problem
  47. Low Blood Pressure(Hypotension )Problem
  48. Food poisoning Related Problems
  49. Urination Related Problems
  50. Immune Related Problems
  51. Genetic diseases, genetic disorderand Related Problems
  52. Deficiency of some nutrientsand itsdiseasesand Related Problems
  53. Gout
  54. Haemophilia
  55. Beri-beri
  56. Scurvy
  57. Goitre
  58. Rickets
  59. Liver Related Problems
  60. Uric acid Related Problems
  61. Chickenpox
  62. Smallpox
  63. Mumps
  64. Whooping cough
  65. Gonorrhoea
  66. Syphilis
  67. Tetanus
  68. Aging Related Problems
  69. Cholera
  70. Typhoid
  71. Dysentery
  72. Semen Related Problems
  73. Asthma
  74. Malaria
  75. Diarrhoea
  76. Common Cold
  77. Hook worm disease
  78. Syphilis
  79. Plague
  80. Pneumonia
  81. Diphtheria
  82. Pertussis
  83. Gall Bladder Infection
  84. Anus Diseases
  85. Gland Diseases
  86. Trachoma
  87. Animal Bite Diseases
  88. Haematology diseases (Blood disordered diseases)
  89. Platelets Count diseases and Related Problems
  90. Backache
  91. Hip Related Problems
  92. Physiological disorder
  93. Air-borne diseases and Related Problems
  94. Body ache
  95. Chest diseases and Related Problems
  96. Muscles diseases and Related Problems
  97. Waist Related Problems
  98. Breast Related Problems
  99. Dengue
  100. Itching Related Problems
  101. Nausea / Vomiting Related Problems
  102. Abdomen Related Problems
  103. Weakness Related Problems
  104. Chronic diseases and Related Problems
  105. Sneezing Related Problems
  106. Ulcers
  107. Muscular pain Related Problems
  108. Nerve Related Problems
  109. Pancreas Related Problems
  110. Mental stress Related Problems
  111. Paralysis
  112. Cholesterol Related Problems
  113. Sexually transmitted diseases and Related Problems
  114. Memory Related Problems
  115. Loss of Weight Related Problems Related Problems Related Problems
  116. Increase of Weight Related Problems
  117. Speak Related Problems
  118. Penis Related Problems Related Problems
  119. Vagina Related Problems
  120. Intestine Related Problems
  121. Pain in the joints Related Problems
  122. Digestion Related Problems
  123. Facial Related Problems
  124. Hair Related Problems
  125. Bad Smelling of Mouth Related Problems
  126. Nervous system Related Problems
  127. Shoulder Related Problems
  128. Armpit Related Problems
  129. Appearance of rashes on the body etc and so on

    Sithars Astrology has a separate module called Medical Astrology. It can be purchased with other modules or as a Single Module (Tamil & English). 


Similar Posts : மாதவிடாய் கோளாறு ஜாதக அமைப்பு, பல நோய் உண்டாக்கும் ஜாதக அமைப்பு, கீழ்வாத நோய் உருவாக்கும் ஜாதக அமைப்பு, பெருங்குடல் நோய் உருவாக்கும் ஜாதக அமைப்பு, இதய நோய் உண்டாக்கும் ஜோதிட அமைப்பு,

See Also:மருத்துவ ஜோதிடம்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Vedic Astrology about Rebirth
2019-10-06 00:00:00
fantastic cms
12 ல் சுக்கிரன்
2019-10-06 00:00:00
fantastic cms
ஆன்மீக ஈடுபாடு
2019-10-06 00:00:00
fantastic cms
Is Astrology Science
2019-10-06 00:00:00
fantastic cms
Unlocking the Mysteries of Astrology
2019-10-06 00:00:00
fantastic cms
Chinese Astrology
2019-10-06 00:00:00
fantastic cms
Chinese Lunar Calendar
2019-10-06 00:00:00
fantastic cms
Vedic Astrology
2019-10-06 00:00:00
fantastic cms
Influence of Retrograde Planets
2019-10-06 00:00:00
fantastic cms
Leo
2019-10-06 00:00:00
  • Abishegam
  • Agni
  • Ascendant
  • Astrology
  • astronomy
  • Basics
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology software for windows
  • best-astrology-software
  • Birthday Secrets
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharmas Guru
  • brahma-muhartham
  • Chandiran
  • Chhajju Bania
  • Hinduism
  • Mangal Singh
  • Mangal Singh's NDE
  • Mercury
  • NDE
  • software
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com