SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
Purananooru about After Death
  • 2019-10-06 00:00:00
  • 1
  • 532

Purananooru about After Death

புறநானூறு

ஒரு ஆத்மா பிறப்பெடுக்க 12 மாதங்கள் ஆகின்றன. அந்த ஆத்மா இறப்பின் மூலம் உடலை விட்டு நீங்கிய பின்னர் 12 நாட்களில் தான் முன்பு இருந்த நிலைக்கு வருகிறது. 12 மாதம் என்பது 12 நாட்களுக்கு இணையாகச் சொல்லப்படுகிறது. பிறப்பெடுக்கும் போது, அந்த ஆத்மா, மழை மூலமாகப் பூமிக்குள் சென்று, செடிகளால் உறிஞ்சப்படும் நீருடன் ஏதேனும் ஒரு செடிக்குள் நுழைகிறது. பிறகு அந்தச் செடியின் காய் அல்லது கனியில் நிலை பெறுகிறது. அந்தக் காய் அல்லது கனியை, ஒரு மனிதன் (ஆண்) உண்ணும் போது, அவனது உணவுக் குழாய் வழியாகச் சென்று, முடிவில் அவனது விந்தணுவில் நிலை கொள்கிறது. இது வரை அந்த ஆத்மாவுக்கு எந்த வலியும், கர்மவினைப்பயனும் ஏற்படாது.

அந்த ஆணினது விந்தணுவில் அந்த ஆத்மா 2 மாதங்கள் இருக்கும். அதற்குப் பிறகு அது ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் நுழையும் போது, ஒரு உயிராகப் பிறக்கிறது. ஆத்மா வேறு, உயிர் வேறு. ஆத்மாவுக்கு உணவுடன் தொடர்பு ஏற்படும் போது உயிர் உண்டாகிறது. அதாவது ஆணின் விந்தணு, பெண்ணணுவான சினை முட்டையில் கலந்தவுடன் வளருகிறது. CELL DIVISION  என்னும் வளர்ச்சிக்குக் காரணம், பெண் கர்ப்பப்பையிலிருந்து உணவு கிடைக்க ஆரம்பிக்கிறது. தாய் இடும் அன்னம் அங்கேயே தொடங்குகிறது.

அன்ன சம்பந்தம் வந்தவுடன் உயிர் வந்து விடுகிறது. அன்னத்தால் உயிர் வளர்கிறது. ஆத்மா பெறும் முதல் அன்னம், திட ரூபத்தில் இருப்பதில்லை. அன்னத்தின் நுட்பச் சத்துக்கள், உருவமில்லாத ரூபத்தில், திரவ ரூபத்தில் அதற்குக் கிடைக்கிறது. அந்தச் சத்து, தாய் உண்ட அன்னத்திலிருந்து கிடைக்கிறது. அந்த அன்னம் நிலமும், நீரும் சேர்ந்ததால் கிடைக்கிறது. இதைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலைச் சிறிது எட்டிப்பார்த்து விட்டு, தமிழ் மரபிலும் வேதக் கருத்தே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு மேலே தொடரலாம்.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.

உண்டி முதற்றே உயிரின் பிண்டம்

உணவெனப்படுவது நிலத்தின் நீரே.

நீரு நிலனும் புணரி யோரீண்

டுடம்பு உயிரும் படைத்திசினோரே."

என்று குடபுலவியனார் (பு.நா. 18) கூறுகிறார்.

 பிண்டம் என்பது பிண்ட் என்னும் சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து உருவானது. இதைப் பிடி என்றும் சொல்வார்கள். பிண்டம் என்பதற்குச் சேர்த்தல் என்று பொருள். பிடித்தல் என்றாலும், ஒன்றாக இணைத்தல் அல்லது உணவின் தொகுப்பு என்று பொருள். ஆத்மாவுடன் உணவு சேரும் போது அதற்கு உயிர் வருகிறது. அந்த உணவு உடலாக வளருகிறது. இதையே மணிமேகலையும் (10-90) " மக்கள் யாக்கை உணவின்  பிண்டம்" என்று கூறுகிறது.

உயிர் இருந்தால்தான் ஐம்பூதங்களால் கிடைக்கும் சக்திகளைப் பெற முடியும், அதைக் கொண்டு ஐம்பொறிகளை இயக்க முடியும். ஆத்மாவுக்கு எல்லா சக்தியும் இருந்தாலும், அவற்றை வெளிக்காட்ட உருவம் தேவை. அதைப் பெற, ஒருவன் பிறப்பதற்கு முன் தாயின் கர்ப்பத்திலிருந்து உணவை எடுத்துக் கொண்டு பிண்ட ரூபத்தில் இருக்கிறான். அவன் இறந்த பின்னர் பிண்டம் என்னும் உணவுக் கோளம் மூலமாக அவனுக்கு உணவிட்டு அந்த ஆத்மாவின் உயிர்த் தொடர்பை அறுகாமல் வைத்திருப்பதே இறந்தவர்க்குச் செய்யும் சடங்காக வேத மதத்தில் இருக்கிறது.

இதைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலும் இருக்கிறது. "புன் மேல் வைத்த இன்சிறு பிண்டம்" (பு.நா. 234) என்று தர்ப்பைப் புல் மீது வேள் எவ்விக்கு அவன் மனைவி பிண்டம் வைக்கிறாள்.

நிலனும், நீரும் சேருமிடத்து உணவு உண்டாகிறது. காய்ந்த நிலத்தில் மழை பெய்தவுடன் செடிகள் முளைப்பதால், நிலத்தில் உணவுப்பொருள் இருக்கிறது என்பது தெரிகிறது. நிலத்துடன்  நீர் சேர்ந்தால்தான் அது உயிரைக் கொடுக்கத்தக்க உணவாக ஆக முடியும். இதைச் சொல்லும் குடபுலவியனார், நீரற்ற நிலம் பயனற்றது. எனவே நீர் வளத்துடன் கூடிய நிலத்தை அரசர்கள் பரிசாகக் கொடுத்து, இறந்த பின் தாம் செல்லும் உலகத்துச் செல்வம் என அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் பெறுவர் என்கிறார். ஒருவர் மற்றொருவருக்கு உணவு கொடுக்கும் போது, உயிர் தழைக்கக் காரணமாகிறார். அதனால் தான் இறந்த பின்னும், அதாவது பூத உடலில் உயிரை இழந்த பின்னும், மேலுலகில் உயிருடன் இருக்க இந்த உணவுத்தானம் உதவுகிறது.

தாயின் கர்ப்பத்தில் 10 மாதங்கள் வளரும் பிண்ட உடலானது, தாயின் உணவு மூலமாகப் பஞ்ச பூதங்களிலிருந்தும் அவ்வவற்றின் சத்தை எடுத்துக் கொண்டு வளர்கிறது. முழு உருவம் பெற்ற பின் இந்த உலகில் பிறக்கிறது.

முடிவில் இறக்கும் போது. ஆத்மா அழிவதில்லை. அது உடலை விட்டு வெளியேறி விடுகிறது. உணவால் ஏற்பட்ட உடலைத் தீக்கிரையாக்குகின்றனர். அல்லது புதைக்கின்றனர். வேத மரபில் இயற்கை மரணமாக இருந்தால் எரித்தலும், அகால மரணமாக இருந்தால் புதைத்தலும் வழக்கமாக இருக்கிறது. உடலை எரிக்கும் போது, உணவால் ஆன உடல் சாம்பலாகிறது ஆனால், அதனுடைய பிரேத உடல் சாவதில்லை.

பிரேத உடல் என்றால் என்ன என்று ஆராய்ந்தால், அதைப் பின்வருமாறு எளிதாக விளக்கலாம். ஒரு மரக்கட்டையை எரிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்,. அது சாம்பலாகி விடும், ஆனால் எரியும் போது அது பல வாயுக்களை வெளிப்படுத்தும். எந்தப் பொருளும் அழிவதில்லை. எந்த ஒரு பொருளும் ஒரு நிலையிலிருந்து, மற்றொரு நிலைக்கு உருமாற்றம் அடைகிறது என்னும் இயற்கைக் கோட்பாட்டின் அடிப்படையில், அதன் சில பகுதிகள் சாம்பலாகியும், பிற பகுதிகள் வாயு ரூபத்திலும் உரு மாற்றம் அடைகின்றன.

அது போல ஒருவன் இறந்த பிறகு, அவனது உடலை எரித்தால், அது சாம்பலானாலும், அவனது உடல் திசுக்களில் உள்ள வேதிப் பொருட்கள் வாயு ரூபத்தில் உருமாறுகின்றன. அல்லது அறிவியல் அறியாத ஏதோ ஒரு உருமாற்றம் நடக்கிறது. உணவுடன் (பிண்டத்துடன்) தொடர்புடைய அப்படிப்பட்ட உருமாற்றத்தை பிரேத சரீரம் என்று வேத மதம் அழைக்கிறது.

எரித்த சாம்பலைக் கடலிலோ அல்லது ஓடும் நதியிலோ கரைத்து விடுகிறார்கள். இதனால் திட உருவில் மீதம் இருக்கும் பகுதிகள் பல பில்லியன்களில் ஒரு பங்கு என்ற அளவில் இயற்கையில் கரைந்து விடுகிறது. ஆனால் வாயு ரூபத்திலும், வேறு ஏதோ ரூபத்திலும் இருக்கும் அவனது உடல் கூறுகள் இன்னும் காற்றில் இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் வரை இயற்கையின் சமன்பாடு பாதிக்கப்படுகிறது. இயற்கை மாசு படுகிறது. அந்த மாசைத் 'தீட்டு' என்கிறார்கள். இயற்கையின் சமன்பாடும், மாசில்லா நிலையும் என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதே வேத மதத்தின் குறிக்கோள்.  

பிறப்பின் பயணம் 2+ 10 மாதங்கள். ஒரு மாதம் என்பது ஒரு நாள் என்ற கணக்கில் இறப்பின் பயணம், இறப்புக்குப் பிறகு 10+ 2 நாட்களில் அமைகிறது. முதல் 10 நாட்கள் என்பது பிறப்புக்கு முன் தாயின் கர்பத்தில் இருக்கும் 10 மாதங்களுக்குச் சமம். அடுத்த இரண்டு நாட்கள், தாயின் கர்ப்பத்தில் நுழைவதற்கு முன் தந்தையின் உடலில் இருக்கும் 2 மாதங்களுக்குச் சமம்.

தாயின் கர்ப்பத்தில் 10 மாதங்கள் அந்தப் பிண்டம் படிப்படியாக வளர்ந்தது, இறந்த பிறகு முதல்  பத்து நாட்களில் பிரேதமான சரீரம் படிப்படியாகத் தான் வந்த பஞ்ச பூதங்களில் கரைகிறது. இதை வேத மந்திரம் மூலமாகச் செய்கிறார்கள். இதனால் இறந்த 10 ஆம் நாள்தான் ஒருவன் உண்மையில் இறந்தவனாகக் கருதப்படுகிறான். ஆயினும், தாயின் கர்ப்பத்தில் நுழைவதற்கு முன் அந்த ஆத்மா, தந்தையின் உடலில் 2 மாதங்கள் பிண்ட சரீரத்தில் உணவுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. அந்த 2 மாதங்களில் பெற்றதை 11, 12 ஆம் நாட்களில் பஞ்ச பூதங்களில் கரையச் செய்கிறார்கள்.

12 ஆம் நாளன்று அந்தப் பிரேத சரீரத்தை முழுமையாகப் பஞ்ச பூதங்களில் கரைத்து விடுகிறார்கள். இப்பொழுது ஆத்மா மட்டுமே இருக்கிறது. அதைக் 'கூட்டத்தாரோடு சேர்க்க வேண்டும்'. அந்தக் கூட்டத்தார் யார் என்று பார்த்தால் இறந்தவனுடைய தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா ஆகியோர். அவர்களில் இருந்த ஆத்மா வேறு பிறவி எடுத்திருக்க்கூடும். ஆனால் அங்கே சொல்லப்படும் இந்த உறவுகள், ஒரு காலத்தில் பிண்ட சரீரமாக இருந்து இயற்கையில் ஒன்றியுள்ள உணவின் பிண்டத்துகள்களே. ஒரு மனிதன் தனக்கு முந்தின மூன்று தலைமுறையினரிடமிருந்து, தான் வளர பிண்டம் எடுத்துக் கொள்கிறான். பரம்பரையாக வரும் மரபணுக்கள் இதனுள் அடங்கும். இறந்த பிறகு இந்த மூன்று தலைமுறையினருடன் அவன் இணைந்து விடுகிறான். இந்த இணைப்பைச் செய்யச் சொல்லப்படும் மந்திரங்கள் சில ஜியோமிதி வடிவங்களால் இயங்குகின்றன. மூன்று தலைமுறைகளுக்கு வசு, ருத்ரன், ஆதித்தன் என்று பெயரிட்டுள்ளார்கள்.  அவை எகிப்திய வடிவங்களிலும் காணப்படும்

12 ஆம் நாள் காரியத்தில், சபிண்டிகரணத்தின் போது, முதலில் வலது பக்கத்திலிருந்து சதுரம், முக்கோணம், வட்டம் என்னும் வடிவங்கள் இடப்படும். இவற்றைத் தரையில் நீரால் வரைவார்கள். முதலில் சதுரத்தில் ஒருவரை நிற்கச் செய்து அவர் மீது 'விஸ்வதேவஸ் என்னும் கடவுளை ஆவாஹனம் செய்வார்கள். இவர் வசு, ருத்ரன் ஆதித்தன் உட்பட இயற்கையில் உள்ள எல்லா தேவர்களுக்கும் அதிபதி. எல்லா தேவர்களுக்கும் பிரதிநிதியாக, இவரைச் சதுர வடிவ அமைப்பில் ஆவாஹனம் செய்வார்கள்,

அடுத்து இருப்பது முக்கோணம். அதில் இறந்தவரது மூன்று தலைமுறைப் பித்ருக்களை மந்திரத்தால் வரவழைத்து ஆவாஹனம் செய்வார்கள், முன்பே நாம் முக்கோணத்தைப் பற்றிப் பேசினதை நினவில் கொண்டு வருவோம்,. முக்கோண அமைப்பில் அதீத சக்திகள் நிலை பெறும் என்றோம். அதே கருத்தில், என்றோ இறந்து போன முன்னோர்களை அவர்கள் அடைந்த வசு, ருத்ர, ஆதித்த ரூபத்தில் முக்கோண அமைப்பில் மந்திரங்கள் மூலமாகக் கட்டுகிறார்கள்.

அடுத்து வருவது வட்டம். அதில் இறந்தவர் (யாருக்காக சடங்கு செய்கிறார்களோ)  மந்திரத்தால் நிறுத்தப்படுகிறார். இவர்கள் அனைவருக்கும் அதிபதியாக விஷ்ணுவை, முதலில் இருக்கும் சதுரத்தில் ஆவாஹனம் செய்வார்கள். 

இறந்தவர் தம் முன்னோருடன் சேரும் போது, மூன்றாவது தலைமுறை கொள்ளூத்தாத்தா விலக்கப்படுவார். அப்பொழுதுதான் உயிருடன் இருக்கும் அவரது மகன் (சடங்குகள் செய்பவன்), அவனுடன் தொடர்பு கொண்ட மூன்று தலைமுறையினருக்கு நீர்க் கடன் செலுத்த முடியும். இதைச் செய்யும் மந்திரங்களால்,  முக்கோண அமைப்பில் இருக்கும், இறந்தவருக்கு மூன்றாவது தலைமுறை கொள்ளூத்தாத்தா விலக்கப்படுகிறார்.  

மீதம் இருக்கும் இருவரும், இறந்தவர் இருக்கும் வட்டத்துக்குள் வரவழைக்கப்படுவார்கள. அதில் இறந்தவரைச் சேர்த்து, மூன்று தலைமுறையினர் மட்டுமே நிலை நிறுத்தப்படுவர். இவர்கள், உயிருடன் இருக்கும் சந்த்தியினருக்கும் வசு, ருத்ரன், ஆதித்தன் என்னும் மூன்று தலைமுறையாவார். 

அத்துடன் முக்கோணத்தின்  பயன்பாடு முடிந்து விடுகிறது. அதற்கு மேல் எந்த பித்ரு காரியத்திலும் சதுரமும், வட்டமுமே இருக்கும். முக்கோணம் இருக்காது. இயற்கையில் உள்ள அதீத சக்திகளைக் கட்டுவதற்குத்தான் முக்கோணம் பயன்படுகிறது. எங்கோ இருக்கும் வசு, ருத்ர ஆதித்த ரூபத்தில் உள்ள முன்னோர்களை இழுக்க முக்கோணம் பயன்படுகிறது. முக்கோணத்தைப் பற்றி பிறகு நிறைய பேசுவோம்.

பித்ருக்கள் இடம் மாறி முடிவில் விஸ்வேதேவஸில் ஐக்கியமாவதை 3 படிகளாக (STAGES) ஜியோமிதி வடிவங்களில் காட்டலாம். அவை வருமாறு:-



இந்த ஜியோமிதி வடிவங்கள் (சதுரம், முக்கோணம், வட்டம்) என்பவை மந்திர ரூபத்தில் இறந்தவர்களை வழி நடத்த வேத மதத்தில் உண்டானது. இறந்த பின்னும் ஒரு உலகம் இருக்கிறது என்று சொல்லுமிடத்தில், இந்த வடிவங்களை இணைத்து எகிப்திய பாப்பிரஸ் சொல்கிறதே, இது எப்படி சாத்தியமாயிற்று? அந்த வடிவங்களைப் பயன்படுத்தும் சடங்குகளும் விளக்கங்களும் வேத மரபில்தானே இருக்கின்றன? அவை எகிப்திய மரபில் உண்டானவை என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களிடம் அது முழுமை பெற்ற விளக்கமாக இல்லை. இந்த விளக்கங்கள் மற்றும் சடங்குகளைப் பிறரிடமிருந்து கற்றுக் கொண்டோ அல்லது, நாளடைவில் மறந்து விட்டோ அதைப் பற்றிப் பேசுவதாகத்தானே எகிப்திய விளக்கங்கள் இருக்கின்றன?

வேத மரபில் இறந்தவரது முந்தின தலைமுறையினர் முக்கோணத்தை விட்டு, வட்டத்துக்குள் வந்து விடுவர். அதாவது முக்கோணம் வட்டத்துக்குள் அடங்கி விடும்,. அந்த வட்டத்தில் இருக்கும் இறந்தவரும், அவரது முன்னோரும் அது முதல் பித்ரு தேவர்கள் ஆகி விடுகிறார்கள். எந்தத் தேவனுக்கும் அதிபதி, விஸ்வதேவஸ் ஆவார். அவர் ஆவாஹனம் ஆவது சதுரத்தில். இதனால் வட்டம் சதுரத்துக்குள் அடங்கி விடும்.

இது இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் நம்பிக்கையில் எழுப்பட்டுள்ள எகிப்திய பிரமிடுகளது அடிப்படை வடிவமாகும்.

குறிப்பாக முதன் முதலில் உருவாக்கப்பட்ட கீசாவில் உள்ள பெரும் பிரமிடு (GREAT PYRAMID OF GIZA) இந்த வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஒரே சுற்றளவுடைய வட்டமும், சதுரமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து அமைக்கப்படுகின்றன. வேத மரபில் தெய்வ நிலையை அடைந்த மூன்று தலைமுறையினர் (வட்டம்), அந்தத் தெய்வங்களுக்கு அதிபதியான விஸ்வதேவஸில் (சதுரம்) ஐக்கியமாகின்றனர் என்னும் கருத்து இங்கே பிரதிபலிக்கிறது.

இந்த வட்டத்தின் ஆரத்தை, உயரமாகக் கொண்டு கீசா பிரமிடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு-பரிமாண வடிவத்தில் இது முக்கோணமாகத் தெரியும், முக்கோணத்தில் அதீத சக்திகளும், இறந்தோரது உயிர்ச் சக்தியான பிண்ட சரீரமும் வரவழைக்கப்படுகிறது என்பது வேத மதக் கருத்து. அதை மந்திரங்களால் செய்கிறார்கள். அதை அறியாத ஒரு சமூகம், முக்கோண அமைப்பில் கட்டடம் எழுப்பி அதில் இறந்தவரைக் கிடத்தினால், அவர் ஒருநாள் உயிர் பெற்று விடுவார் என்று எண்ணியிருக்கிறது.


இறப்பினால் ஒருவனுக்கு பூத உடல் அழிந்து பிரேத உடல் உருவாகிறது என்பது வேத மதக் கருத்து. இறந்த 12 ஆவது நாள் அந்தப் பிரேத உடல் மறைகிறது. இறந்தவுடன் பூத உடலையும், 12 ஆவது நாள் பிரேத உடலையும் விட்ட ஆத்மா தன் முன்னோருடன் இணைகிறது. அதை 'சபிண்டி' அல்லது 'சபிண்டீகரணம்' என்பார்கள்.

Similar Posts : Purananooru about After Death,

See Also:புறநானூறு

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
லக்னம் நவாம்ச லக்னம்
2020-10-13 00:00:00
fantastic cms
பரிவர்த்தனை யோகம்
2020-10-18 00:00:00
fantastic cms
Best Astrology Software In Tamil
2021-01-08 00:00:00
fantastic cms
விருட்ச சாஸ்திரம், 27 நட்சத்திரங்கள்
2021-04-19 00:00:00
fantastic cms
வீட்டிற்குள் தெய்வ சக்தி,
2021-04-19 00:00:00
fantastic cms
Bodhidharma in Nanjing
2019-10-06 00:00:00
fantastic cms
Prevent Animals from Tick
2020-10-14 00:00:00
fantastic cms
பைனாபிள் கேசரி
0000-00-00 00:00:00
fantastic cms
முருங்கை தேங்காய் பால் குழம்பு
0000-00-00 00:00:00
fantastic cms
லட்டு
0000-00-00 00:00:00
  • After Death
  • Aries
  • Astrology
  • astrology software
  • astrology-preliminaries
  • Aswini
  • bangle
  • Barani
  • Basics
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology software for windows
  • Birthday Secrets
  • Bodhidharma Birth
  • Bodhidharma Travel to China
  • Cancer
  • Chandiran
  • Chandran
  • Mangal Singh's NDE
  • Moon
  • software
  • Tamil astrology software
  • குங்குமம்
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com