SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
புதன்
  • 2019-10-06 00:00:00
  • 1

புதன்

புதன்

நிறம்பச்சை
மனைவிலா
கிரஹத் தன்மைஉபயக் கிரஹங்கள்
பஞ்சபூத கிரஹங்கள்வாயு கிரஹம்
இரத்தினம்மரகதம்
மலர்வெண்காந்தாள்
குணம்சௌம்யன்
தேவதைவிஷ்ணு
பிரித்யதி தேவதைநாராயணன்
ஆசன வடிவம்அம்பு
தேசம்மகதம்
சமித்துநாயுருவி
திக்குவடகிழக்கு (வடக்கு)
சுவைஉவர்ப்பு
உலோகம்பித்தளை
வாகனம்குதிரை
பிணிவாதம் - வாய்வு
தானியம்பச்சை பயறு
நாடிவாத நாடி
காரகன்தாய்மாமன், கல்வி
ஆட்சிமிதுனம், கன்னி
நீசம்மீனம்
உச்சம்கன்னி
மூலத்திரிகோணம்கன்னி
உறுப்புதோல், கழுத்து
நட்சத்திரங்கள்ஆயில்யம், கேட்டை, ரேவதி
பால்அலி
திசை காலம்17 ஆண்டுகள்
கோசார காலம்ஒரு மாதம்
உபகிரகம்அர்த்தப்பிரகரணன்
நட்புசூரியன், சுக்கிரன்
பகைசந்திரன்
சமம்செவ்வாய், வியாழன், சனி, ராகு, கேது
ஷேத்தரம்மதுரை ரங்கநாதர்
வைணவ திவ்யதேசம்திருப்புளிங்குடி
திருமால் அவதாரம்கல்கி
பலன்கள்சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்
தமிழ் மாதம்***
உணவுபால் பாயசம்
பருவம்***
கிழமைபுதன்
தேதிகள்5, 14, 23
ஸ்வரம்ச
குறியீடு
ஜோதிவணிகர்
அதிகாரம்இளவரசர்
பூதாதிபத்யம்மண்
காராகாதிபத்யம் மாமன்
பாஷைகள் ஜோதிஷம்
கோத்திரம் ஆத்ரேய கோத்திரம்
ராகங்கள் ஸ்ரீரங்கம்

மற்றவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சந்திரனின் வாழ்க்கை  மகிழ்ச்சியானதாக இல்லை . சந்திரன் ஒரு பத்ம ஆண்டு (பல கோடி ஆண்டுகள்) தவம் செய்து பிரம்மனின் அருளைப் பெற்று விதைகள் ,செடிகொடிமரங்கள் மற்றும் சமுத்திரங்களுக்கு அதிபதியானான். பிரஜாபதி தட்சனின் இருபத்தியேழு பெண்களை (நட்சத்திரங்கள் )மணந்து கொண்டான் .தனது புகழ் கீர்த்தி ,மரியாதையை நிருபிக்க சந்திரன் ஒரு ராஜசூய யாகத்தை நடத்தினான்.யாகத்தை சிறப்பாக  நடத்தியதால் மமதை தலைக்கேறியது.ஆணவம் கண்களை மறைத்தது .மனது அறிவு சொன்னபடி கேட்க மறுத்தது .அதனால்தான், தன் குலகுருவான பிரகஸ்பதி மனைவி தாரையை  அபகரித்துச்  சென்று வாழ்க்கை நடத்தி அவளைக்  கருவுறச் செய்தான் .தேவர்களும் கடவுளர்களும் குருவும் கேட்டுக்கொண்டபிறகும் அவன் தாரையை அனுப்ப மறுத்தான்.எனவே தேவர்கள் சந்திரனின் மீது படையெடுத்தனர் .தேவர்கள் சார்பில் சிவனும் குரு பிரகஸ்பதியும் முன்னின்று போரை நடத்தினர். சந்திரனுக்கு உதவியாக அசுரர்களும் ,அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரும் சேர்ந்து கொண்டனர் .போர் மிகவும் பயங்கரமாக நடந்தது.போருக்கு "தாரகாமய சங்கிராமம் "என்று பெயரும் வைக்கப்பட்டது.இரு தரப்பிலும் பலம் சரிசமமாக இருந்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியவில்லை.எனவே பிரம்மன் இருதரப்பினரிடமும் சமாதானம் பேசி தாரையை சந்திரனிடமிருந்து பிரித்து பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார்.ஆனால் பிரகஸ்பதியோ "தாரை கர்ப்பமாக இருக்கிறாள் "எனவே என்னால்தற்போது  தாரையை ஏற்றுக்கொள்ளமுடியாது "என்று கூறி அக்கருவை விட்டுவிட்டு வருமாறு தாரையிடம் கூறினார்.தாரையும் அக்கருவை ஒரு மரத்தின் நிழலில் விட அது மிகுந்த பிரகாசத்துடனும் அழகுடனும் ஒரு சிறுவனாக மாறியது.அதனைக்கண்ட தேவர்கள் மிகவும் வியப்புற்று தாரையை நோக்கி இந்தக் குழந்தை யாருடையது என்று கேட்க அவள் அக்குழந்தை சந்திரனுடையது என்று சொன்னாள்.எனவே சந்திரன் தனக்கும் தன் குருவின் மனைவி  தாரைக்கும் பிறந்த குழந்தைக்கு புதன் என்று நாமகரணம் சூட்டினான் .இப்படியாக புதன் பிறந்தான்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் ‘பொன்’ என்பது செல்வத்துக்கான அதிபதி குருவை குறிக்கும். ஜாதகத்தில் குருவின் பலம்இருப்பதைவிட புதன் பலமாக இருக்க வேண்டும் என்பதையே சூசகமாக குறிப்பிட்டுள்ளனர். கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்த ஒரு விஷயத்தையும் கண்ணால்பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நன்கு படித்தவர்கள் கைநிறைய சம்பளம் வாங்குவதை கண்கூடாகபார்க்கிறோம். நம் வாழ்க்கைக்கு அடிப்படையான கல்விச் செல்வத்தை வழங்குபவர் புதன். சொல்லாற்றல், மதிநுட்பம், சமயோஜித பேச்சு, வழக்குரைத்தல், கணக்கு, ஆடிட்டிங்,பத்திரிகை, ஜோதிடம், வான சாஸ்திரம் ஆகிய துறைகளுக்கும் மூளை, நரம்பு மண்டலம் போன்ற மிக முக்கிய உறுப்புகளையும் கட்டுப்படுத்துபவர் புத பகவான்தான். அவர் அருள்இருந்தால் இத்துறைகளில் சிறந்து விளங்கலாம். புதனுக்கு உண்டான எண்கள் கொண்ட தேதிகள், நட்சத்திரம், ராசி ஆகியவற்றில் பிறந்தவர்கள் கல்வி, கலை, எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.மேலும் லக்னம், 2, 4, 5, 7, 9 போன்ற ஸ்தானங்களில் புதன் சுப பலம் பெற்றிருந்தால் புதன் அனுக்ரகம் நிச்சயம் உண்டு.

பிறந்த லக்னமும் புதன் தரும் யோகமும்

எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் எந்த வகையான யோகங்களை தருவார்?

மேஷ லக்னம்/ராசி புதன் முழு பலத்துடன் இருந்தால்தான் நல்ல யோகங்கள் கிடைக்கும். சகோதரர்களால் சாதகங்கள் உண்டு.

ரிஷப லக்னம்/ராசி சொல்லாற்றல், எழுத்துத்துறை, கலை, இலக்கிய துறைகளில் வெற்றி, குழந்தைகளால் யோகம்.

மிதுன லக்னம்/ராசி கல்வியில் உயர்வு. எல்லா கலைகளிலும் தேர்ச்சி அடையும் யோகம். நிலபுலன்கள், பூர்வீக சொத்துகளால் யோகம். கம்ப்யூட்டர் துறையில் சாதனைபடைக்கும் வாய்ப்பு.

சிம்ம லக்னம்/ராசி கலை, இலக்கியம், சொல்லாற்றல் போன்றவற்றில் யோகம்.

கன்னி லக்னம்/ராசி கல்வி, கலை, வித்தைகள், கம்ப்யூட்டர், கணக்கு, பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள் மூலமாக அதிர்ஷ்டம்.

துலா லக்னம்/ராசி கல்வி, ஆராய்ச்சி, பெரிய நிறுவனங்களை நிர்வகித்தல், பெரிய பதவிகள்.

தனுசு லக்னம்/ராசி வெளிநாடு செல்லும் யோகம். ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் முதன்மை பெறும் வாய்ப்பு.

மகர லக்னம்/ராசி சகல பாக்யங்களும் உண்டாகும். ஆராய்ச்சி துறைகளில் சாதனை படைப்பீர்கள்.

கும்ப லக்னம்/ராசி எல்லா துறைகளிலும் ஏற்றம்.
மீன லக்னம்/ராசி & கல்வி, கேள்வி ஞானம் உள்பட சகல விஷயங்களிலும் சிறந்து விளங்குவீர்.

எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் புதன் நீச்சம் பெறாமலும், 6, 8, 12 ம் இடத்திலும் 6, 8, 12 ம் அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும்.

வழிபாடு, பரிகாரம்

மதுரையில் மீனாட்சி அம்மன் புதனாகவே அருள்பாலிக்கிறார்.

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் இருக்கும் திருவெண்காடு புதன் தலமாகும். பிரம்ம வித்யாம்பாள் சமேதஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் இத்திருத்தலத்தில் தனி சன்னதியில் புத பகவான் காட்சி தருகிறார்.

நவதிருப்பதிகளுள் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும்.

‘ஓம் கஜ த்வஜாய வித்மஹே

சுக ஹஸ்தாய தீமஹி

தந்தோ புத பிரசோதயாத்’

என்ற புத காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். 

‘ஓம் மம் ஹ்ரி உம் சிவ புத தேவாய நம’  

என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். பச்சைப் பயறுவேக வைத்து பசு மாட்டுக்கு வழங்கலாம். புத பகவானின் திருவருள் கிடைத்தால் கல்வியில் மாணவர்களுக்கு நாட்டம் ஏற்பட்டு அதிக மதிப்பெண்களை குவிப்பார்கள்.

புதன் வித்யாகாரன் என்று அழைக்கப்படுகிறார். இது சூரியனை சுற்றி வருகிறது சூரியனுக்கு சுமார் 1,60,00,000 KM அப்பால் இருந்து சுற்றி வருகிறது. இது தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றி வருகிறது. 88 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது. புதன் கல்வி,மாமன், அத்தை,மைத்துனர்களை பற்றி அறிந்து கொள்ள புதன் உதவி செய்பவர்.    

கல்வி,வித்தை,மாமன்,அத்தை,மைத்துனர்,நண்பர்கள்,கணிதம்,கபடம்,கதைகள், சிற்பம்,சித்திரம்,நுண்கலைகள்,நடிப்பு,சாஸ்திர ஞானம் ஆகியவற்றிக்கு காரணம் ஆகிறார். சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி  ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை  பிரதிபல்க்கும். கேட்டை, ஆயில்யம், ரேவதி இந்த மூன்று நட்சத்திரங்களின் நாயகன்.  முதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிபதி புதனே. புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று சூரியனோடு சேர்ந்தால் புதஆதித்ய யோகம்  உண்டாகும். இதனால் கல்வி மூலம் பெரிய அந்தஸ்த்தை ஏற்படுத்தும். புதன்  வித்யாகாரகன். கல்வி வித்தை, தொழில் இவைகளின் மூலம் சிறப்பை ஏற்படுத்துபவன். நாடகம் மற்றும் நடன அமைப்புகளுக்கு புதனுடைய பலமே காரணம். நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு, பளிச்சென்ற உச்சரிப்பு, புத்தக வெளியீடு  இவைகளுக்கு புதபலமே காரணம். 

புதன் வாக்குஸ்தானத்தில்- 2 ஆம் இடத்தில் ஆட்சி உச்சம்  பெற்றால் சிறந்த பேச்சுதன்மை இருக்கும். வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். உடலில் நரம்பு இவன். நரம்பு மண்டலத்தின் ஆதாரமும் இவனே. வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும். புதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் காசியில் உள்ளது. திருவெண்காடு புதனுக்குரிய தலம். விஷ்ணு இவருக்கு அதி தேவதை. நாராயணன் பிரத்யதி தேவதை. மரகதம் புதனுக்கு உகந்த ரத்தினம். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் திருவெண்காடு சென்று புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். இங்கே இவருக்கும் பதினெழு தீபம் ஏற்றி, பதினேழு முறை வலம் வந்து புத பகவானை வழிபட்டால் திருமண தோஷம், புத்திர தோஷம் முதலியன நீங்கும். இவருக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி, பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்யவேண்டும்.

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்சுவேதாரண்ய சுவாமி
உற்சவர்
அம்மன்/தாயார் பிரமவித்யாநாயகி
தல விருட்சம் வடவால், கொன்றை, வில்வம்
தீர்த்தம்முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)
ஆகமம்/பூஜை
பழமை1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்ஆதிசிதம்பரம், திருவெண்காடு
ஊர்திருவெண்காடு
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்  வாரப்பதிகம் 

கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும் 

உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் 

பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் 

கொடியானே. -திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம்.

திருவிழா:மாசி மாதம் - இந்திரப் பெருவிழா - 13 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இந்திரனால் நடத்தப்படும் விழா என்ற ஐதீகம் பெற்ற சிறப்புடையது இந்த திருவிழா. காவிரிப்பூம்பட்டினத்தில்இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தலத்தில் இத்திருவிழா மிகவும் சிறப்புற நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். சித்திரை திருவோணத்தில் நடராஜர் அபிசேகமும், வைகாசியில் வெள்ளை யானைக்கு சாப விமோசனம் அளித்தலும், ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிசேகமும், ஆடியில் பட்டினத்தாருக்குச் சிவதீட்சை அளித்தலும், அம்பாளுக்கு ஆடிபூரம் பத்து நாள் உற்சமும், ஆவணியில் நடராஜருக்கு அபிசேகமும், கோகுலாஷ்டமி , விநாயகர் சதுர்த்தி விழாவும், புரட்டாசியில் தேவேந்திர பூஜையும், நவராத்தி விழாவும், ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவும், கார்த்திகையில் மூன்றாவது ஞாயிறு அன்று அகோர மூர்த்திக்கு மகாருத்ரா அபிசேகமும், கார்த்திகை தீப விழாவும், மார்கழி திருவாதிரையில் நடராஜர் தரிசனமும், தை மாதத்தில் சங்கராந்தி விழாவும் இத்தலத்தில் சிறப்புற நடைபெறுகின்றன. 

பங்குனி தோறும் அகோர மூர்த்திக்கு லட்சார்ச்சானை வைபவம் சிறக்க நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். 

அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு - 609 114, நாகப்பட்டினம் மாவட்டம். 

ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள் இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது. கரையில் சூரியதீர்த்தலிங்க சந்நிதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. இத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை:

இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா. பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும். இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்திக்கடன்:

நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலம் ஆகும். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி,பாசிப்பருப்புப் பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் புதன் பகவானை வழிபட வேண்டும்.திருமண தோசம், புத்திர தோசம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு பதினேழு தீபம் ஏற்றி பதினேழு முறை வலம் வந்து வழிபடுகிறார்கள். சுவாமிக்கு மா , மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

தலபெருமை:

காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு.  இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.  

நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 

51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். 

இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள். 

இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. 

இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். 

பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.

சுவேதாரண்யர் (திருவெண்காடர்) :திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

நடராஜர் :  

இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.

அகோர மூர்த்தி : 

ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது. சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு. அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.

பிரம்ம வித்யாம்பாள் : இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு. நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

காளிதேவி :  

சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.

துர்க்கை தேவி :  

துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.

புதன் பகவான் : வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார். திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.

பிள்ளையிடுக்கி அம்மன்: 

திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது. புதனுக்கு தனி சன்னதி: நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது.காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது. இத்தலத்தில் மூர்த்திகள்(திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), சக்தி(துர்க்கை, காளி, பிரம்மவித்யாம்பாள்),தீர்த்தம் (அக்னி தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்) தலவிருட்சம்(வடவால், வில்வம், கொன்றை ) என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு உள்ளது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார். ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது. சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது. பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.

தல வரலாறு:

பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான்.ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத் திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும்காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

புதன் தான் சோதிட சாஸ்திரத்திற்க்கு காரகம் வகிப்பவர். இவர்தான் புத்திகாரகன் என்று அழைக்கப்படுகிறார். சோதிட சாஸ்திரத்திற்க்கு நினைவாற்றல் மிக முக்கியம் இல்லை என்றால் சோதிடம் படிக்க இயலாது. அனைத்தும் நினைவில் இருந்தால் தான் ஜாதகம் பார்க்கும் போது அனைத்து பலன்களும் வந்து அருவியாக கொட்டும். இல்லை என்றால் வாடிக்கையாளாரிடம்  கெட்ட பெயர் வாங்கவேண்டியது தான். 

புதன் வேறு எதற்கு எல்லாம் காரகன் ஆகிறார் என்று பார்க்கலாம். நல்ல புத்தி கூர்மைக்கு அதிபதி இவர் தான். அதனால் தான் இவரை கல்விகாரகன் என்று அழைக்கிறோம். ஜாதகத்தில் நல்ல முறையில் இருந்தால் தான் படிக்க முடியும். சில பேருக்கு புதன் நல்ல அமையும் சிறந்த அறிவாளியாக இருப்பார்கள். வியாபாரத்திற்க்கும் இவர் தான் காரகம் வகிக்கிறார். சிறந்த முறையில் ஒருவர் வியாபாரம் செய்வதற்க்கு புதன் தான் காரணம். அனைத்து தொடர்புகள் இருந்தால் தான் ஒருவர் வியாபாரத்தில் கொடிகட்டி முடியும். புதன் நல்ல முறையில் இருக்கும் ஒருவர் அனைத்து தொடர்புகளும் கிடைக்கும். நல்ல பேச்சுக்கும் இவர் தான் காரகம் வகிப்பவர். புதன் நல்ல நிலையில் இருக்கும் போது பார்த்தால் திட்டமிடுதல் அனைத்து பேருக்கும் சிறந்த முறையில் நன்மை பயக்கும் விதத்தில் இருக்கும். நல்ல வழியில் திட்டமிடுதல் புதன் நல்ல நிலையில் இருக்கும் போது இந்த மாதிரி நடக்கும். உடலில் நல்ல தோல் நிலைக்கும் இவர் தான் காரகம் வகிக்கிறார். 

புதன் கெட்டால் என்ன நடக்கும். புத்தி கெட்டுவிடும் படிப்பது எதுவும் நினைவில் இருக்காது இரண்டாம் வீட்டில் கெட்டால் பேச்சு ஒழுங்காக வராது திக்கி திக்கி பேசுவார்கள் அல்லது பேச்சு சுத்தமாக வராது. அது புதன் உடன் சேரும் கிரகத்தைப் பொறுத்தது. புதன் கெட்டால் திட்டமிடுதல் அனைத்தும் வில்லங்கமாகதான் இருக்கும். புதனுடன் சேரும் கெட்ட கிரகங்களை பொருத்து வில்லங்கம் அமையும். ஞாபகம் மறதி ஏற்படும். தொழுநோய் தாக்கும்

புதன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன நடக்கும்

புதன் 1 ஆம் வீட்டில்  இருந்தால் அதாவது லக்கினத்தில் இருந்தால் நல்ல புத்தி உடன் இருப்பார்கள் நல்ல பேச்சு இருக்கும் பேச்சில் இனிமை இருக்கும். நல்ல உலக விஷயங்களில் சிறந்த அறிவு இருக்கும். நல்ல சுறுசுறுப்பாகவும் நல்ல தோற்றப்பொழிவுடன் இருப்பார்கள். லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் மனைவியுடன் பிடிப்புடன் இருப்பார்கள். 

புதன் 2 ஆம் வீட்டில் இருந்தால் பேச்சு நன்றாக இருக்கும் இவரின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். தந்தையிடம் இவருக்கு மதிப்பு இருக்கும் குடும்பம் சிறந்து விளங்கும். செல்வ வளம் நன்றாக இருக்கும். 

புதன் 3 ஆம் வீட்டில் இருந்தால் இளைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களில் இரட்டை பிறப்பு உள்ளவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. நல்ல ஆயுள் இருக்கும். வியாபார நுட்பம் ஏற்படும். புதன் மிதுனம் ராசிக்கும் கன்னி ராசிக்கும் அதிபதி. புதன் ஒரு இரட்டை கிரகம் இந்த ராசியில் பிறந்தவர்களைப் பற்றி பார்த்தீர்கள் ஆனால் இவர்கள் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி பேசுவார்கள். இரட்டை வேஷம் மிகுதியாக இருக்கும். நீங்கள் இவர்களிடம் போய் எதனை கேட்டாலும் உங்களிடம் ஒன்று பேசிவிட்டு உங்கள் நண்பர்களிடம் உங்களைப் பற்றி கேட்டு தெரிந்துக்கொள்வார்கள். புதனின் இயல்பு இது. மிதுனம் கன்னி ராசிகாரர்கள் காமத்தில் மிகுதியான ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு குழந்தைகள் பிறப்பது தாமதமாகிறது. முறையற்ற தொடர்பு கர்மத்தை விலை கொடுத்து வாங்குவது போல் தான் இதனை இவர்கள் தவிர்க்க வேண்டும். நான் பார்த்த இந்த ராசிகாரர்களின் ஜாதகங்களில் மிகுதியான நபர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடைபெறுவது தாமதமாகிறது. 

புதன் 4 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல கல்வியாற்றலைத் தருவார். தாய்வழி மாமன் வகையில் உதவி கிடைக்கும். வாகனம் வகையில் நல்ல வருமானம் வரும். ஒரு வாகனம் வாங்கினால் உடனே அடுத்த வாகனம் வாங்குவார். நான்காம் வீடு வீட்டை குறிப்பதால் வீடு வாங்கும் யோகம் புதனால் கிடைக்கும். ஒரு வீட்டை வாங்க ஏற்பாடு செய்தால் இரண்டு வீடு வாங்குவார்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். 

புதன் 5 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல கவிதை எழுதுவார். நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மூலம் நல்ல பதவிகள் வரும். பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும். நல்ல தந்திர வேலைகள் தெரியும். 

புதன் 6 ஆம் வீட்டில் இருந்தால் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மாமனின் உதவி கிடைக்கும். ஆறாம் வீடு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுவதால் விரோதிகள் வராமல் இருக்க வைப்பார். ஆனால் சச்சரவு இருக்கும். பேச்சு சில நேரங்களில் கலவரத்தை உண்டாக்குவது போல் இருக்கும். 

புதன் 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல அழகான மனைவி அமையும். அவர் மூலம் வருமானம் வரும். வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் கிடைக்கும். மாமன் மகள் கூட மனைவியாக வர வாய்ப்பு இருக்கிறது. அல்லது திருமண விஷயங்களில் மாமன் உதவி கொண்டு திருமணம் வரும். மாமனே பெண் பார்க்கலாம். அந்த வரிசையில் புதன் குறிக்கும் சாதி வைசியர். என்னடா கிரகங்களிலும் சாதியா என்று கேட்கலாம். ஆமாம் கிரகங்களிலும் அந்த அந்த கிரகம் ஒவ்வொரு சாதியை குறிக்கிறது. இது எதனால் என்றால் பிரசன்ன சாதகம் பார்க்கும் போது இது பயன்படும். ஒரு பொருள் திருடு போகும் போது களவு போன பொருளை திருடியவன் இந்த சாதியை சேர்ந்தவன் என்று சொல்லுவதற்க்கு பயன்படும். 

புதன் 8 ஆம் வீட்டில் இருந்தால் கல்வியில் தடை ஏற்படும். மாமன் இருக்கமாட்டார் அப்படியே மாமன் இருந்தாலும் அவர் மூலம் எந்த பயனும் இருக்காது. புதன் நல்ல முறையில் இருந்தால் உயில் மூலம் சொத்து வரும். 

புதன் 9 ஆம் வீட்டில் உள்ள இருந்தால் செல்வம் நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருக்கும். நன்றாக கவர்ந்து இழுக்கும் பேச்சு திறன் இருக்கும். நன்றாக உயர்கல்வி படித்திருப்பார்கள். உயர்கல்வியில் சிறந்த விளங்க உதவி செய்வார். 

புதன் 10 ஆம் வீட்டில் இருந்தால் அரசாங்க வேலையில் இருப்பார்கள். சொத்துகள் சேரும் ஏஜென்சி தொழில் லாபம் தரும். ஆடம்பர பொருட்கள் வீடு தேடி வரும். தொழில்கள் நிறைய செய்யவைப்பார். மாமன் மூலம் தொழில் அமையும். அறிவுக்கு முக்கியம் கொடுத்து செய்யும் தொழிலில் செய்வார். 

புதன் 11 ஆம் வீட்டில் இருந்தால் பெரும் பணக்காரராக இருப்பார்கள் பெண்கள் மூலம் வசதி வாய்ப்பு வரும். மூத்த சகோரர் மூலம் வருமானம் வரும். நல்ல புத்திசாலி உள்ள நண்பர்கள் கிடைப்பார்கள். 

புதன் 12 ஆம் வீட்டில் இருந்தால் படிப்பறிவு இல்லாமல் போகும். வாழ்க்கையில் கஷ்டபடுவார்கள் தோல்வியாதி உள்ள பெண்ணிடம் தொடர்பு இருக்கும். பெண்கள் மூலம் விரையம் ஏற்படும். நல்ல துப்பறியும் திறன் இருக்கும். மேலை சொன்ன பலன்கள் பொதுவானவைதான். புதன் நல்ல முறையில் இருக்கும் போது இந்த பலன்கள் நடைபெறலாம். புதன் கெட்டால் இதற்க்கு நேரமாறான பலன்கள் நடைபெறும்.

புதன் (படிப்பும், அறிவும் பெற)

ஓம் கஜத்வஜாய வித்மஹே 

சுகஹஸ்தாய தீமஹி 

தன்னோ புதஹ் ப்ரசோதயாத் 

ஓம் சோமபுத்ராய வித்மஹே 

மஹாப்ரஜ்ஞாய தீமஹி 

தன்னோ புதஹ் ப்ரசோதயாத் 

ஓம் சந்திரசுதாய வித்மஹே 

சௌம்யக்ரஹாய தீமஹி 

தன்னோ புதஹ் ப்ரசோதயாத் 

ஓம் ஆத்ரேயாய வித்மஹே 

சோமபுத்ராய தீமஹி 

தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

திருவெண்காடு, இத்தலம் கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.  வால்மீகி ராமாயணத்தில் இதனைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஆகையால் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகப் பழமை வாய்ந்ததாக கருதப் படுகிறது. நவக் கிரகங்களில் இறுதியாக கருதப்படுகின்ற புதன் என்றும் ஆங்கிலத்தில் MERCURY என்றும் அழைக்கப் படும் இக்கிரகம் ஆற்றலையும் அறிவையும் கொடுக்கக் கூடிய கிரகமாக கருதப் படுகிறது. அதிமேதாவிதனத்தையும், அறிவுக் கூர்மையையும், செல்வ சம்பத்தையும் தனது பக்தர்களுக்கு வழங்குவதில் முதன்மை பெற்றது. இக்கிரகத்தின் அதி தேவதை மகா விஷ்ணு ஆவார். சைவதிருமறைகளிலும், சாஸ்திரங்களிலும் இத்தலம் குறிப்பிடப்படுகிறது. காசிக்கு இணையான அந்தஸ்த்தை பெற்றுள்ளது. காசியில் செய்யும் சிரார்த்தங்களுக்கு என்ன பலனோ அதே பலன் இத்தலத்திலும் உண்டு. அனைத்து கர்ம காரியங்களும் காசிக்கு ஈடாக இங்கு நடைபெறுகின்றது. புதன் கல்வியும், கலைத்துறையும் தனது அதிகாரத்தில் கொண்டது. 

காயத்ரி

ஓம் கஜத் வஜாய வித் மஹே

சுக ஹஸ்தாய தீமஹி

தந்நோ புத; ப்ர சோதயாத்

5,14,23 ஆகிய 5ம் எண்களாகும். இவை புதனின் ஆதிக்கத்திற்குட்பட்டவை யாதலால் இவர்கள் அணியவேண்டிய ரத்தினம் மரகத பச்சை.


பெயர்புதன் (Mercury)
ஜாதிவைசிய ஜாதி
வேறு பெயர்கள்சிந்தைகூரியன், கணக்கன், தேர்ப்பாகன், அருணன், சாமன், தூதுவன், மால், மதிமகன், அறிஞன், பாகன், புலவன், அனுவழி, மேதை, பச்சை, புந்தி, பண்டிதன், கிரகபதி, ஞானி, தனப்ரதன்


Similar Posts : புதன்,

See Also:புதன்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Why Sambraani
2019-10-06 00:00:00
fantastic cms
Why Sandal or Chandanam
2019-10-06 00:00:00
fantastic cms
Why say Shaanti thrice
2019-10-06 00:00:00
fantastic cms
Why shirts not allowed
2019-10-06 00:00:00
fantastic cms
Why super brain yoga
2019-10-06 00:00:00
fantastic cms
Why the bell is rung
2019-10-06 00:00:00
fantastic cms
Why Theertham
2019-10-06 00:00:00
fantastic cms
Why there are many Gods
2019-10-06 00:00:00
fantastic cms
Why apply Tilak
2019-10-06 00:00:00
fantastic cms
Why to sit in Floor
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • Abishegam
  • Adi Shankara
  • Aquarius
  • Aries
  • Ascendant
  • Astrology originate
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • best astrology softw
  • Best Astrology Software
  • Bodhidharma Birth
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharmas Guru
  • brahma-muhartham
  • Budhan
  • Chandiran
  • Chhajju Bania's NDE
  • Chick
  • Hinduism
  • medicine
  • Mercury
  • NDE
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com