ஓதச்சாமி(சுப்பையாசாமி)
திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேற்குப்புறம் முத்தழகுப்பட்டிக்குச் செல்லும் வழியில் இந்த ஜீவசமாதி இருக்கிறது.பல்வேறு அதிசயங்களை புதைத்து வைத்திருக்கிறது இந்த ஓதசுவாமி திருக்கோவில்.
கருணாம்பிகை அம்மையார்
திண்டுக்கல் காமராஜர் தெருவில் சாது கருணாம்பிகை அம்மையார் ஆஸ்ரமத்தில் அதிஷ்டானம் இருக்கிறது.சமாதியின்மேல் ஸ்ரீகருணானந்தேஸ்வரர் என்னும் பெயரில் சிவலிங்கப்பிரதிஷ்டை
கள்ளியடி பிரம்மம்
திண்டுக்கல் டூ திருச்சி சாலையில் 20 கி.மீ.தூரத்தில் வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் சமாதி இருக்கிறது.
கசவனம்பட்டி நிர்வாண மவுனகுரு சாமி
திண்டுக்கல் டூ கன்னிவாடி அருகே கசவனம்பட்டி கிராமம் இருக்கிறது.இங்கே ஆஸ்ரமமும்,சமாதிக்கோவிலும் இருக்கிறது
திருமலைக்கேணி மாட்சி மவுனகுரு சுவாமிகள்
திண்டுக்கல் டூ செங்குறிச்சி சாலையில் 23 கி.மீ.தூரத்தில் திருமலைக்கேணி இருக்கிறது.இங்கு சிறிய குன்றின் மேல் முருகன் கோவில் அமைந்திருக்கிறது.ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சாமிகள் மடாலயம் அமைந்திருக்கிறது. மடத்துள் சமாதிக்கோவில் இருக்கிறது.பிரதி வருடம் ஆடிமாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளில் குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பெரியகுளம் - மவுனகுரு சாமி
பெரியகுளம் வராகநதி பாலத்தில் இருந்து அருள் தியேட்டர் செல்லும் வழியில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
ஒட்டன் சத்திரம் - ராமசாமி சித்தர்
ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையம் அருகில் இருக்கிறது.