சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகள்சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகள் பற்றிய அபூர்வ குறிப்புகள்....
சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும் இருப்பிடமும்,
திருவொற்றியூர்:
********************
(1)பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார்கோவில் வீதி. ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.
(2)பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்.
(3)ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.
(4)அருள்மிகு யோகீஸ்வரர் சாமி= வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.
(5)பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில், தங்கம் மாளிகை அருகில்.
(6)ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.
(7)மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதிகோவில்.
(8)முத்துக்கிருஷ்ண பிரம்மம்= ஆஞ்சநேயர் கோவில் பஸ்ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை.
(9)ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில், ஞான சுந்தர பிரம்மம் சமாதி. சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!
ராயபுரம்:
***********
(1)குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.
(2)ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .
வியாசர்பாடி:
***************
(1)சிவப்பிரகாச சாமி= இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.
(2)கரபாத்திர சிவப்பிரகாச சாமி= 1வது தெரு சாமியார்தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில். பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!
பெரம்பூர்:
************
(1)அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில் - பஞ்சமுக வடிவமும் உள்ளது.
(2)மதனகோபாலசாமி= மேல்பட்டி பொன்னப்ப முதலிதெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதிகோவில்.
(3)சந்திர யோகி சுவாமி= மங்களபுரம் ஐந்து லைட் அருகில்.
(4)வேர்க்கடலை சுவாமி= அய்யாவு தெரு, திரு.வி.க.நகர்.
(5)மதுரை சாமி= செம்பியம் வீனஸ் தியேட்டர் 2வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.
(6)மயிலை நடராஜ சுவாமி= கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.
ஓட்டேரி:
**********
ஆறுமுகச்சாமி= 173/77 டிமலஸ் சாலை, பெரம்பூர்பேரக்ஸ் ரோடு- ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்- உருவப்பட பூஜை.
புரசைவாக்கம்:
******************
(1)வீரசுப்பையா சுவாமி
புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்- 52,பெரம்பூர் பேரக்ஸ்ரோடு மடத்தில் சமாதி கோவில்.
(2)ஈசூர் சச்சிதானந்த சாமி= கொசப்பேட்டை சச்சிதானந்தாதெரு (வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.
எழும்பூர்:
***********
(1)மோதி பாபா= 422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.
(2)அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதிசுவாமி= பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்- ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.
நுங்கம்பாக்கம்:
*******************
(1)கங்காத சுவாமி= ஹாரிங்டன் ரோடு 5வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.
(2)நாதமுனி சாமி= ஹாரிங்டன் ரோடு, பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.
(3)பன்றிமலை சாமி= 5, வில்லேஜ் ரோட்டில் "ஓம்நமச்சிவாய’" என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.
(4)ஆதிசேஷானந்தா= நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.
(5)வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.
கோடம்பாக்கம்:
*******************
ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி= அசோக் நகர்- சாமியார்மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்- ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.
வடபழனி:
************
அண்ணாசாமி, ரத்தினசாமி, பாக்கியலிங்கசாமிகள்= வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும்காரண கர்த்தாக்கள். இவர்களது சமாதி கோவில்முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.
மைலாப்பூர்:
***************
(1)திருவள்ளுவர்- வாசுகி அம்மையார்= லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.
(2)அப்பர் சாமிகள்= 171, ராயப்பேட்டை ஹைரோடு- சமஸ்க்ருத கல்லூரி
எதிரில், மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.
(3)குழந்தைவேல் சுவாமி= சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டுபில்டிங்கில் இருக்கிறது.
(4)முத்தையா சாமிகள்= குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.
ஆலந்தூர்:
*************
(1)தாடிக்கார சுவாமி= ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையேசந்து. உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதிகோவில். சிவலிங்க பிரதிஷ்டை.
(2)குழந்தைவேல பரதேசி= ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு, எஸ்.ஆர்.மெட்ரிக்மேல் நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதிகோவில்.
கிண்டி:
*********
(1)சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்= எம்.கே.என்.ரோடு 36ஆம் எண்- சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதிகோவில்- சிவலிங்க பிரதிஷ்டை. இத்துடன் இவரதுசீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி, ஸ்ரீஏழுமலை சாமிகளின்சமாதி, ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.
(2)சத்யானந்தா கோழீபீ சித்தர்= பஸ் ஸ்டாப் அருகில்உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.
திருவான்மியூர்:
*******************
(1)பாம்பன் சுவாமிகள்- கலா சேத்ரா அருகில் திருமடவளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதிஆலயம். ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.
(2)வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறியகோவில்.
(3)சர்க்கரை அம்மாள்= 75,கலா சேத்ரா ரோடு,
வேளச்சேரி:
***************
சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி= காந்தி சாலைதிருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்கபிரதிஷ்டை.
ராஜகீழ்ப்பாக்கம்:
*********************
சச்சிதானந்த சற்குரு சாமிகள்= அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.
பெருங்குடி:
**************
நாகமணி அடிகளார்= கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் –நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.
நங்கநல்லூர்:
*****************
மோனாம்பிகை- ஞானாம்பிகை- சாதுராம் இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம் (மாடர்ன்உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி.
சிட்லப்பாக்கம்:
******************
சாயி விபூதி பாவா= 83, முதல் மெயின்ரோடு, ஹெச்.சி.நகர்- சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில்சமாதி கோவில்- அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.
ஊரப்பாகம்:
***************
எதிராஜ ராஜயோகி- ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.
படப்பை:
***********
துர்கை சித்தர்- ஜெயதுர்கா பீடம் கோவில்.
பெருங்களத்தூர்:
*********************
ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.
புழல்:
********
(1)கண்ணப்ப சாமி- புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்; ஜீவசமாதி மேடை மீதுசாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.
(2)காரனோடை மல்லையா சாமிகள்:
காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ்வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது. இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
(3)அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்- காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில்இருக்கிறது. பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அலமாதி மார்க்கண்டேய மகரிஷி அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதிஅமைந்திருக்கிறது.
(4)கோவணச்சாமி- அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.
(5)பூதூர் ஷா இன்ஷா பாபா- செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடுரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது. இந்தகிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.
பஞ்சேஷ்டி
*************
புலேந்திரர் (சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)- ரெட் ஹில்ஸ் டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள்ஜீவசமாதி உள்ளது. இங்கு இருக்கும் இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அம்பத்தூர்:
**************
ஐயா சூரியநாத கருவூரார்: பதினெண் சித்தர் மடம் 13,குமாரசுவாமிதெரு, வரதராசபுரம், அம்பத்தூர். பிரதி அக்டோபர் 10 ஆம்தேதி வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
வடதிருமுல்லைவாயில்:
*****************************
(1)அன்னை நீலம்மையார்- 37/1 வடக்கு மாடவீதி, மாசிலாமணி ஈஸ்வரன் கோவில்அருகில் ஜீவசமாதி இருக்கிறது. பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.
(2)மாசிலாமணி சுவாமிகள்- சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
பூந்தமல்லி:
**************
(1)கர்லாக்கட்டை சித்தர்- வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார்.
(2)பைரவசித்தர்- பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.
(3)கருடகோடி சித்தர்- பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர்:
********************
(1)அருள்வெளி சித்தர்
பூதேரிபண்டை கிராமம்- வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது. உயரமான சமாதிமேடை. சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
(2)வெள்ளறை கிராமம்- ராஜராஜ பாபா சித்தர், கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது.
மாங்காடு :
*************
சர்வசர்ப்ப சித்தர்: மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில்கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.
புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்):
*****************************
மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்-
ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன. இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.
கோவளம் :
*************
ஆளவந்தார் சாமி- கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.
திருக்கழுகுன்றம் :
**********************
(1)குழந்தை வேலாயுத சித்தர்
செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர்கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.
(2) அப்பூர்- பதஞ்சலி சுவாமி
திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர்பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.
திருப்போரூர் :
*****************
சிதம்பரச்சாமி திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டுஉள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜைவிழா நடைபெற்று வருகிறது.
செம்பாக்கம் :
****************
இரட்டை சித்தர்கள்
செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில்செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள்உள்ளன.
கூடுவாஞ்சேரி :
*******************
மலையாள சாமி- கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது. அருகில்இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி இருக்கிறது.
அச்சரப்பாக்கம் :
********************
முத்துசாமி சித்தர்- அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ளகுன்று இருக்கிறது. இந்த முருகன் கோவில் வெளியேசன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது. இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.Similar Posts :
கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்,
திருவிசைநல்லூர்,
பத்திரக்கிரியார்,
பாம்பன் சுவாமிகள்,
சட்டமுனி, See Also:
சித்தர்கள் ஜீவசமாதி சென்னை