சட்டத் தகவல்கள்
தனியுரிமைக் கொள்கை
இது மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்புக்கும் ஆங்கிலப் பதிப்புக்கும் இடையே வேறுபாடு இருந்தால், ஆங்கிலப் பதிப்பே செல்லுபடியாகும். ஆங்கிலப் பதிப்பைப் படிக்க
எங்கள் மென்பொருளை வாங்க, வாடிக்கையாளர்கள் தங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் தர வேண்டும். முழு முகவரியும் தொலைபேசி எண்ணும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது மட்டுமே தேவை. எங்கள் மென்பொருள் நிறுவப்பட்டுள்ள டொமைன், உரிம விசைப் பதிவின் மூலம் எங்களுக்குத் தெரியவரும்.
Sithars Astrology Software வாடிக்கையாளர்கள் எங்கள் மென்பொருளைப் பயன்படுத்த, பதிவு செய்யும்போது தொடர்பு மற்றும் கைபேசி எண் விவரங்களை (நிறுவனப் பெயர், முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல்) தர வேண்டும். தனித்தனிக் கணக்குகளைப் பராமரிக்கவும், தேவைப்படும்போது வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளவும் இத்தகவல்கள் அவசியம்.
கட்டண நுழைவாயில் (payment gateway) சேகரிக்கும் கிரெடிட் கார்டு எண், காலாவதி தேதி போன்ற நிதித் தகவல்கள், வாடிக்கையாளர்கள் வாங்கும் சேவை(களு)க்கான கட்டணத்தைப் பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நாங்கள் எந்த வடிவிலும் சேமிப்பதில்லை.
பெயர், மின்னஞ்சல் போன்ற தனிப்பட்ட தகவல்கள் முதன்மையாகத் தனித்தனிக் கணக்குகளை அடையாளம் காணப் பயன்படுத்தப்படுகின்றன. தொழில்நுட்ப உதவிக்காகப் பயனரைத் தொடர்புகொள்ளவோ, மென்பொருள் புதுப்பிப்பு மற்றும் கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவோ, மின்னஞ்சல் முகவரி போன்ற தனிநபரை அடையாளம் காட்டும் தகவல்களை Sithars Astrology Software சில சமயங்களில் பயன்படுத்தும்.
Sithars Astrology Software தன் உறுப்பினர்களுக்கு, விலகிக்கொள்ளும் வசதியுடன் கூடிய பல்வேறு செய்திமடல்களை அவ்வப்போது அனுப்புகிறது. உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி இச்செய்திமடல்களிலிருந்து விலகிக்கொள்ளலாம்.
பாதுகாப்பு
எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் தகவல்களும் இழக்கப்படாமலும், தவறாகப் பயன்படுத்தப்படாமலும், மாற்றப்படாமலும் இருக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தியுள்ளோம். அனைத்து ஆர்டர்களும் பாதுகாப்பான சேவையகம் (SSL) வழியாகச் செயல்படுத்தப்படுகின்றன; கிரெடிட் கார்டு விவரங்கள் ஒருபோதும் மின்னஞ்சலில் அனுப்பப்படாது.
கிரெடிட் கார்டு தகவல் எதையும் நாங்கள் எங்கள் சேவையகங்களிலோ அலுவலகத்திலோ வைத்திருப்பதில்லை, சேமிப்பதில்லை. Sithars Astrology Software-இடமிருந்து பொருட்களையும் சேவைகளையும் வாங்கப் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டு தகவல்கள் அனைத்தும், அந்தந்தக் கட்டண நுழைவாயில்களால் அவற்றின் பாதுகாப்பான சேவையகங்களில் செயல்படுத்தப்பட்டுச் சேமிக்கப்படுகின்றன.
Sithars Astrology மென்பொருள் வழியாக ஆர்டர்கள் செயல்படுத்தப்படும்போது, பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற வாடிக்கையாளர் தகவல்கள் சேமிக்கப்படலாம். ஆர்டர்களைச் செயல்படுத்தக் கட்டணச் சேவை பயன்படுத்தப்படும்போது, கிரெடிட் கார்டு எண்கள், காலாவதி தேதிகள், பாதுகாப்புக் குறியீடுகள் ஆகியவை Sithars Astrology மென்பொருளிலோ அது பயன்படுத்தும் தரவுத்தளத்திலோ சேமிக்கப்படுவதில்லை.
தகவல்களைத் திருத்துதல் / புதுப்பித்தல்
பயனர்கள் தரும் தகவல்கள் சரியாகவும் புதுப்பிக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்ய Sithars Astrology Software எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறது. பயனர்கள் பாதுகாப்பான தொடர்புப் படிவத்தின் மூலம் எங்களைத் தொடர்புகொண்டு தங்கள் தகவல்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்; அப்படிவம் நேரடியாக எங்கள் பாதுகாப்பான சேவை மையத்திற்குச் செல்கிறது, தகவல்களை மின்னஞ்சல் வழியாக அனுப்புவதில்லை.
தொடர்பு | பொறுப்புத் துறப்பு மற்றும் தரவுத் தனியுரிமைக் கொள்கை