ஜோதிட சிறப்பம்சங்கள்
பஞ்ச பட்சி ஜோதிடம் மென்பொருள்
Sithars Astrology மென்பொருளில் ஜாதகருக்குன்டான பட்சி ஜோதிடத்தைப்பற்றி அறிந்து கொள்ளலாம் .
பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்ற ஐந்து பறவைகளை அடிப்படையாகக் கொண்ட தமிழ் சித்தர் முறை. பிறந்த நட்சத்திரத்தையும் பட்சத்தையும் கொண்டு ஒருவரின் பட்சி அறியப்படுகிறது.
ஒவ்வொரு பட்சியும் நாளின் வெவ்வேறு நேரங்களில் அரசு, ஊண், நடை, துயில், சாவு என்ற ஐந்து தொழில்களில் ஒன்றைச் செய்கிறது. மென்பொருள் தேவையான விவரங்களைக் கொண்டு பட்சியைக் கணித்துத் தருகிறது.
இந்தப் பகுதியில் கிடைப்பவை
- பிறப்புப் பட்சி
- ஐந்து தொழில்களின் விவரம்
- கையால் அட்டவணை பார்க்கும் வேலை மிச்சம்
கேள்விகளும் பதில்களும்
பட்சியைக் கண்டறிய என்ன தேவை?
பிறந்த நட்சத்திரமும், பிறந்தது வளர்பிறையா தேய்பிறையா என்பதும்.
சந்தேகம் இருந்தால் யாரிடம் கேட்பது?
மாதந்தோறும் Google Meet-இல் நடைபெறும் நேரடி உதவிக் கூட்டத்தில் கேட்கலாம்; அவசரத் தேவைக்குத் தொடர்பு பக்கத்தைப் பயன்படுத்தலாம்.