ஜோதிட சிறப்பம்சங்கள்
ஜாமக்கோல் ஆருடம் மென்பொருள்
Sithars Astrology மென்பொருளில் ஜாமக்கோல் ஆருடம் என்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இதன்மூலம் ஒரு ஜாதகருக்குன்டான ஜாமக்கோல் ஆருடம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஜாமக்கோல் ஆருடம் என்பது கேள்வி கேட்கப்படும் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் பிரசன்ன முறை. பகல், இரவு ஒவ்வொன்றும் எட்டு ஜாமங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்த நேரத்தில் ஜாம கிரகங்கள் நிற்கும் இடம், உதயம், ஆருடம், கவிப்பு ஆகியவை கணிக்கப்படுகின்றன.
இவற்றைக் கையால் கணிக்க நேரம் ஆகும். மென்பொருள் கேள்வி நேரத்தையும் இடத்தையும் கொண்டு ஜாமக்கோல் கட்டத்தை உடனே அமைத்துத் தருகிறது.
இந்தப் பகுதியில் கிடைப்பவை
- கேள்வி நேரத்திற்கான ஜாமக்கோல் கட்டம்
- உதயம், ஆருடம், கவிப்பு
- ஜாம கிரக நிலைகள்
- மென்பொருளிலிருந்து நேரடியாக அச்சிடும் வசதி
மென்பொருளில் பயன்படுத்தும் முறை
- மென்பொருளில் "ஜாமக்கோல் ஆருடம்" பகுதியைத் திறக்கவும்.
- கேள்வி கேட்கப்பட்ட தேதி, நேரம், ஊர் ஆகியவற்றைக் கொடுக்கவும்.
- அறிக்கையைத் திரையில் பார்த்து, தேவையெனில் அச்சிடவும்.
கேள்விகளும் பதில்களும்
ஜாமக்கோல் ஆருடத்திற்கு பிறந்த ஜாதகம் தேவையா?
தேவையில்லை. கேள்வி கேட்கப்படும் நேரமே அடிப்படை.
அறிக்கையை அச்சிட முடியுமா?
ஆம். கணினியில் அச்சுப்பொறியை அமைத்த பின் மென்பொருளிலிருந்தே நேரடியாக அச்சிடலாம்.
சந்தேகம் இருந்தால் யாரிடம் கேட்பது?
மாதந்தோறும் Google Meet-இல் நடைபெறும் நேரடி உதவிக் கூட்டத்தில் கேட்கலாம்; அவசரத் தேவைக்குத் தொடர்பு பக்கத்தைப் பயன்படுத்தலாம்.
