" பலாக்காய் - கால் பகுதி,
உப்பு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
வதக்கி அரைக்க:
இஞ்சி - ஒரு துண்டு,
பூண்டு - 5 பல்,
பச்சை மிளகாய் - 4,
பட்டை, லவங்கம் - தலா 2,
சின்ன வெங்காயம் - 6,
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
பலாக்காயைப் பெரிய துண்டுகளாக வெட்டி, வேகவிடுங்கள். வெந்ததும் நீரை வடித்துவிட்டு, பலாக்காய் துண்டுகளை எடுத்துப் பிழிந்து, அம்மியில் நசுக்கி அல்லது மிக்ஸியில் அடித்து பூவாக உதிர்த்துக்கொள்ளுங்கள். வதக்கி அரைக்க வேண்டியதை தண்ணீர் இல்லாமல் அரைத்தெடுங்கள். பொட்டுக்கடலையைப் பொடித்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் உதிர்த்த
பலாக்காய், அரைத்த கலவை, உப்பு, பொட்டுக்கடலைப் பொடி.. எல்லாவற்றையும் போட்டுப் பிசைந்து வையுங்கள். பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில்
பொரித்தெடுங்கள்.
குறிப்பு: கலவை உருட்ட வரவில்லை என்றால், இன்னும் சிறிதளவு
பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்துகொள்ளலாம்."