இந்த உலகமும், உலகில் உள்ள புழு, பூச்சி முதல் மனிதன் வரை சகலஜீவராசிகள் யாவுமே. இந்த ஜீவன்கள் ஜீவிப்பதற்காகவே நீர், நெருப்பு, காற்று இவைகளையும், மரம், செடி, கொடி, புல், பூண்டு, காய், கனி, கிழங்கு போன்றவைகளையும் படைத்தான்.
மனிதர்களுக்காக இவ்வளவையும் படைத்துள்ள பகவானுக்கு, மனிதன் நன்றி தெரிவிக்க வேண்டாமா? மனதால் அவனை நினைத்து துதிக்கலாம்; பூ, பழம் முதலியவற்றை அவனுக்கு அர்ப்பணம் செய்யலாம்; அவன் நாமாவளியைச் சொல்லிச் சொல்லி நன்றி தெரிவிக்கலாம். இந்த நன்றியை அவன் எதிர்பார்க்கிறானா, இல்லையா என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். படைத்தல், அழித்தல், காத்தல் என்ற மூன்று காரியங்களையும் அவன் கடமையாகச் செய்கிறான்; நன்றியை எதிர்ப்பார்ப்பதில்லை. ஆனாலும், நன்றி செலுத்த வேண்டியது மனிதனின் கடமை.
பகவான், ரொம்பவும் எளிமையானவன். அவனிடம் பக்தியோடு இருப்பவர்களுக்கு தன் சுய ரூபத்தைக் காண்பிக்கிறான்; பக்தரல்லாதவருக்கு உக்ரமான ரூபத்தோடு தோன்றுகிறான். பிரகலாதனுக்கு நாராயணனாகவும், அவனது தந்தையான இரணியனுக்கு நரசிம்மனாகவும் காட்சியளித்தான். பக்தனை ரட்சித்தான்; துஷ்டனை சம்காரம் செய்தான்.
எந்த சின்ன பொருளை பகவானுக்கு, அர்ப்பணம் செய்தாலும், அதை மிகப் பெரியதாக எண்ணி, ஏற்று சந்தோஷப்படுகிறான். மனமுவந்து அவனுக்கு எந்த விதத்திலாவது நன்றி செலுத்துபவர்களை அவன் தன் பக்தனாக பாவிக்கிறான். பக்தர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான்; செய்கிறான்.
பூஜை பொருட்களுக்கான அர்த்தமும்,தத்துவமும்
தேங்காய்:
தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும்,கடினமாகவும் இருக்கும்.அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும்,அன்பாகவும் இருக்கும்.
தேங்காய் தரும் தென்னை மரம் மக்களுக்கு தம்மிடம் உள்ள அனைத்தையும் தந்து உதவுகிறது. இவற்றின் எந்த பாகமும் வீண் ஆவதில்லை. மனிதனும் அப்படி உலகுக்குப் பயன்பட வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் தான் கோவிலில் அனைத்து பூஜைகளி லும் தேங்காய் உடைத்த பிறகே நிவேதனம் செய்வார்கள். தேங்காய் உடைப்பதேநம் ஆன்மா வை சுற்றியுள்ள மும்மலங்களை போக்குவதற்காக தான்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் மும்மலம் என்று சொல்லப்படு கிறது. தேங்காய் மேல் இருக்கும் மட்டை தான் மாயை மலம் எனப்படுகிறது. மட்டை எனும் மாயை மலம் நீங்கினால் அடுத்து நார் எனும் கன்ம மலம் வரும். கன்ம மலம் நீக்கப்பட்டால் தேங்காயைச் சுற்றி இருக்கும் ஓடு தெரியும். இந்த ஓடு ஆணவ மலத்தை குறிக்கும். ஓட்டை உடைத்தால் தேங்காய் இரண்டாக உடைந்து உள்ளே இருக்கும் வெள்ளைப் பருப்பு தெரியும். இந்த வெள்ளைப் பருப்பை பேரின்பம் என்பார்கள். ஆக வாழ்வில் மாயை, கன்மம், ஆணவம் என்ற மும்மலங்களையும் விரட்டினால் தான் பேரின்பத்தை பெற முடியும் என்பதை தேங்காய் உடைப்பதன் தாத்பர்யமாக சொல்கிறார்கள்.
தேங்காய் உடைப்பதில் இன்னொரு தாத்பர்யமும் உள்ளது. தேங்காய் உள்ளே இருக்கும் இளநீர் உலக ஆசைகளின் அடையாளமாகும். தன்னை சுற்றி இருக்கும் ஓடு ஒரு போதும் உடையாது. அது என்றென்றும் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று இளநீர் நம்புகிறது. அது போலதான் நாம் இளம் வயதில் நமது உடம்பு அழகானது, உறுதியானது என்று நம்பி பல்வேறு ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால் மனம் பக்குவம் பெறும் போது நமது உடம்பு சாசுவத மானது அல்ல என்பது புரியும். அதாவது இளநீர் வற்றும் போது, அது தேங்காயின் பக்குவத்துடன் இரண்டற கலந்து விடும். ஓட்டுக்குள் இருக்கும் நீர் வற்றுவதால், ஒரு போதும் தேங்காய் கெட்டுப் போவதில்லை. மாறாக உறுதி பெறும். அது போல இளம் வயதில் ஆசைகளுடன் சுற்றித்திரியும் நாம் அனுபவ ஞானம் எனும் பக்குவம் வர, வர உலக ஆசைகளை துறந்து விடுகிறோம்.
விபூதி(திருநீரு):
சாம்பலின் மறுபெயரே விபூதி ஆகும்.நாமும் இதுபோல் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம் ஆதலால் நான் என்ற அகம்பாவமும், சுயநலம், பொறாமை இருக்ககூடாது என்ற எண்ணத்தையும்,சிந்தனையும் நமக்கு உணர்த்தவே, விபூதியை நெற்றியிலும், உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும்.ஆனால் முளைக்காது.ஏனென்றால் உலகத்தில் உள்ள எந்த வாழைப்பழ விதையும் பெரும்பாலும் முளைக்காது.ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என அருள் பெறவே வாழப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.
அகல் விளக்கு:
ஒரு மின்சார விளக்கினால் மற்றோரு மின்சார விளக்கை ஒளிர வைக்கமுடியாது ஆனால் ஒரு அகல் விளக்கினால் மற்றோரு அகல் விளக்கை ஒளிர வைக்கமுடியும்.அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது,அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்
சபரி என்கிற வேடுவ ஸ்த்ரீ, பகவானிடம் பக்தியோடு இருந்தாள். காட்டில் உள்ள கனிகளை சேகரித்து பகவானின் வரவுக்காக காத்திருந்தாள். அவளது ஆசிரமத்தைத் தேடிச் சென்று அவள் அளித்த பழங்களை உண்டு மகிழ்ந்து, அவளுக்கு முக்தியும் அளித்தார் ராமர்.
பாண்டவர்களுக்காக தன் பெருமைகளை மறைத்து, தூதுவனாக சென்றான்; பார்த்தனுக்கு தேரோட்டியாக இருந்தான் பார்த்தசாரதி! என்ன காரணம்? பக்திக்குக் கட்டுப்பட்டான். பக் தனுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும் என்பது அவனது கொள்கை.
இதே நாராயணன் தானே மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவும், நரசிம்மனா கவும் உருவெடுத்தான்! எதற்காக? பக்த ரட்சணம்! ஆகவே, அவன் சிறுமையாகவும் இருப்பான்; பெருமையாகவும் இருப்பான். அவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாமும் ஏதா வது ஒரு வழியில் அவனிடம் ஈடுபாடு கொண்டு விட்டால் அவன் அருள் செய்வான்!