ஆனால் 2010 ம் வருடம் படி பூமத்திய ரேகையின் மையைப் பகுதி சிறிது சிறிதாக நகர்ந்து இந்தியாவிற்கும் இலகைக்கும் நடுவே உள்ளது.
பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது,
இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது
விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு (15*60*24 = 21,600) 21,600 முறை சுவாசிக்கிறான்.
இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
இக் கோவிலில் 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் “beam” என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும்
திருமந்திரத்தில் “திருமூலர்” மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.
“பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள் ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
சிதம்பரம் நடராஜரின் கால் கட்டை விரல் தரையில் வைக்கப் பட்டிருக்கும் இடமே புவியின் மையப் புள்ளியாக அமைந்துள்ளது என்றும் கூறுவதுண்டு
சித்தர்கள் அறிவியலை உணர்வு பூரணமாக நம்பியதால் அதனை தெய்வீகத்துடன் இணைத்து நமக்கு கொடுத்தனர். இதுவே இவர்கள் எந்த அளவிற்கு விஞ்ஞான அறிவு பெற்றிருந்தனர் என்பதற்கு சான்று.
சிதம்பரம் நடராஜர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் “சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில்” என்றும் “சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில்” என்றும் “சிதம்பரம் கோயில்” என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலத்தின் மூலவர் திருமூலநாதர், தாயார் உமையாம்பிகை (சமஸ்கிருதம்:சிவகாமசுந்தரி). இத்தலத்தின் தலவிருட்சமாக தில்லை மரமும், தீர்த்தமாக சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தங்களும் உள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளே இருந்து (4) நான்கு கோபுரங்களையும் (உள்ளே உள்ள ) குளத்திற்கு அருகில் ஒரு கல்தூண் இருக்கும் அங்கே நின்று பார்த்தால் மட்டுமே கோபுர தரிசனம் கிடைக்கும் வேறு எந்தப் பகுதியில் காண இயலாது
சிதம்பரம் நடராஜர் கோயில் தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஆகாய தலமாகும். மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.
பேரம்பலம், சிற்றம்பலம், கனகசபை, நிருத்தசபை, இராஜசபை ஆகிய ஐந்து சபைகள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ளன. பேரம்பலம் என்பது தேவசபை என்றும் அறியப்பெறுகிறது. இந்துகளின் கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அதிசயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்து மதம் எவ்வளவு பழமையானது புனிதமானது ரகசியமானது என்பதற்கு இதுவே சாட்சி. இது போன்று என்னற்ற அதியங்கள் நிறைந்தது நமது ஆன்மீகம் இவற்றை இன்றய இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று நமது கலாச்சார பொக்கிசங்களை பாதுகாக்க வேண்டும்.