நிறம் | கருப்பு |
மனைவி | நீலாதேவி (சனிக்கு மிகவும் பிடித்தவர்), ஜேஸ்டாதேவி ,மன்தா |
கிரஹத் தன்மை | உபயக் கிரஹங்கள் |
பஞ்சபூத கிரஹங்கள் | ஆகாய கிரஹம் |
இரத்தினம் | நீலக்கல் |
மலர் | கருங்குவளை |
குணம் | குரூரன் |
தேவதை | யமன் |
பிரித்யதி தேவதை | பிரஜாபதி |
ஆசன வடிவம் | வில் |
தேசம் | சௌராஷ்டிரம் |
சமித்து | வன்னி |
திக்கு | மேற்கு |
சுவை | கைப்பு |
உலோகம் | இரும்பு |
வாகனம் | காகம். வடநாட்டில் உள்ள த்யான சுலோகங்களில் கழுகை வாகனமாக குறிக்கின்றனர் |
பிணி | வாதம் (வாய்வு) |
தானியம் | எள் |
நாடி | வாத நாடி |
காரகன் | ஆயுள் |
ஆட்சி | மகரம், கும்பம் |
நீசம் | மேஷம் |
உச்சம் | துலாம் |
மூலத்திரிகோணம் | கும்பம் |
உறுப்பு | தொடை, தசை |
நட்சத்திரங்கள் | பூசம், அனுஷம், உத்திரட்டாதி |
பால் | அலி |
திசை காலம் | 19 வருடங்கள் |
கோசார காலம் | 2.5 வருடங்கள் |
உபகிரகம் | குளிகன் |
நட்பு | புதன், சுக்கிரன், ராகு, கேது |
பகை | சூரியன், சந்திரன், செவ்வாய் |
சமம் | வியாழன் |
ஷேத்தரம் | திருநள்ளாறு |
வைணவ திவ்யதேசம் | திருக்குளந்தை |
திருமால் அவதாரம் | கூர்மம் |
பலன்கள் | வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும் |
தமிழ் மாதம் | *** |
உணவு | எள்ளு உளுந்து கலந்த சோறு |
பருவம் | *** |
கிழமை | சனி |
தேதிகள் | *** |
ஸ்வரம் | ப |
குறியீடு | |
ஜோதி | விலோம் சண்டாளர் |
அதிகாரம் | படையாள் |
பூதாதிபத்யம் | காற்று |
காராகாதிபத்யம் | ஆயுள் |
பாஷைகள் | பிற மொழிகள் |
கோத்திரம் | காசியப கோத்திரம் |
ராகங்கள் | நீலாம்பரி |
பிறப்பு
சூரியதேவன் த்வஷ்டா என்பவரின் குமாரத்தியான சுவர்ச்சலாத் தேவியைத் திருமணம் செய்து கொண்டார். சுவர்ச்சலா தேவிக்கு ஸமுக்ஞா, ஸரேணு, ராக்ஞீ, பிரபாஸா என்றும் பல பெயர்கள் உண்டு. சூரிய தேவனுக்கும், சுவர்ச்சலா தேவிக்கும் சிராத்த தேவன் என்று அழைக்கப்படும் வைவசுதமனு யமதர்ம ராஜன் என்று இரு புதல்வர்களும், யமுனை என்னும் பெயருடைய அதிரூபவதியான புத்திரியும் பிறந்தனர். யமனும், யமுனையும் இரட்டைப் பிறவிகள். சூரிய தேவனின் இல்லறக் கோவிலில் இன்புற்று வாழ்ந்து வந்த சுவர்ச்சலா தேவிக்கு நாளாக, நாளாக சூரிய தேவனின் உக்கிரமான கிரணங்களைத் தாங்கும்படியான சக்தி குறைந்து கொண்டே வந்தது.
இந்த நிலையில், சுவர்ச்சலாதேவி தனது துயர நிலையைச் சூரிய தேவனிடம் சொல்லும் படியான சக்தியற்றுப் போனாள். சுவர்ச்சலாதேவி கானகம் சென்று கடும் தவம் இருந்து உரிய சக்தியைப் பெற்று வருவதற்கு எண்ணினாள். அந்த எண்ணத்தையும் சூரியதேவனிடம் சொல்லும் ஆற்றல் அவளுக்கு இல்லாமற் போனது. சுவர்ச்சலா தேவி தனக்குள் ஒரு முடிவிற்கு வந்தாள். தனது மனோ சக்தியால் தனது நிழலையே, தன்னைப் போன்ற பேரெழில் கொண்ட பெண்ணாகத் தோன்றச் செய்தாள். நிழலில் நின்றும் உருப் பெற்று வந்த அந்த நளின சிங்கார வனிதை, தன்னைப் போன்ற உருவத்துடன் காணும் சுவர்ச்சலா தேவியைக் கண்டு திகைத்தாள்; அவளை நமஸ்கரித்து நின்றாள். சுவர்ச்சலா தேவி அவளைப் பார்த்து, எனது சாயையில் நின்றும் தோன்றியவளே! உனக்கு சாயாதேவி என்று நாம கரணம் சூட்டுகிறேன். உனக்கு நான் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறேன். நான் தவம் செய்யப் போகிறேன். நான் திரும்பி வரும் வரை நீ என் கணவருடன் சுகித்து வாழ்வாயாக! என் குழந்தைகளான வைவசுதமனு, யமதர்மன், யமுனா ஆகியோர்களை அன்போடு அரவணைத்து வாழ்வாயாக! என்று கூறினாள். சுவர்ச்சலா தேவியின் சுந்தர மொழி கேட்டு சாயாதேவி, தேவி! தங்கள் சித்தம் என் பாக்கியம். இருப்பினும் இந்த எளியவளுக்கு உங்களிடம் ஒரு சிறு விண்ணப்பம். என்றாவது ஒரு நாள் நம் பதி எனது சிகையைப் பற்றி இழுக்கும் துர்பாக்கியம் ஏற்படுமாயின் அன்று நான் நம் நாயகரிடம் உண்மையை சொல்வேன். இது சத்தியம் என்றாள். சுவர்ச்சலா தேவியும் அதற்கு சம்மதித்தாள். சுவர்ச்சலாதேவி சந்தோஷத்துடன் தந்தை வீட்டிற்குப் புறப்பட்டாள். சுவர்ச்சலா, பதியின் பாதத்தை விட்டு நீங்கி, பிதாவான த்வஷ்டா இல்லம் சென்றாள். நடந்தவற்றைத் தந்தையிடம் கூறினாள். தந்தையார், சுவர்ச்சலாவின் செயலைக் கண்டித்தார். ஒரு பெண், பதியை விட்டு வருவது தர்மமாகாது. என்னைக் காண வேண்டுமென்றால் உன் பதியோடு தான் வரவேண்டும். எனவே சற்றும் தாமதிக்காமல் உன் பதியின் கிருஹத்திற்குச் செல்வாயாக! என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார். சுவர்ச்சலா தேவி சஞ்சலம் கொண்டாள். தந்தையின் அடி பணிந்து, நேராக குரு ஷேத்ரம் சென்றாள். தன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக, குதிரை உருவம் கொண்டு, தவத்தைத் தொடங்கினாள். சுவர்ச்சலாவின் அன்பு கட்டளைப்படி சாயாதேவி, சூரியதேவனுடன் வாழத் தொடங்கினாள்.
சூரிய தேவனின் குழந்தைகளிடம் சாயா தேவி, மிகுந்த வாத்ஸல்யம் கொண்டிருந்தாள். கண்ணும் கருத்துமாக அக்குழந்தைகளைக் காத்து வந்தாள். சூரிய தேவனுக்கும், சாயா தேவிக்கும் தபதீ என்னும் புத்திரியும், ச்ருதச்ரவஸீ, ச்ருதகர்மா என்று இரு புதல்வர்களும் பிறந்தனர். ச்ருதகர்மா தான் பின்னால் சனீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். சுவர்ச்சலாவின் குழந்தைகளும், சாயா தேவியின் குழந்தைகளும் சாயாதேவியின் அரவணைப்பில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். நாளாக நாளாக சாயா தேவி, தனது குழந்தைகளிடம் சற்று அதிகப்படியான வாஞ்சை செலுத்தினாள். சுவர்ச்சலா தேவியின் மகனான எமதர்மராஜனுக்கு இதனால் மனத்திலே வேதனை மிகுந்தது. தனது தாய்க்கு ஏன் இந்த பாரபக்ஷம் என்பதனை நினைந்து வருந்தினார். ஒரு நாள் எமதர்மராஜனுக்குத் தாயிடம் கோபம் மிகுந்து வந்தது. தந்தையாகிய சூரிய தேவனிடம் சென்றார். சிறிது காலமாகத் தாயார் தங்களைத் தரக் குறைவாக நடத்துவதாகச் சொல்லிக் கண் கலங்கினார். தர்மாத்மாவான, யமனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார் சூரியதேவன்! தருமபுத்திரா! தரும வழியில் நடந்து வரும் உனக்கே கோபம் வருகிறதென்றால் இதில் உண்மை இருக்கத்தான் செய்யும். நான் இப்போதே உனது குறையை நிவர்த்திக்கிறேன் என்று சூரியதேவன் மகனை அன்போடு அருகே அழைத்து, ஆரத் தழுவி ஆறுதல் சொன்னார். சூரிய தேவன் சாயாதேவி மீது கோபம் மிகக் கொண்டார். சாயா தேவியிடம், இதைப் பற்றி விசாரித்தார். சாயா தேவி மவுனம் சாதித்தாள். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதால், சூரிய தேவன் கோபத்தில் அவளது சிகையைப் பற்றி இழுக்க அது வரை பொறுமையாக இருந்த சாயாதேவி நடந்த விருத்தாந்தங்கள் அனைத்தையும் எடுத்துக்கூறி, தனது பிழையைப் பொறுத்தருளுமாறு பகலவனின் பாதங்களைப் பணிந்து கேட்டாள். இவற்றையெல்லாம் கேட்டு சூரிய தேவன், சாயா தேவியை க்ஷமித்தார்; எமதர்மராஜனும் சாயாதேவி மீது அனுதாபம் கொண்டார். சூரிய தேவன் ஞான திருஷ்டியால், சுவர்ச்சலாதேவி தவமிருக்கும் இடத்தை கண்டறிந்து, நேராக குரு÷க்ஷத்ரம் சென்றார். சுவர்ச்சலா தேவியை ஆனந்தத்தால் அநுக்கிரஹித்தார். சூரிய தேவனின் சக்தியால், சுவர்ச்சலா தேவிக்கு, இருபுத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் அஸ்வினி தேவர்கள் என்று திருநாமம் பெற்றனர். இவர்கள் தேவலோக வைத்தியர்களாக விளங்கினர். ரைவதன் என்று மற்றொரு மகனும் பிறந்தான். சூரிய தேவன், சுவர்ச்சலா தேவியை அழைத்துக்கொண்டு, தமது லோகத்திற்குத் திரும்பினார். சாயா தேவியையும் ஏற்றுக் கொண்டு இரு தேவியர் சமேதராக பத்மாசனத்தில் எழுந்தருளி பாரெல்லாம் பவனி வந்தார்.
எமதர்மராஜன், காசி அருகேயுள்ள கோகர்ணம் என்னும் திருப்பதியில் சிவபெருமானை ஆராதித்து அற்புதமான தவம் இயற்றினார். எமதர்மராஜனின் தவத்திற்கு திருவுள்ளம் கனிந்த பெருமான் எமனைத் திரு நோக்கம் செய்து, ஆதவன் புதல்வா! உனக்கு சையமணி என்னும் நகரத்தைப் பரிபாலிக்கும் பாக்கியத்தை அருளுவோம். எமது அருளாணைப்படி பிதுர் பரிபாலன தர்மத்தை காலம் தவறாமல் கண்ணியத்துடன் நடத்தும் உனக்கு காலன் என்னும் நாமம் சித்திக்கும் என்று திருவாய் மலர்ந்தார். எமதர்மராஜனும் சிவனைப் போற்றி தென் திசைக்கு அதிபதியாக விளங்கினான். அதே போல் வைவசுதமனு வைது மன் வந்தர மனு ஆனார். ச்ருதசரஸ், மேரு மலையில் தவம் செய்து சாவர்ணீ என்ற திருநாமம் பெற்றான். அவன் ஏழாவது மன்வந்தரத்து மனுவானார். சாயா தேவியின் புத்தரி யமுனையும் , சுவர்ச்சலா தேவியின் புத்திரி தபதியும் நதிகளாயினர். தபதீ என்பவள் ஸமவரணன் என்ற மன்னனை மணந்தாள். அதன் பின்னர்தான் அவள் விந்திய மலையிலிருந்து பெருகி வரும் தபதி என்ற நதியாக மாறினாள் என்பது புராணம்! அசுவனி தேவர்கள், பகவானின் திருவருட் கிருபையால், நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரமாக வானிலே ஒளி வீசும் பேறு பெற்றனர். ரைவதனும் பகவானின் பேரளால் மனுவாகி ரைவத மனுவந்தரத்தில் சகல அண்ட சராசரங்களையும் ரட்சிக்கும் உன்னத மேன்மை அடைந்தான். ஒவ்வொரு மனுவின் காலத்திலும் ஒருவர் இந்திரனாக இருப்பார். இந்த பதினான்கு மனுக்களின் காலத்தில் பதினான்கு பேர் இந்திரனாக இருப்பார்கள். இவ்வாறு சூரிய புத்திரர்கள் பாரெல்லாம் போற்றும் பெருமை பெற்றனர். ச்ருதகர்மாவான சனீஸ்வரர், இளமை முதற்கொண்டே மற்ற புத்தர புத்திரிகள் எவருக்கும் இல்லாத ஓர் தனித்தன்மை பெற்ற விளங்கினார். சனீஸ்வர பகவானின் திருவிழிகளிலே ஓர் அபார சக்தி! அவரது பார்வையிலே தனி தீட்சண்யம்! அவரது பார்வை பட்ட மாத்திரத்திலேயே பல விபரீதங்கள் ஏற்படும்! சாயாதேவி, குழந்தை சனீஸ்வரனின் நிலை கண்டு கண் கலங்கினாள். தனது புத்திரனால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏதும் வர வேண்டாம் என்பதற்காக, சனீஸ்வரரை எங்கும் அனுப்பாமல், தனது கண்காணிப்பில் தனது லோகத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். சனீஸ்வரரும், சாயாதேவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
மனிதனாகப் பிறந்தவன் முதலில் சந்திப்பது கல்வியை. அடுத்து பொருளாதாரம், செயல்பாடு, தெளிவு பெற்று மகிழ்தல் கடைசியில் மறைதல் என அவனது வாழ்கை நிறைவுறுகிறது. இந்த வரிசையில் புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி எனத் தென்படுகிறது. இறுதியில் உள்ள சனி, மறைவைச் சந்திக்கிற வேளையை நடைமுறைப்படுத்துகிறார். அதாவது, சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல; அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர். பிறந்தவனுக்கு இறப்பு உண்டு; இறப்பு இருப்பவனே பிறக்க இயலும்; அதுதான் நியதி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். விதை முளைக்கிறது; வளர்கிறது. இலை, பூ, காய், கனி என மாறுபாடுகளைச் சந்திக்கிறது; வாட்டமுறுகிறது; மறைகிறது என்பது நமக்குத் தெரியும். உடலில், ஆன்மவுக்குக் குடியிருக்கத் தகுதியில்லாத நிலையில், உடலுக்கு மறைவு வருகிறது. அந்த வேளையை வரையறுக்கும் பணியை சனிபகவான் சுட்டிக்காட்டுகிறார். நம்மை வளர்த்து, நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப - துன்பங்களை கர்மவினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர் சனி பகவான். உடல் வாழத் தகுதியற்ற நிலையில், மறுபிறவி தருவார்; பாபமும் புண்ணியமும் அற்றுப் போயிருப்பின், மறைவை இறுதியாக்கி மோட்சம் தருவார். சனி பகவானின் மகனாகிய குளிகன் பெயரில் தினமும் ஒரு நேரம் உண்டு. அந்த நேரத்தில் எது செய்தாலும் விருத்தியாகும் எனவே அந்நேரத்தில் நல்லதே செய்ய வேண்டும்.
“உங்களுக்கு நூறு ஆயுசு” என்று ஒருவரை பற்றி பேசும்போதோ, நினைக்கும்போதோ அவரே வந்துவிட்டால் இப்படி சொல்வோம். நல்ல ஆரோக்கியத்துடன் செல்வச் செழிப்புடன் நீண்டநாள் வாழவேண்டும் என்பது எல்லாருக்கும் ஆசை. இந்த மூன்றையும் அருள்பவர் சனீஸ்வர பகவான். சிவபெருமானைத் தவிர இரண்டு பேருக்குத்தான் ‘ஈஸ்வர’ பட்டம் உண்டு. ஒருவர்விக்னேஸ்வரர். இன்னொருவர் சனீஸ்வரர். கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி மட்டுமே. விக்னேஸ்வரர் என்ற விநாயகர் போலவே சனீஸ்வரரும் தடை, தடங்கல்களை அகற்றிவளமான வாழ்வும் நீண்ட ஆயுளும் வழங்குபவர். மனிதனின் ஆயுள் ஸ்தானத்தை தீர்மானிப்பவராக சனி பகவான் திகழ்கிறார்.
உழைப்புக்கு ஆதாரமாக உள்ள கிரகம் சனி. கடும் உழைப்பாளிகளுக்கு சனி பகவானின் அருள்கடாட்சம் என்றும் உண்டு. சாதாரண தொழிலாளியாக இருப்பவர்களுக்கு மேலும் உழைக்கும்ஆற்றலையும் சக்தியையும் கொடுத்து அவர்களை கோடீஸ்வரர்களாக்கும் வல்லமை சனி பகவானுக்கு உண்டு.
நம் ஜாதகத்தில் சனி பகவான் நன்கு பலமாக இருந்தால் ஆயுள், ஆரோக்கியம்,ஐஸ்வர்யம், அதிகாரம், பட்டம், பதவி எல்லாம் தானாக தேடிவரும். ஜாதக அமைப்பை தவிர அவரவர் ராசிக்கு கோசார பலன்களை தருவதிலும் சனீஸ்வரன் வலிமை மிக்கவர். ஏழரை சனி,4 சனி, 8ல் சனி என்று ஒவ்வொருவருக்கும் 30 வருடங்களுக்குள் இந்த 3 விதமான கோசார பலன்களை தருகிறார். ஜாதகத்தில் சனி பகவான் பலமாக, யோகமாக இருந்தால்எல்லா துறைகளிலும் கொடிகட்டி பறக்கும் யோகம் உண்டாகும்.
சனியின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: சனி
தேதிகள்: 8, 17, 26
நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி
ராசி: மகரம், கும்பம்
நிறம்: கருப்பு
ரத்தினம்: நீலம்
தானியம்: எள்
ஆடை: கருப்பு
சனிக்கு உரிய தேதிகள், கிழமை, நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள், யோகம், பட்டம், பதவி, தொழிலதிபர் போன்ற அம்சங்கள் உண்டாகும். ஜாதகத்தில்சனி பகவான் ஆட்சி, உச்சம் பெற்று பலமாக இருப்பதும் அவசியம்.
பிறந்த லக்னமும் சனி தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த வகையான யோகங்கள், பலன்களை சனி பகவான் தருவார்?
மேஷ லக்னம்/ராசி தொழில் துறையால் யோகம். பெரிய பதவியில் அமரும் யோகம்.
ரிஷப லக்னம்/ராசி தர்ம கர்மாதிபதியாக சனி வருவதால் ராஜாங்க யோகம் கிடைக்கும். உயர்பதவி, பட்டம், தொழில், சொத்து, சுகம் என்று சகல பாக்யங்களும் கிடைக்கும்.
மிதுன லக்னம்/ராசி பூர்வீக சொத்து, கவுரவ பதவிகள், அரசியல் பிரவேசம் என சகல பாக்யங்கள், சகல யோகங்கள்.
கன்னி லக்னம்/ராசி அஷ்டலட்சுமி யோகம், கோடீஸ்வர யோகம். பிள்ளைகள், மாமன் வகை உறவுகளால் செல்வம், செல்வாக்கு மற்றும் யோகங்கள்.
துலா லக்னம்/ராசி நிலபுலன்கள், சொத்து சேர்க்கை, தாய் மூலம் யோகம், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள், உயர்பதவி.
விருச்சிக லக்னம்/ராசி கல்வி மேன்மை, அதிகாரங்கள் நிறைந்த பதவி, உயர்பதவிகள், நில புலன் சேர்க்கை, பூர்வீக சொத்துக்கள்.
தனுசு லக்னம்/ராசி சொல்லாற்றல், குடும்ப பூர்வீக சொத்துக்களால் அதிர்ஷ்டம்.
மகர லக்னம்/ராசி கவுரவ பதவிகள் தேடிவரும். தொழில் அதிபராகும் யோகம்.
கும்ப லக்னம்/ராசி பல வகையிலும் சம்பத்துக்கள், சொத்துக்கள், செல்வம் வந்து சேரும். பட்டம், பதவி, செல்வாக்கு.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் சனி நீச்சம் பெறாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமலும், 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமலும் இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
சனிக்கிழமை விரதம் இருந்து எள் விளக்கேற்றி சனீஸ்வரரை வழிபடலாம். தினமும் காலையில் சாப்பிடும் முன்பு காகத்துக்கு உணவிடலாம்.
‘ஓம் சனைஸ்சராய வித்மஹே
சூர்ய புத்ராய தீமஹி
தந்நோ மந்தப் பிரசோதயாத்’
என்ற சனி காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம் சம்சம் ரீஉம் சனைச்வர தேவாய நம’
என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
திருநள்ளாறு சனீஸ்வர ஸ்தலத்தில் அன்னதானம் செய்யலாம். நவதிருப்பதிகளுள் பெருங்குளம் சனீஸ்வர ஸ்தலமாகும். கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், மாற்றுத் திறனாளிகள்,பார்வையற்றவர்களுக்கு உதவிகள் செய்யலாம்.
சனி கிரகம் சூரியனுக்கு சுமார் 88,66,000 மைல்கள் அப்பால் இருந்து சூரியனை சுற்றி வருகிறது. ஒரு தடவை சுரியனை சுற்றி வர 29 வருடகாலம் ஆகிறது. சனி ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். அளவற்ற துன்பங்களுக்கு இவரை காரணம் ஆகிறார். சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும் இவர் சிறந்த நீதிமான் ஆவார். அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வார். சனி கொடுத்த செல்வத்தை அவராலே கூட பிடுங்க முடியாது அந்த அளவுக்கு நன்மையை தருவார். சனிபகவானுக்கு 3,7,10 என்ற பார்வை உண்டு. இரவில் வலிமை,எருமை,யானை,அடிமை வாழ்வு,எண்ணெய்,வீண்கலகம்,கள்ளத்தனம்,கருநிறமுள்ள தானியம்,இரும்பு,கல்,மண்,சுடுகாடு, மதுகுடித்தல்,கஷ்டகாலம்,சிறைவாழ்வு ஆகியவற்றுக்கு காரணம் ஆகிறார். சனிபகவான் மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சந்திரங்களுக்கு நாயாகன். துலாம், சனிபகவானுக்கு உச்ச வீடு. மேஷம் நீசம், நீசம் பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி வழங்குவார். சனிபகவான் பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும் இடமான 3,6,10,15,9 அகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனிபகவான். வாகனம் காகம். கலி,காரி,முடவன் என்ற பல பெயர்கள் உண்டு. ஓருவர் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில் இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். சனிபகவான் பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும் பெறவாய்ப்பு உண்டு. ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஓரு நாட்டுக்கே தலைவராகவும் வாய்ப்பு உண்டு. வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்னை, கருமைநிறம், பெரிய இயந்திர தொழிற்சாலை, தொழிலாளர் வர்க்கம் இவைகளுக்கு காரகன். சனிபகவான் பலம் பெற்று அமைந்தால் ஜாதகருக்கு அவர் சம்மந்தபட்ட இனங்களில் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குவார்.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் ( நிஷுபா, பிருத்வீ என்னும் பல பெயர்கள் உண்டு) பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி. சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. ஏழரை நாட்டு சனி என்றழைக்கப்படும் எழரை ஆண்டுகளில் இவனைத் துதித்து வழிபட்டால் நலம் பெறலாம். எண்ணெய், கறுப்பு தானியங்களுக்கு சனியே அதிபதி. கருமை இவனுக்கு உகந்த நிறம். இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. உடலில் நரம்பு இவன். தாமச குணத்தோன். ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவன். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவான். மேற்குத்திசை சனிக்கு உரியது. திருநள்ளாறு சனிக்கு உரிய தலம். சனிக்கு அதி தேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. நீலம் இவருக்கு உகந்த ரத்தினம். காகமே சனியின் வாகனம். சனி பகவான் படைக்கலன்கள் ஏதுமின்றி பரமானந்த சொரூபமாக விளங்குகிறார். சனித்தொல்லையால் வாடும் எவரும் திருநள்ளாறை அடைந்து நளதீர்த்தத்தில் மூழ்கி சனி பகவானின், பாதம் பணியலாம். சனீஸ்வர பகவானுக்கு கருங்குவளை மாலை அணிவித்து நல்லெண்ணை தீபம் ஏற்றி வந்தால் வறுமைகள், துன்பங்கள் நீங்கி தொழில் சிறப்புரும்
சனி நொண்டியான கதை
இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான். தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, “உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்கமுடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன.
இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.
சனிபகவான், ஒரு சமயம் தன் பெரிய தாயாரான சஞ்சிகையை கேவலமாக பேசினார். இதைக் கேட்ட யமன், கோபப்பட்டு சனி பகவானின் காலை உடைத்தார். சனி பகவான் ஒரு கால் ஊனமானார் என்றும் சொல்லப்படுவதும் உண்டு. இந்த காரணம் உண்மையாகப் படவில்லை. ஏனெனில் சனிக்கு, அதிதேவதை யமன். சனியின் வலப்பக்கத்தில் யமனை ஆவாகனம் செய்வார்கள்.
சனி பகவான் கெடுதலை தருகிறார் என்று நம்பப்படுவதற்கு சொல்லப்படும் கதை
சனி பகவானுக்கு தவம் செய்வதில்தான் ஈடுபாடு. இல்லறத்தில் நாட்டமே இல்லை. இதை அறியாமல் அவருக்கு சித்திரதா என்பவர் தன் மகளை சனிபகவானுக்கு மணம் செய்து வைத்தார்.
கல்யாணமான பின்பும் கூட தன் மனைவியை நேசிக்காமல் தவத்திலே ஈடுபட்டார் சனீஸ்வரன். ஒரு பெண்ணை எதற்காகத் திருமணம் செய்து கொண்டோம் என்பதை மறந்த சனிபகவானை எண்ணி எண்ணி விரக வேதனையால், அவன் மனைவி சபித்துவிட்டாள்.
"ஒரு பெண்ணின் ஆசையைப் புரிந்து கொள்ளாத நீங்கள், கணவர் என்ற முறையில் வாழத் தெரியாத நீங்கள், தவ வலிமையின் ஆனந்தம் அடையாமல் போகட்டும் என்று சபித்த வார்த்தைகளால், சனிபகவான் நொந்து போனார்.
அன்று முதல் அவரது பார்வை வக்கிரமாக அமைந்துவிட்டது. மாற்றவே முடியவில்லை என்பது ஐதீகம்.
திருநள்ளாறு
இறைவர் திருப்பெயர் : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர்
இறைவியார் திருப்பெயர் : போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை
தல மரம் : தர்ப்பை
தீர்த்தம் : நளதீர்த்தம், சிவகங்கை
வழிபட்டோர் : திருமால், பிரமன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனர், நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள், வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி
தேவாரப் பாடல்கள் :
1. சம்பந்தர் -
1. பாடக மெல்லடிப் பாவை,
2. போகமார்த்த பூண்முலையாள்,
3. ஏடுமலி கொன்றையர,
4. தளிரிள வளரொளி.
2. அப்பர் -
1. உள்ளாறாததோர் புண்டரிகத் திரள்,
2. ஆதிகண்ணான் முகத்திலொன்று.
3. சுந்தரர் - செம்பொன் மேனிவெண் ணீறணி.
தல வரலாறு
இது, நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. இறைவனருளால், நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான். திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது.
சிறப்புக்கள்
இது, முசுகுந்தச் சக்கரவர்த்தி எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று (தியாகராஜர்-நகவிடங்கர்;நடனம்-உன்மத்த நடனம்). இது, சனி தோஷம் நீங்கும் சிறப்புடைய தலம். இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிபகவான் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் என்ற மேலே குறிக்கப்பட்டுள்ள பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும்.. இது,தருமை ஆதீனக் கோவிலாகும். சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.
அமைவிடம்: மாநிலம் : தமிழ் நாடு
இது, பேரளம் - காரைக்கால் இரயில் பாதையில் உள்ள நிலையமாகும். இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது. காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்:தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
உற்சவர்
அம்மன்/தாயார்:பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
தல விருட்சம்:தர்ப்பை
தீர்த்தம்:நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன.
ஆகமம்/பூஜை
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருநள்ளாறு
ஊர்:திருநள்ளாறு
மாவட்டம்:காரைக்கால்
மாநிலம்:புதுசேரி
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தேவாரபதிகம்
போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே. -திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 52வது தலம்.
திருவிழா: மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
தல சிறப்பு:இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
(மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி) சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது.இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம்.
காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம். புதுச்சேரி-609 606.
இது சிவத்தலமாயினும் சனிபகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தல விநாயகர் சொர்ணவிநாயகர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். திருமால், பிரமன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன்,நளன் முதலியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம். கோயிலின் தென்புறம் இடையனார் கோயில் உள்ளது. இங்கு இடையன், அவன் மனைவி, கணக்கன் ஆகியோர் உருவங்கள் உள்ளன. சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:சோமாஸ்கந்தமூர்த்தி வடிவத்தின் பிறப்பிடம்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். திருமாலுக்கு குழந்தையில்லாமல் இருந்த வேளையில் அவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி, அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவை உருவாக்கினார். இந்த வடிவத்தை தேவலோகத்துக்கு எடுத்துச் சென்று வழிபட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளைப் பெற்றான். ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது, முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் அவனை வென்றான் இந்திரன். இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியைப் பெற்று வந்தான். அதை திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான். அதே போல மேலும் ஆறு மூர்த்திகளைப் படைத்தான். அதில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான். அதுவே தற்போது "தியாகவிடங்கர்' என வழங்கப்படுகிறது. தியாகவிடங்கருக்கு இங்கே தனி சன்னதி இருக்கிறது. தியாகவிடங்கரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
வாசல்படிக்கு மரியாதை கொடுங்கள் : திருநள்ளாறு செல்பவர்கள் ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்ததும், முதல் படியை தொட்டு வணங்க வேண்டும். ஏனெனில், இந்த வாசல்படி மாடத்தில் சனீஸ்வரன் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை. நளன் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்ததுமே, நியாயத்துக்கு புறம்பாக செயல்பட்டதற்காக இறைவனிடம் தண்டனை அடைய வேண்டி வருமோ என்று பயந்த சனீஸ்வரன் வாசல்படியோடு நின்று, அவனை விட்டு நீங்கி விட்டதாக சொல்வர். ஆனால், இறைவன் சனீஸ்வரனின் நிலையைப் பாராட்டி ஈஸ்வரப் பட்டம் வழங்கி, தன் கோயில் முகப்பிலேயே வைத்துக் கொண்டார்.
சனீஸ்வரனை வணங்கும் முறை :
காலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும். கோயிலுக்குள் உள்ள கிணறான கங்காதீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும். இந்த சுவரில் வரையப்பட்டுள்ள நள சரிதத்தை பக்திப்பூர்வமாக பார்த்த பிறகு, காளத்திநாதரை வணங்க வேண்டும். பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும். இங்குள்ள மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கிய பின் வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும். அங்குள்ள தெய்வங்களை தரிசித்து கட்டைக் கோபுர வாசல் சென்று அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும். பிறகு தான் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும். சிலர் முதலிலேயே சனீஸ்வரனை தரிசிக்க சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறையல்ல. இங்குள்ள இறைவனை பார்த்த பிறகு சனீஸ்வரனைக் கண்டால் தான் சனிதோஷ விமோசனம் கிடைக்கும்.
சனி-அறிவியல் தகவல் :
இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.
சனீஸ்வரனுக்கு உரியவை
ராசி-மகரம், கும்பம்
திசை-மேற்கு அ
திதேவதை-எமன்
நிறம்-கருப்பு
வாகனம்-காகம்
தானியம்-எள்
பால்-அலி
நட்பு-புதன்,சுக்கிரன்,இராகு.கேது.
பகை- சூரியன்,சந்திரன்.செவ்வாய்
சமம்-குரு
திசைகாலம்-19 வருடங்கள்
மலர்-கருங்குவளை
நட்சத்திரங்கள்- பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி.
மலர்-கருங்குவளை
வஸ்திரம்-கருப்பு ஆடை
ரத்தினம்-நீலமணி
நிவேதனம்-எள்ளுப்பொடி சாதம்
சமித்து-வன்னி
உலோகம்-இரும்பு.
தல வரலாறு:
நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை. ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் "சனீஸ்வரன்' என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.
ஒதுங்கிய நந்தி : இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்துவந்தான். கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார். இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி. சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது)
சனி பகவான் - ஒரு சிறந்த பரிகாரம்:
ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம். எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது - அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார். ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி - சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும். உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது.
ஒவ்வொரு வீட்டிலும் சனி இருந்தால் என்ன பலன் ?
சனி 1 ஆம் வீட்டில் இருந்தால் மந்த புத்தி இருக்கும். வறுமை இருக்கும். துணைவர் மூலம் பிரச்சினை உருவாகும். நண்பர்களிடத்தில் சண்டை சச்சரவு இருக்கும். இளைய சகோதர சகோதரிகளிடத்தில் சுமுக உறவு இருக்காது. வாழ்வின் பின்பகுதி நன்றாக இருக்கும். இளம் வயதில் மூத்த வயதுபோல் தோற்றம் இருக்கும். சில நபருக்கு திருமண வாழ்வில் பிரச்சினைகள் 1 ஆம் வீட்டில் சனியால் வருகிறது.
சனி 2 ஆம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்கும் தாயாரின் உடல் நலம் கெடும். குழந்தை பாக்கியம் இருக்காது. ஆயுள் நன்றாக இருக்கும். தார தோஷத்தை ஏற்படுத்துவார்.வீட்டில் எப்போதும் ஒரு வெறுப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். திருமணம் ஆனாலும் தொழில் விசயமாக துணையை விட்டு பிரிந்து சென்று வெளியில் தங்கிவிடுவார். வீட்டின் தொடர்பு மிக குறைவாகதான் இருக்கும்.
சனி 3 ஆம் வீட்டில் இருந்Similar Posts : சனி பகவான், See Also:சனீஸ்வரன்