உருளைக்கிழங்க நன்றாக நான்கைந்து முறை மண் போகக் கழுவி, தோல் வெள்ளைவெளேர் என்று வந்ததும் தோலை சீவிக்கொள்ளுங்கள். (விருப்பப்பட்டால் தோலுடனும் வறுக்கலாம். சுவையாக இருக்கும்). ஒரு கூர்மையான குச்சி அல்லது ஊசியால், உருளைக்கிழங்கில் 10 இடங்களில் குத்தி துவாரமிடுங்கள். (அப்போதுதான் உப்பு, காரம் கிழங்கினுள் சார்ந்து நன்றாக இருக்கும்). பிறகு, கிழங்குடன் மிளகாய்தூள், உப்பு சேர்த்துப் பிசறி, 3 - 4 மணி நேரம் ஊறவிடுங்கள். ஊறியவுடன், கிழங்கு தண்ணீர் விட்டிருக்கும். எண்ணெயைக் காயவைத்து, கிழங்கை (கசிந்திருக்கும் தண்ணீருடன்) சேர்த்து, நன்கு கிளறி வேகவிடுங்கள். தண்ணீர் வற்றியதும், தீயைக் குறைத்து, நன்கு சுருள ‘மொறுமொறு’வென வதக்கியெடுங்கள்.
குட்டி உருளைக்கிழங்கு வறுவல்
Similar Posts : Seppa Kizhangu Varuval, வேர்கடலை கூழ் செய்வது எப்படி, வளைகாப்பு - 7 வகை சாதம், Eggplant chops in tamil, லட்டு, See Also:உருளைக்கிழங்கு வறுவல் சமையல்