SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. Cancer 2026 Marriage and Family Predictions
பட்டினத்தார்
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

பட்டினத்தார்

Share this post

f ✓ X in ↗ ⧉
பட்டினத்தார்
பெயர் :பட்டினத்தார்  (அ) திருவெண்காடர் (அ)  சுவேதாரண்யன்
மனைவி:சிவகலை
மகன் :மருதபிரான்
மரபு:    -  

சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணிகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி.11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. 

அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார். அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்று வர அனுப்பினார்.

அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என அதில் எழுதியிருப்பதைக் கண்டு, அலறி, உள்ளம் துடிக்க, அறிவு புலப்பட்டு, அத்தனை செல்வங்களையும் தன் கணக்குப்பிள்ளை "சேந்தனிடம்" ஒப்படைத்து, "இவற்றை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடு" எனச் சொல்லி துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார்.

அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள். அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.

பட்டினத்தடிகள் ஒருமுறை ஒரு மன்னன் முன் நிற்கிறார். மன்னன் அரியணையில் அமர்ந்திருக்க பட்டினத்து அடிகள் தரையில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது பட்டினத்தார் துறவியாக வில்லை. பெரும் செல்வந்தராக- வியாபாரியாக இருந்தார். அதன்பின் பட்டினத்தடிகள் சித்தர் நிலையை அடைந்தார். "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என்றபடி தன் செல்வம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு, இடையில் ஒரு கோவணம் தவிர எல்லாவற்றையும் விட்டுத் துறவியாக நிற் கிறார். அந்த நிலையில் அவர் ஒரு பாறையின் மேல் அமர்ந்திருக்கிறார். அவர்முன் வந்து நின்ற மன்னர் அடிகளை வணங்கி, ""சுவாமிகளே... உங்கள் உடைமைகள் யாவற்றையும் துறந்து இப்படி இருக்கிறீர்களே. இதனால் தாங்கள் அடைந்த பயன்தான் என்ன?'' என்று கேட்டான். ""நீ நிற்க... நான் அமர்ந்திருக்க'' என்றார் பட்டினத்து அடிகள்!

அடிகளார் தன் கையில் ஒரு திருவோட்டை மட்டும் வைத்துக்கொண்டு திரிந்தார். ஒரு கோவில் வாசலில் ஒரு தவ முனிவர் வெற்றுடம்பாய்ப் படுத்துக் கிடந்தார். பட்டினத்து அடிகள் அவரைப் பார்த்து, ""ஏன் இப்படி படுத்துக் கிடக்கிறீர்கள்?'' என்று கேட்க, ""ஒரு சம்சாரி நிற்கிறார். நான் படுத்திருக்கிறேன்'' என்றார் அவர்.

""சம்சாரியா... யார் சம்சாரி?'' என்றார் பட்டினத்தார்.

""நீதான்...''

""நானா! என்னிடம் உடைமை எதும் இல்லையே! எல்லாவற்றையும் துறந்து வந்துவிட்டேனே!''

""உன் கையில் ஒரு உடைமை இருக்கிறதே.''

""திருவோடு... பிச்சை வாங்கி உண்ண...''

""அது உனது உடைமைதானே?''

பட்டினத்தடிகளார் சிந்தித்தார்; உணர்ந்தார் உண்மையை! கையில் இருந்த திருவோட்டையும் விட்டெறிந்தார். உலகப்பற்றுக்கள் அனைத் தையும் துறந்து சித்த புருஷராக விளங்கினார் பட்டினத்தார்.

ஒரு நாள் வட நாட்டு யாத்திரை செல்லும் சமயம் கணபதி ஆலயத்தில் அமர்ந்து தியானத்தில் இருந்தார். அப்போது அவ்வூர் அரண்மனையில் கொள்ளையிட்ட கள்வர்கள் காணிக்கையாக ஒரு முத்து மாலையை கோவிலுக்குள் வீசி எறியவே அது பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. பின்பு அரசன் இவர் தான் கள்வன் என்று கருதி கழுமரத்தில் ஏற்றச் சொன்னார். பட்டினத்தார் மரத்தை நோக்கும் சமயம் மரம் எரிந்தது. அரசன் இவர் யார் என்பதை அறிந்துக் கொண்டது மட்டுமின்றி அவர் கால்களில் விழுந்து வணங்கி தன் ஞான குருவாக ஏற்றார். (மகாலட்சுமி வி 2001 / 2002 பக்கம் 42)

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை. தாயார் உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப்பாடிய பாட்டைக் கேட்டால் கல் மனம் கொண்டவர்கள் கூட மனம் கசிந்து அழுது விடுவார்கள்.

அந்தப் பாடல்கள் பின் வருமாறு..

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே

அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை

தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்

கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ

மெய்யிலே தீமூட்டு வேன்

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு

வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள

தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ

மானே எனஅழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்

கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள

முகமேல் முகம்வைத்து முத்தே என்றன்

மகனே எனஅழைத்த வாய்க்கு

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்ட தீ தென்இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்

ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்

குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்

கருதி வளர்த்தெடுத்த கை

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்

வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்

உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்

தன்னையே ஈன்றெடுத்த தாய்

வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்

நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க

எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்

எல்லாம் சிவமயமே யாம்.

பட்டினத்தடிகள், திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது இன்றும் திருவொற்றியூரில் உள்ளது. தன்னை அறிந்த பின் தெய்வம் வேறில்லை என்பதை உணர்ந்து அவற்றைப் பாடல் வழி உலகறியச் செய்தார். (மகாலட்சுமி வி 2001 / 2002 பக்கம் 45)

பட்டினத்தார்  பழமொழிகள்.

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்

 உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

 உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

 மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்

விரும்பிப் போனால் விலகிப் போகும்.  விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். 

சித்தர் கலைகளை போதிக்கும் உண்மை குருமார்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை பட்டினத்தார்

பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சை

எல்லாம் நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்

தாய்போல் கருதி தமர்போல் அனைவருக்குந் தாழ்மை 

சொல்லி

சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் 

தெளிந்தவரே !

என்று கூறுகிறார்.


சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது.

Similar Posts : திருமூலர், அகத்தியர், இடைக்காடர், கரம்போக்குச் சித்தர், புலிப்பாணி,

See Also:திருவெண்காடர் சுவேதாரண்யன் பட்டினத்தார் சித்தர்கள்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 16
  • Astrology Basics (English) 211
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Astrological Analysis Of The Political Decline Of Justin Trudeau
Astrological Analysis of the Political Decline of Justin Trudeau
2024-10-18 00:00:00
Best Software For Astrology
Best Software for Astrology
2025-01-23 00:00:00
ஸ்ரீஅரவிந் கெஜ்ரிவால்
ஸ்ரீஅரவிந் கெஜ்ரிவால்
2025-02-03 00:00:00
Types Of Astrology
Types of Astrology
2025-02-07 00:00:00
What Is Medical Astrology And How Does It Work
What is medical astrology and how does it work
2025-02-12 00:00:00
Medical Astrology For Cancer Natives General Analysis
Medical Astrology for cancer Natives -General Analysis
2025-02-12 00:00:00
Cancer Disease Prediction Using Medical Astrology
Cancer disease prediction using Medical Astrology
2025-02-12 00:00:00
Thiruvallam Sri Parasurama Swamy Temple
Thiruvallam Sri Parasurama Swamy Temple
2025-02-18 00:00:00
Rishabananthar A Legend Researcher In Mudaku Astrology
Rishabananthar - A Legend Researcher in Mudaku Astrology
2025-02-23 00:00:00
Astrology Myths Vs Reality
Astrology Myths vs Reality
2025-02-25 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 2026
  • 216
  • Abishegam
  • After Death
  • Aikiri Nandhini
  • Arupadaiveedu
  • Astrological predictions
  • astrology
  • Astrology originate
  • astrology software
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • aswini
  • bangle
  • Barani
  • Basics
  • best astrology softw
  • Best Astrology software for windows
  • Bodhidharma Birth
  • Bodhidharma Travel to China
  • chinese
  • japanese
  • medicine
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com