SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Astrology Basics (Tamil)
  3. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
  • 2024-08-06 00:00:00
  • Shasunder

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்

Share this post

f ✓ X in ↗ ⧉

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?

இருபத்தேழு நட்சத்திரங்களில் ‘திரு’ என்ற இறைவனுக்குரிய அடைமொழியோடு கூடிய நட்சத்திரங்கள் இரண்டுதான். ஒன்று திருவாதிரை; மற்றொன்று திருவோணம். திருவாதிரையில் பிறந்த குழந்தைகள்  சூட்சும புத்தியோடும், அதீத நுண்ணறிவோடும் இருப்பார்கள். ‘‘இந்த வயசுலயே எப்படி பெரிய மனுஷன் மாதிரி பேசறான் பார்த்தீங்களா’’ என்று வியக்க வைப்பார்கள். நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு  வருவதால் எந்தப் பொருளை எடுத்தாலும் பிரித்துப் பார்த்து மறுபடியும் இணைக்க முயற்சிப்பார்கள். ஐந்து வயதிலேயே பத்து வயதுக்கான முதிர்ச்சி இருக்கும். வகுப்பறையில் ஆசிரியரிடம் எந்தக்  கேள்வியையும் தயங்காது கேட்பார்கள். ஆனால், திடீரென்று காரணமே இல்லாது மூட் அவுட் ஆகி விடுவதும் உண்டு. 

முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 15 வயது வரை ராகு தசை நடக்கும். இவர்களின் சொந்த ஜாதகத்தில் ராகு நன்றாக இருந்தால், பள்ளியிலேயே முதன்மையாக வருவார்கள்.  விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆறாம் வகுப்பிற்குப் பிறகு எதிர்காலத்தைப் பற்றி பெற்றோர் திட்டமிடத் தொடங்குவார்கள். வேறு பள்ளிக்கு மாற்றலாமா என்றுகூட யோசிப்பார்கள்.  சப்ஜெக்ட்டை விட மொழியறிவு அதிகம் இருக்கும். மதிப்பெண்ணில் கூட லிமிட் வைத்திருப்பார்கள். ‘‘தொண்ணூறுமார்க் வருதா... இதுவே அதிகம்’’ என்று திருப்தி அடைவார்கள். அறிவுபூர்வமாகவும்  அபத்தமாகவும் கேள்விகளைக் கேட்டபடி இருப்பார்கள்.

இந்த ராகு தசையில் சாதாரணமாகப் படித்தாலும், 16 முதல் 31 வயது வரையுள்ள குரு தசையில் கூடுதல் பொறுப்போடு நடந்து கொள்வார்கள். பள்ளியில் மதிப்பெண் குறைந்தாலும், கல்லூரியில்  வெளுத்துக் கட்டுவார்கள். ராகுவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் ஆராய்ச்சிக் கல்வியை விரும்புவார்கள். கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனாலும், வேலை வேண்டாம் என்று சிலர் படிப்பைத்  தொடர்வார்கள். சட்டம், ஆசிரியப் பணி, ஆடிட்டர் என்று போனால் சிறப்பாக வருவீர்கள். கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர், அனிமேஷன், ஆர்க்கிடெக்ட் போன்றவையும் ஏற்றம் தருவதாக அமையும்.
இரண்டாம் பாதத்தை மகரச் சனி ஆட்சி செய்கிறது. 12 வயது வரை ராகு தசை நடைபெறும். கிட்டத்தட்ட 4 வயது வரை குழந்தையின் உடல்நலம் குறித்து கவலைப்பட நேரும். படிப்பிலும்  மெதுவாகத்தான் இருப்பார்கள். ஆறாம் வகுப்பு வரை நெருக்க வேண்டாம். அதன்பிறகு சிறப்பாகப் படிப்பார்கள். பள்ளிக்கல்வி முடிக்கும்முன்பே கல்லூரியில் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து  விடுவார்கள். 13லிருந்து 27 வயது வரை குரு தசை வருவதால் எல்லாவற்றிலும் சிஸ்டமேட்டிக்காக மாறுவார்கள். கற்பனை வளம் அதிகமாக இருக்கும். வானவியல் பற்றி ஆர்வமாகப் படிப்பார்கள்.  பள்ளியிறுதி படிக்கும்போதே ஸ்பேஸ்கிராஃப்ட், பைலட் ஆவது பற்றிய விஷயங்களை காதில் போட்டு வையுங்கள். கனிம வளம், புவியியல் சம்பந்தமாகப் படிக்க வைத்தால் சிறப்பாக வருவார்கள்.  மருத்துவத்தில் ஆர்த்தோ, சரும நோய் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுத்தால் நல்ல எதிர்காலம் உண்டு.  

மூன்றாம் பாத அன்பர்களின் அதிபதியாக கும்பச் சனி வருகிறார். ஏறக்குறைய 7 வயது வரை ராகு தசை நடக்கும். ஏதேனும் ஒரு காரணத்தால் தாய், தந்தையரை விட்டுப் பிரிந்து, பின்னர் சேர்ந்து வாழ  வேண்டியிருக்கும். 8 வயதிலிருந்து 23 வயது வரை குரு தசை நடைபெறும். இந்தக் குழந்தைகள் அதிகமாக கோபப்படுவார்கள். பத்தாம் வகுப்பு வரை நன்றாகப் படித்தவர்களுக்கு, மேல்நிலை பள்ளிப்  படிப்பில் கொஞ்சம் அலட்சியம் வந்து விடும். பிறகு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதல் சிறப்பாக படிக்கத் தொடங்குவார்கள். இவர்களின் நட்பு வட்டத்தை மென்மையாகக் கண்காணித்தல் நல்லது.  கால்நடை மருத்துவம், விலங்கியல், தாவரவியல் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு தரும். மருத்துவத்தில் எலும்பு, நரம்பு, மயக்க மருந்து நிபுணர் போன்றவை எனில் நல்லது.
முதல் பாதத்திற்கும், 4ம் பாதத்திற்கும் அதிபதியாக குருவே வருகிறார். ஆனால் 4ம் பாதத்திற்கு அதிபதியாக மீன குரு வருவார். 1ம் பாதத்தை விட அதிர்ஷ்டக்காற்று அதிகமாக அடிக்கும். 4 வயது வரை  ராகு தசை நடக்கும். ஆனால் ராகு இவர்களுக்கு யோக ராகுவாக மாறுவார். 5லிருந்து 20 வயது வரை குரு தசை வருவதால், கல்லூரி வாழ்க்கை வரை எந்தப் பிரச்னையும் இருக்காது. எட்டாம் வகுப்பு  வரும்போது மட்டும் தந்தையாரின் பணி மாற்றத்தினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ படிப்பு தடைபடுவதுபோல இருக்கும். ஆனால், சரியாகி விடும். பத்தாம் வகுப்பு தாண்டும்போதே ஐ.ஏ.எஸ்.  பற்றி காதில் போட்டு வையுங்கள். அலுவலக நிர்வாகம் சார்ந்த படிப்புகளை படிக்க வையுங்கள். பி.இ. படிப்பில் ஐடி, கெமிக்கல் போன்றவை ஏற்றதாகும். மருத்துவத்தில் ஈ.என்.டி, வயிறு, சிறுநீரகம்  சம்பந்தமாக படித்தால் நிபுணராக விளங்கும் வாய்ப்பு அதிகம். 


திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் வருகிறார். எனவே இவர்களிடம் பொதுவாகவே ராகுவின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். ராகு பகவான் பூரணமாக இவர்களை ஆள்வதால், கூர்மையான  புத்தியைப் பெற நாகராஜரை வணங்குவது நல்லது. நாகர்கோவில் தலத்தில் மூலவராகவே ஐந்து தலையுடன் நாகராஜர் அருள்பாலிக்கிறார். பிறந்ததிலிருந்து ராகு தசையின் ஆதிக்கத்தில் பல வருடங்கள்  இருப்பதால், நாகராஜாவை வணங்குவது நல்லதையே செய்யும். 


Similar Posts : திருவாதிரை நட்சத்திர பலன்கள், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்,

See Also:திருவாதிரை

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 257
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Measurably Improve Your Quality Of Life32
Measurably Improve Your Quality of Life32
2019-10-06 00:00:00
Bodhidharma Travel To China
Bodhidharma Travel to China
2019-10-06 00:00:00
Medical Astrology And Body Parts
medical astrology and body parts
2019-10-06 00:00:00
Emperor Wu Dai Bodhidharma
Emperor Wu Dai Bodhidharma
2019-10-06 00:00:00
Medical Astrology About Uterus Issue
Medical astrology about uterus issue
2019-10-06 00:00:00
From When Medical Astrology Is Used
From when medical astrology is used
2019-10-06 00:00:00
Nature Of God In Hinduism
Nature of God in Hinduism
2019-10-06 00:00:00
நவகிரகங்கள் தமிழில்
நவகிரகங்கள் தமிழில்
2019-10-06 00:00:00
நவகிரகங்கள் என்றால்
நவகிரகங்கள் என்றால்
2019-10-06 00:00:00
Navagrahas In English
Navagrahas in English
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 2026
  • 216
  • Adi Shankara
  • After Death
  • Agni
  • americans
  • Ascendant
  • astrology
  • aswini
  • Authors
  • Basics
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Birthday Secrets
  • Bodhidhar
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • chinese
  • Mangal Singh
  • Mangal Singh's NDE
  • stress
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com