SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
தன்வந்தரி
  • 2019-10-06 00:00:00
  • 1

தன்வந்தரி

தன்வந்தரி
பெயர் : தன்வந்தரி
பிறந்த மாதம் : ஐப்பசி
பிறந்த நட்சத்திரம் :  புனர்பூசம்
சமாதி : வைத்தீஸ்வரன் கோவில்
வாழ்நாள் : 800 வருடம் 32 நாட்கள்
மரபு: அந்தணர்

இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.    முதல் சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர். இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியவையாம்.  தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி.  கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும்.  இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. 

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி ஆழ்வார்களிக்கும் ஆச்சாரியர்களுக்கும் 200 வருட காலம் இடைவெளி என்று கூறப்படுகிறது.இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் பிரபந்தம் மறைந்து போனது. 

திருமங்கையாழ்வார்க்கும் (கிபி 8ஆம் நூற்றாண்டு) நாதமுனிக்கும் (கிபி 10-ஆம் நூற்றாண்டு) இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்று சரியான தகவல் இல்லை. அதை ஆராய்வதில் எந்த பயனும் இல்லை.

 நாதமுனி திருநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயில், South Arcot Dist ) பிறந்தவர். "ஆரா அமுதே" [3310] என்ற திருவாய் மொழி பாசுரத்தைக் கேட்டு மறைந்து போன நாலாயிரதிவ்ய பிரபந்ததை தேடி கண்டு பிடித்து முதலாயிரம், இயற்பா... என்று தொகுத்து வழங்கியவர். 

அவரே அதற்கு ராகம் அமைத்து அபினயத்துடன் நடனமும் ஆடி அதை பிரபலப்படுத்தினார். தன்னுடைய மருமான்கள் கீழயகட்டாழ்வான், மேலையகட்டாழ்வான் ஆகிய இருவரையும் அதே போல் பாடி நடனம் ஆடப் பணித்தார். அரையர் பரம்பரை இவர்களிடமிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்றும் வைகுண்ட ஏகாதேசியில் அரையர் சேவையை காணலாம். ஸ்ரீரங்கம் கோயிலில் பிரபந்தம் (சந்தம்) சொல்லும் முறையை வகுத்தார். இந்த வழக்கம் மற்ற ஸ்ரீவைஷ்ணவ கோயிலிலும் பிறகு பின்பற்றபட்டது. இக்காலத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவ தலைமை செயலகமாக திகழ்ந்தது. 

நாதமுனிக்கு பின் உய்யக்கொண்டார், அவரை தொடர்ந்து மணக்கால் நம்பி, ஆளவந்தார்(இவர் நாதமுனியின் பேரன்) வந்தார்கள். ஆளவந்தாரை தொடர்ந்து உடையவர் எனப் போற்றப்படும் ஸ்ரீராமாநூசர்(கிபி 1071-1137) தோன்றினார். 

ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து 120 வருட காலம் வாழ்ந்தவர். நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் மூலம் ஸ்ரீவைஷ்ணவத்தை மக்களுக்கு எடுத்துச் சென்றார். ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஒழுங்கு செய்து நல்ல முறையில் நிர்வாக நடைமுறைகளை வகுத்தார். இன்னும் கோயில் நடைமுறைகள் அவர் வகுத்தபடி நடந்து கொண்டு இருக்கிறது. அவர் சீர்செய்த நிர்வாகத்தை பற்றி கோயிலொழுகு விரிவாக கூறுகிறது அவற்றுள் சிலவற்றை இங்கே தந்துள்ளேன்.

கோயிலின் கணக்கு வழக்குகளை பார்க்க தம்முடைய சீடர் அகாலங்க நாட்டாழ்வானை நியமித்தார்.

ரொம்ப காலம் பழுதற்று கிடந்த தன்வந்திரி(பெருமாளுக்கு மருத்துவராக விளங்குபவர்!) சந்நதியை புதுப்பித்து அதற்கு அவர் சீடரான கருடவாகன பட்டரை நியமித்தார். தன்வந்தரி பெருமாளுக்கு இரவு நைவேதியத்திற்கு பாலும், கஷாயமும் தர ஏற்பாடு செய்தார். ( இன்றும் தன்வந்தரி சந்நதி பட்டரை 'கருடவாகன பட்டர்' என்று தான் அழைக்கிறார்கள்). 

திருமங்கையாழ்வார் காலத்திற்கு முன்பிலிருந்து இக்கோயிலில் ஐந்துவகையான அலுவற்பதவிகள் மட்டுமே இருந்தன. இராமாநுசர் அவற்றைப் பத்தாக உயர்த்தினார். அவர்களின் வேலைகள் கோயிலொழுகில் விரிவாகக் கூறப்படுகின்றது. இது 'உடையவர் திட்டம்' என்று அழைக்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் காலத்தில், வைகுண்ட ஏகாதேசி உற்சவத்திற்கு, நம்மாழ்வார் திரு உருவ சிலை ஆழ்வார்திருநகரியிலிருந்து எடுத்துவரப்படுவது வழக்கம். ஸ்ரீரங்கத்தின் வெள்ளம் அடிக்கடி வருவதால் அந்த சிலைக்கு எதாவது ஆபத்து நேராமல் தடுக்க ராமாநுசர் ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார் சிலை ஒன்றை செய்து அந்த வழக்கத்தை மாற்றியமைத்தார். ஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்கள், ஆண்டாள், நாதமுனி திரு உருவ சிலைகளை அமைத்தார். அவர்களின் திருநட்சத்திரத்தில் உற்சவம் செய்ய ஏற்பாடு செய்தார். "தன்வந்தரி பெருமாளுக்கு இரவு நைவேதியத்திற்கு பாலும், கஷாயமும் தர ஏற்பாடு செய்தார். ( இன்றும் தன்வந்தரி சந்நதி பட்டரை 'கருடவாகன பட்டர்' என்று தான் அழைக்கிறார்கள்)." கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

ஆதியில் பகவான் அவதாரமாகிய ´தன்வந்தரி´ மருத்துவ இயலை முதல் முதலாக உருவாக்கியதாக ´ஐதீகம்´ சொல்கிறது. ´தன்வந்தரி´ என்ற பெயரில் பல மருத்துவ இயலைத் தோற்றுவித்தவர்கள் இருப்பதால் வரலாற்று குழப்பம் ஏற்படுகிறது. இருப்பினும் ´காசிராஜ திவோதாச தன்வந்தரி´ (Kasiraja Divodasa Dhenvantari) ஆயுர் வேதத்தை முறைப்படுத்தி பல்வேறு பிரிவுகளாக பிரித்திருக்கிறார். உட்கொள்ளும் மருந்து, குழந்தை மருத்துவம், மனத்தத்துவ இயல், தொண்டை, காது, மூக்கு மற்றும் கண் சிகிச்சை, அறுவை மருத்துவம், நச்சுப் பொருள், இரசாயண இயல், காயகல்ப இயல் (geriatrics) உடலுறுப்புக்களைத் திருத்தியமைக்கும் அறுவை சிகிச்சை என மருத்துவப்பிரிவுகளைக் கண்டு ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் ஆச்சரியத்துடன் புகழ்கின்றனர். சித்த மருத்துவம் தமிழகத்தில் தோன்றிய மருத்துவ சாத்திரம். அகத்தியர், போகர், புலிப்பாணி போன்ற சித்தர்கள் வகுத்தமுறைகள். பெரும்பாலும் மூலிகைகளை கொண்ட மருத்துவமுறைகள்.  ஐரோப்பிய மருத்துவ முறைகள் நம்நாட்டில் வழக்கத்திற்கு வந்தபின் சித்த மருத்துவம் சிதிலடைந்துவிட்டது. சமீப காலமாக இந்திய அரசு ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் வட இந்திய ´யூனானி´ மருத்துவம் மறையாமல் இருப்பதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. பலகோடி செலவில் கல்லூரிகளும், ஆய்வு நிறுவனங்களும், மூலிகைத் தோட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அரசு சித்த மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஐரோப்பாவில் சித்த மருத்துவத்திற்கு மதிப்பு கூடிக்கொண்டு போவதும் இந்திய அரசு கவனத்தில் எடுத்திருக்கலாம். நம் முன்னோர்களின் அறிவை அதன் உருவாக்கங்கள் நம் மண்ணில் முற்றிலும் இன்னும் மறையவில்லை என்பதற்கு சில உதாரணங்களாக அரசு சித்த மருத்துவங்கள் இருக்கின்றன. 

கி.மு.8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படும் சரகர் (Charaka) இந்திய மருத்துவ உலகில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் "சரகஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார்.120- அத்தியாயங்கள் கொண்ட சரகஸம்ஹியில் மருத்துவக் கோட்பாடுகள், நோய் பரிசீலனை, உடல் அமைப்பு, உடலுறுப்பு இயக்கம், கருவின் தோற்றம் மற்றும் கருவின் வளர்ச்சி, வியாதி குறித்த சிகிச்சை அணுகுமுறைகள் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனுக்கு வியாதிகள் எப்படி தோன்றுகின்றது என்பதைக் குறித்து அவரின் ஆராய்ச்சியின் முடிவில், "வியாதிகள் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகளால் வருகின்றது" என்பதை சாகர் தான் முதல் முதலாக உலகுக்கு சொன்னவர். பிரெஞ்ச் விஞ்ஞானி ´லூயி பாஸ்டி´யருக்கு முன்னாலேயே அதாவது 2.500-ஆண்டுகளுக்கு முன்பே சரகருக்கு தெரிந்திருக்கிறது. சரகர் மனிதனின் உடல் இயக்கம் பற்றி சொல்லும் போது மனிதனின் உடல் முழுவதும் இரத்தத்தில் இருப்பதில்லை. மனித உடல் முழுவதும் இருக்கும் இரத்தக்குழாய்களின் வழியாக இரத்தம் சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டேயிருக்கிறது என்றார். 

17-ஆம் நூற்றாண்டில் ´வில்லியம் ஹார்வி´ என்னும் ஆங்கிலேய விஞ்ஞானி இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் என்று ஐரோப்பிய விஞ்ஞானம் சொல்கிறது. சரகருக்கு பிறகு கி.மு.10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சுஸ்ருதர் "சுஸ்ருத ஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார். "சுஸ்ருத ஸம்ஹிதை" இந்திய அரசு பதிப்புத்துறை Scientiste என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் வெளியிட்டிருக்கிறது. சுஸ்ருதர் அறுவை மருத்துவ சிகிச்சையில் நிபுணராக இருந்திருக்கிறார். Scientiste நூலில் ஓரிடத்தில் சுஸ்ருதர் சொல்கிறார்: "அறுவை மருத்துவனுக்கு தைரியமும், சமயோசித சாமர்த்தியமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அறுவை மருத்துவன் கைகள் வியர்க்கக் கூடாது. கூரிய கத்தி முதலிய மருத்துவ ஆயுதங்களை கை நடுங்காமல் கெட்டியாக பிடித்திருக்க வேண்டும். அவனை நம்பி ஒப்படைத்திருக்கும் உயிரை சொந்த மகளை(னை)ப் போன்று கருதவேண்டும். "நெருக்கடி நேரங்களில் அறுவை மருத்துவன் சுபவேளை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. விபத்து அல்லது ஆபத்தான சுழலில் சிக்குண்டு கொண்டுவரப்படும் நோயாளியை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற சிந்தனை வரவே கூடாது. எப்படியாவது உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்ற தீவிர செயல் இருக்க வேண்டும்." என்கிறார் சுஸ்தர்.                                

தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. அவர் கதை என்ன ? அவர் ஒரு தேவர். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார்.   அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர் சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், ''நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும் " எனக் கூறியப் பின் மறைந்து போனார்.  வெகு காலத்துக்குப் பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின் வம்சத்தில் அவர்களின் மகனாகப் பிறந்தார். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். ஒருமுறை தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாசத்துக்குச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் அவர்களை தக்சன் என்ற நாகம் வழி மறைத்து தடுக்க முயன்று அவர்கள் மீது விஷத்தைப் பொழிந்தது. ஆகவே கோபமடைந்த அவர் சீடர்கள் அதன் தலையில் இருந்த மணிகளை பிடுங்கி தூர எறிந்தனர். அதைக் கேட்ட வாசுகி உடனேயே தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன் யுத்தம் செய்தது.

வாசுகி விஷக் காற்றை ஊதிக்கொண்டே வந்து தன்வந்தரியின் அனைத்து சீடர்களையும் விஷக்காற்றால் மூர்ச்சி அடையச் செய்ய அந்த இடத்திலேயே தன்வந்தரி ஆயுர்வேத மருந்து தயாரித்து அதைக் கொடுத்து மூர்ச்சி அடைந்தவர்களை எழச் செய்தார். அதைக் கேட்ட வாசுகியுடைய சகோதரியான மானச தேவி வந்து அந்த சீடர்களை மீண்டும் மயக்கம் அடைய வைக்க அப்போதும் தன்வந்தரி தமது மருத்துவ மகிமையினால் அவர்களை உயிர் பிழைக்க வைத்தார். ஆகவே பாம்புகளுக்கு புரிந்தது தன்வந்தரி கைலாயம் செல்வதை இனி தடுக்க முடியாது என்பது. மானச தேவி அவரைப் பற்றிய விவரத்தைக் கேட்டு அறிந்ததும் அவர் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர், அவர் தேவர்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டு அவரை கைலாயத்துக்கு தாமே அழைத்துச் சென்றனர்.  அதன் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்தரியை தம்முடைய ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக் கொள்ள தன்வந்தரியின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி அவரே ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபரானார். விஷ்ணு தந்த வரமும் பலித்தது.  தன்வந்தரி தனது கையில் அமிருதக் கலசத்தை வைத்துக் கொண்டு உள்ளவாறு காட்சி தருகின்றார். ஸ்ரீரங்கத்து ரங்கஸ்வாமி ஆலயத்தில் அவருக்கு தனி சன்னதி உள்ளது. உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்தரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபாட்டு வருகின்றனர் எனக் கூறுகிறார்கள்.


தன்வந்தரி இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

Similar Posts : தன்வந்தரி, திண்டுக்கல் ஓதி சுவாமிங்கள், இடைக்காடர்,

See Also:தன்வந்தரி சித்தர்கள்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
சண்டிகேஸ்வரர் பற்றிய தகவல்
2016-10-06 00:00:00
fantastic cms
சந்தனம் விபூதி எதற்காக
2019-10-06 00:00:00
fantastic cms
சந்திரன்
2019-10-06 00:00:00
fantastic cms
சரணாகதி–அர்த்தம் என்ன
2019-10-06 00:00:00
fantastic cms
சரஸ்வதி வழிபாடு
2019-10-06 00:00:00
fantastic cms
சனி பகவான்
2016-10-06 00:00:00
fantastic cms
சாங்கு சித்த சிவலிங்க நாயனார்
2019-10-06 00:00:00
fantastic cms
திருமூலரின் ஜீவசமாதி
2019-10-06 00:00:00
fantastic cms
சாமிக்கு படைத்தல் ஏன்
2019-10-06 00:00:00
fantastic cms
சிதம்பரம் கோவில்
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 216
  • After Death
  • Ascendant
  • Astrological predictions
  • Astrology
  • Astrology originate
  • astrology software
  • astrology-preliminaries
  • bangle
  • best astrology softw
  • Birthday Secrets
  • Bodhidharma Travel to China
  • brahma-muhartham
  • Budhan
  • Chandiran
  • Chandran
  • Hinduism
  • Moon
  • NDE
  • prediction
  • software
  • Tamil astrology software
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com