பெயர் | : | அகத்தியர் (அ) அகஸ்தியர் (அ) குடமுனி (அ) கும்பயோகி (அ) கும்பமுனி (அ) பொதிகைமுனி |
பிறந்த மாதம் | : | மார்கழி |
பிறந்த நட்சத்திரம் | : | ஆயில்யம் |
குரு | : | சிவன் |
சீடர்கள் | : | போகர், மச்சமுனி |
மனைவி | : | லோப முத்திரை (விதர்ப நாட்டு மன்னனின் மகள்) |
மகன் | : | இத்மலாகன் (அ) சங்கரன் |
சமாதி | : | அனந்தசயனம் (திருவனந்தபுரம்), கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவில் என்றும் கூறுவார். |
வாழ்நாள | : | 4 யுகம் 48 நாட்கள் |
மரபு | : | வேளாளர் |
தமிழ் தந்த அகத்தியர்….
தமிழுலகில் நன்கு அறிமுகமான பெயர் அகத்தியர் என்றாலும் தமிழுலகில் மட்டும் ஏறத்தாழ 37 அகத்தியர்கள் இருந்துள்ளாதாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் மூலமாக அறிய முடிகின்றது. அகத்தியர் தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சமய, சமுதாயத் தொண்டாற்றியதிலும் முன்னோடியாகத் திகழ்பவர். இவர் பொதிகையில் தவம் செய்ததால் "பொதிகைமுனி" என்றும், கும்பத்தில் பாய்ந்ததால் "கும்பமுனி" என்றும், அகத்தினுள்ளே ஈசனைக் கண்டதால் 'அகத்தியர்" என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பற்றித் தமிழிலும், வடமொழியிலும் புராணக் கதைகள் பல உள்ளன. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம் உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார். இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும், சோதிட சாத்திரங்களும் உள்ளன. தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி முத்தமிழுக்கு ஐந்திலக்கணங்களையும் தொகுத்து
வடக்கே இமயமலையும் தெற்கே பொதிகை மலையும் இவருக்கு ஒன்றே. தமிழும், மருத்துவமும், ஜோதிடமும், இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின.
பதினென் சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர் தான். தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர்.
தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரான இவர், பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் சரி, இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படும் அகத்தியர் குறித்து எண்ணற்ற செவிவழி கதைகளும் கூறப்படுகின்றன. இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர். இவர் எழுதிய
அகத்தியரின் தோற்றம்
அகத்தியரின் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது.
கதை ஒன்று
தேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் நின்றனர்.
""தேவாதி தேவ! உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோகமாக இருக்கின்றனர். தேவர் தலைவனே! தாங்கள் தான் எங்களைக் காத்தருள வேண்டும்,'' என்றனர்.
இந்திரன் அவர்களது குறையை கருணையுடன் கேட்டான்.
""தேவர்களே! கலங்க வேண்டாம். தேவராயினும், மனிதராயினும், பூச்சி புழுவாயினும், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப பலன்களை
அனுபவித்தே தீர வேண்டும். இதுகண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. கடலுக்குள் வாழும் அசுரன் தாரகன் தவவலிமை மிக்கவன். பிரம்மாவின் அருளால் சாகாவரம் பெற்றவன். கும்பத்தின் அளவே உயரமுடைய ஒருவரே அவனைக் கொல்ல முடியும் என்ற வரம் பெற்றவன். ஆனால், அவன் குறிப்பிட்டுள்ள அளவு உயரமுள்ளவர் எவரும் பூவுலகில் இல்லை. பிரம்மனால் கூட அப்படிப்பட்டவரைப் படைக்க முடியாது. இருப்பினும், பிறந்தவர் மாள்வது உறுதி. நீங்கள் அமைதி காக்க
வேண்டும். நான் அவனை கடலுக்குள் வசிக்க இயலாத அளவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பின்னர், அசுரர்களின் தொந்தரவு குறையும்,'' என்றான்.
தேவர்கள் அரைகுறை மனதுடன் இருப்பிடங்களுக்கு திரும்பினர். இந்திரன் ஆழ்ந்து யோசித்தான். "கடலை வற்றச்செய்வது ஆகக்கூடிய காரியமா என்ன! என்ன செய்வது?' என குழம்பிப் போயிருந்த வேளையில், ""அதுவே சரி,'' என ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான். அக்னிதேவனை அழைத்து, "" நீ உடனே பூலோகம் செல். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்து கிடந்து நம் இனத்தாரை துன்புறுத்துகின்றனர். நீ கடலே வற்றும்படியாக வெப்பத்தை உமிழ். கடல் காய்ந்ததும், அரக்கர்கள் ஓடி ஒளிய இடம் இல்லாமல் தவிப்பர். இதைப்பயன்படுத்தி அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்வோம்,'' என்றான்.
அக்னி சிரித்தான்.
""இந்திரரே! தங்கள் யோசனை எனக்கு நகைப்பை வரவழைக்கிறது. அரக்கர்களை அழிப்பதே தேவர்களையும், பூலோக மக்களையும் காப்பாற்ற வேண்டும்
என்பதற்காகத்தானே! உலகில் கடல் இல்லை என்றால் மழை ஏது? மழை இல்லையென்றால் நீர்நிலைகள் ஏது! நமக்கு அவிர்பாகம் தரும் யாகம் நடத்த தீர்த்தம் கூட இல்லாமல் போய் விடுமே! நீர் வாயுவை அழைத்துப் பேசும். ஒருவேளை வறண்ட காற்றால் அவன் கடலை வற்றச்செய்யக்கூடும்,'' என்றான். இந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது.
""ஏ அக்னி! நான் இட்ட வேலையைச் செய்யும் வேலைக்காரன் நீ. தலைவனையே எதிர்த்துப் பேசுகிறாயா? இந்த யோசனையெல்லாம் இல்லாமலா நான் உன்னை கடலை வற்றச்செய்யும்படி பணிப்பேன். சொன்னதைச் செய்,''என்றான். அக்னியோ ஒரேயடியாக மறுத்து விட்டான்.
""தாங்கள் என் எஜமானர் தான். எஜமானர் என்பதற்காக,உலகத்திலுள்ள அனைவரையும் அழிக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன்,'' எனச் சொல்லி விட்டு, கைகட்டி நின்றான்.
அடுத்து வாயு வரவழைக்கப் பட்டான். அவனிடமும் இந்திரன், கடல் சமாச்சாரம் பற்றிக் கூற, வாயுவும், அக்னி சொன்ன அதே பதிலையே சொன்னான். அக்னியும், வாயுவும் சொல்வதிலும் நியாயமிருக்குமோ என்னும் அளவுக்கு இந்திரனும் சிந்திக்க ஆரம்பித்து விட்டான். அத்திட்டத்தை கைவிட்டு, அவர்களை அனுப்பி விட்டான்.
சில நாட்களில் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து, யாகங்கள் முழுமையாக நின்று போயின. யாக குண்டங்களில் அசுரர்கள் மாமிசத்தையும், ரத்த மழையையும் பொழிந்து தீட்டை உண்டாக்கினர். எந்த யாகமும் நடக்காமல் தேவர்கள் மெலிந்து போயினர். இந்திரனின் கோபம் அக்னி மற்றும் வாயுவின்
மீது திரும்பியது. அவர்களை வரவழைத்து, ""அன்று நான் சொன்னதை நீங்கள் செய்யாமல் போனதால், அரக்கர்கள் அட்டகாசம் செய்து விட்டு, கடலுக்குள் போய் ஒளிந்து கொள்கின்றனர். கடலுக்குள் மறைந்திருப்பவர்களை யாரால் கண்டுபிடிக்க இயலும்? அவர்களைக் கொல்வது எப்படி சாத்தியம்? என் சொல்லைக் கேளாததால் ஏற்பட்ட துன்பத்தின் பலனை அனுபவிக்கும் வகையில், நீங்கள் பூலோகத்தில் பிறந்து மனிதர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும்,'' என
சாபமிட்டான். இதையடுத்து "மித்திரர்' என்ற பெயரில் அக்னியும், "வருணர்' என்ற பெயரில் வாயுவும் பூமியில் பிறந்தனர். இச்சமயம், தேவலோக மங்கையான ஊர்வசி, தான் செய்த தவறால், இந்திரனின் சாபம் பெற்று பூலோகம் வந்தாள்.
அவள், ஒரு குளத்தில் நீராடிக் கொண்டிருந்த போது, அவளை மித்திராவும், வருணனும் பார்த்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் கண்டதே இல்லை. அப்போது, அவர்களின் சக்தி வெளிப்பட்டது. மித்திரர் அந்த சக்தியை ஒரு கும்பத்திலும், வருணர் தண்ணீரிலும் இட்டனர். கும்பத்தில் இருந்த வீரியம் வளர்ந்து குழந்தையாக
மாறியது. அது சில நாட்களில் கும்பத்தில் இருந்து வெளிப்பட்டு உயிர் பெற்று நடமாடியது. அந்த குள்ள உருவம் கமண்டலம், ஜடாமுடியுடன் தோற்றமளித்தது கும்பத்தில் இருந்து பிறந்த அவரை கும்பமுனிவர், குடமுனிவர் என்றும் தேவர்கள் அழைக்கலாயினர். அரக்கர்களைக் கொல்ல கும்ப அளவு உயரமுள்ள முனிவர் பிறந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. கும்பமுனி உருவத்தில் தான் குள்ளம். ஆனால், அவரது சக்தியோ அளவிட முடியாததாக இருந்தது. அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், இவர் உடலில் வெப்பம் தகித்தது. தன் வெப்பத்தை தணிக்க தண்ணீரின் மீதே படுத்திருப்பார். அவரிடம், தேவர்கள் தங்கள்
குறையை வெளியிட்டனர்.
""சுவாமி! தங்களால் மட்டுமே அரக்கர்களை அழித்து எங்களைக் காக்க முடியும்,'' என்றனர். அகத்தியர் அவர்களுக்கு அருள் செய்வதாக வாக்களித்தார். தேவர்களைக் காக்கும் தனது கடமை தடங்கலின்றி நிறைவேற, தனக்கு வசதியாக, 12 ஆண்டுகள் தண்ணீரில் படுத்தபடியே இறைவனை @நாக்கிதவமிருந் தார்.
இறைவன் அருளும் கிடைத்தது. அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அவர்கள் மறைந்திருந்த கடலுக்குச் சென்றார். தங்களை குள்ள முனிவர் கொல்ல வந்துள்ளார் என்பதை அறிந்த அரக்கர்கள் தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை. அகத்தியர் விடுவாரா என்ன?
தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார். தீர்த்தம் போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இருதரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. அரக்கர்கள் கொல்லப்பட்டனர்.
ராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்.
மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து இலங்கையில் இருந்தபோது. சீதாவை, ராவணன் தூக்கிச் சென்று விட்டான். அவளை மீட்பதற்காக பெரும்படையுடன் சென்றிருந்தும் கூட, ராமனால் ராவணனை எளிதில் ஜெயிக்க முடியவில்லை. அங்கு சென்ற அகத்தியர், ராமனிடம் சூரிய வழிபாடு செய்வதன் மூலம் பலமும், வெற்றியும் பெறலாம் எனக்கூறி,
"ஆதித்ய ஹ்ருதயம்' போதித்தார். சிவகீதையும் கற்றுத் தந்தார். ராமபிரானின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவராய் திகழ்ந்தார்.
இந்திரத்துய்மன் யானையாகப் போக சாபம்
ஒருமுறை, இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்ட நாட்டுக்குச் சென்றார். அவன் அகத்தியரின் மகிமையை அறியாமல் உரிய மரியாதை கொடுக்கவில்லை.
""பெரியவர்களுக்கும், முனிவர்களுக்கும் மரியாதை கொடுக்காதவன் அரசாளத் தகுதியில்லாதவன்,'' என்ற அகத்தியர், "நீ யானையாகப் போ' என சாபம் கொடுத்தார். அவன் வருந்தி அழுதான். கருணைக்கடலான அகத்தியர், ""மன்னா! நீ யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை
ஆட்டிப்படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி விட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது,'' என்றார். """இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி? என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே!'' என கேட்ட போது,
""மோட்சம் செல்லப் போகிறவன், சம்சார பந்தத்தை துறக்க வேண்டும். நீ சாட்சாத் மகாவிஷ்ணுவின் மூலம் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் சேர்வாய். பிறப்பற்ற நிலை சித்திக்கும்,'' என அருள் செய்தார்.
சித்தர்களின் கோபம் கூட நன்மை விளைவிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம். பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலைகிடைக்கும் என்றால், யானையாகத்
திரிவதில் தனக்கு சம்மதமே என்ற இந்திரத்துய்மன், காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர், முதலை ஒன்று அதன் காலைக் கவ்வ, அது "ஆதிமூலமே' என அலற,
ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு அதனைக் காப்பாற்றி வைகுண்டம் சேர்த்தார். சிவசிந்தனை தவிர வேறு ஏதும் அறியாத அகத்தியர், தவத்திலேயே ஈடுபட்டிருந்தார்.
கைலையில் நடந்த சிவபெருமான் - பார்வதி திருமணத்தின் போது, முப்பது முக்கோடி தேவர்கள், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகள் என பலரும் வருகையில், பாரம் தாங்காமல் பூமி சாய்ந்து வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். அவ்வாறு செல்லும் பொழுது மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.
இமயமலையில், பார்வதி, பரமேஸ்வர னுக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். வரும் வழியில், ஒரு மரத்தில் சிலர் தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்தார். அவர்கள் "அகத்தியா! அகத்தியா!' என கத்தினர்.
""நீங்களெல்லாம் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள். தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது? என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே! உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்,'' என்ற அகத்தியர் அவர்களை தன்னையறியாமல் வணங்கினார்.
""அகத்தியா! நீ சொன்னதெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர். தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை.
சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். புத்திரன் இல்லாதவன் பிதுர் உலகை அடைய முடியாது. அதனால் எங்கள் அன்பு மகனே! நீ திருமணம் செய்து கொள். ஒரு மகனைப் பெறு. அவன் மூலமாக எங்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் செய்து எங்களுக்கு சொர்க்கப்பாதையைக் காட்டு. இல்லாவிட்டால், நாங்கள் இந்த மரத்திலேயேதொங்க வேண்டியது தான்,'' எனக் கூறி வருந்தினர்.
உயரத்தில் குள்ளமானஅவருக்கு யார் பெண் தருவார்கள்?
இந்நிலையில், அகத்தியர் விதர்ப்ப நாட்டை அடைந்தார். அந்நாட்டு மன்னன் தான் நடத்திய யாகத்தில் பங்கேற்க அகத்தியரை அழைத்துச்
சென்றான். யாகத் தீ கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி,
""அகத்தியரே! நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் லோபமுத்திரை,'' என்றது.
அகத்தியரும் அவளது சம்மதத்தைக் கேட்டார்.
""மாமுனிவரே! நான் இந்த நாட்டில் பிறந்ததால், விதர்ப்ப தேசத்தரசரே என் தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன்,'' என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். அப்போது லோபமுத்திரை, ""சுவாமி! தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டியதன் அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா?'' என்றாள்.
""லோபா! என் முன்னோர் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகை அடைவான். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர்,'' என்றார். இந்த சந்தர்ப்பத்தில் விதர்ப்ப மன்னன் ஒரு நிபந்தனை விதித்தான். ""அகத்தியரே! இந்த திருமணத்துக்காக நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை தர வேண்டும்,'' என்றான்.
""இதென்ன சோதனை? துறவியிடம் ஏது செல்வம்? மன்னன் கேட்கும் பொருளுக்கு எங்கே போவேன்?'' என எண்ணிய போது, லோபமுத்திரை அவரிடம், ""ஐயனே! என்ன யோசனை? பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும் பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா? எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவு இடமும், அதை நிரப்புமளவு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும்,'' என்றாள்.
ஒரு பெண் தன்னை மணம் முடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற முறையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களையும் சந்தித்தார். அவர்களிடம் யாசித்து பொருள் பெற்றார். அதை அவளிடம் கொடுத்து திருமணம் செய்து கொண்டார். ஒரு மகன் பிறந்தான். முன்னோருக்குரிய கடமைகளைச் செய்தான். முன்னோர் சாபம் நீக்கி அகத்தியரை வாழ்த்தினர். இதன் பின் தன் மனைவி லோபமுத்திரையிடம், ""அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே! இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா? இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி விடும். ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலக உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பினார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா! நீ என் கமண்டலத்துக் குள் வா,'' எனச்சொல்லி அவள் மீது தீர்த்தம் தெளித்தார். அவள் தண்ணீராக உருமாறி கமண்டலத்தில் புகுந்தாள்.
அந்த கமண்டலத்துடன் அவர் குடகுமலையை அடைந்தார். மலையின் ஓரிடத்தில் தன் கமண்டலத்தை வைத்து விட்டு லிங்கபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒருகாகம் பறந்து வந்தது. கமண்டலத்தை தட்டி விட்டது. கமண்டலம் சரியவே, உள்ளிருந்த தண்ணீர் ஆறாய் பிரவாகம் எடுத்தது. சரிந்த
கமண்டலத்தை அகத்தியர் வேகமாக எடுத்தார். கொட்டியது போக மீதி தண்ணீரை பத்திரப்படுத்திக் கொண்டார். பிரவாகம் எடுத்த நதி, கடல் போல்
பெருகியதால் "சிவசமுத்திரம்' என சிவனின் பெயரால் அதை அழைத்தார். அது "கா' என்னும் சோலைகளுக்குள் விரிந்து பரந்து சென்றதால், "காவிரி' என்று பெயர் வைத்தார். (சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது என்றும் கூறுவர். )
மீதி தண்ணீருடன் பொதிகை மலைக்கு வந்த அவர், ""லோபா! நீ நிரந்தரமானவள். என் முன்னோரின் சாபம் தீர்த்த நீ, குடகில் நதியாய் பிரவாகம் எடுத்தது போல், இந்த பொதிகையிலும் நதியாகி உலகை செழிப்பாக்கு. செழிப்புள்ள உலகில் ஏழைகள் இருக்கமாட்டார்கள். ஏழைகள் இல்லாத பூமியில் சமத்துவமான வாழ்வு கிடைக்கும்,'' என்று கூறி, கமண்டலத்தில் இருந்த மீதி நீரை, பொதிகையின் உச்சியில் இருந்த சிகரத்தில் கொட்டினார். அது பளபளவென மின்னியபடியே பாணம் போல வேகமாகப் பாய்ந்து ஒரு அருவியை உருவாக்கியது. அதற்கு "பாண தீர்த்தம்' என பெயர் வைத்தார். அந்த அருவி ஓரிடத்தில் தேங்கி, நதியாகப் பாய்ந்தது. அந்த நீர் தாமிர நிறத்தில் ஜொலித்ததால் "தாமிரபரணி' என்னும் பெயர் பெற்றது. அப்போது, ஓரிடத்தில் சிவபெருமான் அவருக்கு அளித்த வாக்கின்படி திருமணக்காட்சி தந்தார். அந்த இடத்திலும் தாமிரபரணி ஒரு நீர் வீழ்ச்சியை உருவாக்கியது. அதற்கு "கல்யாண தீர்த்தம்' என பெயர் சூட்டினார் அகத்தியர். பின்னர் ஓரிடத்தில் அவர் தங்கினார். அங்கும் பரணித்தாய் ஒரு அருவியாகக் கொட்டினாள். அதற்கு "அகத்தியர் தீர்த்தம்' என்று பெயர் வந்தது. பின், அகத்தியர் பொதிகையில் தங்கி தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். அங்கிருந்து மலைப்பாதையில் திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கே சமாதியானார
அகத்தியர் குறுமுனியா - குருமுனியா ???
அகத்தியர் தனது பெருநூல் காவியத்தில் தமிழ்ச் சங்கத்தினைச் சேர்ந்தோர் அனைவரும் தன்னுடைய நூலைப்பாராட்டி தமக்கு குருமுனி என்று பட்டம் கொடுத்ததாகக் கூறுகிறார். அதைப் பற்றிய பாடல் இதோ-
"சீரேதான் சங்கத்தார் எல்லாங்கூடி
சிறப்புடனே அரங்கேற்றஞ் செய்துமேதான்
தீரேதானகஸ்தியர்க்கு குருபட்டந்தான்
திகழாகத் தான்கொடுத்தார் சித்தர்தானே,
தானான குருமுனியா ரென்று சொல்லி
தன்மையுள்ள சங்கத்தாரெல்லாருந்தான்
கோனான குருவணக்கம் மிகவும்கூறி
குவலத்தி லின்னூல்போல் யார்தான்செய்வார்
பானான பராபரியார் கடாட்சத்தாலே
பாடிவைத்த பெருநூலாங் காவியந்தான்
தேனான மனோன்மணியாள் காமரூபி
தேற்றமுட னாசீர்மஞ்செய்தார்காணே.
-அகத்தியர் பெருநூல்
காவியம்-(700வது பாடல்)
சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார்.அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து, அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார். அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் ஆட்டுக் கறியாக சமைத்து விருந்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
அகத்தியர் முருகப் பெருமானிடம் இருந்து ஞான உபதேசம் பெற்றவர். இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர். சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியரின் மாணவர்களில் புலஸ்தியர், தேரையர், தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்துக் கொள்ள முடிகிறது. அகத்தியர் சிவனிடமும், முருகனிடமும் தமிழ் கற்றவர் என்று சிவபுராணம் கூறுகிறது. இராமன் அகத்தியரை தொழுதார் என்று இராமயாணம் கூறுகிறது. பாரதம் கூறும் கண்ணபிரானைச் சந்தித்து பதினெண்குடி வேளிரையும் துவாரகையிலிருந்து தமிழ் நாட்டிற்க்கு அகத்தியர் அழைத்து வந்ததாக நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். அகத்தியரைப் பற்றிய குறிப்புக்களை சிலப்பதிகாரம், மணிமேகலை, பரிபாடல்களில் காணலாம். வேள்விக்குடி சின்னமனூர்ச் செப்பேட்டில் பாண்டியம் பிரோகிதர் அகத்தியர் என்று குறிப்புள்ளது. ஆழ்வார்கள் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகள், அகத்தியரின் ஆணைப்பெற்றே நாலாயிரப் பிரபந்தப் பாடல்களைத் தொகுத்ததாக வைணவர்கள் கூறுவார்கள் என்று மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.
அகத்தியர் ஜாவா சுமத்திரா தீவுகளுக்கு சென்று சைவ சமயத்தை போதித்தவர். அதே சமயம் இவர் சமணர்களாலும் போற்றப்படுகிறார்.
அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம். அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
அகத்தியர் இப்பொழுதும் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் அகத்தியரைப் பார்க்க பொதிகை மலைக்குச் செல்கின்றனர்.
எழுதிய நூல்கள்
அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது.
அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.
அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.
அகத்தியர் படைத்த கிரிகை நூல் அறுபத்தி நான்கு என்ற பகுதியில் பதினெட்டு வகையான மன நோய் பற்றியும் அவற்றிற்குரிய மருத்துவ முறைகளைப் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளார்.
சேக்கிழாரின் பெரியபுராணத்தை ஒட்டி அகத்தியர் பக்த விலாசம் என்னும் நூலை வடமொழியில் அகத்தியர் எழுதியதாக கூறுவர்
அகத்தியர் தேவாரத் திரட்டு என்னும் நூலில், தேவாரம் ஒரு லட்சத்து மூவாயிரம் திருப்பதிகங்களை கொண்டிருந்தனவாம். ஆனால் நமக்கு இபோழுது கிடைப்பதுவோ 797 மட்டுமே.
அகத்தியர் ஐந்து சாஸ்திரம்
அகத்தியர் கிரியை நூல்
அகத்தியர் அட்டமாசித்து
அகத்தியர் வைத்தியரத்னசுருக்கம்
அகத்தியர் வாகட வெண்பா
அகத்தியர் வைத்திய கௌமி
வைத்திய ரத்ணாகரம்
வைத்திய கண்ணாடி
வைத்தியம் 1500
வைத்தியம் 4500
செந்தூரன் 300
மணி 400
வைத்திய சிந்தாமணி
கரிசில்பச்யம்
நாடி சாஸ்திரப் பசானி
பஸ்மம் 200
வைத்திய நூல்கள் பெருந்திரட்டு
சிவசாலம்
சக்திசாலம்
சண்முக சாலம்
ஆறெழுத்து அந்தாதி
கர்மவியாபகம்
விதி நூன் மூவகை காண்டம்
அகத்தியர் பூஜா விதி
அகத்தியர் சூத்திரம் 30
அகத்தியர் ஞானம்
அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி நூல்
அகத்தியர் பூஜை முறைகள்
தேகசுத்தியுடன் சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள் குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். பின் சித்தரின் தியானச் செய்யுளை கண் மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்:
தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
தென் திசை, வட திசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
சித்த வைத்திய சிகரமே போற்றி!
சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
இசைஞான ஜோதியே போற்றி!
உலோப முத்திரையின் பதியே போற்றி!
காவேரி தந்த கருணையே போற்றி!
அகத்தியம் தந்த அருளே போற்றி!
ராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
நிவேதினம் : பஞ்சாமிர்த்தம், பழங்கள், சக்கரைப் பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்த்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக ஓம் ஸ்ரீ அகத்திய முனிவரே போற்றி என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.
அகத்திய முனிவரின் பூசா பலன்கள்:
இசையிலும் கவிதையிலும் மேன்மை உண்டாகும்
கல்வித்தடை நீங்கும்
புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்
முன்வினை பாவங்கள் அகலும்
பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்
பேரும், புகழும் மதிப்பும் தேடி வரும்
பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்
சகலவிதமான நோய்களும் தீரும்
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
அகத்தியரும் அறிவியலும்
சோதனைக் குழாய் குழந்தை
உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை அகத்தியர். குடுவையில் கருத்தரித்து வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி. மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியாமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவான உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை விளக்குகிறது.
தொலைக்காட்சி
முதன் முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே. பார்வதி பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன் செய்ய சிவ பெருமான் அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே? என்று வினவினார் அகத்தியர். இமயத்தில் நடைபெறும் எமது நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் சிவன். அவ்வாறே அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு. (ஈசன் திருமணம் நடந்து பல நாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார் திருமால். சீர்காழியை அடுத்துள்ள திருக்கோலக்கா என்னும் தளத்தில் சிவ பெருமான் திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் )
விந்து நுண்ணுயிரி
1677 ம் ஆண்டில் ஐரோப்பியரான லுட்விக் ஹாம் என்பவரால் கண்டறியப்பட்ட விந்து நுண்ணுயிரி பற்றிஅகத்தியர் தனது குருநாடிச் சூத்திரம் என்னும் நூலில் அன்றே குறிப்பிட்டுள்ளார்.
அணுவுருவில் நதிகள்
அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது காவிரியை அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில் தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு இந்த புராண சம்பவம் ஆதாரம்.
அகத்தியருக்கு கோவில்
அகத்தியருக்கு அவரது மனைவி லோபமுத்திரையுடன் ஒரு கோவில் அம்பாசமுத்திரம் பிரதான கடை வீதியில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த சந்நிதியில் அகத்தியப் பெருமான் காட்சி தருகிறார். தனிச் சந்நிதியில் லோபமுத்திரை தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். ஆலய முகப்பில் நந்தி, கொடி மரம் ஆகியவை உள்ளன. கருவறையின் வலப்புறம் இருவரின் அழகிய வண்ண ஓவியங்கள் உள்ளன. தென்புறம் தனிச் சந்நிதியில் தட்சிணாமூர்த்தியும், மேற்கே அகத்தியர், லோபமுத்திரையின் அழகிய பெரிய உற்சவத் திரு வுருவங்களும் செப்புப் படிமத்தில் காட்சியளிக்கின்றன.
அடுத்து நடராஜர்- சிவகாமியின் அழகிய பெரிய செப்புப் படிமங்களும் உள்ளன. கன்னி மூலை விநாயகரும் உள்ளார். கிழக்கே உள்ள பெரிய வெளி மண்டபத்தின் முன்புறம் அகத்தியரின் சுதை உருவம் உள்ளது. இவருக்கும் சிறப்பு வழிபாடுகள் உள்ளன. அகத்தியருக்கென்று ஏற்பட்ட ஒரே கோவில் என்ற பெருமை உடையது இந்தக் கோவில்.
கருவறையில் அகத்தியர் வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கையில் ஏடு ஏந்தியுள்ளார். கழுத்தில் லிங்கத்துடன் மாலை, ஜடாமகுடம், மார்பில் பூணூல், மீசை, தாடியும் அமைந்துள்ளது. அகத்தியரின் தேவி லோபமுத்திரை இரு கரங்களுடன் வலக்கரத்தில் மலர் ஏந்தியுள்ளார். அகத்தியர் தென் தமிழ் நாட்டுக்கு வரும்போதே மணம் புரிந்து கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு சித்தர் என்னும் பெயர் கொண்ட மெய்யறிவு வாய்ந்த புலவர் பிறந்த தாகவும் கூறுவர்.
இந்த அகத்தியர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்னம் படைத்தல் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள், அவரவர் வீடுகளிலிருந்து சோறு பொங்கி எடுத்து வந்து கோவிலில் உள்ள ஒரு அறையில் அதைக் குவித்து வைத்து மூடிவிடுகின்றனர். மறுநாள் காலை அந்த அறையைத் திறந்து பார்த்தால் உணவுக் குவியலில் காலடித் தடம் காணப்படுகிறது. தனக்குப் படைத்த உணவை அகத்தியரே இங்கு வந்து ஏற்றுக் கொள்வதாக ஐதீகம் உள்ளது. பின்னர் இந்தப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கைக்கோள முதலியார் இன மக்கள் இவரை தெய்வமாக வழிபடு கின்றனர். திருநெல்வேலியிலிருந்து அம்பாச முத்திரம் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது