SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
தேரையர்
  • 2019-10-06 00:00:00
  • 1

தேரையர்

தேரையர்

பெயர் :தேரையர்
குரு :  கருமசௌமியர் , அகத்தியர்
சமாதி : பொதிகை மலை
மரபு:வேதியர்   

இராமதேவர் மருத்துவ ஆராய்ச்சிகளில் சிறந்த தேர்ச்சியுடைவர் என்பதால் தேரையர் என்ற காரணப் பெயர் கொண்டு அழைக்கப் பட்டதாக அபிதான சிந்தாமணி குறிப்புகளில் காணப்படுகின்றன.  இவர் "முற்பிறவியில் இராமதேவர், மறுபிறப்பில் தேரையர் ஆவார்" என்றும் சில குறிப்புகள் கூறுகின்றது.

தேரையர் கருமசௌமியர் என்பவரின் சீடர் என்றும், அகத்தியரின் சீடர் என்றும் கூறுவர். இவரே பின்னாளில் தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் என்றும் சொல்லப்படுகிறது.

அகத்தியர் தமக்கு ஒரு நல்ல சீடன் வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்தார். அது சமயம் ஔவையார் ஒரு சிறுவனுடன் அகத்தியரை தேடி வந்தார். ஔவையுடன் வந்த சிறுவனைப்பற்றி விசாரித்தார் அகத்தியர்.  அதற்கு ஔவையார் இவன் பாவம் ஊமைப் பிள்ளை, பிராமணன் உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன் என்றார். உடனே அச்சிறுவனை அகத்தியர் சீடனாக ஏற்றுக்கொண்டார்.  அவரே பின்னாளில் தேரையர் என்றழைக்கப்பட்டார். 

அகத்தியருடைய மாணாக்கர்களில் ஒருவராக விளங்கியவர் தேரையர் , மருத்துவ ஞானம் மிகுந்தவர். சித்த வைத்திய முறையில் தேரையர் கண்ட உண்மைகள் பெரிதும் உபயோகமாகின்றன.  மனிதரின் தேக உணர்வையும், குரலின் தன்மையையும் வைத்தே நோய் நிர்ணயம் செய்து விடும் திறமை பெற்றவர். அவ்வண்ணமே சிகிச்சை முறைகளிலும் இவருக்கு அதிக வல்லமை இருந்தது.     இவர் பதினாறு நூல்கள் இயற்றியுள்ளார். அவற்றுள் வைத்திய காவியம், இரசவர்க்கம், கருக்கிடை, வைத்திய சிந்தாமணி, மருத்துவ பாரதம் என்பவை குறிப்பிடத்தக்கனவாகும். மேலும் பதார்த்த குண சிந்தாமணி, நீர்க்குறி நூல், நெய்க்குறி நூல், தயில வர்க்க சர்க்கம், சிகிச்சை ஆயிரம், யமக வெண்பா, நாடிக் கொத்து, நோயின் சாரம் முதலிய நூல்களும் பல உள.தேரையர், சித்தர்களின் கூட்டத்தில் மிகவும் தனித்துத் தெரியும் ஒருவராவார். இவர் அளவுக்கு சோதனைகளைச் சந்தித்த ஒரு சித்த புருஷரைப் பார்ப்பது அரிது. சோதனைகளே இவரை சாதனையாளராக ஆக்கின. மனித வாழ்வில் போட்டி, பொறாமை, மன எரிச்சல், ஆகியவை சராசரி மனிதர்களின் குணங்கள். ஆனால் தேரையர் வரலாற்றைப் பார்க்கும் போது, சித்த புருஷர்களால்கூட போட்டி, பொறாமை போன்றவற்றை வெல்ல முடியாது போலும் என்று நாம் எண்ண வேண்டியுள்ளது.

பாண்டிய மன்னன் சிறந்த சிவ பக்தன். ஆனால் கூன் முதுகு உடையவர். இதை ஜாடைமாடையாக மக்கள் விமரிசிப்பதைக் கண்டு மனம் வருந்தி மன்னன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டான். அகத்தியரும் தம் மூலிகை வைத்தியத்தால் அவனது சரி செய்வதாகக் கூறினார். சீடனை அழைத்து அபூர்வமான சில மூலிகைகளை கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.      சீடன் மூலிகைகளைக் கொண்டுவந்தவுடன், அவைகளை நன்றாக இடித்து சாறு எடுத்து ஓர் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். அப்பொழுது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே, அகத்தியர் ஊமை சீடனை “அடுப்பைப் பார்த்துக்கொள்” என்று சாடை காட்டிவிட்டு சென்றார். மூலிகைச் சாறு நன்றாக கொதித்துக் கொண்டிருந்தது. சீடன் மிகவும் கவனமாக இருந்தார்.      கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவி பட்டு ஆசிரமத்தின் மேல் கட்டப்பட்டிருந்த ஓர் வளைந்த மூங்கில் மெல்ல மெல்ல நிமிர்ந்தது. அது கண்ட சீடன் இராமதேவன் மூலிகைச் சாறு பதமாகிவிட்டது என்று யூகித்து கொதிக்கும் சாற்றை இறக்கி வைத்தார். அகத்தியர் திரும்பி வந்தார். மூலிகைச் சாறு இறக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு என்ன நடந்தது என்று வினவினார். சீடன் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததை சுட்டிக் காட்டினார்.      குறிப்பறிந்து செயல்பட்ட இராமதேவனை அகத்தியர் மனமார பாராட்டினார். அந்த மூலிகை தைலத்தால் மன்னனின் கூன் முதுகு சரியானது.     

தலையைப் பிளந்து  அறுவைச் சிகிச்சை செய்வது என்பது இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் கூட கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூலிகை வகைகளைக் கொண்டே இந்த சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை செய்தவர் அகத்தியர் என்றாலும், அது வெற்றி பெற காரணமானவர் தேரையர். வைத்தியரே குழம்பிப்போய் நின்ற வேளையில், துணிச்சலும் சமயோசிதமும் கலந்து இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானார். தேரையர் சித்தர் மலையாள தேசத்தில், திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். அவரது வரலாற்றின் போக்கைக் கொண்டு இவ்வாறு கணிக்க வேண்டியுள்ளது. அவர் சமாதியானது மலையாள தேசத்திலுள்ள தோரண மலை என கணிக்கப்பட்டுள்ளது. தோரணமலை, குற்றாலம் அருகில் உள்ளது. முற்காலத்தில், குற்றாலத்தைச் சார்ந்த பகுதிகள் மலையாள தேசத்தில் தான் இருந்தன. மேலும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தார். அகத்தியரும், பொதிகை மலையில் தங்கியிருந்தார். இதையெல்லாம் கணக்கில் கொண்டால், இது உண்மையாக இருக்கலாம் என்றே நம்பலாம். தமிழ் மூதாட்டி அவ்வையார், தேரையரின் திறமையைப் பற்றித் தெரிந்து, அவரை அகத்தியரிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை அகத்தியர் சீடராக ஏற்றுக்கொண்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அப்போது தேரையருக்கு என்ன பெயர் இருந்ததோ? ஆனால், அவர் தேரையர் என்ற பெயர் பெற ஒரு நிகழ்ச்சியே காரணமானது. எப்படியிருப்பினும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தது நிஜமே.

ஒருமுறை தேரையர் அகத்தியரிடம், குருவே! மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார். அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார். சீடனே! உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.சுவாமி! தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே! இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே! இதெப்படி சாத்தியம்? என்றார். சீடனே! ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார். நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார். நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்! மகனே! ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும். மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும். எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார். குருவின் இந்த அற்புதமான விளக்கத்தைக் கேட்ட தேரையர், அவரிடம் மிகுந்த நேசம் கொண்டார். அந்நேரத்தில் அகத்தியர், காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு பலவித ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தார். 

தேரையர் அவர் கேட்கும் மூலிகை வகைகளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவினார். இந்த சமயத்தில், காசிவர்மன் என்ற அரசனுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. நாளாக நாளாக வலி அதிகரித்தது. அவன், அகத்தியரைத் தேடி அவரது குடிலுக்கு வந்தான்.பெருமானே! என்னை தாங்க முடியாத தலைவலி ஆட்டிப்படைக்கிறது. ராஜாங்க விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தாங்கள் நினைத்தால், இதை நொடியில் குணப்படுத்தி விடுவீர்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் காப்பாற்ற வேண்டும், என வேண்டி அவரது பாதத்தில் விழுந்தான்.அரசன் மீது அகத்தியர் மிகுந்த கருணை கொண்டார். அவனை பரிசோதித்தார். தலைவலிக்கான காரணம் தெரிந்து விட்டது. அவனிடம் சொல்ல யோசித்தார். மன்னா! நீ அரண்மனைக்குச் செல். நாளை இந்த வியாதியை தீர்த்து விட ஏற்பாடு செய்கிறேன், என்றார்.சுவாமி! இந்த வலிக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சொல்லி அருளுங்களேன் என்றான் மன்னன்.அது உனக்கெதற்கு? வியாதியஸ்தனுக்கு மருந்தும் சுகமும் தானே தேவை. நீ புறப்படு, என்றவரிடம், மன்னன் மிகவும் பணிவுடன் கேட்டான். மன்னா! சொல்ல வேண்டாம் என நினைத்தேன். சொல்ல வைத்து விட்டாய். உன் தலைக்குள் தேரை ஒன்று இருக்கிறது, என்றார். தேரை என்பது தவளை வகையில் ஒன்று. தேரையா! அதெப்படி தலைக்குள் நுழைய முடியும், என்று மன்னன் கேட்கவே, நீ தூங்கும்போது, உன் மூக்கின் வழியாக குஞ்சு ஒன்று நுழைந்திருக்க வேண்டும். அது தலையை இப்போது அடைந்ததால், வலி வந்திருக்கிறது, என்றதும், மன்னன் அதிர்ந்தான். சுவாமி! என்னால் நம்பவே முடிய வில்லையே. இப்படி ஒரு கொடிய நிலைமையா எனக்கு? தலைக்குள் இருக்கும் தேரையை எப்படி வெளிக்கொண்டு வர முடியும்? என்று பதட்டப்பட்டு கேட்ட மன்னனிடம், பயப்படாதே. நாளை உனக்கு கபால சிகிச்சை செய்யப் போகிறேன். 

உன் தலையைப் பிளந்து, உள்ளிருக்கும் தேரையை எடுக்க முயற்சிக்கிறேன், என்ற தேரையரை இடைமறித்த அரசன், ஐயோ சுவாமி! தலையை உடைத்த பின் எப்படி என் உடலில் உயிர் தங்கும்? என உடல் வெடவெடக்க கேட்டான். அகத்தியர் அவனைத் தைரியப் படுத்தினார். மன்னா! தலையைப் பிளக்கவும், அதை மூடவும் என்னிடம் மூலிகைகள் உள்ளன. இதனால் உனக்கு வலி தெரியாது. மேலும், சில மூலிகைகளைக் கொடுத்து உன்னை மயக்கமடையச் செய்து விடுவேன். என்ன நடக்கிறது என்பதை நீ அறியமாட்டாய். என்னிடம் வைத்தியம் பார்க்க வந்த எவரும் இதுவரை குணமாகாமல் திரும்பியதில்லை, என்றார். அகத்தியரின் தெய்வசக்தியை மன்னனும் அறிவான். எனவே, அவன் சிகிச்சைக்கு சம்மதித்தான். அகத்தியர் மன்னனின் மூக்கருகே ஏதோ ஒரு மூலிகையை நீட்டினார். அதன் வாசனைபட்டதுமே, மன்னன் படிப்படியாக மயக்கநிலையில் ஆழ்ந்தான். ஏதோ ஒரு மூலிகையை எடுத்து அரைத்து மன்னனின் தலையில் தடவிய அகத்தியர், அவனது தலையின் ஒரு பகுதியை பவ்யமாக உடைத்து திறந்தார். என்ன அதிசயம்! மன்னனின் மூளையில் ஒரு தேரை (தவளை) உட்கார்ந்திருந்தது. அது மிரள மிரள விழித்தது. இதை எப்படி வெளியேற்றுவது...கை படக்கூடாது. ஏதாவது குச்சியால் தட்டினால் அது ஏதாவது ஒரு இடத்தில் போய் பதுங்கிக் கொண்டால், பின்னர் மன்னனின் உயிருக்கு ஆபத்தாகி விடும்! வைத்திய மாமேதையான அகத்தியரே கலங்கி விட்டார். இந்த சமயத்தில், அருகில் நின்ற தேரையர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். மன்னன் தலையருகே வைத்து, கைகளை தண்ணீருக்குள் விட்டு அளைந்தார். தண்ணீரின் சல சல சத்தம் கேட்ட தேரை தலையில் இருந்து குதித்து தண்ணீருக்குள் விழுந்து விட்டது. உடனே பாத்திரத்தை அங்கிருந்து அகற்றி விட்டார் தேரையர். தன் சிஷ்யனின் அபார அறிவு திறனை அகத்தியர் பாராட்டினார்.                                                         

தேரையா! தன்னைச் சார்ந்தவனுக்கு இக்கட்டான நிலையில் கை கொடுப்பவனே உலகில் உயர்ந்தவன். நீ செய்த காரியத்தால், என் மானமும், மன்னனின்  உயிரும் காப்பாற்றப்பட்டன. என் மருந்துப்பெட்டியிலுள்ள சந்தானகரணி மூலிகையை எடு, என்றார். சந்தானகரணியை எடுத்த தேரையர், குருவே! இதன் குணம் என்ன? என்றார். உடைந்த தலையை ஒட்டவைக்கும் அரியவகை மூலிகை இது, என்ற அகத்தியர் அதன் சாறைப் பிழிந்து தலையில் ஊற்றினார். சிறிது நேரத்திலேயே தலை ஒட்டிக்கொண்டது. அகத்தியரே இந்த சிகிச்சையை செய்தார் என்றாலும் கூட, தேரை வெளியேற தேரையரே காரணமானார். தேரையுடன் சம்பந்தப்பட்டவர் என்பதால் தான் இவருக்கு தேரையர் என்ற பெயரே ஏற்பட்டது.  மன்னனின் தலைவலி தீர்ந்ததால் அவர் இருவரையும் பாராட்டினார்.இராமதேவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தேரையர் என்று அழைக்கப்பட்டார்.அவருடைய ஊமைத்தன்மையைப் போக்கி தமக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் தேரையருக்கு அகத்தியர் போதித்தார். அவரின் உறுதுணையால் தேரையர் ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூலை இயற்றி ‘தொல்காப்பியர்’ என்ற பெயரும் பெற்றார்.

இன்னொரு சமயத்திலும் அகத்தியருக்கு பெரும் உதவி செய்தார் தேரையர். அகத்திய சித்தர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பினார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான். தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியபடியே அவற்றை அடையாளம் கண்டு ஒரு பை நிறைய பறித்து வந்து விட்டார். அகத்தியர் அந்த மூலிகைகளைச் சாறெடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். தேரையரிடம், தேரையா! நீ இந்தக் கரைசல் பக்குவமாக வரும் வரை கிளறிக்கொண்டிரு. எனக்கு காட்டிற்குள் சிறிது வேலையிருக் கிறது. நான் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளலாம், என சொல்லிவிட்டு சென்று விட்டார். 

தேரையரும் பக்குவமாக காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் இருந்து டக் என சப்தம் வந்தது. இது கேட்டு நிமிர்ந்தார் தேரையர். என்ன ஆச்சரியம்! வளைந்திருந்த அந்த மூங்கில் நிமிர்ந்து நேராகி இருந்தது. அதைப்பார்த்து ஆனந்தத்தில் எகிறிக் குதித்தார். மூங்கிலும் மனிதனும் பல விதங்களில் ஒன்றானவர்கள். இரண்டுக்குமே சுவாசம் பொது. இரண்டுமே சத்தம் எழுப்பும். 

இரண்டுமே உயர்ந்தெழுந்து வளர்ந்து, பின் சாய்ந்து முதுமை அடைபவை. மனிதனோடு மரணத்தின்போது மயானம்வரை வருவது மூங்கிலும்தான்... மூங்கில் மற்ற மரங்களைப் போல என்றும் பசுமையாக இருக்கக்கூடியதும் அல்ல. தனித்தும் இது வளராது. கூட்டமாகவே வளர்வது. இப்படி மனித வாழ்வுக்கும் மூங்கிலுக்கும் அனேக சம்பந்தங்கள். இந்நிலையில் மூலிகைச் சாறின் ஆவி, வளைமூங்கிலையே நிமிர்த்துகிறது என்றால், இந்தச் சாறு எதைத்தான் நிமிர்த்தாது?

தேரையரின் மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது. குரு என்னவோ, தான் வந்த பிறகு கரைசலை இறக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் வர தாமதமானால், கரைசல் மேலும் சூடாகி, இந்த அற்புதமான மருத்துவக் குணத்தை இழந்து போகலாம். மூலிகையின் புகைபட்டே வளைந்த மூங்கில் நிமிர்கிறது என்றால், மூலிகை கரைசலைத் தடவினால் கூன் நிச்சயமாக குணமாகத்தானே செய்யும்! இது தான் சரியான பக்குவம். கரைசலை இறக்கி வைத்து விட வேண்டியது தான், என நினைத்தவர், அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டார். களைப்பாக இருந்ததால், சற்று படுத்திருந்தார். வெளியே சென்றிருந்த அகத்தியர் வந்தார். அடேய்! உன்னை நம்பி எவ்வளவு முக்கியமான பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் போனேன்.  நீ என்னடாவென்றால், உறங்கிக் கொண்டிருக்கிறாயே! மூலிகை குழம்பு என்னாயிற்றோ! என்று கோபமாகப் பேசியவரிடம், மிகுந்த பணிவுடன் சென்ற தேரையர், நடந்ததைச் சொன்னார்.அகத்தியர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சீடனே! எனக்கு கிடைத்தவர்களில் நீ மிகவும் உயர்ந்தவன். ஒவ்வொரு ஆசிரியருக்கும் இப்படி புத்திசாலி மாணவர்கள் கிடைக்கவும் கூட கொடுத்து வைக்க வேண்டும்! அன்றொரு நாள் ஒரு உயிரைக் காப்பாற்ற மூளையில் இருந்த தேரையையே குதிக்கச் செய்தாய்.இன்று, கூன் நிமிரும் பக்குவத்திற்கு கரைசலை தயார் செய்துள்ளாய். பெரியவர்கள் சொன்னதைக் கேட்க வேண்டும் தான்! அதே நேரம், சமயத்திற்கு தக்க முடிவுகளையும் எடுப்பதன் மூலம் அவர்களின் அபிமானத்தை மேலும் பெறலாம்.

மகனே! இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது. வெளியே செல், என்றார். தேரையர் அதிர்ச்சியானார். நல்லதைச் செய்ததாகச் சொல்லிவிட்டு, இப்போது வெளியே போகச் சொல்கிறாரே! என குழம்பி நின்றார்.ஒருவேளை நாம் செய்தது முட்டாள்தனமோ.. குரு நம்மைப் புகழ்வது போல பழிக்கிறாரோ, என கலங்கி நின்றார். குருதேவா! நான் ஏதும் தவறு செய்து விட்டேனா? தாங்கள் என்னை வெளியே போகச் சொல்லுமளவுக்கு நான் தங்கள் கவுரவத்துக்கு பங்கம் இழைத்து விட்டேனா? அவ்வாறு செய்திருந்தால், நான் உயிர் தரிக்க மாட்டேன்... தேரையர் கிட்டத் தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்.அடடா... தவறாகப் புரிந்து கொண்டாயே! திறமையுள்ள இருவர் ஒரே இடத்தில் இருப்பதால் மக்களுக்கு லாபம் குறைகிறது. அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால் பயன்பெறும் மக்களின் அளவு கூடும். நீ தனித்தே வைத்தியம் செய்யுமளவுக்கு தகுதி பெற்று விட்டாய். அதனாலேயே உன்னை வெளியே அனுப்புகிறேன். கடந்த வாரத்தில், உன் கைங்கர்யத்தால் காட்டில் இருக்கும் முனிவர் ஒருவரின் வயிற்று வலி நீங்கியது! என்றார். ஆம்...மன்னனுக்கு கூன் நிமிர்ந்த பிறகு, தீராத வயிற்றுவலி இருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு முனிவர் அகத்தியரிடம் மருந்து வாங்க வந்தார். அதி அற்புதமான திரவ மருந்தொன்றை அவருக்கு கொடுத்த அகத்தியர், பத்திய முறைகளின் படி இதைச் குடித்து வர, வலி பறந்தோடி விடும் என சொல்லி விட்டார். அகத்தியரின் மருந்துக்கு மறுமருந்து உண்டா? முனிவரும், அதை குடித்தார். உஹும்...வலி தீரவில்லை.இரண்டு நாள் கழித்து முனிவர், தன் சீடன் ஒருவனை அகத்தியரிடம் அனுப்பினார். அவன் அகத்தியரிடம் வந்து, அகத்திய சித்தரே! தங்கள் மருந்தாலேயே எங்கள் குருவின் வியாதியைக் குணப்படுத்த முடியவில்லை என்றால், இனி யாரால் மருந்து தர இயலும்? குரு வயிற்றுவலி தாளாமல், இன்னும் பிதற்றிக் கொண்டிருக்கிறார், என்றான். 

அகத்தியருக்கு ஆச்சரியம். சரியான மருந்தைத் தானே கொடுத்தேன். சரி.. சரி... உன்னோடு, தேரையனை அழைத்துச் செல். அவன் என்ன ஏதென்று பார்ப்பான், எனச்சொல்லி தேரையரை அனுப்பி வைத்தார். தேரையர் அங்கு சென்று முனிவரைச் சோதித்தார். கொருக்கை என சொல்லப்படும் குச்சியை எடுத்தார். அந்தக் குச்சியின் நடுவில் துவாரம் இருக்கும். அதாவது, இப்போது நாம் குளிர்பானம் குடிக்கப் பயன்படுத்தும் ஸ்டிரா போல! அதன் மூலமாக, அகத்தியர் கொடுத்த அதே மருந்தை உறிஞ்சி குடிக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம்! வலி உடனே பறந்து விட்டது. தேரையர் மகிழ்ச்சியுடன் ஆஸ்ரமத்துக்கு வந்து, அகத்தியரிடம் நடந்ததைச் சொன்னார். அகத்தியர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என் பெயரைக் காப்பாற்றினாய், என்று சொல்லி பாராட்டினார். இப்படி அகத்தியர் பல மருந்துகளைக் கண்டுபிடிக்க, அதைப் பயன்படுத்தும் வித்தையை தேரையர் பல்வேறு விதங்களில் கையாள...பல நோயாளிகள் பயன் பெற்றனர். இந்தக் காரணத்தாலேயே அகத்தியர், தேரையரை வெளியில் அனுப்ப உத்தேசித்தார். இந்தக் காலத்தில் தொழில் தெரிந்த ஒருவர், தன்னைப் போலவே ஒருவர் அதே தொழிலைச் செய்ய முற்படுகிறார் என்றால், அவரை எப்படி கவிழ்க்கலாம் என்ற யோசனையில் ஆழ்ந்து விடுவார். ஆனால், மகான்கள் பிறர் நன்மைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தனர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.குருவின் கட்டளையை ஏற்று தேரையரும் கிளம்பி விட்டார். அகத்தியர் இருந்த இடத்தை விட்டு வெகு தொலைவிலுள்ள காட்டுக்குச் சென்றார். அங்கு பல முனிவர்களுக்கு வைத்தியம் செய்து அவர்களின் பிணி நீக்கினார். இந்நிலையில், பாண்டியநாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தங்களுக்கு தங்கம் கிடைத்தால், அதை வேற்று நாட்டவரிடம் விற்று, உணவுப் பொருள் வாங்கிக் கொள்வதாக மக்கள் தேரையரைச் சந்தித்துக் கூறினார்.

தேரையரும் தங்கம் தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது அவர் அமைத்த பட்டறைகளில் இருந்து எழுந்த புகை, அப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களுக்கு இடைஞ்சலைக் கொடுத்தது. அவர்களில் சிலர், அகத்தியரிடம் வந்து, உங்கள் சீடன் செய்த காரியத்தால், எங்கள் தியானம் கலைந்தது என புகார் செய்தனர். அகத்தியருக்கு கடும் கோபம். தேரையரை வரவழைத்தார். அவரிடம் பேசக்கூட இல்லை. இரண்டாக அவரைக் கிழித்தார். தேரையரின் உயிர் பறந்து விட்டது. தேரையர் தன் சீடர்களுக்கு முன்கூட்டியே, இப்படி ஒரு நிலை வந்தால், உடலை ஒட்ட வைத்து மீண்டும் உயிரூட்டும் கலையைச் சொல்லிக் கொடுத்திருந்தார். அதைப் பயன்படுத்தி தேரையரை உயிர் பெறச் செய்து விட்டனர் சீடர்கள். அதன்பின் அகத்தியருக்கு பயந்து தலைமறைவாக இருந்தார் தேரையர். 

அகத்தியருக்கு நாளுக்கு நாள் கண்பார்வை மங்கியது. சீடர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். அப்போது அணனமயம் காட்டில் இருக்கும் சித்தர் பற்றி நினைவு வரவே அவரை அழைத்து வந்து அகத்தியர் கண்ணுக்கு வைத்தியம் செய்ய எண்ணி அகத்தியரிடம் உத்தரவு வேண்டினர். அகத்தியர் கொஞ்சம் யோசித்து “நீங்கள் போகும் போது புளியமரத்தின் நிழலிலேயே உறங்க வேண்டும்” என்று கட்டளையிட்டு அனுப்பினார்.      வெகுநாட்கள் நடந்த சீடர்கள் தேரையரின் இருப்பிடத்தினை அடைந்தனர். தன் குரு நாதருக்கு கண் பார்வையைத் தெளிவாக்க வேண்டுமாறு கோரினர். இதைக் கூறி முடித்த சீடர்கள் இரத்தவாந்தி எடுத்தனர். அந்த நிலைக்கான காரணத்தை அறிந்திருந்த தேரையர், சீடர்களிடம் திரும்பிச் செல்லும் போது வேப்பமரத்தின் நிழலிலேயே உறங்கிச் செல்லுமாறும் தாம் இரண்டு நாட்களில் வைத்தியத்திற்கு வருவதாகவும் கூறியனுப்பினார். திரும்ப வந்த சீடர்கள் உடல் நலனுடன் இருப்பதைக் கண்ட அகத்தியர் “இது தேரையரின் வைத்தியம் தான்” என்பதை புரிந்து கொண்டார். தேரையர் அகத்தியரின் ஆசிரமம் அடைந்து அகத்தியரின் கண்களைப் பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து குணமாக்கினார். பார்வை தெளிவடைந்த அகத்தியர், சடாமுடியும் தாடியுமாக இருந்த தேரையரைப் பார்த்து தேரையா உன்னை எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா! உன்னை இங்கு வரவழைக்கவே இந்த தந்திரம் செய்தேன் என்றார். தேரையர் மனம் நெகிழ்ந்து அகத்தியரின் கால்களில் விழுந்து வணங்கினார். 

சீடனின் திறமையையும், சமயோசிதத்தையும் கேள்விப் பட்டு மகிழ்ந்தார்.  தன் சீடனை அப்படியே அணைத்துக் கொண்டார் அகத்தியர். தேரையா! நீ முன்னிலும் தேறி விட்டாய். உன்னை நான் கொன்றும் கூட, புத்திசாலித் தனத்தால் உயிர் பெற்றாய். என்னை பழி வாங்க எண்ணாமல், தக்க வைத்தியம் செய்தாய். உயிர் போகும் அளவிலான துன்பம் செய்தவர்களுக்கும் கூட நன்மை செய்பவனே உலகில் உயர்ந்தவன். அத்தகைய நற்குணத்தை நீ பெற்றுள்ளாய். ‘‘நீ சித்தனுக்கு சித்தன். முனிவனுக்கு முனிவன்’’ என்று வாழ்த்தினார். மொத்தத்தில், தேரையர் வாழ்வு நுட்பம், விடாமுயற்சி, பணிவு, இறையச்சம் ஆகிய அனைத்துக்குமே ஒரு சான்று போல அமைந்துவிட்டது. சில வரலாற்று பிறழ்வு காரணத்தால் அகத்தியரின் சீடர் என்பதை சிலர் போகரின் சீடரே தேரையர் என்பர்.

 ஒருநாள் அகத்தியர் தேரையரை அழைத்து “தேரையா, எனக்கு கண்வெடிச்சான் மூலிகை வேண்டும்” என்றார். கண்வெடிச்சான் மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறித்தவன் கண்கள் பறிபோய்விடும், யாரும் தப்ப முடியாது. ஆனால் தேரையர் தயங்காமல் இதோ கொண்டுவருகிறேன் என்று காட்டுக்குள் சென்றார். மூலிகையைக் கண்டார். ஆனால் அதனைப் பறிக்காமல் அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தேவியை தியானம் செய்தார். “கவலைப்படாதே தேரையா! மூலிகையை நான் பறித்துத் தருகிறேன்” என்ற குரல் கேட்டு விழித்த தேரையரின் முன் கண்வெடிச்சான் மூலிகை இருந்தது. 

தேவிக்கு நன்றி கூறிவிட்டு, அகத்தியரிடம் மூலிகையைக் கொடுத்தார். அகத்தியர் மிகவும் மகிழ்ந்து, “நான் வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறிவிட்டாய். நீ அறிந்த மூலிகைகளைப் பற்றி ஒரு நூல் எழுது” என்றார். குருவின் கட்டளைப்படி அவரின் ஆசிகளுடன் ‘தேரையர் குலைபாடம்’ என்ற நூலை இயற்றினார். நெடுங்காலம் மருத்துவ சேவை செய்த தேரையர் பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாள நாடு) தவம் செய்து அங்கேயே ஜீவ சமாதியடைந்தார்

மேலும் அகத்தியர் நீ கண்டுபிடித்த மருத்துவக்குறிப்புகள் வீண் போகக்கூடாது. அவற்றை ஒரு நூலாக எழுதி வை. எதிர்கால வைத்தியர்கள் உன்னை தலைதலைமுறையாக வாழ்த்துவர், என்றார்.

தேரையரும், 21 நூல்களை எழுதினார். பலகாலம் வாழ்ந்த அவர், முன்பு கேரளத்தில் இருந்ததும், தற்போது தமிழகத்தில் தென்காசி அருகில் உள்ளதுமான தோரணமலையில் சமாதியானதாக ஒரு குறிப்பு கூறுகிறது. 

மணி வெண்பா மருந்துப் பாதம் ஞான போதம் பதார்த்த குண சிந்தாமணி நீர்க்குறிநூல் மாணிக்க கற்பம் நோய்க்குறி நூல் தைல வர்க்க சுருக்கம் வைத்திய மகா வெண்பா ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது. 

நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள். காடு,  மலைகளில்  வாழ்ந்த  சித்தர்கள்  நூற்றாண்டுகளை  கடந்தும்   வாழ்தார்கள்.  நோய்கள் அவர்கள்   அருகே  வர   அஞ்சியது.  தங்கள்  ஆயுள்  ரகசியத்தை அவர்கள்  சொல்லி  இருந்தாலும்,  நாம்  தான்  அதன்படி  வாழ மறுக்கிறோம்.18  சித்தர்களில்  ஒருவரான  தேரையார்  எப்படி  வாழ  வேண்டும்  என்பதை  ஒரு  பட்டியலே  இடுகிறார். மனிதன்  எதை  மட்டும்  செய்ய  வேண்டும்  என்பதற்கு   அவர்  இப்படி  சொல்கிறார் :  

  • பால்  உணவு  உட்கொள்ளுங்கள். 

  • எண்ணெய்   தேய்த்து  குளிக்கும்போது   வெந்நீரில்   குளியுங்கள். 

  • படுக்கும்போது   எப்போதும்  இடது  கைப்புறமாகவே   ஒருக்களித்து  படுங்கள். 

  • புளித்த  தயிர்  உணவை   விருப்பி   உட்கொள்ளுங்கள். 

  • பசிக்கும்போது   மட்டுமே  உணவை  உட்கொள்ளுங்கள். 

  • ஒரு  நாளைக்கு  இரண்டு  முறை  மட்டுமே  உணவு  உட்கொள்ள     வேண்டும்.  

  • இரவில்  நன்றாக  தூங்குங்கள். 

  • பெண்ணுடன்   மாதம்  ஒருமுறை  மட்டுமே  உறவு  வைத்துக்கொள்ள  வேண்டும். 

  • வாழைக்காயை   உணவுக்கு  பயன்படுத்தும்போது   பிஞ்சிக்  காய்களை        மட்டுமே   பயன்படுத்த  வேண்டும் .  

  • முற்றிய  காய்களை  கறி  சமைத்து        உண்ணக்கூடாது. 

  • உணவு   உட்கொண்ட  உடனேயே  சிறிது  தூரம்   நடக்கும்   பயிற்சியை   செய்ய    வேண்டும். 

  • 6   மாதத்திற்கு  ஒருமுறை   வாந்தி  மருந்து  உட்கொள்ள  வேண்டும். 

  • 4   மாதங்களுக்கு  ஒருமுறை   பேதி  மருந்து  சாப்பிடுங்கள். 

  • 1 1/2  மாதத்திற்கு  ஒருமுறை   மூக்கிற்கு  மருந்திட்டு  சளி  போன்ற  நோய்கள்   வராமல்  பார்த்துக்  கொள்ளுங்கள். 

  • வாரம்  ஒருமுறை  முகச்சவரம்  செய்துகொள்ள   வேண்டும். ( இது  ஆண்களுக்கு  மட்டும்  ) 

  • 4  நாட்களுக்கு  ஒருமுறை   எண்ணெய்  தேய்த்து  குளிக்க  வேண்டும். 

  • 3  நாட்களுக்கு   ஒருமுறை   கண்ணுக்கு  மை  இட  வேண்டும். (பெண்களுக்கு மட்டும்) 

  • விரும்பிய  தெய்வங்கள்,  குருவை  வணங்குங்கள். 

  • இவற்றை   எல்லாம்  ஒருவர்  தனது  வாழ்நாளில்  பின்பற்றி  வந்தால்  எமன்  அவரை   நெருங்கி  வரவே  பயப்படுவான்   

என்கிறார்  தேரையார். 

எவற்றை  எல்லாம்  செய்யக்கூடாது  என்பதற்கு   தேரையாரின்   அறிவுரை 

  • பகலில்  உடலுறவு  கொள்வதையும்,  தூங்குவதையும்  தவிர்த்து  விடுங்கள். 

  • கரும்பு  போன்ற  இனிப்பவர்களாக  இருந்தாலும்  வயதில்  மூத்த பெண்களுடனும்  இனிய  வாசம்  தரும்  தலைமுடியைக்  கொண்ட  விலைமாதர்களுடன்  உடலுறவு  கொள்ளாதீர்கள். 

  • காலை  இளம்  வெயிலில்  அலையாதீகள். 

  • மலம்,  சிறுநீர்  போன்றவற்றை  அடக்கி  வைத்திருக்காதீர்கள். 

  • முதல்  நாள்  சமைத்த  கறி  உணவு,  அமுதம்  போன்று  இருந்தாலும்  அதை  மறுநாள்   உண்ணவேண்டாம். 

  • உலகமே  பரிசாக  கிடைக்கிறது  என்ற  போதும்,  பசிக்காத  போது  உணவு  உட்கொள்ளாதீர்கள். 

  • உணவு  உட்கொள்ளும்போது  தாகம்  அதிகம்  எடுத்தாலும்,  இடைஇடையே  தண்ணீர்   குடிக்கக்கூடாது. 

  • மயக்கும்   மனம்   வீசும்  கந்தம்,  மலர்கள்  போன்றவற்றை   நள்ளிரவு    நேரத்தில்    நுகரக்கூடாது  . 

  • மாத  விலக்கான  பெண்கள்,     ஆடு, கழுதை  போன்றவை   வரும்  பாதையில்  எழும்   புழுதி  உடல்மேல்   படும்படி  நெருங்கி   நடந்து  செல்லாதீர்கள். 

  • இரவில்,  விளக்கு  வெளிச்சத்தில்   நிற்பவர்   நிழலிலும்,  மர  நிழலிலும்  நிற்பதை  தவிர்த்திடுங்கள். 

  • பசியின்  போது   உணவு   உட்கொண்ட  உடனேயும்   உடலுறவு   வைத்துக்கொள்ளாதீர்கள். 

  • மாலை  நேரத்தில்  தூங்குதல்,  உணவு  உட்கொள்ளுதல்,  அளவுக்கு  மீறிய   காமச்  செயல்களில்  ஈடுபடுதல்,  அழுக்கான  ஆடை   அணிந்திருத்தல்,  தலையை  வாரி  முடி   உதிரச்செய்தல்   போன்ற  செயல்களில்  ஈடுபடாதீர்கள். 

  • மற்றவர்கள்  கை  உதறும்போது  அவர்களது   நகத்திலிருந்து  விழும்  தண்ணீரும்,  குளித்து  தலை  துவட்டும்  போது  உதிரும்  தண்ணீரும்   மேலே  தெரித்து விழும்  இடத்தில்  நடக்காதீர்கள். 


தேரையர் மூல மந்திரம்... "ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"

Similar Posts : கருவூரார், கோரக்கர், நந்தி தேவர், திண்டுக்கல் ஓதி சுவாமிங்கள், அகத்தியர்,

See Also:தேரையர் சித்தர்கள்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
சரஸ்வதி வழிபாடு
2019-10-06 00:00:00
fantastic cms
சனி பகவான்
2016-10-06 00:00:00
fantastic cms
சாங்கு சித்த சிவலிங்க நாயனார்
2019-10-06 00:00:00
fantastic cms
திருமூலரின் ஜீவசமாதி
2019-10-06 00:00:00
fantastic cms
சாமிக்கு படைத்தல் ஏன்
2019-10-06 00:00:00
fantastic cms
சிதம்பரம் கோவில்
2019-10-06 00:00:00
fantastic cms
சித்தர்கள்
2016-10-06 00:00:00
fantastic cms
சிவபெருமான் வழிபாடு
2019-10-06 00:00:00
fantastic cms
சிவராத்திரி
2019-10-06 00:00:00
fantastic cms
சிவலிங்க வழிபாடு
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • Agni
  • Ascendant
  • Astrology
  • Astrology originate
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • astronomy
  • bangle
  • Basics
  • best astrology softw
  • Bodhidharma in Nanjing
  • brahma-muhartham
  • Cancer
  • Chandiran
  • Chhajju Bania
  • Chhajju Bania's NDE
  • Chick
  • medicine
  • Mercury
  • NDE
  • software
  • Tamil astrology software
  • குங்குமம்
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com