ஒரு தசை நடைபெறும்போது அந்த தசை எவ்வாறான பலனை தடங்கல் இல்லாமல் செய்யும் என்பதை அந்த தசைநாதன் நின்ற வீடு, சேர்க்கை, சாரம், பார்வை பெற்றவர்களின் நிலையை கணித்தே முடிவு செய்வோம், இதை தவிர இன்னொரு துல்லிய முறையும் இருக்கிறது, அது அந்த தசை நாதனுக்கு போதகன், வேதகன், காரகன், பாசககார்களின் நிலையை ஜனன ஜாதகதில் கணித்தால், அந்த தசை ஜாதகருக்கு எவ்வாறான பலனை தரும் என்பதை துல்லியமாக கணிக்கலாம், ராகு/கேதுவுக்கு இந்த அமைப்பு கிடையாது, அவை எவை என்பதை மேற்கொண்டு பார்ப்போம்..
போதகன்: ஒரு கிரகம் தரும் பலனை சீக்கிரம் வழங்க சொல்லி கூறும் கிரகம்..
வேதகன்: ஒரு கிரகம் தரவேண்டிய பலனை சரியாக வழங்கவிடாமல் தடை, தாமதம் என்று உருவாக்கி சீர்குலைப்பார்..
பாசகன்: அளிக்க வேண்டிய பலனை மிகுதியாக தருமாறு செய்யும்..
காரகன்: தசாநாதனுக்கு வேண்டிய உதவிகளை செய்து தசாநாதனை நல்ல முறையில் தசாவை நடத்த உதவும் கிரகம்..
ஒரு தசை மந்ததன்மை இல்லாமல் செயல்பட வேண்டும் என்றால் அந்த தசாநாதனுக்கு உரிய போதகன், பாசகன், காரகன், நல்ல நிலையில் இருத்தல் அவசியம், அதே வேளையில் வேதகன் வலு குறைந்து மறைவில் நிர்ப்பது நன்மையாகும் வேதகன் வலுபெற கூடாது, யோக தசையாகி வேதகன் வலுத்தால் யோக பலன் குறையும், பாபர் தசை எனில் தீமைகள் கட்டுக்குள் அடங்கிவிடும்..
கிரகங்களும் அதன் வேதக, போதக, பாசக, காரகன்..
சூரியன்: பாசகன்: சனி, வேதகன்: சுக்கிரன், காரகன்: குரு, போதகன்: செவ்வாய்..
சந்திரன்: பாசகன்: சுக்கிரன், வேதகன்: சூரியன், காரகன்: சனி, போதகன்: செவ்வாய்..
செவ்வாய்: பாசகன்: சூரியன், வேதகன்: புதன், காரகன்: சனி, போதகன்: சந்திரன்..
புதன்: பாசகன்: சந்திரன், வேதகன்: செவ்வாய், காரகன்: சுக்கிரன், போதகன்: குரு..
குரு: பாசகன்: சனி, வேதகன்: சூரியன், காரகன்: சந்திரன், போதகன்: செவ்வாய்..
சுக்கிரன்: பாசகன்: புதன், வேதகன்: சனி, காரகன்: சூரியன், போதகன்: குரு..
சனி: பாசகன்: சுக்கிரன், வேதகன்: செவ்வாய், காரகன்: குரு, போதகன்: சந்திரன்
குறிப்பு: இதே பலனை புக்திக்கும் கணிக்கலாம், புக்திக்கும் இதே காரகங்கள் தான், இந்த குறிப்பு ஜாதக அலங்காரம் எனும் மூல நூலில் காணபடுகிறது..
Source
Karthik subramanyam
" Similar Posts : தசையும் போதக, வேதக, பாசக, காரக காரர்களும், விம்ஷோத்தரி தசை, See Also:தசை