ஜாதகர் தலைநகர் தில்லியின் தற்போதைய முதல்வர்.
இவரின் ஜாதக சிறப்புக்களை தற்போது அலசுவோம்....
- லக்னாதிபதி சுக்கிரன் நான்கில் திக்பலமும் சுய சாரமும் பெற்று வர்கோத்தமம் அடைந்து சிம்மத்தில் அமர்ந்துள்ளது. லக்னாதிபதி அடைந்த வலிமையை இது காட்டுகின்றது.
- லக்கினத்தில் தைரிய ஸ்தான அதிபதி சந்திரன் உச்சம் பெற்று அமர்ந்துள்ளது. தைரிய ஸ்தானத்தில தைரியத்திற்க்குரிய செவ்வாய் அமர்ந்துள்ளது. இதுவும் லக்னம் மிக அதிக வலு அடைந்துள்ளது என காட்டுவதோடு அல்லாமல் ஜாதகர் மிகவும் தைரியசாலி என்பதையும் எதிரிகளை துணிவோடு எதிர்த்து வெற்றிகொள்ளும் மனதிடம் உள்ளவர் என்பதையும் காட்டுகின்றது. இத்தகைய அமைப்பு ஸ்ரீகிருஷ்ணரின் ஜாதகத்திலும் உள்ளது எனலாம்.
- இரண்டாம் வீட்டு புதன் நண்பர் வீட்டில் நண்பரான சூரியனுடன் சேர்ந்து வலிமையான லக்கினாதிபதி சுக்கிரனுடனும் குருவுடனும் இணைந்து அமர்ந்துள்ளார்.
- சர்வாஷ்டக வர்கத்தில் இரண்டாம் வீடு 39 பரல்கள் வாங்கி பலமாக உள்ளது ஜாதகரின் குடும்பமும் வாக்கும் தனமும் சமயோசித புத்தியும் அடைந்துள்ள வலிமையை காட்டுவதாக உள்ளது. ஜாதகர் புதாத்ய யோகம் பெற்று IIT படிப்பு பின்பு IRS தேர்ச்சி என பெரிய படிப்புகள் படித்தவராவார்.
- சுகஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சூரியன்,நட்பு வீட்டில் அமர்ந்த புதன்,வர்கோத்தமும் திக் பலமும் பெற்ற சுக்கிரன்,சந்திரனுக்கு நான்கில் அமர்ந்து கெஜகேசரி யோகம் பெற்று வலிவாக அமர்ந்துள்ள குரு என நான்கு கிரக பட்டாளம் நான்கில் அமர்ந்து ஜாதகரின் சுகத்தினை உறுதி செய்கின்றது காண்க.
- ஐந்தாம் வீடு கன்னி வீடு ஆகி காலபுருச தத்துவப்படி ஆறாம் வீடாவதால் இங்கு அமர்ந்த கேது ஜாதகர் ஆரோக்கியம்,தூய்மை ஆகியவற்றுக்கு முக்கியத்தும் அளிப்பவர் என காட்டுகின்றது. இங்கு தூய்மை எனப்படுவது அகம் மற்றும் புறத் தூய்மையும் ஆகும்.
- சர்வாஷ்டகத்தில் இவ்வீடு 20க் குறைவாக பரல் வாங்கியுள்ளது. இவ்வீட்டின் அதிபதி புதன் கேது சாரம் வாங்கியுள்ளதும் இந்த புதனே வாக்கு ஸ்தானத்திற்க்கும் அதிபதி ஆவதால் சில நேரங்களில் சர்ரென பாம்பு கொத்துவது போல சில வார்த்தைகளை பேசி மாட்டிக்கொள்ளுவார். திரு.நிதின் கட்கரி ஊழல் பேர் வழி என இவர் சொல்லிய உடனே திரு.கட்கரி கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு போட்டுவிட திரு.கெஜ்ரிவால் கோர்ட்டுக்கு சென்று கட்கரியிடம் தான் தவறாக பேசியதாக மண்ணிப்பு வேண்டியது இங்கே நினைவு கூற வேண்டி உள்ளது. ஆக தூய்மை குறையும்போதும் வார்த்தைகள் யோசிக்காமல் பேசும்போதும் இவருக்கு இவரேதான் ஆப்பு வைத்துக் கொண்டு துன்பமுற வேண்டி இருக்கும் என்பதும் வேறு யாரும் இவருக்கு ஆப்பு வைக்க முடியாது என்பது தெளிவாகின்றது.
- வலிமையான லக்னாதிபதி சுக்கிரனே ஆறாம் வீட்டுக்கும் அதிபதியாவதாலும் இவருக்கு பகைவர்கள் பஞ்சமில்லை என்பது உண்மையே எனலாம். ஆனாலும் இவரே இறுதியில் வெற்றி பெறுவார் எனலாம்.
- களத்திர ஸ்தான செவ்வாய் ராசியில் நீசமுற்றாலும் அம்சத்தில் ஆட்சியில் இருப்பதாலும் களத்திரகாரகன் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதாலும் நல்ல மணைவி இவருக்கு அமைந்தது எனலாம்.
- அட்டம ஸ்தானத்தையும் விரய ஸ்தானத்தையும் வலிவான குரு பார்ப்பதாலும் ஆயுளுக்கு பங்கமும் மற்றும் தேவையில்லா விரயமும் இவருக்கு இல்லை எனலாம்.
- பாக்கியத்திற்க்கும் தொழில் ஸ்தானத்திற்க்கும் அதிபதியான சனி இவருக்கு யோக காரகனாகி ராசியில் நீசமானாலும் சோடச வர்கங்களில் மொத்தமுள்ள 16 வர்கங்களில் சனி எட்டு வர்கங்களில் அதாவது ராசி,திரேக்காணம்,சதுர்தாம்சம்,சப்தாம்சம்,நவாம்சம்,
- தசாம்சம்,துவாதசாம்சம்,திரிம்சாம்சம் முதலிய வர்கங்களில் மேசத்தில் அமர்ந்து சந்தினவனாம்சம் என்ற சிறப்பான அம்சம் பெறுகின்றது. இங்கு சந்தினவனாம்சம் என்பது நறுமணமுள்ள சந்தன தோட்டம் என்பதாகும்.ஆக யோக காரக சனி இத்தகைய அம்சம் பெற்றதின் மூலம் இவரின் பாக்கியமும் தொழிலும் மிக மேண்மை பெறுகின்றது என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.
- இங்கிலாந்து விக்டோரியா ராணியின் ஜாதகத்தில் லாபத்தில் அமர்ந்த ராகு விக்டோரியா ராணி தம் இராஜ்ஜியத்தை விரிவாக்கியது போல திரு.கெஜரிவால் ஜாதகத்தில் லாபத்தில் அமர்ந்த ராகுவும் தில்லியை தாண்டி தன் கொடியினை பறக்க உதவிடும் எனலாம்.
- இறுதியாக பொதுவாக அரசியலில் புகழ் பெற சூரிய கிரக பலம் மிகவும் அவசியம். திரு.கெஜரிவால் ஜாதகத்தில் சூரிய கிரகம் சோடச வர்கங்களில் 10 வர்கங்களான ராசி,ஹோரா,திரேக்காணம்,சதுர்தாம்சம்,சப்தாம்சம், தசாம்சம்,துவாதசாம்சம்,சோடசாம்சம்,சதுர்விம்சாம்சம், சஷ்டியாம்சம் ஆகியவற்றில் சிம்மத்தில் அமர்ந்து உச்சாய்சிரவாம்சம் என்ற அரிய அம்சத்தினை பெறுகின்றார். இதன் பொருள் பறக்கும் தேவலோக குதிரை எனப்படும். இத்தகைய சிறந்த அம்ச நிலையை இதுவரை நான் எவர் ஜாதகத்திலும் கண்டதில்லை. இந்த விசேஷ சூரிய பலம் இவர் பெற்றதே இவர் தில்லியில் ஆட்சியை பிடித்து திரு.மோடி அவர்களின் கண்களில் விரல் விட்டு ஆட்டக்கூடிய வலிவினை தந்தது என்பது சந்தேகமே இல்லை எனலாம்.
இதுவரையில் இந்தியாவை ஆண்ட கட்சியே தில்லியை ஆண்டு வந்தது. அதை முறியடித்தவர் திரு.கெஜரிவால் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
Similar Posts :
வீரப்பன் பிறப்பு ஜாதகம் - ஓர் அலசல்,
நடிகை மனீஷா கொய்ராலா ஜாதகம் அலசல்,
அணுகுண்டின் தந்தை ஓப்பன் ஹைமரின் ஜாதக அலசல்,
மொராஜி தேசாய் ஜாதகம்-ஓர் அலசல்,
ஸ்ரீஅரவிந் கெஜ்ரிவால், See Also:
கெஜ்ரிவால் ஆராய்ச்சி