பரிவர்த்தனை யோகம்
ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு பவத்தின் அதிபதி மற்றொரு பாருவத்திலும், மற்றொரு பாவத்தின் அதிபதி இந்த பாவத்திலும் மாறி அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்குப் பரிவர்த்தனை யோகம் ஏற்படும்.
உதாரணமாக லக்னாதிபதி ஒன்பதில் அமர்ந்திருக்க ஒன்பதாம் அதிபதி லக்னத்தி அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்குப் பரிவர்த்தனை யோகம் ஏற்படுகின்றது. இது போலவே மற்றவற்றிற்கும் பார்க்க வேண்டும்.
"கூசாது கோணாதி கேந்திராதி
குறிப்பான பரிவர்த்தனையாய் இருக்க
தேசாதிபத்தியமும் வருவதோடு
திரளான தானியங்கள் கூடும் பாரு "
1-5-9-ஆம் அதிபதிகளும் 4-7-10-ஆம் அதிபதிகளும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகர் உலகை ஆள்வார்கள். அதிகம் செல்வம் பெறுவார்கள்.
"உள்ளசன் மாதிலாபத்திலுற வேயந்லாபாதி
தள்ளுஞ்சன்மந்தனிலிருக்கத் தனத்தானதான்
பத்திலுறக்
கொள்ளும்பத் தோனிரண்டுறவே கொண்டு
சென்மந்திரமாக
வள்ந்திரயோகமென வழுத்தும் பலன்களினி
துரைப்பாம்"
லக்கினாதிபதி 11-ல், 11 ஆம் அதிபதி லக்கினத்தில்,
2-ஆம் அதிபதி 10-ல், 10-ஆம் அதிபதி 2-ல் இருக்க லக்கினம் ஸ்திர லக்கினமாக இருந்தால் ஜாதகர் இந்திரயோகத்தை அனுபவிப்பார்கள்.சுகபோக வாழ்வு அமையும்.
இந்த பரிவர்த்தனை யோகம்
1- சுப பரிவர்த்தனை யோகம்
2- அசுப பரிவர்த்தனை யோகம்
3- சம பரிவர்த்தனை யோகம்
கிரகங்கள் ஒன்றுக்கொன்று1,5,9ஆக பரிவர்த்தனை பெற்றால் தங்களது திசாபுத்தியில் யோக பலனைத்தருவார்கள். இந்த பாவகங்களுக்கிடையே பாவாதிபதிகள் மாறி அமரும் போது சுப பலன்களை அனுபவிப்பர்கள்.
கடக குரு, மீனச்சந்திரன் பரிவர்த்தனை ராஜயோகத்தை தரும். மொத்தத்தில் 1,5,9 ஆக அமையும்.பரிவர்த்தனையில் ஆதிபத்யகாரக பலன் விருத்தியடையும்.கிரகங்கள் 1,4,7,10 ஆக பரிவர்த்தனை பொற்றால் தங்களது திசா புத்தியில் யோகபலன் கிட்டும்.ஆனால் கடக குரு, தனுசு சந்திரன் யோகத்தை தராது.தீய பலன்களைத்தரும்.சூரியன், சனி பரிவர்த்தனை நன்மையே தராது.
பல தீபிகையில் தைன்ய, கல மாகயோகங்கள் என பரிவர்த்தனை யோககங்களை, விளக்கியுள்ளர்கள்
தைன்ய யோகம் 30,கலயோகம் 8,மகாயோகம் 28 மொத்தம் 66 ஆகும்.
"தானென்ற கோள்களது மாறி நிற்க்க
தரணிதனில் பேர் விளங்குத் தனமுள்ளோன்"
கிரகங்கள் இடம் மாறிப் பரிவர்த்தனையாக நிறக் அந்த ஜாதகருக்கு இப்பூமியில் பேரும் புகழும் பொருளும் கிடைக்கும்.
"பார்க்கவன் நிதி வீடேகப்பகர் குரு மாறி நின்றால்
தீர்க்காய் லாப யோகம் செல்வமும் ஆகமாகும்
மூர்க்கமாயிருப்பன் யார்க்கும் முடிவு நளதொலையு
மட்டும் "
சுக்கிரன் 2-ல் இருக்க குருவுடன் பரிவர்த்தனையாகி குரு வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் குருவும். இருந்தால் செல்வம் பெருகும் ஆயுள் முடியும் வரை வீரனாய் இருப்பான்.
"மதியுமே கரிவீடேக மந்தனும் மாறி நின்றால்
பதிதனயோகம் பாக்கியமதிகமாகும்
துதிபெற அரசர போகன் சொல்மொழி
பெலமிலாதான் மதிகரிதிசையில் போகம்
வரவுயர்ந்த வாழ்வே "
சனி, சந்திரன் வீட்டிலும், சந்திரன், சனி வீட்டிலும் இருந்தால் பாக்கியம் பெருகும், சந்திரன் திசையில் சனி திசையில் மேலும் மேலும் உயர்வு தருவார்கள்.
குறிப்பு : சந்திரன், சனி, கும்பமாக அமைந்தால் யோகம் தருவதில்லை. (6-8 ஆக இருப்பதால்)
2 - 12 ஆக அமையும் பரிவர்த்தனைகள்
1-2, 2-3,3-4,4-5,5-6,6-7,7-8,8-9,9-10,10-11,11-12,1-12 என்ற இந்த12 நிலையில் இந்த பாவாதிபதிகளுக்கிடையே ஏற்படும். பரிவர்த்தனை பாவாத்பாவ அடிப்படையில்
2-12 ஆக அமையும்.லக்கினாதிபதி 2-ல் நின்றால், 2ம்
அதிபதி 2 க்கு 12 ஆம் இடமான லக்னத்தில் நிற்பார். இதில் லக்னம் வகை காரகம். பலம் பெறும். 2 ஆம் இடகாரகம் பலம் குறையும்.
துலா லக்னத்திற்கு 12-ல் சுக்கிரன் நீசம் நலம் தரும்
தனுசு லக்கினத்திற்கு 2-ல் குரு நீச்சம் நலம் தராது.
2-12 ஆக பரிவர்த்தனைகளில் பாவிகளின் தொடர்பு இருந்தால் கெடுபலன்கள் அதிகமாகும். பாவமும் பாவாதிபதிகளும் சுபத்தன்மை பெற்றால் தீயபலன் குறைந்து சுபபலன் கிடைக்கும்.
3-11 ஆக அமையும் பரிவர்த்தனைகள்
1-3,2-4,3-5,4-6,5-7,6-8,7-9,8-10,9-11,10-12,1-12,2-12 என்ற இந்த. 12 நிலையில் ஏற்படும். பரிவர்த்தனையானது பாவாத்பாவ அடிப்படையில் 3-11 ஆக அமையும் ஒன்றுக்கொன்று உபஜெய பாவங்கள். பாவாதிபதிகளுக்கிடையேயான பரிவர்த்தனைகளானதால் காரக வழி பலன்களில்
ஜாதகரின் சுயமுயற்சியே கூடுதலாய் இருக்கும். நண்பர்கள், சகோதரர் ஆதரவு கூடும். ஜாதகர் தனது பராக்கிரமத்தால் உயர்வடைவார்கள்.பொதுவாய் இந்த 3-11 ஆக அமையும் பரிவார்த்தனைகள் தீய பலன்களை தருவதில்லை.
காலபுருஷதத்துவப்படி விருச்சிக சனி, மகர செவ்வாய் .ரிசப சந்திரன், கடக சுக்கிரன். ரிசப குரு மீன சுக்கிரன் இந்த உச்சநிலை பரிவார்த்தனைகள் காரகபலன் சோபிக்கவே சேய்யும். அதேபோல்
துலா சூரியன், சிம்ம சுக்கிரன்.கும்ப செவ்வாய், மேஷச சனி இவ்வமைப்பில் நீச நிலையிலும் பாதகாதிபத்தியம் உள்ளதால் ஜாதகர் தீய பலன்கள் இவர்களின் தசா புத்திகளில் தருவர்கள்.
4-10 -ஆக அமையும் பரிவார்த்தனைகள்
1-4,2-5,3-6,4-7,5-8,6-9,7-10,8-11,9-10,10-1,11-2,12-3 இந்த நிலைகளில் ஏற்படும் பரிவார்த்தனைகள் பாவத் பாவ அடிப்படையில் 4-10 என்ற கேந்திர அமைப்பில் அமைகின்றது.
ஒற்றைப்படை, இரட்டைப்படை ராசிகளில் ஏற்படும் கிரகங்களின் பரிவர்த்தனை ஏற்படும் இதனால் சில கெடுபலன்கள் நிகழும். ராசிகளின் பார்வை பலம் இல்லாதாலும், கிரகங்களில் செவ்வாய், சனி 4-10 பார்வை உள்ளதாலும், உபயராசிகளிலும், சரராசிகளிலும், ஸ்திரராசிகளிலும் பாரிவர்த்தனை பெறும் கிரகங்கள் சுப அசுப பலனை கலந்து தருவார்கள்.
புதன், குரு பரிவர்த்தனை நலம் தருவதில்ல்லை.
1-5 ஆக அமையும் பரிவர்த்தனைகள்
1-5,2-6,3-7,4-8,5-9,6-10,7-11,8-12,9-1,10-2,11-3,12-4 இந்த நிலைகளில் ஏற்படும் பரிவர்த்தனைகள் பாவத் பாவ அடிப்படையில் 1-5 ஆக கோணநிலையில் அமையும்.ஒரு பாவத்துக்கு 5-9க்கு பாவங்கள் பாவதிதிகள், சுபத்துவமும் யோகாதிபத்யமும் நட்பு நிலையு பெற்று யோகமே செய்வார்கள். சாதரணமாக கிரகங்கள் ஒன்றுக்கொன்று 1-5-9 ஆக அமர்ந்தாலே தங்கள் தாசபுத்தியில் யோகபலனை கூட்டுவார்கள்.மேல் கூறிய இந்த பாவங்களுக்கிடையே பாவாதிகள் மாறி அமரும். காரகபலன் சோபிக்கவே செய்யும்.திசாபுத்தி யோகம் செய்யும். ஆனால் கடகச் செவ்வாயும், விருச்சிகச் சந்திரனும் இந்த அமைப்பால் இரு கிரங்களும் நீச பங்கம் ஏற்படாத பட்சத்தில் தீயபலன் கூடும்.சந்திர, செவ்வாய் தசா புத்தி அலை கழித்துவிடும்.
ஒற்றைபட பாவங்களின் பரிவர்த்தனைகள் அகச்சார்புடைய விஷயங்கள் சிறப்பை தரும்.
இரட்டைபட பாவங்களின் பரிவார்த்தனைகள் புறச்சார்புடைய விஷயங்கள் (பொருள் சார்ந்த) சிறப்பைத் தரும்.
6-8 ஆக அமையும் பரிவார்த்தனைகள்
1-6,2-7,3-8,4-9,5-10,6-11,7-12,8-1,9-2,10-3,11-4,12-5 ஆக அமையும் பரிவர்த்தனைகள் பாவாத்பாவ அடிப்படையில் 6-8 ஆக அமையும்.லக்னாதிபதி 6-ல் நின்றால் 6-ஆம் அதிபதி 6-க்கு 8-ஆம் இடமான லக்னத்தில் நிற்பார்.இவ்வாறு கெடுபலனையே செய்வார்கள். ஒற்றை, இரட்டை ராசிகளில் மாறி நிற்பதாலும் ஒரு கிரகத்திற்கு மற்றொரு கிரகம் மறைவு பெறுவதாலும் ஒரு கிரகத்திற்கு மற்றொரு கிரகம் மறைவு பெறுவதாலும் ஆதிபத்ய காரக வகையில் பிரச்சனைகளும், பலன்களை நடை பெற தடையும் தாமதமும் ஏற்படும். தீய பலனும் ஏற்படும்.
(1-6) நோய், வழக்கு, கடன் பிரச்சனைகள்,எதிரிகள் தொல்லைகள் ஏற்படும்.
(2-7) குடும்பத்திலும், கூட்டுத்தொழிலில் பிரச்சனை, கண் நோய் ஏற்படும்.
(3-8) ஆயுள் பயம்,பலவித கஷ்டம்,சகோதரர்கள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
(4-9) தாய்,தந்தை ஆதரவு கிட்டாமை,வீடு,கல்வி தடை நிலபிரச்சனை,பூர்வீகதனம் அடையத் தடை ஏற்படும்
(5-10) தொழில் லாபம் பெறத்தடை, தொழில் மாற்றம்
ராஜயோக பலன் ஏற்பட்டாலும் திடீர் நஷ்டம் இழப்பு, அவமானம் வரும்,குழந்தையின் நலம் கெடும்.
(6-11) எங்கும் எதிலும் பிரச்சனை, தடை தாமதம்.
(7-12) போக சுகம் பெறத்தடை,களத்திர விரோதம் கூட்டுத் தோழில் பிரிவு ஏற்படும்.
(1-8) ஆயுள் விருத்தி, கஷ்டப்படவைக்கும், போராட்டமாகவே வாழ்வு அமையும்,லட்சியவாதிகள்.
(2-9) பூர்வீகம், தனம், தந்தை, பணம் வகையில் பிரச்சனை, குடும்பத்தில் சச்சரவு,வழக்கு ஏற்படும்.
(3-10) பழிச்சொல், அவமானம், ஜாதகர் /ஜாதகியின் நடவடிக்கை விமர்ச்சிக்கப்படும்.தொழில் அடிக்கடி மாற்றம் வரும்.அசட்டு தைரியம், பிரச்சனைகளை வலிய வரவழைத்துக்கொள்வர்கள்.
(4-11) சுயலாபங்களை போக சுகங்களை,வீடு, வாகனம் அடையத்தடை ஏற்படும். சொத்துகளின் மீது கடன் ஏற்படும். சீரான பொருளாதாரம் இராது.
(5-12) பூர்வீக குறைகள், நிறைய இருக்கும், குழந்தைகளின் நலம் கெடும்.புத்தி மந்தம், இப்பாவதிபதிகளும் தம் பலத்தை இழந்து, சந்திரனும் பாதிக்கப்பட்டிருந்தால் மனநோய் வரும். காரகவகை பிரச்சனைகள் வலுக்கவே செய்யும்.
முக்கியமாக கடகம்,சிம்மம்,மகரம், கும்பம், அதிபதிகளில் பரிவர்த்தனை ஆதிபத்ய காரக பலனை வெகுவாக பாதிக்கவே செய்யும். மேஷசம்,விருச்சிகம் &ரிஷபம், துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு இப்பரிவர்த்தனை அமையாது.
(1-7) ஆக அமையும் பரிவர்த்தனைகள்
1-7,2-8,3-9,4-10,5-11,6-12,ஆக அமையும் பரிவர்த்தனை பாவத்பாவ அடிப்படையில் 1-7 குரு புதன்& சூரியன் சனி&சந்திரன் சனி&செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை ஆகிய கிரகங்களுக்கு இடையேதான் 1-7 ஆம் பரிவர்த்தனை நிகழும்.இங்கு பரிவர்த்தனையோடு பார்வையும் இணைகிறது. யோகம் ஏற்படும் என்றாலும் முரண்பட்ட இரு கிரங்களுக்கு இடையே இப்பரிவர்த்தனை நிகழ்வதால் ஆதிபத்ய பலனில் வளர்ச்சியும் கிரகங்களின் அடிப்படைகாரக பலனில் முரண்பாடும் நிகழவே செய்கிறது.
உதாரணமாக சுக்கிரன், செவ்வாய் பரிவர்த்தனை களத்திரவகை பிரச்சனைகள், சூரியன், சனி பரிவர்த்தனை தந்தை, மகன் பரிவர்த்தனை தந்தை மகன் பிரச்சினைகளும் ஏற்படுவதைக் அனுபவத்தில் காணலாம்.
சாரப்பரிவர்த்தனை
இரு கிரகங்கள் தங்களுக்குள் தங்கள் சுயசாரங்களை பரிமாறிக்கொள்வது சார பரிவர்த்தனை என்கிறோம்.சந்திரன் புனர்பூசம், குரு ரோகிணி நிற்பது சாரப்பரிவத்தனையாகும்.ஒரு கிரகம் தான் பெற்ற கிரகச் சாரத்தின் பலனையே செய்யும் என்பது விதி.எனவே இச்சாரப்பரிவர்தனை பெரும் யோகங்களையும் அல்லது வீழ்ச்சியையும் செய்யவல்லது.சார பரிவர்த்தனை பெரும், இருகிரகங்களின் நட்பு, பகை, ஆதிபத்யம், இருக்கும் ஸ்தானம் ஆகியவற்றை ஆராய்ந்து சார பரிவர்த்தனையின் பலம் காண்பது துல்லியமான பலனைத்தரும்.
சர ராசிகளில் பரிவர்த்தனைகள்
மேசத்தில் சந்திரன்,கடகத்தில் செவ்வாய் சுபபலன்
கடகத்தில் சுக்கிரன், துலாத்தில் சந்திரன் சுபபலன்
துலாத்தில் சனி, மகரத்தில் சுக்கிரன் சுபபலன்.
மகரத்தில் செவ்வாய், மேசத்தில் சனி சுபபலன்.
ஸ்திர ராசிகளில் பரிவர்தனைகள்
ரிசபத்தில் சூரியன், சிம்மத்தில் சுக்கிரன் முரன்பாடான பலன்கள்.
சிம்மச் செவ்வாய், விருச்சிகத்தில் சூரியன் சுபபலன்
விருச்சிகத்தில் சனி, கும்பத்தில் செவ்வாய் முரன்பாடான பலன்கள்.
கும்பத்தில் சுக்கிரன், ரிசபத்தில் சனி சுபபலன்.
உபய ராசிகளில் பரிவதனைகள்
குருவும், புதனும் பரிவர்த்தனை ராசிப்பார்வை பலத்துடன் ஒற்றை, இரட்டை ராசிகளில் நின்று பாதகாதிபத்ய, கேந்திராதிபத்ய, மாராகதிபத்திய தோஷத்தை தருவர்கள். தீய பலனே தருவார்கள்.
மிதுனம், கன்னி அதிபதி புதன், தனுசு, மீனம், அதிபதி குரு ஆகமொத்தம் 66 வகை பரிவர்தனையில் 1-5-ஆம் பரிவர்தனைகள் மட்டுமே அதிக சுப பலன்கலைத்தரும்.மற்ற அனைத்து பரிவர்தனைகள் கெடுபலன் கலந்தே நடக்கிறது.
6-8-ஆம் பரிவர்தனைகள் முற்றிலும் கெடுபலனையே விளைவிக்கும்.எந்த பரிவர்த்தனையாலும், பரிவர்த்தனை பெறும் பாவமும் கிரகங்களும் மற்ற பாவிகளால் சூலப்படாமல் வர்கங்களிலும் சுபபலம் உச்சநிலையில் இருந்தால் பலன்கள் சுபமாகவே நடக்கும்.
பல தீபிகையில் 6-வது அத்தியாயம் 28-ஆம் ஸ்லோகத்தில் பிரார்த்தனை யோகங்களைப்பற்றி பின் வருமாறு உள்ளது. லக்னம் முதல் பன்னிரண்டு பாவாதிபர்களும் ஒருவர் வீட்டில் மற்றோருவர் மாறி நிற்பதால் நிற்பதால் 66-வகை பரிவர்தனைகள் அமைகின்றன.இதனை தைன்ய, கல, மகாயோகங்களாக பிரித்துள்ளார்.
12 ஆம் அதிபதி 1,2,3,4,5,6,7,8,9,10,11,12 ஆம் அதிபதி
இருந்து மாற்ற ஸ்தானதிபதிகள்12-ல்,6-ஆம் அதிபதி 7,8,9,10,11,12,3,4, ல் இருப்பது =10.
8-ஆம் அதிபதி 9,10,11,12,3,4,5,6,7-ல் இருந்தால் அவ்வீட்டாதிபதிகள் 8-ல் இருப்பது =9.
ஆகா தைன்ய யோகங்கள் = 30
3-ஆம் அதிபதி 4,5,7,9,10,11,1,2 -ல் இந்த இடங்களிலிருந்து அவ்வீட்டாதிபர்கள் 3ல் இருப்பது.
கலயோகங்கள் -8, லக்கினாதிபதி 2,4,5,7,9,10,11-ல் இருந்து அவ்வீட்ட திபர்கள் லக்கினத்திலிருப்பது -7.
2-ஆம் அதிபதி 4,5,7,9,10,11-ல் இருந்து அவ்வீட்ட திபர்கள் 2-ல் இருப்பது -6.
4-ஆம் அதிபதி 5,7,9,10,11-ல் இருந்து அவ்வீட்ட திபர்கள் 4-ல் இருப்பது =5.
5-ஆம் அதிபதி 7,9,10,11-ல் இருந்து அவ்வீட்டதிபர்கள்
இருப்பது =4.
7-ஆம் அதிபதி 9,10,11-ல் இருந்து அவ்வீட்டதிபர்கள் 7-ல் இருப்பது =3.
9-ஆம் அதிபதி 10,11-ல் இருந்து அவ்வீட்டதிபர்கள்
9-ல் இருப்பது =2.
10-ஆம் அதிபதி 11-ல் இருந்து அவ்வீட்டதிபர் 10-ல் இருப்பது =1.
ஆகா மகாயோகங்கள் 28+8+30=66 ஆகும்.
தைன்ய யோகபலன் : ஜாதகர் /ஜாதகி மூர்க்ககுணம், பாவச்செயல், தீயவர்த்தை பேசுவார்கள், சஞ்சல புத்தியுள்ளவார்கள் எந்த காரியத்தையும் முழுமையாக செய்யமாட்டார்கள்.
கல யோகபன் :- ஜாதகர் /ஜாதகி எப்போதவது நன்மையும் சுகமும் அடைவார்கள்.சில நேரங்களில் நல்ல காரியங்கள் செய்வார்கள் .நன்மையும், தீமையும் கலந்த பலனை அனுபவிப்பர்கள்.
மகா யோகபலன் :- ஜாதகர் /ஜாதகி லட்சுமி கடாச்சமுள்ளவர்கள். உயர் அதிகாரிகள், சுக போகம், செல்வம், வாகனம், ஆபரணங்கள் அமையும்.
பராசரஹோரையில் பாவகாதிபதிகள் மாறிவேறு பாவங்களில் நிற்க்கும்போது எத்தகைய பலன்களைக் கொடுப்பார்கள் என்று சற்று விரிவான வகையில் 24-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.12 பாவகாதிபதிகள் மற்ற 12 பாவங்களில் மாறி நிற்பதால் 12×12=144விதங்களில்
ஏற்படும்.அவர்களின் நிலைக்கு ஏற்ப காரக பலன்கள் தருவார்கள். ஆனால் சந்திரன் சனி பரிவர்தனை நிலையில் எந்த வகையிலும் யோகம் தருவதில்லை. இவர்களது தசா புத்தி காலங்களில் இல்லற வாழ்வை பாதிக்கின்றது. சன்யாசத்திற்கு தள்ளப்படுகின்றார்கள்.
காலபுருஷ தத்துவப்படி பரிவர்த்தனை யோக பலனைப் பார்க்கலாம்.பூர்வ புண்ணி பலத்தால் பிறக்கும். ஜாதகர் /ஜாதகி மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம் போன்ற ராசிகளின் கிரகங்கள் பரிவர்த்தனை அடையும் போது முதல் தரமன யோகமும், இவ்ராசிகளோடு கடகம், மீனம், விருச்சிகம் போன்ற கிரகயோகத்தையும், இவ்ராசிகளோடு மிதுனம், துலாம், கும்பம் ராசியில் நின்ற கிரகங்கள் நின்ற பரிவர்த்தனை மூன்றாந்தர யோகத்தையும் ததரும்.இதில் மீனம், துலாம், கும்பராசிகளில் கிரக பரிவர்தனை யோகம் துஷ் கர்மாவை பெற்றவர்களுக்கு மிக மோசமான பலனையும், சத்கர்மாவை பெற்றவர்களுக்கு நல்ல பலன்களையும் தரும்.இதில் முன்சொன்ன முறைகளை நன்கு ஆராய்ந்து பலனை கூறவும்.
அனுபவத்தில் மேஷம், சிம்மம், தனுசு, ரிசபம், கன்னி, மகரம் போன்ற ராசிகளில் 1,4,5,7,9,10,11க்குரியவர்கள் பரிவர்தனைகள் பெறும் போது சிறப்பன பலனை அனுபவிப்பார்கள். 2,3,6,8,12 க்குரியவர் பரிவர்த்தனை பாதிப்பு தரும்.
கடகம், விருச்சிகம், மீனம், மிதுனம், துலாம், கும்பம் போன்ற ராசிகளில் 1,4,5,7,9,10,11 க்குரியவர்கள் பரிவர்த்தனை பெறும்போது யோக பலனை நிரந்தரமாக அனுபவிக்கமாட்டார்கள்.2,3,6,8,12 க்குரியவர் பரிவர்த்தனை பதிப்போடு, யோக பலன்களை தடை செய்யும் சிறப்பிக்காது.
மூலம்: வாட்ஸப்பில் பகிரப்பட்டது
Similar Posts : பரிவர்த்தனை யோகம், See Also:பரிவர்த்தனை யோகம்