நிறம் | சிவப்பு |
மனைவி | உஷா தேவி, சாயா தேவி |
கிரஹத் தன்மை | ஸ்திரக் கிரஹங்கள் |
பஞ்சபூத கிரஹங்கள் | தேயுக் கிரஹம் |
இரத்தினம் | மாணிக்கம் |
மலர் | செந்தாமரை |
குணம் | தாமஸம் (குரூரன்) |
தேவதை | அக்கினி (சிவன்) |
பிரித்யதி தேவதை | ருத்திரன் |
ஆசன வடிவம் | வட்டம் |
தேசம் | கலிங்கம் |
சமித்து | இருக்கு |
திக்கு | கிழக்கு |
சுவை | காரம் (கார்ப்பு) |
உலோகம் | தாமிரம் |
வாகனம் | ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் (தேர்), மயில் |
பிணி | பித்தம் |
தானியம் | கோதுமை |
நாடி | பித்த நாடி |
காரகன் | தந்தை - சரீரம் |
ஆட்சி | சிம்மம் |
நீசம் | துலாம் |
உச்சம் | மேஷம் |
மூலத்திரிகோணம் | சிம்மம் |
உறுப்பு | எலும்பு, மார்பு |
நட்சத்திரங்கள் | கார்த்திகை (கிருத்திகை), உத்திரம், உத்திராடம் |
பால் | ஆண் |
திசை காலம் | ஆறு ஆண்டுகள் |
கோசார காலம் | ஒரு மாதம் |
உபகிரகம் | காலன் |
நட்பு | சந்திரன், வியாழன், செவ்வாய் |
பகை | சுக்கிரன், சனி, ராகு, கேது |
சமம் | புதன் |
ஷேத்தரம் | திருவாடுதுறை |
வைணவ திவ்யதேசம் | திருவைகுண்டம் |
திருமால் அவதாரம் | இராமன் |
பலன்கள் | காரிய சித்தி |
தமிழ் மாதம் | சித்திரை, ஆவணி |
உணவு | வெல்லப் பொங்கல் |
பருவம் | ** |
கிழமை | ஞாயிறு |
தேதிகள் | 1, 10, 19, 28 |
ஸ்வரம் | க |
குறியீடு | |
ஜோதி | அரசர் |
அதிகாரம் | அரசர் |
பூதாதிபத்யம் | தீ |
காராகாதிபத்யம் | தந்தை |
பாஷைகள் | சமஸ்கிருதம் |
கோத்திரம் | காசியப கோத்திரம் |
ராகங்கள் | சங்கராபரணம் |
பிறப்பு
சூரியனின் பிறப்பு குறித்து இருவேறு கதைகளைப் புராணம் சொல்கிறது.
கதை ஒன்று :
மகாவிஷ்ணு தமது உந்திக்கமலத்தில் இருந்து பிரம்மாவைப் படைத்தார். திருமாலின் ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள்மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க "ஓம்" என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு. அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார் என்பது ஒரு கதை.
கதை இரண்டு :
சாம்ப புராணம் என்ற நூலிலோ சூரியனின் அவதாரப் பெருமையை வேறு மாதிரியாக விளக்குகிறது.
பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுபடுத்த 7 சப்தரிஷிகளை ( ஆங்கிரஸ், க்ரது, மரீசி , வசிஷ்டர், புலஹர், புலஸ்த்யர், அத்ரி) உண்டாக்கினார். இவர்களில் மரீசி என்பவர் முதல்வர். மரீஷி சம்பூதி என்பவளை மணந்தார். அவர்களுக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார்.
மகா பண்டிதரான கச்யபர் எல்லாச் சாஸ்திரங்களையும், வேதங்களையும் நன்கு ஆழ்ந்து கற்று, தேர்ச்சி பெற்று, ஞான பண்டிதராகத் திகழ்ந்தார். தட்சனின் பெண்களில் 13 பேரை இவர் மணந்தார். அவர்களில் மூத்த மனைவியான அதிதி கற்புச் செல்வி. கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை என்பதை உலகுக்கு உணர்த்திய உத்தமி. தர்மதேவதை , இவள் பெருமையை உலகுக்குக் காட்ட நினைத்தார். ஒரு நாடகம் ஆடினார். அதிதி கருவுற்றிருந்த நேரம். அந்த நிலையிலும் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதில் ஆர்வம் காட்டினாள். ஒரு நாள் அதிதி தன் கணவன் கச்யபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் வாசல் பக்கத்தில் இருந்து தாயே, பிச்சை போடு என்ற குரல் கேட்டது. தர்ம தேவதை மாறு வேடத்தில் வந்திருந்தான். குரல் கேட்டது என்றாலும், கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த காரணத்தால், அதிதியால் உடனே சென்று உபசரிக்க இயலவில்லை. கணவன் உணவு உண்டு எழுந்தபின், அன்னமும் கையுமாக விரைந்தாள் அதிதி. அவள் வந்திருந்த நபரிடம், ஐயா பொறுத்தருள்க என்று மன்னிப்புக் கேட்டு, அன்னமிட முயன்றாள்.
வந்தவன் அதிதியைக் கோபத்துடன் நோக்கினான். உபசரிப்பு மிக நன்றாக இருக்கிறது. பெயர் மட்டும் அதிதி என்று வைத்துக் கொண்டால் போதுமா? அதிதியை (அறிவிக்காமல் வந்தவன்) எப்படிக் கவுரவிக்க வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா? சுவாமி கணவனுக்குப் பணிவிடை செய்ததால், வர காலதாமதமாகி விட்டது. நானோ கருவுற்றிருக்கிறேன். என்னால் இந்த நிலையில் வேகமாக நடக்கவும் முடியவில்லை நீங்கள் மன்னிக்க வேண்டும். நிலை என்ன பொல்லாத நிலை? உனக்குக் கணவன் தான் முக்கியம், அதைவிட உன் வயிற்றிலிருக்கும் கருவும் முக்கியம். உன் வீடு தேடி வந்த நான், மொத்தத்தில் அலட்சியப்படுத்தப்பட்டேன். எனவே சாபமளிக்கிறேன், உனது கரு மிருதம் ஆகக் கடவது என கடுமையான சாபம் தந்தான் மாறுவேடத்தில் இருந்த தர்ம தேவதை. மயக்கமுற்றாள் அதிதி. விரைந்து வந்த கச்யபர் நடந்ததைப் பார்த்து, ஞான திருஷ்டியால் உண்மையை அறிந்து கொண்டார். மனைவியின் மயக்கத்தை தெளிவித்தார். உண்மையை விவரித்தார். கரு அழியட்டும் என்று அவன் இட்ட சாபமானது அற்புதம் தான். புதல்வன் அற்புதமாகப் பிறப்பான் என்பதை அறிவிக்கக் கூடியது என்ற தெளிவினை மனைவிக்குத் தந்தார்.
மிருது பிண்டமாகாது. அண்டமாக மாறும் அந்த அண்டம் பிளக்கும். அதிலிருந்து ஒரு மகன் பிறப்பான். அவன் மார்த்தாண்டன் எனப்படுவான். விஷ்ணுவைப் போல வல்லமையுடன் இருப்பான். நவக்கிரகங்களுக்குத் தலைமை ஏற்பான் என்றார் கணவர் , கச்யபர். மனம் தெளிந்தாள் மனைவி அதிதி. ஒரு பிரபவ ஆண்டு மகா சுக்ல சப்தமியில் விசாக நட்சத்திரத்தில் அதிதியிடமிருந்து தோன்றிய அண்டத்திலிருந்து ஒளி தோன்றியது. பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகள் ஒன்று சேர்க்கப்பட்டு கந்தனானது போல் பன்னிரண்டு பிள்ளைகள் ஒன்று சேர்க்கப்பட்டு சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களோடு உலா வந்தான். இவர்கள் தனித்தனியே 12 மாதங்களுக்கு ஆதித்யர்கள் ஆனார்கள்.
சூரியன் நவக்கிரகமண்டலத்தின் தலைவனாகத் திகழ்கிறார். இவர் ஏழுகுதிரைகள் பூட்டப்பட்ட , ஒற்றைச் சக்கர ரதத்தில் மேருமலையை வலம் வருகிறார். இவருக்குச் சாரதியாக அருணன் விளங்குகிறார். வைவஸ்தமனு, யமன், அசுவினிதேவர்கள், பிரதவன், ரைவவஸ்தன் என்ற மகன்களும், யமுனை என்ற மகளும் சூரியனுக்கு உள்ளனர். சூரியன் மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குகிறார். பிருகுமுனிவர், வால்மீகி, அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன் ஆகியோர் சூரிய தேவனின் அருளால் பிறந்தவர்கள் என்று ராமாயணமும், மகாபாரதமும் கூறுகின்றன.
நவக்கிரகங்களின் நாயகன், முதன்மையானவன் என்று அழைக்கப்படும் சூரியன் ஒரு நெருப்பு கோளம் ஆகும். ஜோதிடத்தில் கிரகம் என்றும் அறிவியலில் நட்சத்திரம் என்றும் இதனைவகைப்படுத்துவர். சூரியனை மையமாக வைத்தே அனைத்து கிரகங்களும் இயங்கி வருகிறது. தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் சூரியன், ஒளியை தந்து உயிர்களை வாழ வைத்து,இந்த உலகையே வாழ வைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே. நமதுபூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு சுமாராக 9,20,30,000 KM ஆகும். சூரியன் தன்னைத் தானே ஒரு தடவை சுற்றி வர ஒரு மாதம் காலம் ஆகிறது. 12 ராசியையும் சுற்றி வர365 நாள் 15 நாழிகை 32 விநாடிகள் ஆகிறது. இதனைத் தான் நாம் ஒரு வருடம் என்கிறோம்.
சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் தங்கி இருப்பார். இவர் அடுத்த ராசிக்கு செல்லும் போது அடுத்த மாதம் பிறக்கும். சூரியன் ஆத்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரே உடம்புக்கு உயிர் தருபவர். சூரியன் அக்கினியை அதிதேவதையாகவும், ருத்ரனை பிரத்யதி தேவதையாகவும் கொண்டவர்.
ஜோதிடத்தில் சூரியனை வைத்தே லக்கினம் கணக்கிடப்படும். தகப்பனை குறிக்கும் கிரகம் சூரியன். ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு,கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும்சூரியனே! அதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர். சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்,ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகள் ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம். இவை மட்டுமல்லாமல், ஒருநிகழ்ச்சிக்கோ, 10 பேர் கொண்ட குழுவுக்கோ தலைமை வகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை. தலைமை பீடம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும்.
கிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. சூரியனின் அருளால் வடமொழி அறிவு ஏற்படும். சூரியனை வைத்து தகப்பனார், உடல்பலம், ஆண்மை, பரிசுத்தம், அரசியல் தொடர்பு, தகப்பனார் உடன் பிறந்தவர்கள், புகழ் அனைத்தும் பார்க்கப்படுகிறது.
ஒருவர் ஏதாவதொரு வகையில் நம்பர் ஒன்னாக தலைமை பொறுப்பில், கையெழுத்திடும் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்து இருந்தால் தான் அவரவர் ஜாதக பலத்துக்கு ஏற்ப பதவி கிடைக்கும். நல்ல யோகமான சூரிய திசை நடக்கும் போது பட்டம், பதவி தேடி வரும்.
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறப்பது யோகம். சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தால் கூடுதல் யோகம். லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் நல்ல யோகம் உடையவர்கள். சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள். கிருத்திகை, உத்திரம், உத்திராடம்ஆகிய சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பது சிறப்பானது.
பிறந்த லக்னமும் சூரியனால் கிடைக்கும் யோகமும்
எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார்?
மேஷ லக்னம்/ராசி பெரிய பதவி
ரிஷப லக்னம்/ராசி மாபெரும் யோகம்
கடக லக்னம்/ராசி பேச்சாற்றலால் யோகம்
சிம்ம லக்னம்/ராசி அதிகார ஆளுமை
விருச்சிக லக்னம்/ராசி தலைமைப் பதவி
தனுசு லக்னம்/ராசி நல் பாக்ய யோகம்
மற்ற லக்னம்/ராசிகள் சூரியன் இருக்கும் பலத்தின் மூலம் பட்டம், பதவி, அதிகாரம்.
வழிபாடு, பரிகாரம்
சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற பண்டங்களைபசுமாட்டுக்கு கொடுக்கலாம்.
‘ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய பிரசோதயாத்’
அல்லது
‘ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய பிரசோதயாத்’
என்ற சூரியகாயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்அம் நமசிவாய சூரிய தேவாய நம’
என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம். கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். சென்னை அருகேகொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம் சூரியனுக்குரிய ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரிய ஸ்தலமாகும்.
ஒருவர் பிறக்கும் பொழுது அவருடைய ஜாதகத்தில்
ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஆதலால் ஓருவருக்கு ஆத்மபலம் அமைய வேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமைய வேண்டும்.
ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் யார்? என்று மகாபாரதத்தில் யட்ச பிரச்னத்தில் கேள்வி எழுகிறது.
அவன் சூரியனே என்றும் விடை கிடைக்கிறது.
ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை (காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்குப், பிரகதி, தரிஷ்டுப், ஜகதி, திராட் ) ஏழு குதிரைகளாகக் கொண்டு பூட்டி பவனிவருகிறான் சூரியன். உஷா தேவி, சாயா தேவி ஆகிய இரு தேவிகளுடன் சூரியனார் கோவிலில் சூரியன் விளங்குகிறார்.
சூரியனை வணங்கி ஆதித்திய ஷிருதய மந்திரத்தால் இராமன் இராவனனை வெல்லும் ஆற்றல் பெற்றான். வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரீ. காயத்ரீ மந்திரத்துக்கு உரியவன்சூரியன். சூரியநமஸ்காரம் என்ற விசேஷமான வழிபாடு செய்வதால் ஆன்மீக பலமும் சரிர பலமும் அடையமுடியும் என்பது அனுபவம் கண்ட உண்மை.
சூரியனுக்கு கோயில்:
ஒரிசாவிலுள்ள கோனார்க்கிலும், தமிழகத்தில்கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில், (தஞ்சாவூர் அருகில்) சூரியனார் கோயிலிலும் சூரியனுக்கு கோயில்கள் உள்ளன.
கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.
சூரியனார் கோயில்
நவகிரகங்களில் முதன்மையானது சூரியன். இக்கிரகத்திற்குண்டான கோவில், கி.மு.1100 -ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்கச் சோழன் என்னும் மன்னனால், கோவில்களின் சொர்க்கபூமி கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சூரியனார் கோவில் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் வாழ்க்கையில் வெற்றியையும், வளத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கும் சூரிய கடவுள் என்னும் சூரியன் கிரகத்திற்குண்டானது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மத்தியில், (தமிழ் தை மாதம் ஆரம்பம்) உழார் திருநாளாம் பொங்கல் திருநாள், இந்த சூரியகடவுளை முன்னிறுத்தியே கொண்டாடப் படுகின்றது. கண்களால் காணக்கூடிய தெய்வமாக, வணங்கக் கூடிய தெய்வமாக, சக்திவாய்ந்த தெய்வமாக மனதில் கொண்டு பல்வேறு உருவகங்களில் ஆராதிக்கப் படுகின்றார். இக்கிரகத்தின் அதி தேவதை சிவனாக கொள்ளப் படுகிறது. சூரிய பகவான் கிரகத்திற்கு சாயா மற்றும் சுவர்ச்சா என்னும் இரண்டு துணைவிகளுடன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் இந்த கிரக மணடலத்தில் பவனி வருகின்றார் என்று கொள்ளப் படுகின்றது. மேலும் சூரியனை நடுநாயகமாகக் கொண்டு மற்ற கிரகங்கள் தங்களின் இருப்பிடங்களை அமைவிடங்கலாகக் கொண்டுள்ளன.
தமிழகத்தில் சூரிய வழிபாடு என்பது சங்ககாலம் தொட்டு நிலவி வந்த ஓர் இயற்கை வழிபாடு ஆகும். குறிப்பாக, சிலப்பதிகாரத்தில் “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” எனத் தொடங்கும் வாழ்த்துப் பாடல் இவ்வழிபாட்டிற்குச் சான்றாக அமைகிறது.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் இமயமலைச் சாரலில் காலவமுனிவர் என்பவர் தவம் செய்து வந்தார். இவர் தம் தவசக்தியால் எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களைச் சொல்வார். ஒருநாள், தனக்கே தொழுநோய் வரவிருப்பதை அறிந்தார். நவக்கிரகங்களை நோக்கி வழிபாடு செய்தார். நவகிரக நாயகர்களும் அவர் கேட்டுக்கொண்டபடி வரமளித்தனர்.இதனை அறிந்த பிரம்ம தேவன் கோபம் கொண்டார்.
சிவபெருமானின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களை மட்டுமே கொடுக்குமாறு கட்டளையிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல் வரம் தரும் அளவுக்கு மீறிச் செயல்பட்டுவிட்டீர்கள். எனவே நீங்கள் பூலோகத்தில் தொழுநோய் பீடித்து உழல்வீர்களாக என சாபமிட்டார்.
அதன்படி பூலோகத்தில் வெள்ளை எருக்கு வனத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தனர். அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும் .பல்வகைத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அனுகிரகம் செய்வீர்களாக என அருளினார் என்பதே இத்தலத்தின் வரலாறு ஆகும்.
தளத்தின் தனித்தன்மை
கருவறையில் சூர்ய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார்.சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார்.சூரிய பகவான் உக்கிரம் அதிகம்.அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார். அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது.மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது.சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்கு குதிரை இருக்கிறது.
நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.
இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு
உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்படித்தக்கது.
இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.
இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது.
இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர். திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான கோயில் இது.
காயத்ரி
ஓம் அச் வத் வஜாய வித் மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸுர்ய; ப்ர சோதயாத்
ஒருவர் 1,10,19 ஆகிய தேதிகளில் பிறக்கிறார் என்றால் அவர் 1ம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராகிறார். இது சூரியனின் ஆதிக்கத்திற்குட்பட்ட எண்ணாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய நவரத்தினம் மாணிக்கமாகும்.
பெயர் | சூரியன் (Sun) |
ஜாதி | சத்திரிய ஜாதி |
வேறு பெயர்கள் | திவாகரன், பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கள், இருள்வலி, சவிதா (), சூரன், ஏல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ்சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனலி, அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமாலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சியன், விரோசனன், விண்மணி, அருக்கன், ரவி, பகலவன் |