கரந்தை - பால்சாமி
கரந்தை பழைய திருவாறு சாலை ராஜாகோரி தாண்டி பால்சுவாமி மடம் வளாகத்தினுள் சமாதி கோவில் இருக்கிறது.சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கரந்தை - தனுத்தாரி பாபா
கரந்தை தமிழ்ச்சங்கக் கட்டிடத்திற்குத் தென்புறம் தனுத்தாரி பாபா மடம் இருக்கிறது.இந்த மடத்தில் தென்மேற்கு மூலையில் பாபாவின் சமாதி இருக்கிறது.
கரந்தை - தென்பழனி சத்தியநாராயண சித்தர்
கரந்தை அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனை தென்புறச் சாலை ‘சித்தர் மண்டபம்’ இருக்கிறது.இதுவே பழைய சித்தர் ஆஸ்ரமம்.இந்த ஆஸ்ரமத்தின் உட்பகுதியில் சித்தர் சமாதி அடங்கிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கரந்தை - ஆதித்த குரு
கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு அருகில் சேர்வைக்காரன் தெரு இருக்கிறது.ஆற்றங்கரை சந்தின் நடுவில் ஆதித்தகுரு மடமும் சமாதிக்கோவிலும் உள்ளன.
விசயபுரம் - சட்டாம்பிள்ளை சுவாமிகள் (எ) இராமசாமி சாமிகள்
கொரடச்சேரி ரயில் நிலையத்திற்குத் தெற்கே வெண்ணவாசல் இருக்கிறது.அங்கிருந்து 3 கி.மீ.தூரத்தில் முசிறியம் என்னும் சிற்றூர் அமைந்திருக்கிறது.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் விசயபுரம் என்னும் ஊரில்,பிடாரியம்மன் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் அருகே முத்துச்சாமி பிள்ளை தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் சட்டாம்பிள்ளை சமாதி மேடை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூந்துருத்தி - தீர்த்த நாராயண சாமி
தஞ்சை டூ திருவையாறு டூ கண்டியூர் சாலையில் 6 கி.மீ.தூரத்தில் மேலைத் திருப்பூந்துருத்தி ஆற்றங்கரையில் சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கொத்தம்பட்டி - பாலானந்த ஜோதி சுவாமிகள்
தஞ்சாவூர் டூ புதுக்கோட்டை இடையே 13 கி.மீ.தூரத்தில் புனல்குளம் இருக்கிறது.இதன் வடக்கே 4 கி.மீ.தூரத்தில் இருப்பது கொத்தம்பட்டி.சாலையின் முடிவில் பிள்ளையார் கோவில் இருக்கிறது.இதன் வடபுறம் காமாட்சியம்மன் கோவில் இருக்கிறது.இந்த கோவில் வளாகத்துக்குள் அம்மன் சன்னதியின் தெற்கே சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.