லக்னம் என்றால் என்ன?
மூலம்: whatasapp astrology group - 2 Astro friends
லக்னம் என்பது ஒரு குழந்தை பிறந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பெயர். அதைச் சற்று விளக்குவோம். ராசி என்பது 12 சம பாகமாகப் பிரிக்கப்பட்ட பூமண்டலத்தின் பாகம். சூரியனும் மற்ற கிரகங்களும் கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாகச் சுற்றுகின்றன. அதே சமயத்தில் மேஷாதி 12 ராசிகளைச் சம பாகமாகக் கொண்ட பூமண்டலமானது மேற்கிலிருந்து கிழக்குப் பக்கமாகச் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும்பொழுது பூமண்டலத்தின் எந்தப் பாகம் கிழக்கில் நமக்கு நேராக வருகிறதோ அந்த ராசிக்கு லக்னம் என்று பெயர். அதாவது, அந்த நேரத்தில் பிறந்த குழந்தைக்கு அந்த ராசியை லக்கினமென்று சொல்வார்கள். மற்றும் அப்பொழுது கிரஹங்கள் எந்த எந்த ராசியில் இருக்கின்றனவோ, அதையும் குறித்து வைத்துக் கொள்வார்கள். இதேல்லாம் சேர்ந்ததற்கே ஜாதகச் சக்கரம் அல்லது ராசிச் சக்கரம் என்று பெயர். இனி லக்னம், கிரஹநிலை, தசாபுக்தி ஆகியவற்றைக் கணிக்கும் வழியை ஓர் உதாரணம் மூலமாக விளக்குவோம்… உதாரண ஜாதகம் விகாரி வருடம் தை மாதம் 9-ம் தேதி வெள்ளிக்கழிமை, சுவாதி நக்ஷத்திரம் 29-27 மறுநாள் விசாகம் 25-42 (23-1-1960 @ 5-40 A.M…) இரவு மணி 5.40க்கு (சனிக்கிழமை விடியற்காலை) சென்னையில் ஓர் ஆண் குழந்தை பிறந்ததை வைத்துக் கொண்டு, அதற்கு ஜாதகம் கணிக்கும் விதத்தையும் கிரகங்களை அமைக்கும் வழியையும் தசா புக்திகள் கணிக்கும் விதத்தையும் கீழே விளக்குவோம். ஒரு ஜாதகம் கணிக்குமுன் கீழ்க்கண்ட அம்சங்களை முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் :
1. குழந்தை எத்தனையாவது அட்சாம்சத்தில் உள்ள ஊரில் பிறந்தது?
2. அந்த அட்சாம்ச ரேகைக்குத் தக்கபடி மேஷாதி ராசிப் பிரமாணங்கள் என்ன?
3. குழந்தை ஜனனமான தேதியில் அது பிறந்த ஊரில் சூரிய உதயம், எத்தனை மணி, எத்தனை நிமிஷத்துக்கு நிகழ்ந்தது?
4. சூரியோதயம் முதல் குழந்தை பிறந்தது வரையில் எத்தனை நாழிகை எத்தனை விநாடிகள் சென்றன?
5. சிசு பிறந்த நட்சத்திரத்தின் மொத்த நாழிகை என்ன?
இவற்றைப் பஞ்சாங்கத்தின் உதவியால் முக்கியமாகக் குறித்து வைத்துக் கொண்டால் சுலபமாக ஜாதகம் கணித்துவிடலாம்.
1. சூரிய உதயம்
இந்தக் குழந்தை சென்னையில் பிறந்தது. சென்னையில் அட்சாம்சம் 13. சென்னையில் அன்றைக்குரிய உதயம் 6-39. தை மாதம் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. குழந்தை விடியற்காலை மணி 5-40க்குப் பிறந்தது. அதாவது சனிக்கிழமை உதயத்துக்கு முன் 0-59 நிமிஷங்களுக்கு முன்னதாகப் பிறந்துள்ளது. நம் நாட்டு வழக்கப்படி சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையில் ஒரு நாள் என்று கணக்கிடப்படும்.
2. உதயாதி ஜனன நாழிகை
வெள்ளிக்கிழமை சூரிய உதயம் முதல் குழந்தை பிறந்த நாழிகை விநாடிகள் வரையில் கணக்கிட வேண்டும. அது முதல் சனிக்கிழமை விடியற்காலை 5.40 வரையில் 23 மணி 1 நிமிஷம் ஆகும். மணி ஒன்றுக்கு 2 ½ நாழிகை வீதம் கணக்கிட, 57 நாழிகை 33 விநாடிகள் வரும். ஆகையால், வெள்ளிக்கிழமை சூரிய உதயாதி நாழிகை 57-33-க்கு அந்தக் குழந்தையின் ஜனனம் என்று அறிய வேண்டும். குறிப்பு : சூரிய உதயம் ஒவ்வொரு நாளும் காலை 6-00 மணிக்கே நிகழ்வதில்லை. காலை 5-39 முதல் 6-39க்கு இடையிலான காலத்தில் நாளுக்கு நாள் வித்தியாசமாக சூரியோதயம் ஆகிக்கொண்டிருக்கும். அதேபோல் இடத்திற்கு இடம் சூரியோதய காலம் மாறுபடும். உதாரணமாக, சென்னையில் காலை 6-01க்குச் சூரியோதயமென்றால், ராமேசுவரத்தில் அதே தினத்தில் 6-09க்குச் சூரியோதயம் ஆகும்.
ஆகவே, ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தைக் கணிப்பதற்கு முன், அந்தக் குழந்தை பிறந்த ஊரில் சூரியோதயம் எப்பொழுது நிகழ்ந்தது என்பதைப் பஞ்சாங்கங்கள் மூலம் துல்லியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். அட்சாம்சங்களும் ராசிப் பிரமாணமும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளை 360 சம பாகங்களாக (அதாவது ராசி ஒன்றுக்கு 30 பாகைகள் வீதம்) பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்கு அட்சாம்சம் (Latitude) என்று பெயர். பூமி முழுவதும் இந்த அட்சாம்ச ரேகைகளின் மீதே இருக்கிறது. அந்த அந்த அட்சாம்சங்களிலுள்ள பட்டணங்களுக்கு வெவ்வேறு ராசிமான சங்கியைகள் (அதாவது ராசியளவு நாழிகை, விநாடிகள்) ஏற்பட்டுள்ளன.
இந்த அட்சாம்சங்களை அநுசரித்தே மேஷாதி ராசிகளின் கால அளவை அறிய வேண்டும். உதாரணமாக, சென்னையும், அதைச் சுற்றி சுமார் 100 மைல்களுக்கு உட்பட்ட பிரதேசங்களும் 13-ஆவது அட்சாம்சத்தில் இருக்கின்றன. ஆகையால், இந்த 13-வது அட்சாம்சத்தைச் சேர்ந்த இடங்களுக்கு மேஷ ராசிப் பிரமாணம் 4 நாழிகை 29 விநாடிகள் என்றால், இதே மேஷ ராசிக்கு 9-ஆவது அட்சாம்சத்தில் இருக்கும் ராமேசுவரத்துக்கு 4-37 விநாடியாகும். அதாவது சென்னையைக் காட்டிலும் 2 விநாடி குறைவு. (45-வது பக்கம் அட்டவணை 2-ஐ கவனிக்க).
இம்மாதிரி, இடத்துக்கு இடம் மேஷாதி ராசிப் பிரமாணங்கள் மாறுபடும். ஆகையால், ஒரு குழந்தை பிறந்த இடம் எந்த அட்சாம்சத்தைச் சேர்ந்ததோ அந்த அட்சாம்சத்துக்குரிய மேஷாதி ராசிப் பிரமாணங்களைச் சூரியோதயம் தொடங்கி, குழந்தையின் ஜனன காலம் வரையில் கூட்டி லக்கினத்தை அறிய வேண்டும். இதைக் கவனிக்காவிட்டால் சரியான ஜாதகம் கணிக்க இயலாது.
3. உதய லக்ன சேஷம்
சூரியன் உதய காலத்தில் எந்த ராசியில் இருக்கிறானோ, அதுவே உதய லக்னம் என்று கூறப்படும். மேற்படி உதய லக்ன நாழிகை ஒவ்வொரு நாளும் சூரியோதய காலத்தில் குறைந்துகொண்டே வரும். அதாவது, தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் முதல் தேதியன்று சூரிய உதய காலத்தில் மேஷ ராசியில் இருப்பு 13-வது அட்சாம்சத்தைச் சேர்ந்த சென்னைக்கு 4-29 என்றால் 2-ஆம் தேதி மேஷத்தின் இருப்பு 4-20. இம்மாதிரி ஒவ்வொரு தேதிக்கும் சூரிய உதய காலத்தில் 0-9 விநாடி வீதம் கழித்துக்கொண்டே போக வேண்டும். இது பஞ்சாங்கத்தில் ராசி இருப்பு என்ற தலைப்பில் இருக்கும். அப்படிக் கழித்தது போக மீதி நாழிகை விநாடியே உதய லக்ன சேஷமாகும்.
4. ஜந்ம லக்னம்
பிறகு ஜனன கால நாழிகை விநாடிகள் வரும்வரை ஒவ்வொரு ராசியாகக் கூட்டிக்கொண்டே போனால், எந்த ராசிப் பிரமாணத்தில் ஜனன கால நாழிகை அடங்குமோ அதுவே அந்தக் குழந்தையின் ஜன்ம லக்னம் என்று அறிய வேண்டும். லக்னம் கணிக்கும் வழி இந்தக் குழந்தை பிறந்தது தை மாதம் 9-ஆம் தேதி இரவு. ஆகையால் தை மாதம் 9-ஆம் தேதிக்குச் சரியாக (தை மாதத்திற்குரிய) மகர ராசியின் சேஷத்தைப் பஞ்சாங்கத்தில் உள்ளபடி குறித்துக் கொள்ளவேண்டும். அதன் கீழ் கும்பம் தொடங்கி ஜனன கால நாழிகை வரும் வரையில் ராசிமான சங்கியைகளை எழுதிக் கூட்டிக் கொள்ள வேண்டும். அதாவது: தை 9-ஆம் தேதி சூரிய உதயத்தில்- (உதய லக்னம்) நா-வி மகர சேஷம் – 3-32 கும்பம் – 4-17 மீனம் – 4-11 மேஷம் – 4-29 ரிஷபம் – 5-04 மிதுனம் – 5-27 கடகம் – 5-22 சிம்மம் – 5-08 கன்னி – 5-04 துலாம் – 5-16 விருச்சிகம் – 5-28 தனுசு ஆரம்ப நாழிகை – 53-18 தனுசு – 5-19 சேர்த்து – 58-37 ஜனன கால நாழிகையான 57-33, மேற்கண்ட தனுசு ராசி வரையிலுள்ள 58-37க்கு உட்பட்டிருப்பதால், இந்தக் குழந்தை தனுர் லக்னத்தில் பிறந்ததாகும். அதாவது குழந்தையின் ஜன்ம லக்னம் தனுசு என்று அறிய வேண்டும். இனி அந்தக் குழந்தையின் ஜன்ன காலத்தில் கிரகங்கள் எந்த பாதசாரத்தில் இருந்தன என்பதைக் கவனிப்போம்: பஞ்சாங்கத்தில் கிரகபாதசாரங்கள் என்னும் அட்டவணையில் கண்டபடி, தை மாதம் 9-ஆம் தேதி கிரகங்கள் கீழ்க்கண்ட வகையில் நக்ஷத்திர பாதங்களில் சஞ்சரிக்கின்றன: கிரகம் நக்ஷத்திரம் பாதம் ராசி நவாம்சம் சூரியன் உத்திராடம் 4 மகரம் மீனம் சந்திரன் விசாகம் 2 துலாம் ரிஷபம் செவ்வாய் மூலம் 4 தனுசு கடகம் புதன் உத்திராடம் 3 மகரம் கும்பம் குரு மூலம் 1 தனுசு மேஷம் சுக்கிரன் மூலம் 1 தனுசு மேஷம் சனி பூராடம் 2 தனுசு கன்னி ராகு உத்திரம் 3 கன்னி கும்பம் கேது உத்திரட்டாதி 1 மீனம் சிம்ஹம்
5. நவாம்ச லக்னம்
நவாம்ச லக்னம் என்பது ஜன்ம லக்னத்தில் 9-ல் ஒரு பங்கு என்று பொருள். அதாவது ஜன்ம லக்னம் தனுசு, அதன் நிராயன ராசிமானம் சென்னைக்கு 5 நாழி 19 விநாடி அல்லது 319 விநாடி. இதை 9-ஆல் வகுக்க ஒரு பாகம் 35 4/9. குழந்தை பிறந்த நேரம் 57 நாழி 33 விநாடி. தனுர் லக்னம் ஆரம்பம். 53 நாழி 18 விநாடி. தனுர் லக்னம் பிறப்பு வரை சென்றது 57 நாழி 33 விநாடி – 53 நாழி 18 விநாடி (57-33—53-18) 4 நாழி 15 விநாடி அல்லது 255 விநாடி. இதை 35 4/9-ஆல் வகுக்க 8-வது பாகத்தில் அமையும். ஆக நவாம்ச லக்னம்-மேஷம் முதல் கணக்கிட விருச்சிக லக்னம் வரும். 35) 255 (7 245 —— 10 —— மற்ற லக்னங்களுக்கு நவாம்ச லக்னம் போடுவது எப்படி என்பதைக் கீழே விளக்கியுள்ளோம். மேஷம், சிம்மம், தனுசு – ஜன்ம லக்னமானால் – மேஷம் முதல் கணக்கிட வேண்டும் ரிஷபம், கன்னி, மகம் – ஜன்ம லக்னமானால் – மகம் முதல் கணக்கிட வேண்டும் மிதுனம், துலாம், கும்பம் – ஜன்ம லக்னமானால் – துலாம் முதல் கணக்கிட வேண்டும் கடகம், விருச்சிகம், மீனம் – ஜன்ம லக்னமானால் – கடகம் முதல் கணக்கிட வேண்டும்
6. ஜந்மநக்ஷத்திரம் ஆத்யந்தம்
இனி ஜன்ம நட்சத்திரத்தின் ஆதியந்த நாழிகைகளையும் ஜனனகால தசாசேஷத்தையும் கணிப்போமாக : மாதம் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சூரியோதயத்திலிருந்து 29-27 நாழிகை வரை சுவாதி நக்ஷத்திரம் இருக்கிறது. பிறகு விசாக நக்ஷத்திரம் ஆரம்பம். ஜாதகன் சூரிய உதயாதி 57 நாழிகை 33 விநாடிகளுக்குப் பிறந்திருப்பதால் சுவாதி கழிந்து விசாக நக்ஷத்திரத்தில் ஜனனம் என்று தெரிகிறது. இனி விசாக நக்ஷத்திரத்தின் ஆத்யந்த பரம நாழிகை – அதாவது மொத்த நாழிகை என்ன என்று தெரிந்தால் தசாசேஷம் கணிக்கலாம். ஒரு தினத்துக்கு 60-00 நாழிகைகள். அதில் 9-ஆம் தேதி சுவாதி இருப்பு 29-27 போக, அன்றைய தினம்-விசாக நக்ஷத்திரம் 30-33. மறுநாள் தை 10-ஆம் தேதி விசாகம் (பஞ்சாங்கத்தில் உள்ளபடி) 25-42. ஆகையால், இவைகள் இரண்டையும் கூட்ட விசாகம் மொத்த நாழிகை 36-15 ஆகும். ஜனன நாழிகை 57-33 அன்று சுவாதி செல்லு 29-27 9-ஆம் தேதி விசாகத்தில் செல்லு 28-06 விசாகம் மொத்தம் (அ) ஆத்யந்த பரம நாழிகை 56-15ல் 28-06ஐக் கழிக்க ஜனன காலத்தில் விசாகம் இருப்பு 28-09
7. ஜனனகால தசாசேஷம்
ஆகையால், மேற்கண்ட விசாக நக்ஷத்திரத்தின் சேஷம் 28 நாழிகை, 9 விநாடிகளுக்கு தசாசேஷம் கணிக்க வேண்டும். முன்பு குறிப்பிட்டபடி விசாக நட்சத்திரத்துக்கு குருதசை ஆரம்பம். குரு தசை 16 வருஷங்கள். விசாக நட்சத்திரம் மொத்தம் நாழிகை 56-15க்கு 16 வருஷங்களானால் விசாகத்தில் மீதியுள்ள 28-09க்குத் தசாசேஷம் என்ன என்பதைக் கீழ்க்கண்ட விதமாகக் கணிக்கலாம்.அதாவது,
1. விசாகம் மொத்த நாழிகை 56-15 X 60 3360 விநாடிகள் 15 மொத்தம் 3375 விநாடிகள்
2. விசாகம் செல்லு போக இருப்பு 28.09 X 60 1680 9 1689 விநாடிகள் விசாகம் குருவின் நக்ஷத்திரம். ஜனன காலதசை குருதசை. ஆகவே, மேற்கண்ட இருப்பு விநாடிகளைக் குரு தசா வருஷமான 16ஆல் பெருக்க வேண்டும். அந்த மொத்தத்தை விசாகம் மொத்த விநாடிகளால் வகுக்க தசாசேஷ வருடங்கள் வரும். மீதியை 12-ஆல் பெருக்கி மொத்த விநாடிகளால் வகுத்தது மாதம். 30-ஆல் பெருக்கி வகுத்தது நாட்கள். இவ்விதமாக தசா சேஷம் வரும். 1689 X16 ———— 3375) 27024 (8 வருடம் 27000 ————— 24 X 12 / 3375 = 0 மாதம் ———- 288 X 30 ——————- 3375) 8640 ( 2 + 1 =3 நா. 6750 —— 1890 பாதிக்குமேல் இருப்பதால் 1 ஆகச் சேர்த்துக் கொள்ளலாம். ——— ஆக, ஜனன காலத்தில் குருதசை சேஷம் 8 வருடம் 0 மாதம் 3 நா. அதாவது இந்தக் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே விசாக நட்சத்திரத்தில் பாதி பாகம் கழிந்துவிட்டபடியால், அதற்கு உரிய குருதசை 16 வருஷத்தில் சுமார் பாதி கழிந்து 8 வருஷம் 3 நாட்கள் மாத்திரமே பாக்கி இருக்கின்றன.
Similar Posts : தலையில் கொப்புளம் உருவாக்கும் ஜாதக அமைப்பு, லக்னம் நவாம்ச லக்னம், ரிஷப லக்னம், See Also:லக்னம் நவாம்ச லக்னம்