SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
விருட்ச சாஸ்திரம், 27 நட்சத்திரங்கள்
  • 2021-04-19 00:00:00
  • admin

விருட்ச சாஸ்திரம், 27 நட்சத்திரங்கள்

விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்

நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை, பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு. நம் நட்சத்திரத்துக்குரிய மரத்தை, நாமே நம் கையால் நட்டு, நீரூற்றி வளர்த்து வரலாம். அந்த மரம் வளர, வளர நம் வாழ்வும் வளம் பெறும். நம் பாவக் கதிர்களை கிரகித்து, நமக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது. நம் கண்படும் இடங்களில், நம் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில், ஒரு கோயில் சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமி மலை) தென் மேற்குப் பகுதியில் சூரியக் கதிர்கள் படும் இடத்தில் நட வேண்டும். அந்த மரக் கன்றையும் நமது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.
 
மரக் கன்றை நட்டதும் நமது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச் செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக் கன்றுக்கு உரமாகப் போட வேண்டும்.
 
இப்படிச் செய்த மறு விநாடி முதல், அம் மரக் கன்று வளர, வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும். அந்த மரக் கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக் கன்று ஈர்த்து விடும். அம் மரக்கன்று பூத்து, காய்க்கும் போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும். நமது கர்ம வினைகள் நீங்கியிருக்கும். கர்ம வினைகளை வெற்றி கொள்ள ‘விருட்ச சாஸ்திரம் ’இப்படி ஒரு வழிகாட்டுகிறது.
 
இப்போது நமது பிறந்த நட்சத்திரத்துக் குரிய விருட்சம் எனப்படும் மரம் எது வெனப் பார்ப்போம்
 

அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் – மகிழம்
3 ம் பாதம் – பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு
 

பரணி நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – அத்தி
2 ம் பாதம் – மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் – விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை
 

கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – நெல்லி
2 ம் பாதம் – மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை
 

ரோஹிணி நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் – மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்
 

மிருகஷீரிஷம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – கருங்காலி
2 ம் பாதம் – ஆச்சா
3 ம் பாதம் – வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு
 

திருவாதிரை நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – செங்கருங்காலி
2 ம் பாதம் – வெள்ளை
3 ம் பாதம் – வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு
 

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – மூங்கில்
2 ம் பாதம் – மலைவேம்பு
3 ம் பாதம் – அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி
 

பூசம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – அரசு
2 ம் பாதம் – ஆச்சா
3 ம் பாதம் – இருள்
4 ம் பாதம் - நொச்சி
 

ஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – புன்னை
2 ம் பாதம் – முசுக்கட்டை
3 ம் பாதம் – இலந்தை
4 ம் பாதம் - பலா
 

மகம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் – இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி
 

பூரம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – பலா
2 ம் பாதம் – வாகை
3 ம் பாதம் – ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா
 

உத்திரம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – ஆலசி
2 ம் பாதம் – வாதநாராயணன்
3 ம் பாதம் – எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
 

ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – ஆத்தி
2 ம் பாதம் – தென்னை
3 ம் பாதம் – ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி
 

சித்திரை நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – வில்வம்
2 ம் பாதம் – புரசு
3 ம் பாதம் – கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி
 

சுவாதி நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – மருது
2 ம் பாதம் – புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை
 

விசாகம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – விளா
2 ம் பாதம் – சிம்சுபா
3 ம் பாதம் – பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி
 

அனுஷம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – மகிழம்
2 ம் பாதம் – பூமருது
3 ம் பாதம் – கொங்கு
4 ம் பாதம் - தேக்கு
 

கேட்டை நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – பலா
2 ம் பாதம் – பூவரசு
3 ம் பாதம் – அரசு
4 ம் பாதம் - வேம்பு
 

மூலம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – மராமரம்
2 ம் பாதம் – பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா
 

பூராடம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – வஞ்சி
2 ம் பாதம் – கடற்கொஞ்சி
3 ம் பாதம் – சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை
 

உத்திராடம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – பலா
2 ம் பாதம் – கடுக்காய்
3 ம் பாதம் – சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை
 

திருவோணம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – வெள்ளெருக்கு
2 ம் பாதம் – கருங்காலி
3 ம் பாதம் – சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு
 

அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – வன்னி
2 ம் பாதம் – கருவேல்
3 ம் பாதம் – சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்
 

சதயம் நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – கடம்பு
2 ம் பாதம் – பரம்பை
3 ம் பாதம் – ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்
 

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – தேமா
2 ம் பாதம் – குங்கிலியம்
3 ம் பாதம் – சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை
 

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – வேம்பு
2 ம் பாதம் – குல்மோகர்
3 ம் பாதம் – சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்
 

ரேவதி நட்சத்திரக்காரர்களின் மரம்

1 ம் பாதம் – பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் – செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா
 
நமக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுவோம். சில மரங்கள் நாம் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது, கூகுள்லேயோ தேடிப் பார்க்கலாம், அந்த நட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம். நாம் மரங்களை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நாம் அமர்வது, நாம் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது.
 
இதனை நாம் திருவண்ணாமலை சென்றால், மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பார்க்கலாம்.
 

விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்

அஸ்வதி – எட்டி
பரணி – நெல்லி
கார்த்திகை – அத்தி
ரோகிணி --- நாவல்
மிருகசீரிஷம் --- கருங்காலி
திருவாதிரை – செங்காலி
புனர்பூசம் – மூங்கில்
பூசம் – அரசு
ஆயில்யம் – புன்னை
மகம் – ஆல்
பூரம் – புரசு
உத்திரம் – இலந்தை
அஸ்தம் – மகாவில்வம்
சுவாதி – மருதம்
சித்திரை - அகண்ட வில்வம்
விசாகம் – விளா
அனுஷம் – மகிழம்
கேட்டை – பராய்
மூலம் – மரா
பூராடம் – வஞ்சி
உத்திராடம் – பலா
திருவோணம் – எருக்கு
அவிட்டம் – வன்னி
சதயம் – கடம்பு
பூரட்டாதி – மா
உத்திரட்டாதி – வேம்பு
ரேவதி – இலுப்பை
 
ஒவ்வொரு மரத்தையும் நட்சத்திர அதிதேவதையுடன் பூஜை செய்தால் வாழ்வில் நலம் பெருகும்.
 
வருஷாதி விருட்சங்கள்
பிரபவ - கருங்காலி மரம்
விபவ – அக்ரூட்மரம்
சுக்ல - அசோக மரம்
4.ப்ரமோதூத
பிரஜோர்பத்தி - பேயத்தி மரம்
ஆங்கீரஸ் – அரசுமரம்
திருமுக – அரைநெல்லி
பவ – அலயாத்தி
யுவ - அழிஞ்சில் மரம்
தாது – ஆச்சாமரம்
ஈஸ்வர – ஆலமரம்
வெகுதான்ய - இலந்தை மரம்
பிரமாதி – தாளைபனைமரம்
விக்ரம - இலுப்பை மரம்
விஷு – ருத்திராட்சம்
சித்ரபானு - எட்டி மரம்
யுவபானு – ஒதியம்
தாரண - கடுக்காய் மரம்
பார்த்திவ - கருங்காலி மரம்
வியய – கருவேலமரம்
சர்வஜித் - பரம்பை மரம்
சர்வதாரி – குல்மோகூர்மரம்
விரோதி - கூந்தல் பனை
விக்ருதி – சரக்கொன்றை
கர - வாகை மரம்
நந்தன – செண்பகம்
விஜய – சந்தனம்
ஜய – சிறுநாகப்பூ
மன்மத - தூங்குமூஞசி மரம்
துன்முகி – நஞ்சுகண்டாமரம்
ஏவிம்பி – நந்தியாவட்டை
32.விளம்பி
விகாரி – நாவல்
சார்வரி – நுணாமரம்
பிலவ - நெல்லி மரம்
சுபகிருது - பலா மரம்
சோபாகிருது - பவழமல்லி மரம்
குரோதி - புங்கம் மரம்
விசுவாவக – புத்திரசீவிமரம்
பராபவ – புரசுமரம்
பிலவங்க - புளிய மரம்
கீலக - புன்னை மரம்
சவுமிய - பூவரசு மரம்
சாதாரண – மகிழமரம்
விரோதிகிருத – டம்பை
பரீதாபி – மராமரம்
பிரமாதீச – மருதமரம்
ஆனந்த – மலைவேம்பு
ராட்சஸ – மாமரம்
நள - முசுக்கொட்டை மரம்
பிங்கள – முந்திரி
காளயுக்தி - கொழுக்கட்டை மந்தாரை
ஸித்தார்த்தி – தேவதாரு
ரவுத்ரி - பனை மரம்
துன்மதி – ராமன்சீதா
துந்துபி - மஞ்சள் கொன்றை
ருத்ரோத்காரி- சிம்சுபா
ரக்தாக்ஷி
குரோதன – சிவப்புமந்தாரை
அட்சய - வெண்தேக்கு.
 
பக்தியுடன் சுமோ என்பவரால் whatsapp இல் பகிரப்பட்டது
 
 
 


Similar Posts : உருளைக்கிழங்கு வறுவல், திருமால் சக்கிராயுதம் பெற்ற சரிதை, Tandoori Chicken, பர்வத யோகம், Japanese Horoscope The Zodiac Signs and Cultural Beliefs of the Land of the Rising Sun,

See Also:விருட்ச சாஸ்திரம் நட்சத்திரம்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
2024-08-06 00:00:00
fantastic cms
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
2024-08-06 00:00:00
  • Aries
  • Ascendant
  • astrology software
  • astrology-match-making-chart
  • astronomy
  • Barani
  • Basics
  • Best Astrology software for windows
  • Birthday Secrets
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • Bodhidharmas Guru
  • Cancer
  • Chandiran
  • Chandran
  • Chhajju Bania
  • Chick
  • Chicken Biryani in English
  • Mangal Singh's NDE
  • Moon
  • NDE
  • Tamil astrology software
  • குங்குமம்
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com