* வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் மண் மீது ஒரு வீடு கட்டி குடி போகிறார். ஆனால், ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, அந்த மண் மீது எது வாழ்ந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்து கொள்ளக் கூடிய ஞானம் மனிதனுக்கு இல்லை. ஆனால், சில பறவைகளுக்கு அதுபோன்ற ஞானம் நிறைய உண்டு.
* குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில் இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு. அதனால், இயற்கையில் நம்மை விட நான்கறிவு, மூன்றறிவு உயிரினங்களுக்கு சில சூட்சும சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறார்.
* ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டுவர வேண்டும். ஜீவன் என்றால், மனிதனும் உயிருடன் இருக்கிறான், ஜீவனுடன் இருக்கிறான் என்று பார்க்கக் கூடாது. மனிதனைத் தாண்டி சிட்டுக்குருவி போன்றவற்றிற்கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது.
சிலர் நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்கவிடுவர். அதைச் சாப்பிட குருவி இரண்டு வரும், கத்தும், கொறித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும். அதேபோல, அணிலுக்கும் கூடு கட்டிக் கொடுப்பார். தூக்கனாங் குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக்கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும்.
* இதெல்லாம் என்னவென்றால், ஜீவாதார சக்தியை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கான அமைப்பு. வீட்டில் சிட்டுக்குருவி, அனில் போன்றவை கூடு கட்டி குஞ்சு பொரி க்கின்றன, குட்டி போடுகின்றன. இதை சிலர் கலைத்துவிடுகிறார்கள்.
ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டுவது, குஞ்சு பொரி ப்பது நல்லது.
கழுதை படத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், படங்களை வைப்பதை விட இதுபோன்று செய்தால் நல்ல பலன்கள் இருக்கும். புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் தெய்வ சக்திகளை கொண்டுவருவதற்கான ஆத்மாக்கள்.
இதுபோன்ற சக்தியைக் கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக் கூடாது. இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.
உங்களுக்கும் இந்த பிரபஞ்ச உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு வகை தொடர்பு உள்ளது என்று அர்த்தம்.
Similar Posts : பிரெட் சாப்ஸ், Predictions for Sagittarius, Who is Muruga, பைரவர் பற்றி, Medical Astrology for cancer Natives -General Analysis, See Also:வீட்டிற்குள் தெய்வ சக்தி