கேட்டை நட்சத்திரக்காரர்களின் பரிகாரங்கள்கேட்டையில் பிறந்தவர் கோட்டை ஆள்வர் என்பார்கள். ஆனால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நான்கு பாதங்களும் தோஷத்தை தருவன ஆகும்.
- முதல் பாதத்தில் பிறந்தது ஆண் குழந்தையாயின் மூத்த சகோதரனுக்கும், பெண் என்றால் மூத்த சகோதரிக்கும்,
- 2ஆம் பாதம் மற்றமுள்ள சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும்,
- 3ஆம் பாதம் அக்குழந்தையின் தாய்க்கும், செல்வத்திற்கும்,
- 4ஆம் பாதம் அக்குழந்தை மற்றும் அதன் தாயாருக்கும் கண்டமாகும்.
பரிகாரம்: பசு அல்லது தங்கத்தால் செய்த பசுவினை தானமளிக்கலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ‘தேவேந்திரனை’ வழிபட வேண்டும். இந்த நட்சத்திர பெண்கள் திருமணத் தடை நீங்க தூய வெண்மையான மலர் கொண்டு தேவேந்திரனை மனதில் தியானித்து வழிபாடு செய்தால் நல்ல கணவர் அமைவார். அருணையிலுள்ள இந்திரலிங்கப் பூஜையும் மிகவும் சிறந்த பலன்களை தரும்.
இந்த நட்சத்திரக்காரர்கள் திருவேற்காட்டில் வீற்றிருக்கும் கருமாரியம்மன் மற்றும் சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆகியோரை வணங்கி வந்தால் வாழ்க்கை செழிக்கும்.
கேட்டை நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி வந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே
இது போல, ஜாதகருக்கு உண்டான இன்னும் பிற தோஷங்கள் மற்றும் அதற்கு உண்டான பரிகாரங்களை நம் sithars astrology மென் பொருளின் உதவியுடன் தெரிந்துக் கொண்டு பயனடையலாம்.