SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
is astrology true
  • 2019-10-06 00:00:00
  • 1
  • 702

is astrology true

ஜோதிமயமான ஜோதிடம் - பகுதி 2
இந்து மதத்தில் எத்தனையோ விஷயங்களை நாம் பின் பற்றி வருகிறோம்.  அதன் அர்த்ததையோ, அதன் நன்மைத் தீமையையோ நாம் பல நேரங்களில் பல விஷயங்களில் ஆராய்ந்ததில்லை. அவற்றுள் மறு பிறப்பும், கர்மாவும் அடங்கும். இதை சிலர் நம்புவார்கள். சிலர் நம்ப மாட்டார்கள். ஆனால் இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள கர்மா எனப்படுகிற முன் வினைப் பயன் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டதே இந்த பிறப்பு. ஜோதிடத்தை ஒரு மதம் சார்ந்த விஷயமாக பார்க்க விரும்பாவிட்டால் அதனை அறிவியல் சார்ந்த விஷயமாக பார்க்கலாம். நமக்கு ஒரு விஷயம் சரிவர தெரியாவிட்டால் அல்லது புலப்ப்டாவிட்டால் அது இல்லை என்றாகிவிடாது. ஒரு காலத்தில் ஜோதிடத்தை பார்த்து சொல்பவர்களை மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து அவர்களுக்கு மிகவும் மரியாதை அளித்து வந்தார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் மகாபாரதத்தை எடுத்துக் கொள்ளலாம். பஞ்ச பாண்டவர்களில், எல்லோருக்கும் இளையவனான சகாதேவன் ஜோதிடத்தில் வல்லுனன் என்பார்கள். குருக்ஷேத்திர போர் தொடங்க நல்ல நேரம் பார்த்து சொல்ல துரியோதணன் (பஞ்ச பாண்டவர்களை எதிர்த்து போரிடும் எதிரிகளின் தலைவன்) சகாதேவனை அணுகி அவரிடம் நாள் நேரம் பெற்றுக் கொண்டான் என்பார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஜோதிடர்கள் உறவுகளுக்கு அப்பார்பட்டவர்கள். எந்த சூழ்நிலையிலும் நம்மை தேடி வருபவர்களிடம் பொய் உரைக்கக் கூடாது என்பதுவே ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றளவிலும்  வழக்கத்தில் இருந்துவரும் பழமொழி ஜோதிடத்திற்கு ஆதாரமாக சான்றளிக்கிறது. மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு.. மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு.. சாஸ்திரம் பொய்யானால், கிராணம் பாரு.. சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..

மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..

விளக்கம் : மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் ஸ்தம்பித்துவிடுமாம். மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..

விளக்கம் : வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.

சாஸ்திரம் பொய்யானால், கிராணம் பாரு..

விளக்கம் : ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிப்பதை பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..

விளக்கம் :  நெல்லை மாவட்டத்து கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள். ஒரு அடுப்பு பிய்ந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். அதன்பிறகே அடுப்பு செய்வார்கள். இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றிவிட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதுதான் இந்த பழமொழியின் கருத்து  

Similar Posts : is astrology true,

See Also:is-astrology-true

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 100
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 147
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 46
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
பூச்சிகள் நீங்க
2020-10-15 00:00:00
fantastic cms
மூல நோய் குணமாக டிப்ஸ்
2020-10-15 00:00:00
fantastic cms
அதிக மாத விடாய்க்கு தீர்வு
2020-10-15 00:00:00
fantastic cms
கொசுக்களை விரட்ட
2020-10-15 00:00:00
fantastic cms
வாந்தி நிற்க
2020-10-15 00:00:00
fantastic cms
அஜீரணம்
2020-10-15 00:00:00
fantastic cms
மன நோய் நீங்க
2020-10-15 00:00:00
fantastic cms
கண்கள் பளிச்சிட
2020-10-15 00:00:00
fantastic cms
பல் வலி
2020-10-15 00:00:00
fantastic cms
சுளுக்கு நீங்க
2020-10-15 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 216
  • Abishegam
  • After Death
  • Aquarius
  • Aries
  • Ascendant
  • Astrological predictions
  • astrology software
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • astronomy
  • Basics
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology software for windows
  • Bodhidharma Birth
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • brahma-muhartham
  • Budhan
  • Mangal Singh's NDE
  • Mercury
  • Tamil astrology software
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Indira Gandhi Birth Chart Analysis
    2024-06-19 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com