ஜோதிமயமான ஜோதிடம் – பகுதி 1
ஜோதிடம் சார்ந்த பல நூல்கள் பல மொழிகளில், பலர் உழைப்பினால் கிடைக்கப் பெற்றாலும் அது ஒரு முடிவே இல்லாத ஒரு அமுதசுரபி.
கடவுளின் படைப்பில், சகலவித ஜீவராசிகளில் தனித்தன்மை வாய்ந்த, மிகச் சிறந்த படைப்பு இந்த மனித இனம் மட்டுமே. இதை தான் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதனினும் அரிது கூன் குருடு, செவிடு இன்றி பிறப்பது அரிது என்று அவ்வை பிராட்டி கூறியுள்ளார். அத்தகைய பிறப்பு கொண்ட மனிதர்களில் சிலர் கஷ்டத்தை எதுவும் அனுபவிக்காமலே சீமானகவும் (Born with a Silver Spoon), பலர் மிகவும் கஷ்டப்பட்டும், சிலர் அடுத்த வேலை உண்ணவே மிகவும் சிரமப்பட்டும் வாழ்கின்றனர். இதனை சிலர் விதி என்றும், சிலர் தலை எழுத்து என்றும் கூறுவர். ஜோதிட சாஸ்திரமோ இதற்கு காரணம் அவர்களின் பூர்வ புண்ணிய கர்மாவை அனுபவிக்கவே இந்த பிறப்பை எடுத்திருக்கிறார்கள் என்று கூறுகிறது.
ஜோதிடத்தினால் பூர்வ புண்ணிய பலன்களை மட்டுமின்றி, இனி வரப்போகும் பலன்களையும், தற்கால பலன்களையும் என முக்காலத்தின் பலன்களையும் அறிய முடியும் என்று பல நூல்கள் கூறுகின்றன. நம்முடைய அறியாமையால் பலவற்றை தொலைத்துவிட்டு மிச்சம் மீதி உள்ளவற்றைக் கொண்டு நாம் தற்பொழுது வாழ்த்துக் கொண்டிருக்கிறோம்.
சூரியன் முதலான தேவர்களும், வசிஷ்டர் போன்ற மகரிஷிகளும், புலிப்பாணி போன்ற சித்தர்களும், இன்னமும் பல மகான்களும் பற்பல ஜோதிட வாய்ப்பாடுகளையும், ஜோதிட சூட்சமங்களையும், ஜோதிட நுட்பங்களையும் இந்த உலக மக்களின் நன்மைக்காக சிலவற்றை சுலபமாகவும், பலவற்றை கடினமாகவும் (நேரடி பொருள் படாதவாறு) தந்தருளிச் சென்றிருக்கின்றனர். பெரும்பாலான நூல்கள் வட மொழியில் இருந்தாலும், அகத்தியர் தந்த தமிழ் மொழியில் உள்ள பல நூல்களை நாம் தொலைத்திருந்தாலும், இருக்கும் சிலவற்றிலேயே எல்லோரும் வியக்கும் வண்ணம் பல தகவல்கள் நம்மை இன்னமும் பெருமையுடன் வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றன.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உயிர் வாழும் வரை மிகவும் அத்தியாவசியமாக மூன்று விஷயங்கள் தேவைப்படுகின்றது. அவை
இதனை ஒருவரின் ஜாதகம் கொண்டு நாம் தீர்க்கமாக சொல்ல முடியும் என்று சாஸ்த்திர நூல்கள் கூறுகிறது. உதராணத்திற்கு சொல்ல வேண்டுமெனில் ஏழாமிடம் கொண்டு ஒருவரின் திருமண வாழ்க்கையையும், பத்தாமிடம் கொண்டு தொழிலையும் அறியலாம்.
ஜோதிடம் என்பது ஜோதிஷம் என்ற சொல்லின் தழுவல். ஜோதிஷம், சிஷா, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், கல்பம் ஆகிய ஆறும் நான்மறை அங்கங்கள் எனப்படும். இதில் சிஷா என்பது அஷரங்களை உச்சரிக்க வேண்டிய முறையையும், வியாகரணம் என்பது இலக்கணத்தையும் (சப்தங்களை உபயோகிக்கும் முறை), சந்தஸ் என்பது யாப்பு இலக்கணத்தையும் (கவிபாடும் முறை), நிருக்தம் என்பது சொல் இலக்கணத்தையும், கல்பம் என்பது கர்மாக்களை செய்யும் தந்திரத்தையும் குறிப்பவன ஆகும்.
ஜோதிஷம் இரண்டு வகைப்படும் என்பர். அவை
இதில் முதலாவது வகை வைதீக கர்மா அனுஷ்டானத்திற்கும், இரண்டாவது இந்த ஜென்மத்தின் நன்மை மற்றும் தீமை ஆகியவைகளை அறிந்து வினைப் பயனைப் பொறுத்து பரிகாரம் செய்ய வழி இருப்பின் அவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது.