- பாகற்காய் - கால் கிலோ,
- மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
- உப்பு - அரை டீஸ்பூன்,
- கடலைமாவு - 4 டீஸ்பூன்,
- கார்ன்ஃப்ளார் - ஒன்றரை டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
- எண்ணெய் - தேவையான அளவு
பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி, விதைகளை நீக்கிவிட்டு, உப்பு போட்டுப் பிசறிவையுங்கள். கால் மணி நேரம் கழித்து பிழிந்து எடுத்து, மிளகாய்தூள், உப்பு, கடலைமாவு, கார்ன்ஃப்ளார், பெருங்காயத்தூள் கலந்து பிசறி, உடனே எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
மிகவும் சுவையாக இருக்கும். கடைகளில் விற்கும் பாகற்காய் வறுவல் எல்லாம் தோற்றுவிடும்.
Similar Posts :
கோவைக்காய் வறுவல்,
சேனைக்கிழங்கு மிக்சர்,
மதியம் உணவு ,
குலாப் ஜாமூன்,
அரைக்கீரை உருளை சாப்ஸ், See Also:
பாகற்காய் சாப்ஸ் சமையல்