SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
  • 2024-06-22 00:00:00
  • admin

சுவாமி விவேகானந்தாவின் ஜாதக அலசல்

சுவாமி விவேகானந்தரின் ஜாதக அலசல்: ஆன்மீகத்தின் மீது மோகம் கொண்ட துறவியின் கோள்களின் கோலாட்டம்

 
Swami Vivekanandha - Research
ஜெனனீ ஜென்ம சௌக்கியானாம் வர்த்தனி குலசம்பதாம்
பதவிபூர்வ புண்யாணாம் லிக்யதே ஜென்ம பத்ரிகாஸ்ரீஸ்ரீ
பிறந்த தேதி/நேரம்
:
12-01-1863 06:20:00 AM
பாலினம்
:
 Male
 
லக்னம்
:
தனுசு
உதயாதி நாழிகை
:
  00:01:47
 
ராசி/நட்சத்திரம்
:
கன்னி-அஸ்தம் , பாதம் :  3
பிறந்த இடம்
:
 Kolkata
 
திதி சூன்யம்
:
தனுசு, கடகம்
அட்ச/தீர்க்க-ரேகை
:
 88.3697222 E/88.3697222 E
 
பஷம்-திதி
:
கிருஷ் / சப்தமி
பொதுநேரம்-திருத்தம்
:
 5.5
 
யோகம்-கரணம்
:
அதிகண்டம்/பவம்
சூரியஉதயம்
:
 06:19:16
 
தமிழ்படி கிழமை
:
திங்கள்
சூரிய அஸ்தமனம்
:
 05:10:45
 
தமிழ் தேதி
:
 துந்துபி-தை-1-
நஷத்திர எழுத்து
:
 பு, ஷ, ந, ட, பூ, மே
 
 
 
 
 
 
 
 
 
யோகம் அதிகண்டம் யோக நட்சத்திரம் அஸ்தம், யோகி சந்திரன் - அவயோக நட்சத்திரம் ரேவதி, அவயோகி புதன்
துல்லியமான நிராயன கிரக நிலைகள் (திருக்கணிதம்)
கிரகம்
பாகை-கலை
நட்சத்திரம்
பாதம்
நட்-அதிபதி
ராசி
பாகை-கலை
நிலை
சூரியன்
269:26:07
உத்ராடம்
1
சூரியன்
தனுசு
தனுசு
நட்பு
சந்திரன்
167:32:47
அஸ்தம்
3
சந்திரன்
கன்னி
மிதுனம்
நட்பு
செவ்வாய்
06:19:55
அசுவினி
2
கேது
மேஷம்
ரிஷபம்
ஆட்சி
புதன்
281:47:22
திருவோணம்
1
சந்திரன்
மகரம்
மேஷம்
சமம்
குரு
184:01:09
சித்திரை
4
செவ்வாய்
துலாம்
விருச்சிகம்
பகை
சுக்கிரன்
277:07:00
உத்ராடம்
4
சூரியன்
சூரியன்
மீனம்
நட்பு
சனி
163:34:42
அஸ்தம்
2
சந்திரன்
கன்னி
ரிஷபம்
நட்பு
ராகு
232:15:05
கேட்டை
2
புதன்
விருச்சிகம்
மகரம்
உச்சம்
கேது
52:15:05
ரோகிணி
4
சந்திரன்
ரிஷபம்
கடகம்
நீச்சம்
மாந்தி
41:26:07
ரோகிணி
1
சந்திரன்
ரிஷபம்
மேஷம்
........
லக்னம்
268:39:52
உத்ராடம்
1
சூரியன்
தனுசு
தனுசு
........
 
 
 
செவ்
 
கேது
மா
 
 
 
ராசி
 
புத
சுக்
 
 
லக்
சூரி
 
ராகு
 
குரு
 
சந்
சனி
 
 
 
சுக்
புத
மா
செவ்
சனி
சந்
 
நவாம்சம்
கேது
ராகு
 
லக்
சூரி
குரு
 
 
 
 
சந்திர தசை இருப்பு  04 வருடம் 04 மாதம் 02 நாள்
 
சுவாமி விவேகானந்தர், ஜனவரி 12, ஆயிரத்து எட்நூற்று அறுபத்தி மூன்றில் பிறந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா, இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.  விவேகானந்தர் மதத்தை தாண்டி சீர்திருத்தவாதிகளின் நன் மதிப்பையும் பெற்றவர்
 
ராசியில்,
ஒன்றாம்  வீடு (லக்னம்), தனுசு. இதில் சூரியன் உள்ளார். இந்த வீட்டின் அதிபதி குரு
சந்திரன் இருக்கும் வீடு (ராசி), கன்னி, இந்த வீட்டின் புதன்
இரண்டாம்  வீட்டில் ராகு,  இந்த வீட்டின்  அதிபதி சனி
மூன்றாம்  வீட்டில்  மாந்தி, இந்த வீட்டின்  அதிபதி  சனி
நான்காம்  வீட்டில்  சனி வக்கிரம் , இந்த வீட்டின்  அதிபதி  குரு
ஐந்தாம்  வீட்டில்  குரு வக்கிரம், இந்த வீட்டின்  அதிபதி  செவ்வாய்
ஆறாம்  வீட்டில்  ஒரு  கிரகமும் இல்லை, இந்த வீட்டின்  அதிபதி  சுக்கிரன்
ஏழாம்  வீட்டில்  செவ்வாய், இந்த வீட்டின்  அதிபதி புதன்
எட்டாம்  வீட்டில்  கேது, இந்த வீட்டின்  அதிபதி சந்திரன்
ஒன்பதாம்  வீட்டில்   கிரகமும் இல்லை,  இந்த வீட்டின்  அதிபதி  சூரியன்
பத்தாம்  வீட்டில்  புதன்,  இந்த வீட்டின்  அதிபதி புதன்
பதினொன்றாம்  வீட்டில் சூரியனும், சந்திரனும் , இந்த வீட்டின்  அதிபதி சுக்கிரன்
பன்னிரெண்டாம்   வீட்டில் சுக்கிரன், இந்த வீட்டின்  அதிபதி  செவ்வாய்
 
நவாம்சத்தில்,
ஒன்றாம்  வீடு (லக்னம்), தனுசு. இதில் சூரியன் உள்ளார். இந்த வீட்டின் அதிபதி குரு
சந்திரன் இருக்கும் வீடு (ராசி), மிதுனம், இந்த வீட்டின்  அதிபதி  புதன்
இரண்டாம்  வீட்டில் ராகு,  இந்த வீட்டின்  அதிபதி சனி
மூன்றாம்  வீட்டில்  ஒரு  கிரகமும் இல்லை, இந்த வீட்டின்  அதிபதி  சனி
நான்காம்  வீட்டில்  சுக்கிரன் , இந்த வீட்டின்  அதிபதி  குரு
ஐந்தாம்  வீட்டில்  புதன், இந்த வீட்டின்  அதிபதி  செவ்வாய்
ஆறாம்  வீட்டில்  சனி,செவ்வாய், இந்த வீட்டின்  அதிபதி  சுக்கிரன்
ஏழாம்  வீட்டில்  சந்திரன், இந்த வீட்டின்  அதிபதி புதன்
எட்டாம்  வீட்டில்  கேது, இந்த வீட்டின்  அதிபதி சந்திரன்
ஒன்பதாம்  வீட்டில்    ஒரு   கிரகமும் இல்லை,  இந்த வீட்டின்  அதிபதி  சூரியன்
பத்தாம்  வீட்டில்  ஒரு   கிரகமும் இல்லை ,  இந்த வீட்டின்  அதிபதி புதன்
பதினொன்றாம்  வீட்டில்  ஒரு   கிரகமும் இல்லை , இந்த வீட்டின்  அதிபதி சுக்கிரன்
பன்னிரெண்டாம்   வீட்டில் குரு , இந்த வீட்டின்  அதிபதி  செவ்வாய்
 
கிரக சேர்க்கைகள் 
புதன்,சுக்கிரன், சேர்க்கை.
கேது,மாந்தி, சேர்க்கை.
சந்திரன்,சனி, சேர்க்கை.
 
மறைவு ஸ்தானத்திலுள்ள கிரகங்கள் .
ராகு லக்னத்துக்கு 12 இல் மறைவவில் உள்ளது .
 
ஜாதகத்தில்  சூரியன் நட்பு வீட்டில் உள்ளது,சந்திரன் நட்பு வீட்டில் உள்ளது,குரு பகை வீட்டில் உள்ளது,சுக்கிரன் நட்பு வீட்டில் உள்ளது,
 
கிரக பார்வைகள் 
சூரியன் தனுசு ராசியில் இருந்துக் கொண்டு, ( ஏழாம் பார்வையாக )மிதுனம் ராசியை பார்க்கிறார்
செவ்வாய் மேஷம் ராசியில் இருந்துக் கொண்டு,நான்காம் பார்வையாக கடகம் ராசியையும், ( எட்டாம் பார்வையாக )விருச்சிகம் ராசியை பார்க்கிறார். ( ஏழாம் பார்வையாக )துலாம் ராசியை பார்க்கிறார்
புதன் மகரம் ராசியில் இருந்துக் கொண்டு, ( ஏழாம் பார்வையாக )கடகம் ராசியை பார்க்கிறார்
குரு துலாம் ராசியில் இருந்துக் கொண்டு, ஐந்தாம் பார்வையாக கும்பம் ராசியையும், ( ஒன்பதாம் பார்வையாக )மிதுனம் ராசியை பார்க்கிறார். ( ஏழாம் பார்வையாக )மேஷம் ராசியை பார்க்கிறார்
சுக்கிரன் மகரம் ராசியில் இருந்துக் கொண்டு, ( ஏழாம் பார்வையாக )கடகம் ராசியை பார்க்கிறார்
சனி கன்னி ராசியில் இருந்துக் கொண்டு,மூன்றாம் பார்வையாக விருச்சிகம் ராசியையும், ( பத்தாம் பார்வையாக )மிதுனம் ராசியை பார்க்கிறார். ( ஏழாம் பார்வையாக )மீனம் ராசியை பார்க்கிறார்
 
கிரக பரிவர்த்தனை 
கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது ஒருவகை யோகமாகும். பரிவர்த்தனை பெறுவதால் இரண்டு கிரகமும் ஸ்தான பலம் பெறுவதோடு அவை அளிக்கும் பலனிலும் மிகையாகிறது. அதனால் ஜாதகரின் மேலான பலன்களுக்கு பரிவர்தனை துணை புரியும். ஆனால் அந்த பலனை பெற பரிவத்தனை பெற்றுள்ள கிரகங்களின் தசை நடை முறைக்கு வரவேண்டும். இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று இடம் மாறி வீற்றிருப்பது பரிவர்த்தனை ஆகும். இதனை பரிவர்த்தனை யோகம் என்று கூறுவார்கள். இதில் 3 வகையான பரிவர்த்தனை உள்ளது. சுபர்/சுபர், சுபர்/பாவர் மற்றும் பாவர்/பாவர் பரிவர்தனை. லக்கினத்திற்கு நன்மை செய்யும் இரு கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றி கொண்டால் அது ஜாதகருக்கு மிகுந்த நன்மை. சுபர்/பாவர் மற்றும் பாவர்/பாவர் பரிவர்த்தனை நன்மைகளுக்கு பதிலாக அதிக தீமை செய்யும் அமைப்பு உருவாகும் அந்த கிரகத்தின் திசா புத்தி காலத்தில். எப்போதும் கிரகங்கள் நட்பு நிலைக்கு கீழ் செல்லும் பொழுது மட்டுமே கெடுபலன்கள் தரும் அமைப்பில் இருக்கும். எனவே இரு கிரகங்கள் தங்கள் வீடுகளை பறிமாரிக்கொள்ளும் அமைப்பு பரிவர்த்தனை யோகம் என்றே கூறப்பட்டுள்ளது.. இந்த ஜாதகத்தில்
 
  • 7ம் அதிபதி,10ம் அதிபதியாகிய புதன், 2ம் அதிபதி,3ம் அதிபதியாகிய சனி உடன் பரிவர்த்தனை
  • லக்னாதிபதி நான்காம் அதிபதியுடன் பரிவர்த்தனை
  • இரண்டு கேந்திராதிபதிகள் பரிவர்த்தனை  அறிவாற்றலைத்  தரும்
 
வர்கோத்தமம்
வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! ஒரு கிரகம் வர்கோத்தமம் பெற்றால் அது வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகருக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். இது தவிர, வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும் . உங்கள் ஜாதகத்தில்
சூரியன், தனுசு ராசியில் வர்கோத்தமம் பெற்றுள்ளது
சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகருக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.
 
  • லக்னாதிபதி லக்னத்தில் வர்கோத்தமமானால் ஜாதகர் மன உறுதியுடன் இருப்பார்
  • லக்னம், தனுசு ராசியில் வர்கோத்தமம் பெற்றுள்ளது
ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்! லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகர் நீண்ட ஆயுளூடன் இருப்பார்!   ஆனால் இந்த ஜாதகருக்கு இது சாத்தியமில்லாமல் போனது. ஏனெனில்  உபய லக்னம் என வர்ணிக்கப்படும் தனுசு லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும், புதன், சுக்கிரன் இந்த இரண்டு மாரகாதிபதிகளும் 2ல் சேர்ந்து அமர்ந்து ஆயுள் ஸ்தானமான 8 ஆம் வீட்டை பார்ப்பதால் ஜாதகருக்கு  ஆயுள் குறைவு.
 
  • லக்னாதிபதி லக்னத்தில் வர்கோத்தமமானால் ஜாதகர் மன உறுதியுடன் இருப்பார்
  • லக்னாதிபதி குரு 11 ஆம் இடத்தில இருந்தால். தெளிவான் சிந்தனை  இருக்கும்
 
லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால் (11ல் அமர்ந்தால்) செய்யும் முயற்சிகளுக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கும். பதினொன்றில் அமர்ந்த லக்கினாதிபதியால், தான் பிறந்த நோக்கத்தை அவர் சர்வ சாதாரணமாக நிறைவேற்றி விட்டுப்போனார்
 
லக்கினத்தில் சூரியன் இருந்தால்   நல்ல உடற்கட்டையும் தோற்றத்தையும் உடல் வலிமையையும் கொண்டிருப்பார்கள். சூரியன் அரசு கிரகம். ஆதலால் மதிப்பு, மரியாதை, புகழ் என்று அனைத்தையும் வழங்குபவர் இவரே
 
சந்திரன் 10-ல் இருந்தால் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும் தைரியத்தை தருவார். வாழ்க்கையில் பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டுபண்ணுவார்
 
ஜாதகத்தில் 2 அல்லது 11 இல் சுக்கிரன் இருந்தால் தர்ம காரியங்களில் விருப்பமும் ஆன்மீக காரியங்களில் ஈடுப்பாடும் இருக்கும்
 
லக்கினத்திற்கு 2ம் இடம் வாக்கு ஸ்தானம் எனப்படும். இந்த 2ம் இடத்தில் புதன் அமர்ந்து இருந்தாலும், 2ம் இடத்தில் இருக்கும் புதனை சுபகிரகங்கள் எனப்படும் குரு, சந்திரன், சூரியன் பார்த்தாலும் அவர்கள் சொற்பொழிவாளர்களாக, பேச்சாளர்களாக,   மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள்.  இவர்களின்  பேச்சு நன்றாக இருக்கும், பேச்சுக்கு மதிப்பு இருக்கும்
 
ராகு 12 ஆம் வீட்டில் இருந்தால்  முழுமையான நித்திரை சுகம் இருக்காது, தேசம் முழுவதும் பயணிப்பார். பல உலக நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பும் உண்டு
 
சுக்கிரன் 2 ஆம் விட்டில் இருந்தால் நல்ல பேச்சு திறமை இருக்கும்
 
சனியின் தொடர்பு 10 ஆம் ஸ்தானத்திற்கும், 10 ஆம் ஸ்தானத்தின் தொடர்பு சனிக்கும் பலமாக இருந்தால், தொழிற்சாலை, நிறுவனம், அறக்கட்டளை, மடம் போன்றவற்றை நிறுவுவார்கள்.
 
 
ஜாதகத்தில் 2 அல்லது 11 இல் சுக்கிரன் இருந்தால் தர்ம காரியங்களில் விருப்பமும் ஆன்மீக காரியங்களில் ஈடுப்பாடும் இருக்கும்
 
லக்கினத்தில் சூரியன் இருந்தால்  நல்ல உடற்கட்டையும் தோற்றத்தையும் உடல் வலிமையையும் கொண்டிருப்பார்கள். சூரியன் அரசு கிரகம். ஆதலால் மதிப்பு, மரியாதை, புகழ் என்று அனைத்தையும் வழங்குபவர் இவரே.
 
 
கேது 6 ஆம் வீட்டில் இருந்தால் பகைவர்கள் இருக்கமாட்டார்கள்
 
 
சுக்கிரன் 2 ஆம் விட்டில் இருந்தால் நல்ல பேச்சு திறமை இருக்கும்
 
சூரியனோ (அ) சந்திரனோ (அ) இருவருமே லக்கினத்திலோ (அ) 4,7,10 எனும் கேந்திரத்திலோ இருந்தால் அந்த ஜாதகம் அதிக பலம் நிறைந்தது என்று பொருள்.
 
கமகாரகன் சனி பத்தில் அமர்ந்தால், ஜாதகன் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவான். சாதனைகள் செய்வான்.செயல்களை முடிக்கும் உத்வேகம் இருக்கும். சமூகத்தில் பிறர் போற்றும் படி வாழ்வார்.  புண்ணிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். சமயம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு இருக்கும்
 
ஜாதகத்தில் சூரியன் இருக்குமிடம் தனுசாக இருந்தால் உயர்ந்த எண்ணங்களையும் சிறந்த லட்சியங்களையும் கொண்ட கர்வம் நிறைந்தவர் கண்டிப்பினாலும் கடும் முயற்சியாலும் சில அரிய சாதனைகளைச் செய்து அதற்காக பாராட்டுக்களையும் பெறுவார்கள். பழைய அரிய இலக்கியங்கள் படிப்பதிலும் சங்கீதத்திலும் ஆர்வம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு அதிகம் புனிதமான பெரியவர்களை மரியாதையோடும் கௌரவரவமாகவும் நடத்துவார்கள்.
 
பாக்கிய ஸ்தான (9ஆம் வீட்டு அதிபதி) லக்கினத்தில் அமர்ந்தால் எல்லா பாக்கியங்களும், பெருமைகளும், புகழும் ஜாதகனைத் தேடி வரும். இந்த ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டதிபதி சூரியன் லக்னத்தில் அமர்ந்துள்ளார்.
 
லக்கின கேந்திரத்தில் சந்திரன் இருந்தால் அழகான தோற்றம் உடையவராகவும் அன்புள்ளம் கொண்டவராகவும்,   தாயாரின் அன்பிற்குரியவராகவும் ஜாதகர் இருப்பார்.
 
லக்கின கேந்திரத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் இயக்க ஆற்றல் உடல் பலம் பெற்றவராக  இருப்பார்
 
இரண்டாம் வீட்டு அதிபதி, சனி, பத்தில் அமர்ந்தால், ஜாதகர் தனக்காக வாழ்வதை விட மக்களுக்காக பயன்படும் படி தன் வாழ்க்கையை அர்பணிப்புடன் வாழ்வார்.
 
சனியும், கேதுவும் சுக்கிரனுக்கு 5, 9 ல் அமர்ந்ததால் ஜாதகருக்கு திருமண‌ம் பந்தம் அரிது  என நாடி சோதிடத்தின் மர்மங்கள் என்ற புத்தகத்தில் எஸ் .ரவி என்பவர் கூறியுள்ளார்.
 
அருணனு மழகு மதியுங் கேந்திர மேறுகின்ற போதில் கீர்த்தி மேவ, கார்முகில் களைந்து கலைமதி, பார்புகழ் வாழ்வு தருமுணர்
இதன் பொருள்: சூரியனும், சந்திரனும் லக்கினத்திற்கு 1,4,7,10 என்கிற கேந்திரத்தில் நின்றுவிடில் கீர்த்தி பெற்ற மனிதராவார்
 
சந்திரன் 10 -ல் இருந்தால் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார்
 
11ல் குரு இருக்கப் பிறந்தவர்கள், ஆன்மிகத் துறையில் ஈடுபாடு கொள்வார்கள்
 
இலக்கினத்திற்குப் பத்தாமிடத்திற் குடையவனுடனே ஒரு ராசியில் மூன்று கிரகங்கூடினால் சந்யாசி யோயகமுண்டு. இரண்டு கிரகங்கூடினால் குணபேத ஜீரணமாயுஞ் சீர் கேடனுமாகப் போவான், ஒரு கிரகம் கூடினால் ஞானியாவான் என ஜம்புமகாரிஷி வாக்கியம் நூலில் கூறப்பட்டுள்ளது
 
சுக்கிரனுடன் புதன் சேர்ந்திருக்கப் பெற்றவர்கள் அன்பும் பாசமும் நிறைந்து மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். எப்போதும் நேர்மையுடன் நடந்துகொள்வார்கள். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு, வெற்றிவாகை சூடுவார்கள். நல்ல பேச்சாளர்கள். எவ்வளவு பெரிய விஷயமானாலும் எளிமையாக புரியவைக்கும் பேச்சுத்திறமையும், பேச்சுவதற்கு கான விஷய ஞானமும் பேச்சில் சாதுர்யமான வார்த்தை பிரயோகமும் இருக்கும். சிந்தித்துச் செயலாற்றும் திறன் கொண்ட இவர்களால் தோல்வியை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடியாது. இயல்பிலேயே நகைச்சுவை அனுபவம் மிக்க இவர்கள் கலகலப்பாகப் பேசிப் பழகுவார்கள். வாழ்க்கையில் அனைத்து சுக சௌகர்யங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும், சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சுக்கிரனுடன் புதன் சேர்ந்திருப்பவர்கள் விஷ்ணுவை வழிபடுவதும், விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.
சிலருக்கு தன் கைகளை கன்னத்தில் வைத்திருப்பது பிடிக்கும் அல்லது உறங்கும் போது கைகளை முட்டுகொடுத்து தூங்குவார்கள். இவர்கள் ஜாதகத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை இருக்கும் . (புதன் – கைகள்,சுக்கிரன் – கன்னம், முகம்)
 
 
லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால் செய்யும் முயற்சிகளுக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கும்.  பதினொன்றில் அமர்ந்த லக்கினாதிபதியால், தான் பிறந்த நோக்கத்தை எளிதில் நிறைவேற்றுவார்.
 
பாக்கிய ஸ்தானாதிபதி லக்கினத்தில் அமர்ந்தால் எல்லா பாக்கியங்களும், பெருமைகளும், புகழும் ஜாதகரைத் தேடி வரும்
 
 
சந்திரன், சனி ஒன்பதாமிடத்திலும், மற்ற கிரகங்கள் எல்லாம் 1,4,10 ஆகிய வீடுகளிலும் அமைந்து இருந்தால் ஜாதகர் ஞானியைப் போன்று வாழ்வார்.
 
ஜாதகர் உபய லக்னம் என வர்ணிக்கப்படும் தனுசு லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும், புதன், சுக்கிரன் இந்த இரண்டு மாரகாதிபதிகளும் 2ல் சேர்ந்து அமர்ந்து ஆயுள் ஸ்தானமான 8 ஆம் வீட்டை பார்ப்பதால் குறைவான ஆயுள் பெற்று குருவின் திசையிலேயே, 1902ஆம் ஆண்டு ஜூலை மாதம்  4ஆம் தேதி - தனது 39ஆம் வயதில் அவர் முக்தியடைந்தார் மோட்சத்தையும் அடைந்தார்.


Similar Posts : நரேந்திர மோடி ஜாதகம் ஓர் அலசல், மொராஜி தேசாய் ஜாதகம்-ஓர் அலசல், மு.க.ஸ்டாலின் ஜாதகம் ஆய்வு, எம்.ஜி.ஆர் ஜாதக அலசல், கலைஞர் கருணாநிதி ஜாதகம்,

See Also:விவேகானந்தர் ஆராய்ச்சி

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Character based on Astrological Signs
2020-10-06 00:00:00
fantastic cms
Benefits of Pidhur Dhosa Worship
2020-10-06 00:00:00
fantastic cms
Temple that emits talking sound
2020-10-06 00:00:00
fantastic cms
தனுசு ராசிக்காரர்கள்
2020-10-06 00:00:00
fantastic cms
Hate Vs Fate Vs Haste
2020-10-06 00:00:00
fantastic cms
Basic Vedic Astrology Rules
2020-10-06 00:00:00
fantastic cms
செவ்வாய் சனி சேர்க்கை
2020-10-06 00:00:00
fantastic cms
Top 100 Books to Learn Astrology
2020-10-06 00:00:00
fantastic cms
நவாம்சம் கட்டம்
2020-10-06 00:00:00
fantastic cms
தசையும் போதக, வேதக, பாசக, காரக காரர்களும்
2020-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • Abishegam
  • After Death
  • Aries
  • Ascendant
  • Astrology
  • Astrology originate
  • astrology software
  • astrology-match-making-chart
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology Software
  • best-astrology-software
  • Bodhidharmas Guru
  • Chandiran
  • Chandran
  • Chhajju Bania
  • Chicken Biryani in English
  • Hinduism
  • Mangal Singh's NDE
  • Mercury
  • software
  • Tamil astrology software
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Indira Gandhi Birth Chart Analysis
    2024-06-19 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com