வீரப்பன் பிறப்பு ஜாதகம் - ஓர் அலசல்
வீரப்பனின் லக்னம் கும்பம். லக்னாதிபதி சனி. கும்பம் ஒரு ஸ்திர ராசியாகும். இதனை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் மனவுறுதி மிக்கவர்கள். விடாமுயற்சி உடையவர்கள். கடுமையாக உழைப்பவர்கள்.. வீரப்பனின் ராசி கன்னி. ராசியாதிபதி புதன். இது ஒரு உபயராசி ஆகும். நட்சத்திரம் உத்திரம், பாதம் நான்கு. வீரப்பனின் ஜாதகத்தில்.
ஒன்றாம், பன்னிரண்டாம் பாவாதிபதி சனி.
இரண்டாம், பதினொன்றாம் பாவாதிபதி குரு.
மூன்றாம்,பத்தாம் பாவாதிபதி செவ்வாய்.
நான்காம்,ஒன்பதாம் பாவாதிபதி சுக்கிரன்.
ஐந்தாம்,எட்டாம் பாவாதிபதி புதன்.
ஆறாம்,ஏழாம் பாவாதிபதி சந்திரன்.
ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது. ஆறாம் வீடு எதிரிகளுக்கான இடம். இதில் வீரப்பனின் ஜாதகத்தில் 38 பரல்கள் உள்ளது. இதில் இருந்த மிக அதிகப்படியான பரல்கள் அவருக்கு எதிரிகளுடன் போராடும் சக்தியை கொடுத்தது.
வீரப்பணினி ஜாதகத்தில் சனியும் சந்திரனும் லக்னத்துக்கு 8 லும்,சூரியன் லக்னத்துக்கு 12 லும் மறைந்து உள்ளது . மற்றும் சூரியன்,கேது பகை வீட்டிலும்,சந்திரன் நட்பு வீட்டிலும், குரு ஆட்சியாகவும்,சந்திரன், சனி நட்பாகவும் உள்ளது. மேலும் ராகு,மாந்தி சேர்க்கையும், சந்திரன்,சனி, சேர்க்கையையும் காணலாம்.
லக்கினத்திலிருந்து ராகு ஒன்றாம் பாவகத்தில் இருப்பதாலும், ஒன்று ஏழில் ராகு கேது இருப்பதாலும், உடல் மெலிந்து காணப்ட்டார். இருந்தாலும் உடல் பலமிக்கவர். முன் கோபக்காரார்.பிடிவாதமும் கொண்டவர்.ஈவு இரக்கம் அற்றவர். லக்னத்தில் ராகு, ஏழில் கேதுவுடன் பிறந்ததால் வீரப்பன் பிறக்கும் போதே ராகு தோசத்துடன் பிறந்தார். லக்ன ராகு, வீரப்பனை நல்லவராக பிரகாசிக்க இயலாமல் செய்தார். உதய லக்கன ராகு, முகத்தில் மச்சம் உண்டு, என்பது பொது கருத்து.
இலக்னாதிபதி, சனி மற்றும் 6 ஆம் அதிபதி இணைவு எதிரிகளால் கண்டம் ஏற்பட்டது.
லக்கினத்திலிருந்து கேது ஏழாம் பாவகத்தில் இருந்தால் ஆனந்த கால சர்ப்பயோகம் என்பர். இதனால் வீரப்பன் துணிச்சல் மிக்கவராகவும், முரட்டுத்தனமுள்ளவராகவும், கொடூர சிந்தையுள்ளவர்ரகவும் இருந்தார். எதற்கும் துணிந்தவராயிருந்தார். பிறரைத் துன்புறுத்தவும் எந்த பழி பாவத்திற்கும் அஞ்சாதவராயிருந்தார். யாருக்கும் அடங்காதவராயிருந்தார். லக்னாதிபதி வலுவாக சுப பலம் பெற்றிருந்தால் வீரப்பனின் குணம் மாறியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் லக்னாதிபதி சனி எட்டில் மறைந்து பலவீனமாகிவிட்டதால் எந்த பயனும் இல்லாமல் போனது.
புலிப்பாணி 300, பாடல் 46ல், குரு இரண்டாம் வீட்டில் இருந்தால், செந்திருமால் தன் தேவியுடன் ஜாதகரின் மனையில் வாழ்வார்கள். மேலும் ஜாதகர் பூமியில் வெகு பேரை ஆதரிப்பார் என்று கூறியுள்ளார். அது போன்றே வீரப்பனால பயனடைந்தோரும் பலர் உண்டு. வாக்கு எனப்படும் இரண்டாம் வீட்டில், குரு தன் வீட்டிலேயே ஆட்சியாக இருந்ததால், வீரப்பன் எப்போதும் உண்மை பேசுபவராகவே இருந்தார். அது மட்டுமின்றி அவரின் பேச்சால் ஊடகங்களின் மூலம் மக்களிடம் மிக அறியப்பட்ட ஒரு நபராய் விளங்கினார். குருவை ஆறாம் பாவாதி சந்திரன் பார்வை செய்ததால், குருசந்திர யோகம், குறுக்கு வழியில் அதிக செல்வம் கொடுத்தது.
மூன்றாம் அதிபதி செவ்வாய், ஏழாம் பார்வையாக தன் மூன்றாம் வீட்டையே பார்த்ததால், பிடிவாதம், வறட்டு தைரியம், வீரம், அச்சமின்மை, முரட்டு சுபாவம் போன்ற குணங்களை கொடுத்தது.
நான்காமதிபதி சுக்கிரன் 10ல் அமர்ந்து கேந்திராதிபத்ய தோசம் பெற்று, சனி மற்றும் செவ்வாய் பார்வையுடன் அமைந்ததால் சுகாதிபதி சுகம் கெட்டு வீட்டை விட்டு வெளியேறி, வீடு, மனை, வாகனயோகமின்றி காட்டில் மறைந்து வாழ்ந்தார்.
5ம் பாவத்தை, அலி கிரகமாகிய புதனும்,சனியும் பார்த்ததால் வீரப்பனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே நிலைத்தது.,
லக்கினத்திலிருந்து சந்திரன் எட்டாம் பாவகத்தில் இருந்ததால் உற்றார் உறவினாகளின் வெறுப்புக்கும் பகைக்கும் ஆளாக நேர்ந்தது.
விருச்சிகத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி சொந்தத்தில் அமையும் என்ற பொது கருத்திற்கேற்ப தன் சொந்தத்திலேயே முத்துலக்ஷ்மி என்னும் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். கும்ப லக்னத்தாருக்கு, பத்தாம் வீடான விருச்சிகம், ஜல ராசி ஆகும். இந்த வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருந்ததால் வீரப்பனுக்கு இல்வாழ்க்கை அமைப்பு இல்லமால் போனது.
லக்னாதிபதி சனி எட்டாம் இடத்தில இருந்ததால் வீரப்பன் பற்பல துன்பத்திற்கு ஆளானார். மரணத்திற்கு ஒப்பான உபாதை இருந்து வந்தது. லக்னாதிபதி எட்டாம் இடத்தில் இருந்தாலும், பார்த்தாலும் அமானுஷ்ய சக்தியின் ஈடுபாடு இருக்கும். இவர்கள் எப்போதும் கையில் ஏதாவது ஒரு மருந்துப் பொருள் வைத்திருப்பார்கள். மருந்து விஷயங்களில் இவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கும்.
ஆறாம் பாவாதி நோய்,கடன்,விபத்து,வம்பு,வழக்கு,திருட்டு,கொள்ளை என தீயப்பலனை வழங்குபவர். லக்னாதிபதி சனி, ஆறாம் அதிபதி சந்திரன் சாரம் பெற்று,சந்திரனோடு இணைந்து எட்டில் மறைந்து விட்டதால் கொள்ளை, திருட்டு போன்ற தொழிலில் ஈடுபட்டார். அதனால் சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டார் என்று போலீஸ், கோர்ட்,கேஸ் என பல இன்னல்களுடன்,தேடப்படும் குற்றவாளி ஆனார். புலிப்பாணி 300, பாடல் 54ல், உபயராசியில் ஜனித்த ஜாதகருக்கு அரசர் பகை சேரும் என்று கூறியுள்ளார்.
சனியும் சந்திரனும் சேர்ந்து எட்டில் மறைந்ததால், காட்டில் மறைந்து வாழ்கிறார்.சனி சந்திரன் இணைவு சுகத்திற்கு கேடு. இதனை சாமியார் ஜாதகம் என்பார்கள். துறவிகள் தவமியற்ற அமைதியான இடம் தேடி மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க காட்டில் இருந்ததை போல, வீரப்பன் தன்னை மற்றவர்களிடம் இருந்து காத்துக்கொள்ள காட்டில் மறைந்து வாழ்ந்தார். எழாமதிபதி சூரியன், பன்னிரண்டில் மறைந்ததாலும், கேது ஏழாமிடத்தில் அமைந்ததும், வீரப்பன், தன் மனைவியை விட்டு பிரிந்திருக்க செய்தது.
ஏழாம் அதிபதி பன்னிரெண்டில் இருந்ததால் வீரப்பனின் இறப்பு பிறந்த ஊரில் இல்லாமல் வெளி ஊரில் நிகழும். ஜோதிடத்தில் 22வது திரிகோணத்தின் படி எட்டாமிடபதிபதி அமைந்த இடம், வீரப்பனின் இறப்பு, ஆயுதங்கள் மற்றும் விஷம் தொடர்பாக அமையும் என்று கூறப்பட்டுள்ளதைப் போலவே அமைந்தது. அவர் உயிருடன் பிடிப்படுவதை விட இறந்தபின் பிடிக்கப்படவே வாய்ப்பு அதிகம்.
லக்கினத்திலிருந்து செவ்வாய் ஒன்பதாம் பாவகத்தில் இருந்ததால் பழிக்குப் பழி வாங்கும் சுபாவமிருந்தது. அதற்காக எத்தகைய எதிர்ப்பையும் தன் நலனுக்காகவும் பிறர் நலனைக்கெடுக்கவும் அஞ்சாமல் வாழ்ந்தார். தன்னை சார்ந்தவர்களை காப்பதில் கருத்தாய் இருந்தார். செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருந்தால் குடும்பத்தை விட்டு பிாிந்திருக்க நேர்ந்தது. அது மட்டுமின்றி வாழ்வில் எப்போதும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருந்தது. செவ்வாய் வீரப்பனை கொடிய செயல்கள் செய்ய வைத்தது.
லக்கினத்திலிருந்து பனிரெண்டாம் பாவகத்தில் சூரியன் விரையத்தில் இருந்ததால் சிறு வயதிலேயே தந்தையை இழக்க நேர்ந்தது. கண்பார்வைக் கோளாறும் ஏற்பட்டது. அது மட்டுமின்றி அரசுக்கு எதிரான வேலைகளைச் செய்ய வைத்தது. மகாத்மா காந்தி ஜாதகத்திலும் இதே அமைப்பு இருந்தது. மேலும் வாழ்க்கையே போராட்டமாக இருந்தது, வழக்குக்குகளை சந்தித்து, தண்டனை பெற செய்தது. வீரப்பன் ஜாதகத்தில் பித்ருகாரகன் சூரியன் அவனுடைய சுயவர்க்கத்தில் 4 பரல்களுடன் உள்ளார். சுயவர்க்கத்தில் பரல்கள் குறைவாக இருந்ததாலும் கிரிமினல் வேலையைச் செய்து சிறை செல்ல வாய்ப்பை ஏற்படுத்தியது எனக் கூறலாம். இதே நிலை தான் தாரதோசத்தையும் கொடுத்தது. 12-ல் சூரியன் அமர்ந்து, சயன ஸ்தானத்தை செவ்வாய் பார்த்ததால், சுகமான நித்திரை இல்லாமல் போனது.
பதினொன்றாம் வீட்டதிபதி, இரண்டாம் வீட்டில் அமர்ந்ததால் வீரப்பனின் குடும்பத்தினர் நிம்மதி இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இருப்பினும் தனவானாகிய குரு தன் வீட்டில் ஆட்சியாக இருத்தால் கோடிகளை அள்ளிக் கொடுக்க செய்தார்.
சந்திரன், சனி எங்கு சேர்ந்து இருந்தாலும் நிஷ்டூர யோகம் ஏற்படும். இந்த யோகம் உள்ளவர்கள் கடுமையாகப் பேசக்கூடியவர்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
9,10ம் அதிபதிகள் பரிவர்த்தனையால் தர்ம கர்மாதிபதி யோகம் பெற்று பலருக்கு தானம் செய்ய வைத்து பெயரையும், புகழையும் கொடுத்தது. 10ல் சுக்ரன் நின்று சனி மற்றும் குருவின் பார்வையால் யானைகளை கொன்று தந்தம் எடுக்க வைத்ததுடன்,வாசனை அலங்காரப் பொருளான சந்தன மரம் மூலமும் வருமானம் கிடைத்தது.
ஆயுள் ஸ்தானம் என்னும் 8ல் சனி,சந்திரன் நின்றதால், எட்டாம் பாவம் பாவகத்தரி யோகம் பெற்று, 2004ல் சனி திசையில் துப்பாக்கியால் சுடப்பட்டு துர்மரணத்தை அடைந்தார்.
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பஞ்சமி திதியில் மரணம் ஏற்படும் என்பது பொது கருத்து. அது போன்றே வீரப்பனின் மரணமும் நிகழ்ந்தது ஆச்சரியமே. இவரது ஜாதகத்தில் உள்ள, குரு சந்திர மற்றும் தர்ம கர்மாதிபதி யோகங்கள் இவர் இறந்த பிறகும் மற்றவர்கள் இவரைப் பற்றி பேசும்படி செய்கிறது.
Similar Posts :
நடிகர் மோகன்லால் பிறப்பு ஜாதகம்: ஓர் அலசல்,
ஜாதகர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரா,
இரட்டைக் குழந்தை பிறப்பு பற்றி ஜோதிடம்,
நடிகை மனீஷா கொய்ராலா ஜாதகம் அலசல்,
ஹிட்லரின் ஜாதகம் ஆய்வு, See Also:
வீரப்பன் ஆராய்ச்சி