SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Astrology Basics (Tamil)
  3. Cancer 2026 Marriage and Family Predictions
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
  • 2024-08-06 00:00:00
  • Shasunder

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்

Share this post

f ✓ X in ↗ ⧉

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?

என்ன படிச்சாலும் சரிதான்... எப்படியாவது அரசாங்க வேலையில போய் உட்கார்ந்துடணும்’’ என்று சிம்ம ராசிக்காரர்கள் பள்ளி இறுதியிலேயே முடிவெடுப்பார்கள். அதற்கேற்றபடி எல்லாவித அரசுத் தேர்வுகளிலும் கலந்து கொள்வார்கள். உத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசிக்குள் வருகிறது. மீதி மூன்று பாதங்கள் கன்னி ராசிக்குள் வருகின்றன. சிம்ம ராசிக்குள் இருக்கும் முதல் பாதத்தைப் பற்றிப் பார்ப்போம். முதல் பாதத்தின் அதிபதியாக குரு வருகிறார். சிம்மத்திற்கு அதிபதி சூரியன். உத்திர நட்சத்திரத்தை ஆள்வதும் சூரியன்தான். இவ்வாறு சூரியனின் இரட்டிப்பு சக்தியோடு குரு சேருவதை சிவராஜ யோகம் என்பார்கள். இவர்கள் பல்துறை அறிஞராக பிரகாசிப்பார்கள். எதையுமே சொல்லிப் புரிய வைக்காது, அவர்களாகவே புரிந்து கொள்ளட்டும் என்று நினைப்பார்கள்.

ஐந்து வயது வரை சூரிய தசை நடைபெறுகிறது. 6 வயதிலிருந்து 15 வரை சந்திர தசை நடக்கும்போது, பள்ளி வாழ்க்கை கொஞ்சம் சவாலாகவே இருக்கும். சந்திரன் விரய ஸ்தானாதிபதியாகவும், பன்னிரெண்டுக்கு உரியவனாகவும் வருவதால் எதிர்மறைப் பலன்கள் நிறைய நடைபெறும். 12 வயது வரை, ‘‘பையன் படிக்கவே மாட்டேங்கறான். என்ன பண்ணப் போறானோ’’ என்று கவலைகள் சூழும். ஆனால் அதன்பிறகும், 16 வயதிலிருந்து 22 வரை நடைபெறும் செவ்வாய் தசையிலும் சிறப்பாக இருக்கும். பத்தாம் வகுப்பிலிருந்து மதிப்பெண் உயரும். கல்லூரியில் அரசியல், நிர்வாகம். எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுங்கள். மருத்துவத் துறையில் எலும்பு, கண், மூளை தொடர்பான துறைகள் சரியாக வரும். எம்.பி.ஏ. படிப்பில் ஹெச்.ஆர்., பைனான்ஸ் துறைகள் ஏற்றவை. பொறியியலில் சிவில் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்.

 உத்திரத்தின் இரண்டாம் பாதத்தை சூரியன், புதன், மகரச் சனி ஆட்சி செய்கின்றனர். அதேபோல மூன்றாம் பாதத்தை சூரியன், புதன், கும்பச் சனி அதிபதியாக அமைந்து ஆள்கின்றனர். எனவே, இரு பாதங்களுக்கும் ஒட்டுமொத்தமான பெரிய மாற்றங்கள் இருக்காது; ஒரே மாதிரி பலன்கள்தான் இருக்கும். 4 வயது வரை சூரிய தசை நடைபெறும். சூரியன் விரயாதிபதியாக இருந்தாலும், நட்சத்திரத்தின் அதிபதியாக வருவதால் தந்தைக்கு இடமாற்றத்தைக் கொடுப்பார். எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஒரு பள்ளியிலும், ஒன்றாம் வகுப்பிலிருந்து வேறு பள்ளியிலும் படிப்பார்கள். 5 முதல் 14 வயது வரை சந்திர தசை நடைபெறும். சந்திரன் லாபாதிபதியாக வருகிறது. எனவே, வளர்பிறை சந்திரனில் பிறந்தவர்களுக்கு முதல் தர ராஜயோகம் உண்டு. இவர்களின் 6, 8, 12 வயதுகளில் பெற்றோருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, பின்பு மறையும். எட்டாம் வகுப்பு படிக்கும்போது மட்டும் நண்பர்களின் சகவாசத்தில் கவனம் வேண்டும். மொழிப் பாடங்களை மிகுந்த ஆர்வத்தோடு படிப்பார்கள். கணக்கு கசக்கும்.


15லிருந்து 22 வயது வரை செவ்வாய் தசை நடைபெறும். படிப்பைவிட அதிகமாக விளையாட்டு, ராணுவம் என்று சேரத்தான் ஆசைப்படுவார்கள். பொருளாதாரம், புள்ளியியல் போன்ற படிப்புகள் பலன் தரும். அதேபோல கட்டிடத் திட்ட வரைபடம், ஆர்க்கிடெக்ட், விஸ்காம் போன்ற படிப்புகள் சிறந்த எதிர்காலம் தரும். கலைத்துறை எனில் ஓவியம் மிக நன்று. விஸ்காம், டி.எஃப்.டெக். படிப்புகள் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கும். ஐ.ஏ.எஸ். தேர்வின் மீது உத்திர நட்சத்திரக்காரர்கள் ஒரு கண் வைப்பது நல்லது. நான்காம் பாதத்தை சூரியன், புதன், குரு போன்றோர்கள் ஈடு இணையற்ற வகைகளில் ஆள்கிறார்கள். இவர்களுக்கு எல்லாவற்றிலும் ஒரு சாதுர்யம் இருக்கும். கல்வியும் ஞானமும் சேர்ந்து பிரகாசிக்க வைக்கும். 1 வயது வரை சூரிய தசை நடைபெறும். 2 வயதிலிருந்து 11 வயது வரை சந்திர தசை நடைபெறும். நான்காம் பாதத்தின் அதிபதி குருவோடு சந்திரன் சேர்ந்து, குரு சந்திர யோகமாக மாற்றம் பெறும். 3 அல்லது 4ம் வகுப்பு படிக்கும்போதே கவிதை, கட்டுரை என்று எழுதி பரிசுகளை அள்ளுவார்கள். ஏறக்குறைய 8ம் வகுப்பிலிருந்து கல்லூரி வரையிலான காலகட்டங்களில் செவ்வாய் தசை வருவதால், படிப்பில் எந்தத் தடையும் இருக்காது. விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். குருவும் செவ்வாயும் நண்பர்களாக இருப்பதால், திடீர் திருப்பங்கள் நிகழும். நிர்வாகம் சார்ந்த படிப்பை கொஞ்சம் விரும்புவார்கள். குரு கூடவே இருப்பதால், தற்போதைய காலகட்டத்திற்கு எந்த படிப்பிற்கு மகத்துவம் உள்ளதோ அதைத் தேர்ந்தெடுத்து படிப்பார்கள். சிவில், எலக்ட்ரானிக்ஸ் நல்ல எதிர்காலம் தரும். மருத்துவத்தில் ஆர்த்தோ, பல், பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற படிப்புகள் ஏற்றவை. நிர்வாகம் சார்ந்த இளங்கலை படிப்பு பெரிய பதவி வரை கொண்டு போய் நிறுத்தும்.

உத்திர நட்சத்திரத்தின் அதிபதியாக சூரியனும், 2, 3 பாதங்களின் அதிபதியாக மகரச் சனியும், கும்பச் சனியும் வருகின்றன. 4ம் பாதத்தின் அதிபதியாக மீன குரு வருகிறது. பெரும்பாலும் சூரியனும், சனியும் இணைந்த அம்சமாகவே வரும். இந்த இரண்டினுடைய இணைவுதான் இவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. எனவே, சூரியனும் சனியும் இணைந்த அம்சமான ஈசனை வழிபடுதலே இந்த நட்சத்திரத்திற்கு ஏற்றதாகும். சனி என்றாலே பிரமாண்டத்தைக் குறிக்கிறது. லிங்கத்திலேயே மகாலிங்கம் என்றழைக்கப்படும் தலமே திருவிடைமருதூர். கோயிலும் பிரமாண்டமானது; லிங்கத்தின் அம்சமும் பிரமாண்டமானது. மகாலிங்கேஸ்வரரை வணங்குங்கள். கல்வியில் ஏற்றம் பெறுங்கள். கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.  
 


Similar Posts : உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்,

See Also:உத்திரம்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 16
  • Astrology Basics (English) 213
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

What Is Kama
What is Kama
2019-10-06 00:00:00
What Is Meant By Astrology
what is meant by astrology
2019-10-06 00:00:00
What Is Meant By Vimshothiri Dasa
What is meant by Vimshothiri Dasa
2019-10-06 00:00:00
What Is Om
What is Om
2019-10-06 00:00:00
What Is Sati
What is Sati
2019-10-06 00:00:00
What Is Sivalinga
What is Sivalinga
2019-10-06 00:00:00
What Is Vishwakarma
What is Vishwakarma
2019-10-06 00:00:00
What Religion Says
What Religion Says
2019-10-06 00:00:00
What Science Says About Death
What Science Says about Death
2019-10-06 00:00:00
சிவபெருமானிடம் என்ன கேட்கலாம்
சிவபெருமானிடம் என்ன கேட்கலாம்
2019-10-06 00:00:00
  • 2026
  • 216
  • After Death
  • Agni
  • Aikiri Nandhini
  • americans
  • Aries
  • Astrological predictions
  • astrology
  • astronomy
  • aswini
  • Authors
  • bangle
  • best astrology softw
  • Best Astrology Software
  • best-astrology-software
  • Bodhidharma Birth
  • chinese
  • Mangal Singh
  • software
  • star
  • stress
  • vedic
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com