ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
புதன் நரம்புகளுக்கு உரியவனாக இருப்பதால், இந்த தசை நடக்கும்போது குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறு வந்து நீங்கும். பள்ளிப் பருவத்திலேயே கவிதை, கட்டுரை என்று எழுதுவார்கள். குழந்தையின் மழலைத்தனம் 14 வயது வரை இருக்கும். 15 வயதிலிருந்து 21 வரை கேது தசை நடைபெறும். இந்த வயதில் ரெசிடென்ஷியல் பள்ளியில் சேர்க்கலாம். படிக்கவில்லையெனில் கொஞ்சம் விட்டுப் பிடிக்க வேண்டும். நான்கு பேருக்கு முன் அவமானப்படுத்தக் கூடாது. ஐ.டி. துறை இவர்களுக்கு சிறப்பைத் தரும். சட்டம், பொலிடிகல் சயின்ஸ் போன்றவையும் எளிதாக வரும். மொழித்திறன் அதிகமாக இருப்பதால் வேலைக்கு சென்று கொண்டே பிரெஞ்சு, இத்தாலி மற்றும் ஆங்கில இலக்கியம் போன்றவற்றை பயின்றால் சமூக அங்கீகாரம் கிடைக்கும். மருத்துவத்தில் இ.என்.டி., மனநல மருத்துவர், வயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட துறைகளில் கவனம் செலுத்தினால் நிபுணராகலாம்.
இரண்டாம் பாதத்தின் அதிபதியாக மகரச் சனி வருகிறார். பள்ளிப் படிப்பை முடிப்பதில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். பத்து வயது வரை புதன் தசை நடைபெறும். 11 வயதிலிருந்து 17 வரை நடைபெறும் கேது தசையில் எதிலேயும் ஒரு தடங்கல் இருக்கும். படிப்பதில் நாட்டமில்லாது கவனச் சிதறல்கள் அதிகமாக இருக்கும். சொந்த ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால் பெரியளவில் கல்வித் தடைகள் வராது. 18 வயதிலிருந்து 37 வரை சுக்கிர தசை நடைபெறும்போது தெளிவான வாழ்க்கை தொடரும். கேட்டரிங் டெக்னாலஜி, விஸ்காம், ஆட்டோமொபைல் துறையில் சாதிப்பார்கள். பி.காம்., பி.எஸ்சி. பிசிக்ஸ், தத்துவம் படித்தாலும் ஜெயிக்கலாம். ஏனெனில், அடுத்து 18 வயதிலிருந்து 37 வரை சுக்கிர தசை நடைபெறும்போது இவர்கள் சுமாராக படித்த படிப்பே மிகுந்த உதவியைத் தரும்.
மூன்றாம் பாதத்தை கும்பச் சனி ஆள்கிறார். ஆரவாரமில்லாது வேலைகளை முடிப்பார்கள். 7 வயது வரை புதன் தசை நடைபெறும். குழந்தைகளுக்குரிய துறுதுறுப்புடன் கூடிய முதிர்ச்சியும் கலந்திருக்கும். 8 வயதிலிருந்து 14 வரை கேது தசை நடைபெறும்போது படிப்பெல்லாம் சுமார்தான். அடுத்ததாக 15 வயதிலிருந்து 34 வரை சுக்கிர தசை வரும். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். முதல் இரண்டு பாதங்களை விட சுக்கிர தசை கூடுதலாகவே நல்ல பலன்களைத் தரும். கல்லூரியில் என்ன படிக்க வேண்டும் என்பதை பத்தாம் வகுப்பிலேயே முடிவு செய்துகொண்டு படிப்பார்கள்.
எந்தத் துறையில் பணம் கொட்டுகிறதோ அதைத்தான் படிப்பார்கள். இவர்களில் பலர் வெளிநாடு சென்று படிப்பார்கள். ஆர்க்கிடெக்ட், கன்ஸ்ட்ரக்ஷன், இன்டீரியர் டெகரேஷன் என்று துறைகளைப் பிடித்து பரபரவென மேலேறலாம். மருத்துவத்தில் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபடலாம். விஸ்காம், விலங்கியல், ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங் என்று படிக்கலாம். இவர்கள் அந்தந்த வருடத்தில் எந்த புதிய படிப்பு வந்தாலும் அதில் சேரத்தான் முயற்சிப்பார்கள். நான்காம் பாதத்தை மீன குருவோடு, நட்சத்திர அதிபதியான புதனும், ராசியாதிபதியான மீன குருவும் சேர்ந்து ஆட்சி செய்யும். மூன்று வயது வரை நடக்கும் புதன் தசையின்போது பாலாரிஷ்டம் என்று சொல்லப்படும் ஏதாவது நோய்கள் வந்து நீங்கியபடி இருக்கும்.
4 வயதிலிருந்து 10 வரை நடைபெறும் கேது தசையில் படிப்பை விடுத்து விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். படிப்பிலும் பள்ளியின் முக்கிய மாணவராக இருப்பார்கள். மிகச் சிறிய வயதிலேயே -அதாவது 11 வயதிலிருந்து - சுக்கிர தசை தொடங்கி 30 வயது வரை இருப்பதால், பெற்றோரின் செல்வ நிலை உயரும். கல்லூரியில் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறார்களோ அதில் பிஎச்.டி. வரை முடித்து விட்டு அங்கேயே பேராசிரியராகும் வாய்ப்பு உண்டு. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு இவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் என்றும் சேரலாம். மருத்துவத்தில் முகச் சீரமைப்பு, வயிறு, உளவியல் சம்பந்தமான துறையில் எளிதாக வெற்றி பெறலாம். ஆனால், இந்தப் பாதத்தில் பிறந்த பெரும்பாலானோர் ஆசிரியர் பணியில் அமர்வார்கள். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதியாக புதன் வருகிறார். அதனால் பெருமாள் வழிபாடு மிகவும் நல்லது.
மேலும், ரேவதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களையும் தனுசு குரு, மகரச் சனி, கும்பச் சனி, மீன குரு என்று ஆட்சி செய்கிறார்கள். குருவும், சனியும் சேர்ந்த ஆதிக்கமாக அமைகிறது. எனவே, விஸ்வரூபக் கோலத்தில் அருளும் பெருமாளை வழிபட்டால் மிகவும் நல்லது. அப்படிப்பட்ட தலமே திருக்கோவிலூர் ஆகும். இங்கு எம்பெருமான் உலகளந்த பெருமாளாக காட்சியளிக்கிறார். சிறிய வயதிலிருந்து - அதாவது வாமன வயதிலிருந்தே - இந்த ஆலயத்திற்கு சென்று வந்தால், அவனருளால் விஸ்வரூபம் எடுக்கலாம். இத்தலம் விழுப்புரத்திலிருந்து 38 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவண்ணாமலையிலிருந்தும் செல்லலாம்
Similar Posts :
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம், See Also:
ரேவதி