ஸ்ரீ ஈசனுடைய அருளானையின்படி படைக்கும் தொழிலை மிகவும் அற்புதமாக செய்பவன் பிரம்மன் ஆவார். உயிர்களை படைக்கும் பொழுது ஒவ்வொரு பெயர் கொண்டு ஓர் அறிவு முதல் ஆறு அறிவுள்ள ஜீவன்களை படைக்கிறார். இவை தவிர கந்தவர்கள், கான கந்தவர்கள், சப்தஸ்வர கந்தவர்கள், சோதி சொரூப கந்தவர்கள் என பல விதமான படைப்புக்களை மேற் கொண்டு மிக ஆற்புதமாக படைக்கும் தொழிலை மிகச் சரியாக செய்கிறார். பெண்களை படைக்கும் முன் தேவதையை வணங்கி தலையில் உள்ள கோலால் (குச்சினு எழுதுகோல்) படைக்கிறார்.
வெட்டுவக்கிளி ஆயுதம் கொண்டு ஒரு அறிவு கொண்ட உயிர்களை (மரம், செடி, கொடி, தாவரங்கள்) படைக்கிறார்.
துருவக்கிளி ஆயுதம் கொண்டு இரண்டு அறிவு கொண்ட உயிர்களை (மீன் , நீர்வாழ் இனங்கள்) படைக்கிறார்.
பருவக்கோடு ஆயுதம் கொண்டு மூன்று அறிவு கொண்ட உயிர்களை (எறும்பு, பாம்பு ) படைக்கிறார்.
பாசக்கோடு ஆயுதம் கொண்டு நான்கு அறிவு கொண்ட உயிர்களை (வண்டு, பூச்சிகள் ) படைக்கிறார்.
வளக்கட்டு ஆயுதம் கொண்டு ஐந்து அறிவு கொண்ட உயிர்களை (பறவைகள், மிருகம் ) படைக்கிறார்.
அத அங்குச வித்தா ஆயுதம் கொண்டு ஆறு அறிவு கொண்ட உயிர்களை (மனிதர்கள்) படைக்கிறார்.
வேல வடக்கிளை ஆயுதம் கொண்டு கந்தர்வாகளை படைக்கிறார்.
வாலைக் கூட்டு வித்தை ஆயுதம் கொண்டு கள கந்தர்வாகளை படைக்கிறார்.
சிளக் காகித சுட்டுக் காணி ஆயுதம் கொண்டு சப்தஸ்வர கந்தர்வாகளை படைக்கிறார்.
பெண்களை படைக்கும் பொருட்டு ஸ்ரீ பிரம்மன் காலைக் குருணி வாணி என்னும் தேவதையை வணங்கி, அவர்களின் பரி பூரண ஆசியுடன் தன் கோலால் பெண்களை படைக்கிறார்.