ஏழாம் அதிபதி
ஜாதகத்தில் பலம் இழந்து லக்கனாதிபதி மற்றும் பதினொராம் அதிபதி வலுப்பெற்றிருந்தாலும், களஸ்திரகாரகன் சுக்கிரன் கேந்திரங்களிலே இருந்தாலும், சனி ஏழாமிடத்தில் இருந்து ஏழாம் அதிபதி வலுவிழந்த சாதகங்களிலும், லக்கன ராசிகளுடன் ராகு கேது தொடர்புபெற்று ஏழாம் அதிபதி பலமிழந்து 11- ம் இட அதிபதி வலுப்பெற்ற சாதகங்களிலும் தார தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தார தோஷ அமைப்பு உடையவர்கள் நமது கலாச்சாரப்படி ஒருவனுககு ஒருத்தி என்ற உயர்கொள்கையை கொண்ட நாம் பரிகாரங்கள் மூலம் தார தோஷத்தை தவிர்த்துவிடலாம்
திருமணத்தைப் போன்றோ, சுப விஷயங்கள் செய்து ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி வெட்டி விடுவதன் மூலம் தார தோஷத்தை தவிர்த்து பிறகு ஒரு பெண்ணிற்கு தாலி கட்டலாம்.
வாழை மரம் வெட்டுவது ஒரு மரத்தை வெட்டுவதற்குரிய பாவம் என்பதால் ஒரு பெண் பதுமை செய்து அதற்கு முறைப்படி தாலி கட்டி பிறகு அதை நீரில் கரைத்துவிடலாம்
இதேபோல் பெண்ணின் ஜாதகதத்தில் இருப்பின் ஒரு பெண்ணைக் கொண்டு தாலி கட்டி பிறகு அதை நீக்கிவிடல் சிறந்தது.
எல்லாவற்றிக்கு மேலாக கோவில்களில் திருமணம் நடத்தி அவ்வாறு திருமணத்தன்று கட்டப்படும் மாங்கல்யத்தை அம்பாளுக்கு சாத்தி பிறகு தாலி பெருக்கிபோடும்போது வேறு ஒரு மாங்கல்யம் போட்டுக்கொள்ளாலாம்.
Similar Posts : சகோதிர தோஷ பரிகாரம், புத்திர தோஷம் பரிகாரம், புத்திர தோஷ பரிகாரம், நிச்சயதார்த்த மெனு, ராகு-கேது தோஷம் ஏற்பட காரணம், See Also:தார தோஷம்