ஜாதகர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரா
ஜாதகம் பார்ப்பது ஒரு கலை. நமக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் அது இல்லை என்றாகி விடாது. ஜாதகத்தின் கட்டங்களைக் கொண்டு, அதில் கிரகங்கள் இருக்கும் அமைப்பைக் கொண்டு ஜாதகர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரா என்று கண்டுப் பிடிக்க இயலும் என்று நம் ஜோதிட சாஸ்த்திரம் கூறுகிறது.
நம்முடைய Sithars Astrology software ம், நம் ஜோதிட சாஸ்திரம் கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பைக் கொண்டு ஜாதகர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரா என்று கணிக்கும் திறன் வாய்ந்தது ஆகும்.
பிருகத் ஜாதகத்தில் வராஹமிஹிரர், சிம்ம ராசியில் சூரியன் இருந்து (அதாவது ஆவணி மாதம் குழந்தை பிறந்து) மற்ற கிரகங்கள் உபய ராசி எனப்படும் மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீனம் போன்றவைகளில் பலம் பெற்றிருந்தால் ஜாதகர் இரட்டைக் குழந்தையாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனை கீழே கொடுக்கப் பட்ட பாடலைக் கொண்டு அறியலாம்.
“ஆடுஅரி ஏறுமான்வில் அலறி உற்று ஏனையோர்கள்
நாடியே உபய லக்கினத்திற் பலமாய் நண்ணிலே” – பிருகத் ஜாதகம்
விளக்கம்: சூரியன் மேஷம், ரிஷபம், மகரம் போன்ற நாற்கால் ராசியில் இருந்து மற்ற எல்லா கிரகங்களும் உபய ராசி எனப்படும் மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீனம் போன்றவைகளில் பலமாக இருந்தால் இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று கூறுகிறார். இதைப் போலவே ஜாதக அலங்காரம், நந்தி வாக்கியம், சாராவளி போன்ற நூல்களிலும் இரட்டைக் குழந்தை பிறப்பு மேற்கண்ட சாரத்தை விளக்குகிறது
இரட்டைப்பிள்ளை ஜனனம் பற்றி ஜம்புமகாரிஷி வாக்கியம்
இலக்கணத்தின் மூன்றோனும் ராசியோனும்
இராகுகேதுடன் சேர்ந்ததோர் ராசியேறில்
நலமுடனே பார்த்தாலும் இரட்டைப் பிள்ளை
நவில்வாய் ஆண்கிரகமெனில் ஆண்பிள்ளையாகும்
நிலையாய் பெண்கிரகமெனில் பெண்ணெண்றோது
நிலைத்திடும்லக்கினத் தோணும் ராசியோனும்
பலமுடனே ராசியோன் பெண்கிரகமானால்
பாரில்ரெண்டு பெண்ணாகப் பிரக்கும்பாரே. 6
இலக்கினத்திற்கு மூன்றுக்குடையவனும் இராசிக்குடையவனும் ஒரே ராசியில் சேர்ந்து அவர்களுடன் இராகு பகவனாவது கேது பகவானாவது சேர்ந்தாலும் பார்த்தாலும் ஒரு லக்கினத்திலேயே இரட்டைப்பிள்ளை பிறக்கும் ஆனால் , அந்த இலக்கினத்திற்குடையவன் ஆண் கிரகமானால் பிறக்கும் குழ்ந்தை ஆணென்றும் , பெண் கிரகமானால் பெண்ணென்றும் , ஆனால் இரண்டும் ஆண் கிரகமாயிருந்தால் இரண்டும் ஆண் குழ்ந்தை என்றும், அவ்விதமின்றி இரண்டும் பெண் கிரகமனால் இரண்டும் பெண் குழ்ந்தையாய் பிறக்குமென்றும் சொல்வாய். ஆனால், இலக்கினத்திற் குடையவனும் நாலமிடத்திற் குடையவனும் சத்திரபகவானும் இல்லத்திலிருக்கும் போது பிறந்தால் இரட்டைபிள்ளையாகு மென்றுனர்வாய்.
இதர குறிப்பு
மேலும் ஐந்தாம் அதிபதி எனப்படும் குழந்தை (புத்திர) ஸ்தானம், இரட்டை ராசியில் இடம்பெற்றிருந்தாலோ அல்லது வலுவடைந்திருந்தாலோ கணவன் மனைவிக்கு இருந்தால் பிறக்கும் குழந்தைகள் இரட்டைக் குழந்தைகளாக இருக்கும் என்பதும் ஜோதிட விதி.
இந்த விதிகளை எல்லாம் மனதில் வைத்து ஒருவரின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்தோமானால் நாம் ஜாதகருக்கு இரட்டைக் குழந்தை பிறக்குமா அல்லது ஜாதகர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரா என்று தீர்க்கமாக கணிக்க முடியும்.
Sithars Astrology மென்பொருளின் உதவியுடன் கணிக்கப் பட்ட ஒரு ஜாதகமும், ஜாதகர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் என்று அது கணித்திருப்பதையும் மேலே இணைக்கப்பட்ட வீடியோவில் காணலாம்.
[removed][removed]
Similar Posts : நடிகர் மோகன்லால் பிறப்பு ஜாதகம்: ஓர் அலசல், ஹிட்லரின் ஜாதகம் ஆய்வு, நடிகை மனீஷா கொய்ராலா ஜாதகம் அலசல், ஜாதகர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரா, கலைஞர் கருணாநிதி ஜாதகம், See Also:இரட்டைக் குழந்தை ஆராய்ச்சி