விஷ்ணு பெருமாள் என்று பல பெயர்களை கொண்டவர் தான் நாராயணன்*
*இவர் பல அவதாரம் எடுத்துள்ளார்* *ஒவ்வொரு முறை அவதாரம் எடுக்கும் போதும் மக்களுக்கு ஒரு கருத்தை எடுத்துரைக்கின்றார் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்*
*கோவிந்தன் என்று அழைக்கும் நாராயணனின் பெயரின் அர்த்தம் தான் என்ன?*
*அவரின் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணம் உண்டு அதுபோல இந்த* *பெயருக்கும் இரு காரணம் உள்ளது. அதை தெரிந்து கொள்வோம்*
*நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது நாரம் என்றால் தண்ணீர் தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு*
*பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாக தான்*
*நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம்* *என்ற பொருளும் உண்டு இந்த உலக* *வாழ்வு-நிலையற்றது, என்* *திருவடியே-நிலையானது*_
*_என்ற-தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது*
*நாராயணன் என்பதை நாரம் + அயணன் என பிரிக்கலாம் நாரம் என்றால் தீர்த்தம்* *அயணன் என்றால் படுக்கை உடையவன்*
*பாற்கடலாகிய தீர்த்தத்தில்* *பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே* *நாராயணன் என்ற* *சொல்லுக்குப் பொருள்*
*நாராயணனின் நாமத்தை அதிகமாக* *உச்சரிப்பவர் நாரதர் நாராயண* *நாராயண! என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார்*
*நாரதர் தோன்றுவதற்கு முன் இந்த* *உலகில் தண்ணீர் என்பதே குறைவாக* *இருந்ததாம் இவரது பிறப்புக்கு பின் தான் தண்ணீர் அதிகரித்தது*
*நாராயணின் நாமத்தை துதிக்க* *நன்மைகள் வந்து சேரும் கோவிந்தன்* *என்று சொல்ல கொள்ளை இன்பம் ஓடி வரும்*
*நாராயணா ஸ்ரீ ஹரி நாராயணா*
Similar Posts : நாராயணா என்றால் என்ன, See Also:நாராயணா