SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
புலிப்பாணி
  • 2019-10-06 00:00:00
  • 1

புலிப்பாணி

புலிப்பாணி சித்தர்
பெயர்: புலிப்பாணி
சமாதி : பழனி அருகில் வைகாவூர்
மரபு: 

போகரது தலையாய சீடராவார். இவர் பூர்வீகம் சீன தேசம். புலிப்பாணி என்கிற பெயர் சீன மொழியில் யோ என்று பதிவு செய்யப்படுவதாக சொல்ல்பவர்கள் உண்டு. இதன் நம்பகத்தன்மை மிக மிகக் குறைவு. போகர் பழனியில் மூலிகை முருகனை உருவாக்கிய படலத்தில் இவரது பங்கு முக்கியமானது. குருவுக்கு தேவையான மூலிகைகளை சேகரித்தலும் மற்றைய பணிவிடைகளையும் செய்த நம்பிக்கைக்குரிய சீடர் என்று போகரது காயகல்ப பரிசோதனையில் நாம் கண்டோம் அங்ஙணம்,குருவுக்கு பணிவிடை செய்யும்போது அவர் குளிர்ந்த நீரைக் கொண்டு புலிகளை வசியம் செய்து அதன் மேல் ஏறி மலை ஏறி இறங்கியுள்ளார்.இதுவே அவர் “புலிப்பாணி” பெயர்க் காரணம். இவர் ஒரு அதீத சிவ பக்தர். போகரின் நிர்விகல்ப சமாதி ஏற்பாட்டின் போது,மூலிகை முருகனுக்கு அடியில் குகை போன்ற சமாதி அமைப்பை உருவாக்கியும்,போகர் சமாதி நிலையை எய்தவுடன் குருவின் ஆணைப்படி அந்த குகையை பெரிய பாறை கொண்டு மூடியவரும்,குரு போகரை இறுதியாக தரிசித்தவரும் இவரே! போகரது (LAO TZU) சீன படைப்பான “டாவோ”(TAOISM) மதத்தின் முக்கிய நூல்களான ” டாவோ சிங் மற்றும் டெ சிங்” (TAO CHING & TE CHING) ஆகியவற்றில்  இவரது (Yu)பங்கு குறிப்பிடத்தக்கது. இவர் சோதிடம்,வான சாத்திரம்,கணிதம்,சித்த மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார் சீன வேதிப் பொருள்கள்,சீனக் களிமண் பாண்டங்கள்,சீன மருத்துவம் ஆகியன இவர்கள் மூலமே இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது என செய்திகள் கூறுகிறது. இவரது படைப்புகளான புலிப்பாணி ஜாலம்325 , புலிப்பாணி வைத்தியம் 500 ஆகியன இன்றும் நமது சித்த மருந்து தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்பதில் ஐயமில்லை! அதற்கு பிரதிஉபகாரமாய் தங்களுடைய மருந்துகளுக்கு புலிப்பாணியின் பெயர் சூட்டி அவரைப் பெருமைப் படுத்துவது வரவேற்க்கத்தக்கது! புலிப்பாணியின் பொறுப்பில் மூலிகை முருகனுக்கு அபிசேகங்களும், ஆராதனைகளும் கடைப்பிடிக்கப்பட்டது. புலிப்பாணியார் மறைவுக்குப் பின்,அவரது சந்ததியினரின் குடும்பக் கோவிலாகவே பராமரிக்கப்பட்ட மலைக் கோவில், மதுரை திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் வலுக்கட்டாயமாக பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டாதாகவும்,அதற்க்கு இழப்பீடாக சில நியாயமற்ற உரிமைகள் வழங்கப்பட்டதாகவும் சில சர்ச்சைகள் இருந்து வந்தன. புனிதரது சமாதி இன்றும் பழனி மலையின் வட கிழக்கு திசையில் அவரது சந்தததியினரால் (பழனி ஆதீனம் திருமிகு புலிப்பாணி பத்திர சுவாமிகள்)பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்றும் பழனியில் அருவமாய் புலிப்பாணி சித்தர் உலவுவதாகவும்,வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளுவதாகவும் நம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவர் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர்.ஆதலால் செவ்வாய் தோசத்தைப் போக்கி, நிலத் தகராறு,சொத்துத் தகராறு,திருமணச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதில் இவருக்கு நிகர் இவரே! இவரை வில்வம் மற்றும் சாமந்தி கொண்டு அர்ச்சிக்க வேண்டிய உகந்த நாள் செவ்வாய்க் கிழமை! ஓம் புலிப்பாணி சித்தரே போற்றி! 
                                நான் எம்பெருமான் முருகனுக்கு சிலை செய்ய ஆசைப்படுகிறேன்.உலோகங்களால் அவருக்கு பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், நான் ஆசைப்படுவது வேறு. இந்த முருகனைத் தரிசித்த மாத்திரத்திலேயே உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் விலகியோட வேண்டும். மன நோயும் விலக வேண்டும். எனவே, நான் மூலிகைகளைக் கொண்டு அவருக்கு சிலை செய்ய வேண்டும். நீ நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பறித்து வா, என்றார் குருவான போகர் சித்தர்.குருவின் கட்டளையை ஏற்ற புலிப்பாணி, ஏ புலியே கிளம்பு, என்றார்.புலி மீது சவாரி செய்பவர் யார் எனக் கேட்டால், நீங்கள் ஐயப்பன் என்று பதில் சொல்வீர்கள். அவர் தெய்வம். தர்ம சாஸ்தாவான அவர், புலியின்மீது பயணம் செய்வதில் ஆச்சரியமாக இல்லை. ஆனால், ஒரு சித்தர் புலியின் மீது பயணம் செய்கிறார் என்றால், அவர் எப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவராக இருக்க வேண்டும். விலங்குகளை வசியப்படுத்தி, தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். அந்தளவுக்கு அவருக்கு தவசக்தி அமைந்திருந்தது.புலிப்பாணி சித்தர் சீனாவில் பிறந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. பழநியில் வசித்த போகர் சித்தர் சீனாவுக்கு வான்வழியே யோக சாதனையைப் பயன்படுத்தி சென்றார். அவரது அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்ட புலிப்பாணி அவரது சீடரானார். அவரிடம் சகல யோக வித்தைகளையும், சித்து வேலைகளையும் கற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் பாரதத்துக்கு வந்து சேர்ந்தனர்.போகர் பழநியில் தங்கிய போது புலிப்பாணியும் உடன் தங்கினார். ஒருமுறை போகர் சித்தர் தாகத்துடன் ஒரு காட்டில் தவித்த போது, புலிப்பாணி தன் புலியின்மீது ஏறிச் சென்றார். தண்ணீரை பாணி என்றும் வேற்றுமொழியில் சொல்வதுண்டு. புலியில் ஏறிச்சென்று பாணி கொண்டு வந்ததால் புலிப்பாணி என்று இருமொ ழிகளையும் இணைத்து அவருக்கு பெயர் வந்ததாகவும், அவர் சீனாவில் பிறந்தவர் என்பதால் அவரது நிஜப்பெயர் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.புலிப்பாணி புலியில் ஏறி தண்ணீர் கொண்டு வந்ததை நிரூபிக்கும் பாடல் ஒன்றை போகரே எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் இதுதான்! ஆழ்ந்தவே காலங்கி கடாட்சத்தாலே அப்பனே வேங்கை தனில்  ஏறிக்கொண்டு தாழ்ந்திடவே ஜலம் திரவ்விப்புனிதவானும் சாங்கமுடன் தாரணியில் சுற்றி வந்தோன் என்ற பாடல் புலிப்பாணியையே குறிப்பதாகச் சொல்கிறார்கள். 
                             முருகன் சிலை செய்ய மூலிகைகளைக் கொண்டு வரச்சொல்வதின் நோக்கத்தை புலிப்பாணி புரிந்து கொண்டார். எவ்வளவு அருமையான யோசனை! என் குருநாதருக்கு தான் இந்த மக்கள் மீது எவ்வளவு கரிசனம் இருக்கிறது! ஆனால், குருநாதர் குறிப்பிடும் ஒன்பது வகை மூலிகைகளும் விஷத்தன்மை கொண்டவை ஆயிற்றே! விஷ மூலிகைகள் எப்படி மனிதனைக் குணப்படுத்தும்! மாறாக, அவை ஆளையல்லவா கொன்று விடும், என்ற சந்தேகமும் இருந்தது.தன் சந்தேகத்தை மிகுந்த பணிவுடன் கேட்டார் புலிப்பாணி. மக்கள் மீது புலிப்பாணிக்கு இருக்கும் அபிமானத்தை மனதுக்குள் பாராட்டிய போக சித்தர், புலிப்பாணி! கவலை கொள்ளாதே. நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் பவ பாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும். இந்த மருந்தை நேரடியாகச் சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நவபாஷாணத்தை சிலையாக வடித்து, அதற்கு அபிஷேகம் செய்யும் பொருட்களைச் சாப்பிட்டால் அது விஷத்தன்மைக்கு பதிலாக மருத்துவத்தன்மை பெறும், மேலும், நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே போதும், மனிதன் புத்துணர்வு பெறுவான். இதோ! இந்த பழநி மலையின் உச்சியில் நவபாஷாண முருகன் சிலையை, கலியுகம் முடியும் வரையில்  மக்கள் வணங்கும் வகையில் பிரதிஷ்டை செய்வேன். அவன் அருளால் உலகம் செழிக்கும். எக்காலமும் வற்றாத மக்கள் வெள்ளம் இந்தக் கோயிலுக்கு வரும். பழநி முருகனின் ஆணையோடு தான் இந்தச் சிலையைச் செய்கிறேன். எனவே மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது, என்றார். புலிப்பாணி சித்தர் மகிழ்ச்சியடைந்தார். குருநாதர் சொன்னது போலவே புலியில் ஏறிச்சென்று ஒன்பது வகை மூலிகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார். பழநிக்குச் செல்பவர்கள், போகரை மட்டுமின்றி புலிப்பாணி சித்தரையும் நிச்சயமாக மனதில் நினைக்க வேண்டும். போகர், இவ்வூர் முருகன் சிலையைச் செய்யக் காரணமாக இருந்தவர் இவரே! போகர் நினைத்தபடி நவபாஷாண சிலை உருவாயிற்று. ஒருநாள் புலிப்பாணியை அழைத்த போகர், புலிப்பாணி! நான் சீனதேசம் செல்கிறேன். இனி இங்கு எப்போது வருவேன் எனத்தெரியாது. நீயே இந்த முருகன் சிலைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், என சொன்னார். புலிப்பாணியும் அவரது கட்டளையை ஏற்று, சிலையின் காவலர் ஆனார்.
                               ஒருமுறை. சீனதேசத்தில் இருந்து வந்த சிலர், உன் குருநாதர் போகர், பெண்ணின்பத்தில் சிக்கி, தவ வலிமையை இழந்து விட்டார், என்றனர். அதிர்ச்சிய டைந்த புலிப்பாணி தவ சிரேஷ்டராகிய தன் குருவைக் காப் பாற்ற சீனா சென்றார். அவரை அங்கிருந்து பழநிக்கு அழைத்து வந்து, மீண்டும் தவ வலிமை பெறுவதற்குரிய வழிகளைச் செய்தார். போகருக்கே ஞானம் வழங்கிய பெருமை புலிப்பாணிக்கு உண்டு. சில நாட்களில் போகர் இறந்து விடவே, அவரது சமாதிக்கு பூஜை செய்யும் பணியை அவர் கவனித்தார். சமாதிக்கு பூஜை செய்பவர், முருகனின் பாதுகாவலராக இருக்கக் கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, எங்கள் குருவுக்கு குரு முருகப்பெருமான், எனக்கு குரு போகர் சித்தர். நான் அவரது சமாதியையே பூஜிப்பதையே பெருமையாகக் கருதுகிறேன், என அவர்களிடம் தன் நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். தன் வாழ்நாளில் பலரை மூலிகை வைத்தியம் மூலம் காப்பாற்றிய பெருமை உண்டு. நோயுற்றவர்கள் புலிப்பாணி சித்தரை மனதார நினைத்தால், அவரே நேரில் வந்து மருந்து தருவதாக ஐதீகம். புலிப்பாணி சித்தரும் தன் குரு போகரைப் போலவே பழநியிலேயே சமாதியாகி விட்டதாக தகவல் உள்ளது.
"ஆள்தவே காலங்கி கடாட்சத்தாலே  
அப்பனே வேங்கை தனில் ஏறிக்கொண்டு  
தாழ்ந்திடவே ஜலம் திரட்டி புனிதவானும்  
சாங்கமுடன் தரணியிலே சுற்றிவந்தான்". 
- போகர் -
 போகருடைய சீடார்களில் ஒருவர், தமிழகத்தி பொன் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறார். போகர் நவபாஷாணதைக் கொண்டு பழனி முருகன் சிலையை வடிக்கும் போது இவர் அவருக்கு உதவியாக இருந்ததாக சொல்லப் படுகிறது. போகர் சமாதியடைய முன்னர் இவரை அழைத்து தமக்குப் பின் தண்டாயுதபாணி கோவில்ப் பூசை , புனஸ்காரங்களை இவரே செய்யவேண்டும் என்று பணித்ததாகவும் சொல்லப் படுகிறது.

புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்:
புலிப்பாணி வைத்தியம் – 500
புலிப்பாணி சோதிடம் – 300
புலிப்பாணி ஜாலம் – 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200
புலிப்பாணி பூஜாவிதி – 50
புலிப்பாணி சண்முக பூசை – 30
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12
புலிப்பாணி சூத்திரம் – 9 ஆகியவை.

புலிப்பாணி சித்தர் பூசை முறைகள்:
தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்ச்சம் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல், புலிப்பாணி சித்தரின் படத்தினை வைத்து, அப்படத்தின் முன்பு, மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிட்டிருக்கும் தியானச் செய்யுளை கண் மூடி மனமுருகச் சொல்ல வேண்டும்.
பிறகு பின்வரும் 16 போற்றிகளை வில்வம் அல்லது சாமந்திப் பூ அல்லது அரளிப் பூ கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. கம்பீரமான தோற்றம் கொண்டவரே போற்றி!
2. தண்டபாணிப் பிரியரே போற்றி!
3. ஞானவரம் கொடுப்பவரே போற்றி!
4. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி!
5. சித்த மருத்துவத்தின் தலைவரே போற்றி!
6. ராகு கிரகத்தை பூசிப்பவரே போற்றி!
7. யந்திரங்களை பிரதிஷ்டை செய்பவரே போற்றி!
8. உலகம் முழுவதும் வாசம் செய்பவரே போற்றி!
9. வனத்தில் வாசம் செய்பவரே போற்றி!
10. தெய்வயானையின் புதல்வரே போற்றி!
11. சூலாயுதம் உடையவரே போற்றி!
13. மிருகங்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
14. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி!
15. எளிதில் மகிழ்ச்சி அடைபவரே போற்றி!
16. முருகப் பெருமானை வழிபட்ட புலிப்பாணி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு, மூல மந்திரமான, “ ஓம் ஸ்ரீ புலிப்பாணி சித்தரே போற்றி” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.

பின்பு நிவேதனமாக, கமலா ஆரஞ்சைக் கொட்டைகள் நீக்கி உரித்து சுளையாய் வைக்க வேண்டும். அல்லது தக்காளியை விதைகள் எடுத்து விட்டு உப்பு தூவி வைக்க வேண்டும், தயிர் சாதத்தை உப்பில்லாமல் தாளிக்காமல் வைத்து படைக்க வேண்டும்.

பின் உங்கள் பிரார்த்தனைகளை மனமுருகக் கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

புலிப்பாணி சித்தர் பூசை பலன்கள்:
இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோசம் ஏற்படும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை குலையும், விவசாயம் பாதிக்கும். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும்.
1. நிலத்தகராறு, சொத்துத் தகராறு, வழக்குகள் அகன்று வெற்றி கிடைக்கும்.
2. சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.
3. அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு தடைகள் நீங்கி வியாபாரம் பெருகும்.
4. கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட், செங்கல், சிமெண்ட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.
5. செவ்வாய் தோசத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத்தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
6. இவருக்கு சிவப்பு வஸ்திரம் சார்த்தி, ரோஜா, செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
7. பழனி தண்டபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள ரத்த சம்பந்தமான நோய்கள் அகலும்.
8. அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும்.
9. இவருக்கு பிடித்தமான செவ்வாய்க் கிழமையில், அரளிப்பூ மாலையிட்டு வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

தியானச் செய்யுள்:
மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே
புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே
மயில் வாகனனை வணங்கியவரே
எம் கலிப்பாவம் தீர்க்க
உங்கள் புலிப்பாதம் பற்றினோம்.

புலிப்பாணி சித்தர்
மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"

Similar Posts : தஞ்சாவூர் பால் சுவாமி, புலஸ்தியர், சுந்தரானந்தர், பாம்பன் சுவாமிகள், அரிசியை பற்றி கிருபானந்தவாரியார்,

See Also:சித்தர்கள் புலிபாணி

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
சேப்பங்கிழங்கு வறுவல்
2020-10-15 00:00:00
fantastic cms
அரைக்கீரை உருளை சாப்ஸ்
2020-10-15 00:00:00
fantastic cms
பாகற்காய் சாப்ஸ்
2020-10-15 00:00:00
fantastic cms
வெண்டைக்காய் வறுவல்
2020-10-15 00:00:00
fantastic cms
கோவைக்காய் வறுவல்
2020-10-15 00:00:00
fantastic cms
முளைப்பயிறு சாப்ஸ்
2020-10-15 00:00:00
fantastic cms
பலாப்பழ வறுவல்
2020-10-15 00:00:00
fantastic cms
உருளைக்கிழங்கு வறுவல்
2020-10-15 00:00:00
fantastic cms
Balak-Paneer Rolls recipe
2020-10-15 00:00:00
fantastic cms
குட்டி உருளைக்கிழங்கு வறுவல்
2020-10-15 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • Abishegam
  • Agni
  • Astrology originate
  • astrology software
  • astrology-match-making-chart
  • Basics
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology software for windows
  • Bodhidharma Birth
  • Bodhidharma Travel to China
  • Bodhidharmas Guru
  • brahma-muhartham
  • Chandiran
  • Chandran
  • Chhajju Bania's NDE
  • Chick
  • Chicken Biryani in English
  • Mangal Singh
  • Moon
  • NDE
  • குங்குமம்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com