கேது உடன் சேரும் எந்த சுப கிரமாயினும் அந்த ஜாதகருக்கு அந்த சுப கிரகங்கள் தரும் இன்பங்கள் கேள்வி குறியாக தான் இருக்கும்,,,,,,இங்கு கேள்வி குறி என்பது சரியான நேரத்தில் கிடைக்காது(ஆனால் பலதரப்பட்ட ஞான அறிவோடு கிடைக்கும்) என்பதே,,,,,
அப்படி இருக்க குரு சேர்ந்தால் குழந்தையோ, பணமோ லேட் ஆக கிடைக்கும்
சுக்ரன் சேர்ந்தால் தாம்பத்திய சுகம்,ஆடம்பர வாழ்க்கை தாமதமாகும்
புதன் சேர்ந்தால் அறிவு ஞானமாகவே இருக்கும் அதை விடுத்து புதனின் நுண்ணிய புலமை இருக்காது....
அதே போல, கேது எந்த இடத்தில் இருக்கிறதோ அது சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு மனக்குறை அல்லது இருக்கும் இடத்தின் முக்கிய காரண விஷயத்தில் பின்னடைவு இருக்கும்......
எப்படி என்றால்,,,,அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுபவ அறிவு உங்களுக்கு வந்து அந்த விஷயம் நமது வாழ்வில் இருந்தால் மிகச்சிறந்த வாழ்க்கையை பெற்று இருக்கலாமே என்ற என்னமே உங்கள் ஆழ் மனதில் வந்து வந்து போகும்.....
எ.கா கேது பத்தில் இருந்தால் மிக பெரிய தொழில் செய்ய இயலாது போகும்,,,,அப்படியே செய்து கொண்டு இருந்தால் ஏன்டா இந்த தொழிலை ஆரம்பித்தோம் என்று ஆகி விடும்......
இனி,,,,,,கேது எப்படி செயல்படுவார் ஜாதகத்தில்
1 லக்னத்தில் கேது இருந்தால் சுக வாழ்க்கையை விரும்பாமல் ஞான வாழ்க்கைக்கு தயார் படுத்தி விடுவார்...
2 இரண்டில் கேது இருந்தால் அதிக பிரசங்கி தனமாக பேச விடமாட்டார்
3 மூன்றில் கேது இருந்தால் அடுத்தவர் விஷயத்தில் தலையிட உங்களை விட மாட்டார்
4 நான்கில் கேது இருந்தால் ஆரோக்கிய விஷயங்களில் எச்சரிக்கையோடு இருக்க வைப்பார்
5 ஐந்தில் கேது இருந்தால் ஆசை பட்டு வில்லங்கத்தை தேட வைக்க மாட்டார்
6 ஆறில் கேது இருந்தால் யாரிடமும் வம்புக்கு போக வைக்க மாட்டார்
7 ஏழில் கேது இருந்தால் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என மாற்றி விடுவார்
8 எட்டில் கேது இருந்தால் எப்படா மேலே போய் சேருவோம் என்று முடிவு எடுக்க வைப்பார்
9 ஒன்பதில் கேது இருந்தால் நமக்கு வாய்த்த தலைவிதி என்று உங்களுக்கே நீங்களே தேற்றி கொள்ள வைப்பார்
10 பத்தில் கேது இருந்தால் வேலைக்கு உங்களை முக்கிய துவம் தரும்படி இருக்க வைப்பார்
11 பதினொன்றில் கேது இருந்தால் மரத்த வைத்தவன் தண்ணி ஊற்றுவான் என இருக்க வைப்பார்
12 பனிரெண்டில் கேது இருந்தால் என்ன கொண்டு வந்தோம் எடுத்து செல்ல என்று ஊருக்கு உழைக்க வைப்பார்.
Similar Posts : கேது பலன், ராகு-கேது தோஷம் ஏற்பட காரணம், கேது மைந்த பலன், நவகிரகங்கள், See Also:கேது