பரணி நட்சத்திர தேவதை | சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தர்மதேவன் - எமன். |
வடிவம் | மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட முக்கோண வடிவ நட்சத்திரக் கூட்டம். |
எழுத்துகள் | லீ, லு, லே, லோ. |
ஆளும் உறுப்புகள் | தலை, மூளை, கண் பகுதி. |
பார்வை | கீழ்நோக்கு. |
பாகை | 13.2 - 26.40 |
நிறம் | வெண்மை. |
இருப்பிடம் | கிராமம். |
கணம் | மனித கணம். |
குணம் | உக்கிரம். |
பறவை | காக்கை |
மிருகம் | ஆண் யானை. |
மரம் | பாலில்லாத நெல்லி |
மலர் | கருங் குவளை |
நாடி | மத்திம நாடி. |
ஆகுதி | தேன், எள். |
பஞ்சபூதம் | பூமி. |
நைவேத்யம் | வெல்ல அப்பம். |
தெய்வம் | ஸ்ரீ துர்க்கையம்மன். |
அதிர்ஷ்ட எண்கள் | 2, 6, 9. |
அதிர்ஷ்ட நிறங்கள் | ரோஸ், வெள்ளை. |
அதிர்ஷ்ட திசை | தென்கிழக்கு. |
அதிர்ஷ்டக் கிழமைகள் | செவ்வாய், வெள்ளி. |
அதிர்ஷ்ட ரத்தினம் | வைரம். |
அதிர்ஷ்ட உலோகம் | வெள்ளி. |
சொல்ல வேண்டிய மந்திரம் ஓம் காரதியாயனியை ச வித்மஹே கண்யகுமாரி ௪ தீமஹி தந்நோ துர்கி: பிரசோதயாத் || இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்: துரியோதனன், மகேந்திரவர்ம பல்லவன் போன்றோர்... வானியல் விளக்கங்கள் பரணி (Aries)
நிறம் | கிரீம் நிறம். |
தோராய ஒளிப் பொலிவு | 4.64. |
நிறமாலை | B3V. |
ஒளிரும் தன்மை | இல்லை. |
ரேடியல் வேகம் | இல்லை. |
(பூமியிலிருந்து) தொலைவு | 370 ஓளி ஆண்டுகள். |
உண்மையான ஒளிப் பொலிவு | கண்டறியப்படவில்லை. |
பொதுவான பலன்கள்: பரணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், சுகபோபாகங்களுக்கும் கலைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்தவர்கள் பூமி காரகன் செவ்வாயின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால் எலி வளையானாலும் தனி வளையே வேண்டும் எனறு நினைப்பவர்கள். நட்சத்திர மாலை என்னும் நூ ல், தானங்கள் பலவுஞ் செய்வான்; தந்தை தாய்தனைப் பேணும் என்று குறிப்பிடுகிறது. இந்தப் பாடலுக்கேற்ப தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், துன்பப்பட்டு வருவோருக்கு ஆறுதல் சொல்வதுடன் தன் கையில் இருப்பதையும் கொடுத்து உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். கண்ணை இமை காப்பதுபோல தாயையும் தந்தையையும் பாதுகாப்பீர்கள். 'ஜாதக அலங்காரம்' என்னும் நூல், 'தர்மவான், ஐஸ்வர்யன், மான புகழ்க் கோனாம்தாம்பூலநேயன்...' என்று கூறுகிறது. அதாவது, தர்மம் செய்வதில் ஆர்வமுள்ளவராகவும் செல்வந்தர்களாகவும் அபிமானிகளாகவும் புகழ்பட வாழ்பவர்களாகவும் தாம்பூலப் பிரியர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள் என்கிறது. 'பரண்யாஞ்ச ப்ரவக்தாச ஹயரோக& ஸு9ஸ்திரோ பவேத்... என்கிறது யவன ஜாதகம். அதாவது, சாஸ்திரங்களைச் சொல்பவனாகவும், மனோ தைரியம் உள்ளவனாகவும், அனைத்து விஷயங்களையும் அறிந்தவனாகவும் திகழ்வீர்கள் என்று பரணி நட்சத்திரக்காரரான உங்களைப் பற்றிக் கூறுகிறது. 'க்ருத நிச்சய...' என்று பிருகத் ஜாதக நூல் கூறுகிறது. தொடங்கிய காரியங்கள் முடியும் வரை மன உறுதியுடன் இருப்பவர்கள் என்பது அர்த்தம். பரணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், அரசனைப் போல் சுகபோகமாக வாழ்வீர்கள் என்று, 'சுக்ர நாடி' என்ற பழமையான நூல் கூறுகிறது. பரணி, தரணி ஆளும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். ஆளுமைத் திறன் உடையவராக இருப்பீர்கள். ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறந்துவிடுவீர்கள். சமயோஜித புத்தியை பயன்படுத்துவீர்கள். வீராவேசமாக, கோபத்துடன் யாராவது பேசினால், அதற்குத் தகுந்தது போல், அந்த இடத்தில் அடங்கிப் பொவிற்கள், மயாதுவாக் இசையில் ஈடுபாடு இருக்கும். நடனம், நாட்டியம் போன்றவற்றில் அன னையே மறந்துவிடுவீர்கள். கடுத்துகிற உடையானலும் சரி, நடக்கிற நடையானாலும் சரி உங்களிடம் வித்தியாசம் தெரியும். வாசனைத் திரவியங்களில் நாட்டமுடையவர்கள். ஆடம்பர உடைகளை அதிகம் விரும்புவீர்கள். புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு ஆகியவை உங்களுக்கு மிகவும் பிடித்த சுவைகள். ஏதோ, வயிற்றை நிரப்பினோம் என்றில்லாமல், ரசித்துச் சாப்பிடும் நீங்கள், சமைத்தவர்களைப் பாராட்டவும் தயங்கமாட்டீர்கள். குழந்தைப் பருவத்தில் சாதுவாக இருந்தாலும் சாமர்த்தியசாலிதான். வகுப்பறையில் அசிரியர் சொல்வதை அப்படியே கேட்காமல், ஆறாம் அறிவால் சிந்தித்து மனதுக்குத் தோன்றுவதைப் பின்பற்றக் கூடியவர்கள். படிப்பில் திறமைசாலியாக இருப்பீர்கள். ஆனால், மதிப்பெண் அவ்வப்போது குறையும். அதற்குக் காரணம் உங்களிடம் இருக்கும் அதீதமான தன்னம்பிக்கைதான். வணிகவியல், பல், கண், காது ஆகிய துறைகள், வணிக மேலாண்மை, ஃபைனான்ஸ் துறை ஆகியவற்றில் மிளிர்வீர்கள். சுற்றியிருப்பவர்களை எப்போதும் சிரிக்க வைப்பீர்கள். எந்தப் பிரச்னையையும் அடிமனதில் தேக்கி வைத்துக்கொள்ளாமல் சுலபமாக எடுத்துக்கொள்வீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என நினைப்பீர்கள். சோகமாக இருப்பவர்கள்கூட உங்களிடம் பத்து நிமிடம் பேசினால், புதுத் தெம்புடன் திரும்பிப் போவார்கள். உல்லாசப் பயணம் போவதென்றால் உங்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மலை, அருவி, பூங்காவைப் பார்த்தால் அதனுடன் ஒன்றிப்போவீர்கள். சக ஊழியர்களெல்லாம் உங்களைப் பின்பற்றும் அளவுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வீர்கள். பெரிய பதவியை எளிதாக அடையும் நீங்கள், உங்களுக்குக் கழே இருப்பவர்களை விரட்டாமல் சாதுர்யமாக வேலை வாங்குவீர்கள். சலுகைகளை வாரி வழங்குவீர்கள். மூடக்கூடிய நிலையில் உள்ள நிறுவனமாக இருந்தாலும், நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பின், போராடி அதனை உயர்நிலைக்குக் கொண்டு வருவீர்கள். வேலை நிறுத்தம், அதிகாரிகளின் ஒத்துழையாமை ஆகிய பிரச்னைகளை சமயோஜிதமாக அணுகி சர்வ சாதாரணமாகத் தீர்ப்பீர்கள். உங்களுக்கு காதல் மிகவும் பிடிக்கும். யாரையாவது அல்லது எதையாவது எப்போதும் காதலித்துக் கொண்டிருப்பீர்கள். மனைவி, மக்களின் தேவையறிந்து நடந்தும், உங்களுக்கு சிரமம் என்பதே தெரியாமல் பார்த்துக்கொண்டும், ஈடுகொடுப்பீர்கள். உங்களுக்கு சொந்த வீடு சுலபமாக அமையும். வாகன வசதிக்கு ஒருபோதும் குறைவிருக்காது. இருபத்தேழு வயதுக்குள்ளேயே உங்களில் பலர் செல்வ சுகங்களைச் சேர்த்துவிடுவீர்கள். 34 முதல் 41 வயதுக்குள் சாதனைகள் பல செய்வீர்கள். வயதான காலத்திலும் கெளரவப் பதவிகள், சமூகப் பொறுப்புகள் உங்களை நாடி வந்த வண்ணம் இருக்கும். உடல் பருமன், ஹார்மோன், டான்ஸில் தொந்தரவுகள் வந்து நீங்கும். நீண்ட ஆயுள் உங்களுக்கு உண்டு. பரணி நட்சத்திரத்தில் தொடங்கினால் வெற்றிபெறும் செயல்கள்: இசை, ஓவியம். நடனம் ஆகியவற்றைப் பயில, அரங்கேற்றம் செய்ய, மூலிகை பயிரிட, தீர்த்த யாத்திரை தொடங்க, செங்கல் சூளைக்கு நெருப்பிட, ரோஜா உள்ளிட்ட முட்செடிகள் நட இந்த நட்சத்திரம் நன்று. பரணி நட்சத்திர பரிகார ஹோம மந்திரம் அப பாப்மானம் பரணர் ப்பரந்து| தத்யமோ ராஜா பகவான் விசஷ்டாம்! லோகஸ்ய ராஜா மஹதோ மஹான் ஹி| ஸுகந்ந: பந்த்தாமபயங் கருணோது! யஸ்மிந் நக்ஷத்ரே யம ஏதி ராஜா| யஸ்மிந் நேனமப்ப்யஷிஞ் சந்த தேவா:। ததஸ்ய சித்ரஹும் ஹவிஷா யஜாம| அப பாப்மானம் பரணிரப்பரந்து| பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆறுமுகம் அல்லது பதிமூன்று முகம் ருத்ராட்சம் அணிய வேண்டும். பரணி நட்சத்திரம் 13*20 மேஷம் முதல் 26*40 பாகை வரையுள்ள மேஷத்தின் இரண்டாவது நட்சத்திரம் பரணி ஆகும்.. இந்த ராசி செவ்வாயால் ஆளப்படுகிறது.. இந்த நட்சத்திரம் சுக்கிரனால் ஆளப்படுகிறது.. நட்சத்திரம் சுட்டிக்காட்டும் உடலின் உறுப்பு தலை, மூளை, கபாலம், தலையில் உள்ள உறுப்புகள், கண்கள். நட்சத்திரம் சுட்டிக்காட்டும் நோய்கள் தலையில்காயம் (பெரும்பாலும் முன் நெற்றியிலும் கண்களைச் சுற்றிலும்) சளி, நோய்உள்ளவர் களிடம் உடலுறவு கொள்வதனால் ஏற்படும் நோய் சார்ந்த பாதிப்புகள், மேகப்படை முகம் மற்றும் பார்வைப் பாதிப்பு, தலையில் குடைச்சல், ஒருவரின் ருசிக்கு இரையாவதாலும் ஊறு விளைவிக்கும் இன்பங்களில் ஈடுபடுவதாலும் ஏற்படும் பாதிப்புகள். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதுர்கா தேவி. நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள் குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம் செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் கோயில்: நல்லாடை அக்னீஸ்வரர் கோயில் அம்மன்: சுந்தரநாயகி தல வரலாறு: இத்தலத்தில் மிருகண்ட மகரிஷி ஒரு யாகம் நடத்தினார். யாகத்தீயில் போட்ட பட்டு, சிவனை சென்று சேர்வது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. கருவறைக்குச் சென்று காணும்படி மகரிஷி கூற, சிவன் மீது பட்டாடையைக் கண்டனர். பரணி என்ற அக்னி இருப்பதாகவும், அதுவே யாகப்பொருட்களை சிவனிடம் சேர்ப்பதாகவும் மகரிஷி விளக்கினார். இதனால் இது பரணித்தலமானது. சிறப்பு: பரணி நட்சத்திரத்தினர் ஹோமம் நடத்தலாம். கார்த்திகை மாத பரணி மிகவும் சிறப்பு. மேற்கு நோக்கி சுவாமி இருப்பதால் சக்தி அதிகம். இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து, நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கி.மீ., தூரத்தில் நல்லாடை. திறக்கும் நேரம்: காலை 8- மதியம்12, மாலை 5- இரவு 8.30. போன்: 94866 31196, 04364 285 341
Similar Posts : கிருத்திகை நட்சத்திர பலன்கள், கேட்டை நட்சத்திர பரிகாரங்கள், அஸ்வினி நட்சத்திர பலன்கள், ரோகிணி நட்சத்திர பலன்கள், மாமனாருக்கு கண்டம் தரும் ஜாதகம், See Also:பரணி நட்சத்திரம்