கோவைக்காய் - கால் கிலோ,
வரமிளகாய் - 10,
சின்ன வெங்காயம் - 7,
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - 5 டீஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்
கோவைக்காயை வட்டவட்டமாக நறுக்குங்கள். தேங்காய், வரமிளகாய், சின்ன வெங்காயம் மூன்றையும் கரகரவென அரைத்துக் கொள்ளுங்கள். நறுக்கி வைத்திருக்கும் கோவைக்காயில், அரைத்த மசாலாவைப் பிசறுங்கள். கடாயைக் காயவைத்து, எண்ணெயை ஊற்றி, பிசறிய காயைப் போட்டு, உப்பு போட்டுக் கிளறி, ‘ஸிம்’மில் வைத்து மூடி போட்டு விடுங்கள். சில நிமிடம் கழித்துத் திறந்து, மீண்டும் கிளறிவிட்டு, மூடிவைக்கவேண்டும். இப்படியே செய்து, சுருள சுருள வதக்கி இறக்குங்கள். கலக்கலாக இருக்கும். கோவைக்காய்க்கு சர்க்கரை (Diabetes) நோயை குணமாக்கும் வல்லமை உண்டு என்று கூறுவார்கள்.
கோவைக்காய் வறுவல்
Similar Posts : காலிபிளவர் 65, கோவைக்காய் வறுவல், பருப்பு ரசப் பொடி, Balak-Paneer Rolls recipe, How to Make Idly powder, See Also:கோவைக்காய் வறுவல் சமையல்
Comments