பொங்கல் பூ
பொங்கல் பண்டிகையின் போது கரும்பு, மஞ்சள் குலை இவற்றுடன் நாம் படைப்பது, “பொங்கல் பூ’ என்று அழைக்கப்படும் “கண்ணுப் பிள்ளை செடி’. காடுகளிலும், தோட்டங்களிலும் எங்கும் வெள்ளைப் பூக்களுடன் நிறைந்து காணப்படும் இச்செடியை வீட்டு வாசல்களிலும் தொங்க விடுவார்கள். இச்செடியின் சாறு, கரையாத கற்களையும் கரைத்துவிடும். இச்செடிகளை வேருடன் பிடுங்கி உரலில் போட்டு நன்றாக இடித்து, அதை வென்னீரில் போட்டு கொதிக்க வைத்து சாறு எடுக்க வேண்டும். இச்சாறு நாம் வீட்டில் பயன் படுத்தும் அரைக்கீரை தண்ணீர் போல் நல்ல ருசியுடன் இருக்கும். இச்சாற்றை தினசரி இரண்டு தடவை ஒரு மாதம் வரைக் குடித்து வந்தால் நீர் நன்றாகப் பிரியும். சிறுநீரகக் கோளாறு வராது.
மேலும், சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு. இதை யாரும் காபி, டீ போன்று பானமாக அருந்தலாம். சிறுநீரகக் கற்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவன் கொடுத்த நன்கொடை தான் இந்த கண்ணுப் பிள்ளைச் செடி
பொங்கல் பண்டிகையின் போது “பொங்கல் பூ’ படைப்பது