அஸ்வினி நட்சத்திர பலன்கள் மற்றும் குணாதிசயங்கள்
அசுவினி நட்சத்திர தேவதை
|
தேவர்கள்... அமிர்த கலசத்தைக் கையில் வைத்திருக்கும் தேவ வைத்தியர்கள்.
|
வடிவம்
|
குதிரையின் முகத்தைப் போன்று மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டம்.
|
எழுத்துக்கள்
|
ச, சே, சோ, ல.
|
ஆளும் உறுப்புக்கள்
|
தலை, மூளை.
|
பார்வை
|
சமநோக்கு.
|
பாகை
|
0.0° - 13.2°.
|
நிறம்
|
மஞ்சள்.
|
இருப்பிடம்
|
நகரம்.
|
கணம்
|
தேவ கணம்.
|
குணம்
|
எளிமை.
|
பறவை
|
ராஜாளி.
|
மிருகம்
|
அண் குதிரை.
|
மரம்
|
பாலில்லாத எட்டி மரம் (விஷமூட்டி அ காஞ்சிதை மரம்)
|
மலர்
|
நீலோத்பலம்.
|
நாடி
|
தட்சிண பார்சுவ நாடி.
|
ஆகுத
|
அரசு, ஆல்.
|
பஞ்சபூதம்
|
நிலம்
|
நைவேத்யம்
|
பாலேடு
|
தெய்வம்
|
ஸ்ரீ சரஸ்வதி
|
அதிர்ஷ்ட எண்கள்
|
6, 7, 9
|
அதிர்ஷ்ட நிறங்கள்
|
ஆரஞ்சு, பழுப்பு.
|
அதிர்ஷ்ட திசை
|
வடகிழக்கு.
|
அதிர்ஷ்டக் கிழமைகள்
|
திங்கள், வியாழன்.
|
அதிர்ஷ்ட ரத்தினம்
|
வெண் பவழம்
|
அதிர்ஷ்ட உலோகம்
|
தாமிரம், பஞ்சலோகம்.
|
சொல்ல வேண்டிய மந்திரம்:
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே ஸர்வசித்யை ச தீமஹி
தன்னோ: வாணி ப்ரசோதயாத்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்: துரோணரின் புதல்வனும் பிரம்மாஸ்திர வித்தை தெரிந்தவனுமான அசுவத்தாமன், பாம்பாட்டிச் சித்தர், அரிச்சந்திரன், ராஜேந்திரச் சோழன். வானியல் விளக்கங்கள் அசுவினி (Beta Arietis) இது ஓர் இரட்டை நட்சத்திரம். அசுவினி நட்சத்திரத்துக்கு ஒரு துணை நட்சத்திரம் உண்டு.
நிறம்
|
வெள்ளை
|
தோராய ஒளிப் பொலிவு
|
2.64
|
நிறமாலை
|
A5V
|
ஒளிரும் தன்மை
|
நிலையானது
|
ரேடியல் வேகம்
|
-1.9 கி.மீ/விநாடி
|
தொலைவு (பூமியிலிருந்து) .
|
596 ± 08 ஒளி ஆண்டு
|
உண்மையான ஒளிப் பொலிவு
|
2.77
|
நிறை
|
2.00/1.02 M₀
|
ஆரம்
|
2.1 R₀
|
வெளிச்சம் (பிரகாசம்)
|
22 L₀
|
புற வெப்பநிலை
|
8,200 K
|
சுழற்சி
|
79 கி.மீ./விநாடி
|
பொதுவான பலன்கள் அசுவினிக்கு அதிபதி ஞானகாரகனான கேது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் பற்றி பல சோதிட நூல்கள் உயர்வாகப் பேசுகின்றன. அவற்றுள் பழம்பெரும் ஓலைச் சுவடியான 'நட்சத்திர மாலை”,
"பொய்யுரை ஒன்றுஞ் சொல்லான்; புகழ் பெற வாழ வல்லன்... "
- என்று கூறுகிறது. அதாவது, நெருக்கடி நேரத்திலும் உண்மையைச் சொல்லும் உத்தமர்களாக இருப்பார்கள்; மனதாலும் உடலாலும் பலசாலியாக விளங்கும் இவர்கள், வம்புச் சண்டைக்குச் செல்லமாட்டார்கள்; வந்த சண்டையை விடமாட்டார்கள் என்று பொருள்.
ஜாதக அலங்காரம் என்னும் நூல்,
செய் கருமம் வழுவாமல் செய்வன், மடவார் நேயன், தியாக, தீரன்...
- என்று இயம்புகிறது. அதாவது, இவர்கள் எந்தச் செயலையும் விதிமுறை மீறாமல் செய்து முடிப்பதில் வல்லவர்; எந்த வேலையைத் தொடங்கினாலும் அதை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள்; அதே சிந்தனையாக இருப்பார்கள்; புத்திக் கூர்மை உடையவர்களாக விளங்குவதால், மற்றவர்களைப் பார்த்தவுடன் அவர்களுடைய உள் மனதைப் புரிந்துகொள்வார்கள்; ஆடை, ஆபரணங்களை அணிவதில் அதிக ஆர்வம் இருக்கும்; தாம்பூலம், வாசனைத் திரவியங்கள் அகியவற்றை விரும்புவார்கள்; இளமையில் வறுமையை அனுபவித்தாலும், முதுமையில் வளமை பெற்று வாழ்வார்கள் என்று பொருள்.
அர்த்தவாம்சாபி... என்று தொடங்கும் யவன ஜாதகப் பாடல், இவர்களை தனவான், சாமர்த்தியவான், வலிமையுள்ளவன் என்று கூறுகிறது. வீரதீர கிரகமான செவ்வாயின் ராசியான மேஷத்தில் இந்த நட்சத்திரம் வருவதால், இதில் பிறந்தவர்கள் தன்மானம் அதிகம் உள்ளவர்களாகவே இருப்பார்கள். இருபத்தேழு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமாகத் திகழ்வதால் எங்கும் எதிலும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற சிந்தனை இவர்களிடம் காணப்படும்.
பிரகாசமான கண்களைப் பெற்றிருப்பதால் கம்பீரமான தோற்றத்துடன் அழகாகக் காணப்படுவார்கள். பலருக்கு நெற்றி உயர்ந்திருக்கும். காது மடல்கள் விரிந்திருக்கும், பல் வரிசையும் சீராக இருக்கும். சுறுசுறுப்புடன் இருப்பார்கள். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிளளையபோல் அல்லாமல், சுய அறிவுடன் யோசித்து பதில் கூறுவார்கள். பிடிவாதம் இருக்கும். பள்ளிப் பருவத்தில் எதிர்க் கேள்வி கேட்டும் குணம் இவர்களிடம் அதிகம் உண்டு. பள்ளிப்படிப்பில் மதிப்பெண் குறைவாகப் பெற்றாலும், கல்லூரிப் படிப்பில் அதிக கவனம் செலுத்தி, பரிசு, பதக்கம் பெறுவார்கள். இவர்களைச் சுற்றி நண்பர் கூட்டம் அதிகம் இருந்தாலும் ஒரு சிலருடன்தான் நெருங்கிப் பழகுவார்கள். அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இசை, ஓவியத்தையும் விட்டு வைக்கமாட்டார்கள். தாய்மொழிக்கு ஈடான புலமை அன்னிய மொழிகளிலும் உண்டு. விவாதம் என்று வந்துவிட்டால் வெற்றி இவர்ளுக்குத்தான். மேடைப் பேச்சுக்கு அஞ்சமாட்டீர்கள். துணிச்சலுடன் தன்னம்பிக்கையும் கொண்டிருப்பீர்கள். தொழில் உத்யோகத்தில் நேர்மையாக இருப்பீர்கள். அதனால் மூத்த அதிகாரியுடன் சில ( நேரங்களில் மோதல் வரும். கடின உழைப்பாலும் நிர்வாகத் திறமையாலும் சாதாரண நிலையிலிருந்து விரைவில் பெரிய பதவியில் அமர்வீர்கள். பத்திரப் பதிவு, வானியல், வங்கி, மருத்துவம் ஆகிய துறைகளில் பலர் திறம்பட நாட்டுக்கு சேவை செய்வீர்கள். நாற்பத்தைந்து வயதிலிருந்து சிலர் சொந்தத் தொழிலில் ஈடுபடுவீர்கள். ரசாயனம், மருந்து, மின்சாரம் சம்பந்தப்பட்ட வியாபாரம் சாதகமாக இருக்கும். ஜாதகத்தில் செவ்வாயும் கேதுவும் வலுவாக அமைந்திருந்தால், ரியல் எஸ்டேட், கட்டடம் ஆகிய துறைகளில் செல்வந்தர்களாகத் இகழவீர்கள். திருமணம் காதலித்தாலும், பலருக்கு, பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட। இருமண மே முடியும். சுக்கான் வலுவாக இருப்பவர்களுக்கு மட்டுமே காதல் வெற்றிபெற்று, கல்யாணத்தில் முடியும். மனைவியை அதிகம் நேசிப்பீர்கள். பிள்ளைகளின் மீது ராத பாசம் வைத்திருப்பீர்கள். கோழி அடைகாப்பதைப் மபோல, பிள்ளைகளைப் பாதுகாப்பீர்கள். சிறுவயதிலேயே அவர்கள் நெஞ்சில் நீதி, நர்மை போன்ற தர்ம சிந்தனைகளை விதைப்பீர்கள். இருபத்துநான்கிலிருந்து முப்பது வயதுக்குள்ளேயே வீடு, வாகனம் ஆகியவை அமைந்துவிடும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வீர்கள். நாற்பதிலிருந்து நாற்பத்தேழு வயதுக்குள் அரசியலிலோ அன்மிகத்திலோ ஈடுபட்டு புகழ் அடைவீர்கள். நட்சத்திரப்படி எந்தெந்த வயதில் என்னென்ன நோய் அசுபதி நட்சத்திரம் 0* மேஷம் முதல் 13* 20 பாகை வரை மேஷம் முதல் நட்சத்திரம் மேஷ ராசியானது செவ்வாயால் ஆளப்படுகிறது. அசுபதி நட்சத்திரமானது கேதுவால் ஆளப்படுகிறது. அசுபதி நட்சத்திரம் சுட்டிக்காட்டும் உடலின் உறுப்பு தலை, மூளை, கபாலம் அசுபதி நட்சத்திரம் சுட்டிக்காட்டும் நோய்கள் தலையில் காயம், மூளைக்காய்ச்சல், நாளங்களில் குருதிஉறைதல், மூளை சார்ந்த ரத்தசோகை மயங்கி சோர்தல், காக்காய் வலிப்பு, வன்கொ@ரம், உடல் தசைகள் திடீரென இறுகுதல், தசைமுறுகு வேதனை, தலையின் ஏதேனும் ஒருபக்கத்தில் கடுமையான தலைவலி, நரம்புவலி, இயற்கைக்கு மாறான ஆழ்ந்த உறக்கநிலை, உணர்விழந்த முழு மயக்கநிலை, மூளை சார்ந்த குருதிப்போக்கு, முடக்குவாதப் பாதிப்பு, தூக்கமின்மை, முறைக்காய்ச்சல், தண்டுமூளைச் காய்ச்சல், பெரியம்மை. பைல்ஸ், முதுகுத் தண்டுப் பிரச்னை, கணுக்கால் வலி போன்றவற்றால் அவ்வப்போது சிரமப்படுதும் உண்டு. ஆனால் அவை நீங்கி சுகம் பெறுவீர்கள். ஐம்பத்தைந்து வயதிலிருந்து நீங்கள் சார்ந்திருக்கும் மதம், இயக்கம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக உழைப்பீர்கள். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. அசுவினி நட்சத்திரத்தில் தொடங்கினால் வெற்றி பெறும் செயல்கள் திருமணம், பூ முடித்தல், சீமந்தம், புதுமனை புகுதல், குழந்தைக்குப் பெயர் சூட்டல், மொட்டையடித்து காது குத்துவது ஆகியவை செய்யலாம். முதன்முதலில் வேத சாஸ்திரம் கற்க, வாகனம், நவீன ஆடை, அபரணம், ரத்தினம் ஆகியவை வாங்க, அணிய, பொன்னேர் கட்ட, விதை விதைக்க, மரக் கன்றுகள் நட, மனை முகூர்த்தம் செய்தல், புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குதல், கடல் வழி பயணங்கள் மேற்க்கொள்ளுதல், தானியங்கள் வாங்குதல், பசு தொழுவம் அமைத்தல், போன்றவற்றை செய்வது நல்லது.
அசுவினி நட்சத்திர பரிகார ஹோம மந்திரம்
ததச்வினா வச்வயுஜோபயாதாம்
சுபங் கமிஷ்ட்டெள ஸுயமேபிரச்வை:
ஸ்வந் நக்ஷத்ரஹும் ஹவிஷா யஜந்தெள
மத்த்வாஸம்ப்ருக்தெள யஜுஷா ஸமக்தெள
யெள தேவானாம் பிஷஜெள ஹவ்யவாஹெள
விச்வஸ்ய தூதாவ ம்ருதஸ்ய கோபெள
தெள நக்ஷத்ரஞ் ஜுஜுஷாணோபயாதாம்
நமோ அச்விப்ப்யாங் க்ருணுமோ அச்வயுக்ப்யாம்
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒன்பது முகம் ருத்ராட்சம் அணிய வேண்டும்.
அசுவினி நட்சத்திரக்காரர்களின் அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்
மூலவர்: அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்
அம்மன்/தாயார்: பிரகன்நாயகி (பரியநாயகி)
தல விருட்சம் தீர்த்தம்: 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் பெயர் :திருத்துறைப்பூண்டி மாவட்டம், திருவாரூர்
மாநிலம்: தமிழ்நாடு
திருவிழா: சித்திரை திருவிழா இங்கு விசேஷம். நவராத்திரி, திருவாதிரை விழா ஆகியவனவும் நடக்கின்றன. தலசிறப்பு இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும்.
இக்கோயிலின் விசேஷ அம்சம்: சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம். போன் 91 4369 222 392, 94438 85316, 91502 73747
பொது தகவல்: அசுவினி நட்சத்திரக்காரர்களின் பொது குணம் செல்வந்தராகவும், புத்தி சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர். விவாதம் செய்வதிலும், ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும். மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு அன்புடன் பழகுவர். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப் போதிப்பர். தெய்வீக வழிபாடு, புராண, ஜோதிட சாஸ்திரங்களில் ஈடுபாட்டுடன் விளங்குவர். அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். நேர்த்திக்கடன்- சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை- அஸ்வினி நட்சத்திரத்தலம் அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திரதவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யுக்கூடிய தலமே பிறவி மருந்தீஸ்வரர் கோயிலாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணத்தன்மை இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும். கஜசம்ஹார மூர்த்தி தாருகாவனத்தில் தங்கியிருந்த முனிவர்கள், தாங்கள் செய்யும் யாகங்களின் பலனை ஏற்பதால் தான், சிவனுக்கே சக்தி ஏற்பட்டு உலகை காப்பதாக ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு புத்தி கற்பிக்க இறைவன், பிட்சாடனராக, உலகமே வியக்கும் பேரழகுடன் அங்கு வந்தார். அவர்கள் பிட்சாடனராக மாறுவேடத்தில் வந்த அந்த சுந்தரனைப் பார்த்தனர். தன்னிலை மறந்து, ஆடைகள் அவிழ அவர் பின்னால் சென்றனர். அந்நேரத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார். தங்கள் மனைவியரை விட அழகில் சிறந்த அப்பெண்ணின் பின் னால் முனிவர்கள் சென்றனர். சற்று நேரத்தில் தங்கள் நிலை உணர்ந்து, தங்களை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களை அழிக்க, மந்திர சக்தியால் உருவான யானை ஒன்றை ஏவினர். சிவன் அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் அவர் கஜசம்ஹார மூர்த்தி என பெயர் பெற்றார். முனிவர்கள் தங்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர். தல வரலாறு ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவே விஷமாகும் என எச்சரித்தாள். அவளது பேச்சைக் கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான். ஜல்லிகை திருத்துறைப்பூண்டி சிவனை வணங்கி, இறைவாஸ்ரீ என் கணவன் நல்லவன் அல்ல, இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச்செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு, என வேண்டினாள். அவளது துயரம் தாங்காத இறைவனின் துணைவியான பெரியநாயகி அவளுக்கு காட்சியளித்தாள். அவளது அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான். அத்துடன் அவனது வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும் எழுப்பினாள். அம்மாஸ்ரீ நான் என் வழியே போய்க்கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன என்றான். அவனிடம் அம்பிகை, மகனேஸ்ரீ தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம், மகளேஸ்ரீ நீ அசுர குலத்தவள் ஆயினும் நற்குணமும், சிவபக்தியும் கொண்டிருந்தாய். எந்தப் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு, இன்முகத்துடன் கணவனின் நல்வாழ்வை விரும்புகிறாளோ, அவள் சுமங்கலியாக வாழ வழி செய்வேன். அவளது கணவனையும் திருத்துவேன், என்றாள். அதிசயத்தின் அடிப்படையில் இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.. நட்சத்திரத்தில் முதலாவது நட்சத்திரமாக இருந்தாலும், வானத்தில் இந்த அஸ்வினி ஆறு நட்சத்திரங் களின் கூட்டமாகும். இது வானத்தில் குதிரை முகம் போல் தோற்றமளிக்கும். தேவ கணம் கொண்டு இருந்தாலும், வலது பக்கமாக இருக்கக் கூடியவை. சம நோக்கு பார்வை இருந்தாலும் , அஸ்வினி நட்ச்சத்திரம் கேதுவின் நட்சத்திரம் என்பதால் இந்த நட்சத்திரக்காரர்கள் மனக்குழப்வாதியாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தலைவலி, கால் மூட்டு வலி, இதய நோய், சளி இருமல், ரத்த கொதிப்பு, மூச்சு இரைப்பு, பருவ கால நோய்கள் வரக்கூடும் 8, 16 வயதில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளும், 10 வயதில் விரோதிகளால் கண்டமும், 13 வயதில் கண்களில் பாதிப்பும், 21 வயதில் உண்ணும் உணவே விஷமாகக் கூடிய சூழ்நிலையும், 37 வயதில் தேவையற்ற பெண்களின் சகவாசத்தால் கண்டமும், 40 வயதில் வண்டி வாகனங்களால் ஆபத்தும், 45 வயதில் அரசு வழியில் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரும். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசரஸ்வதி தேவி. நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் இவர்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் இவர்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து இவர்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள் குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து இவர்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம் செய்து விட்டு வர இவர்கள் நட்சத்திர தெய்வம் இவர்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் அம்மன்: பெரியநாயகி தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள்.
சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அசுவினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். அசுவினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்கியம் நிலைக்கும். இருப்பிடம்: திருவாரூரிலிருந்து 30 கி.மீ., திறக்கும்நேரம்: காலை 6-11, மாலை4- இரவு 8. போன்: 94438 85316, 04369 222 392
அசுவினி முதல் பாதம் (கேது * செவ்வாய் * செவ்வாய்)
முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி செவ்வாய். ஆகவே முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சுய உழைப்பால் முன்னேறுவார்கள். உள்ளதை உள்ளபடி பேசுவார்கள். அதர்மத்தைத் தட்டிக் கேட்பார்கள். சுயமாகச் சம்பாதித்து, செல்வம் சேர்ப்பார்கள். ஆடம்பரச் செலவு செய்வதில் நாட்டம் உள்ளவர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவார்கள். இருந்தாலும் கொஞ்சம் முரட்டுத்தனமும் முன்காபமும் இருக்கும். சில நேரங்களில் குறுக்கு புத்தியும் வரும். ஆறு வயது வரை சளி, வயிற்றுக் கோளாறு, காய்ச்சல் ஆகியவற்றால் உடல் நலம் பாதிக்கப்படும். படிப்பைவிட விளையாட்டுகளில் - குறிப்பாக தடகளம், கபடி, துப்பாக்கி சுடுவது போன்றவற்றில் ஆர்வம் பிறக்கும். பெற்றோர் மீது பாசம் இருந்தாலும் தனித்துச் செயல்படுவார்கள். சிலருக்கு விடுதியில் தங்கிப் படிக்கும் சூழ்நிலை உருவாகும். சிலர் சகோதரர்களால் ஏமாற்றம் அடைவார்கள். நண்பர்களுக்காகவும் கொள்கைகளுக்காகவும் எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். சூடான, காரமான உணவுகளை விரும்புவார்கள். உடை விஷயத்தில் அவ்வளவாக கவனம் செலுத்தமாட்டார்கள். தன்னை அவமதித்தவர்களை தண்டிக்க வேண்டுமென்ற உணர்வு இருக்கும். காதலித்த பெண்ணை போராடிக் கைபிடிப்பார்கள். ஆண் வாரிசு அதிகம் உண்டு. 2௦ முதல் 31 வயது வரையிலும், மீண்டும் 47 முதல் 53 வயது வரையிலும் நெஞ்சு வலி ஏற்படும். இந்தக் கால கட்டங்களில் பொருள் இழப்பு, வீண் பழி வந்து நீங்கும். அவ்வப்போது பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வசதியான வாழவு உண்டு. பரிகாரம் : அனைத்து இடர்களும் தீர, எல்லாவற்றிலும் வெற்றியடைய திருச்செந்தூர் முருகப் பெருமானை சஷ்டி திதிகளில் சென்று வணங்குவது நலலது. 1 ம் பாதத்தினருக்கு உரிய விருட்சம் காஞ்சிதை (எட்டி) தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுங்கள். சில மரங்கள் -நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம்.அருகில் இருக்கும் சித்தமருத்து-வரையோ, அல்லது, கூகுள்லெயோ தேடிப்பாருங்கள் இல்லையா, அந்த நட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம். மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு.அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது, நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது.
அசுவினி இரண்டாம் பாதம் (கேது + செவ்வாய் + சுக்கிரன்)
இரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன் இதில் பிறந்தவர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகள். இசை, நடனம், நாட்டியம் இவற்றில் இவர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும் சிறுவயதிலேயே உயர் ரக வாகனத்தில் உலா வருவார்கள். இவர்கள் கேட்கும் பொருளை மறுக்காமல், பெற்றோர் உடனை வாங்கித் தருவார்கள். பார்ப்பதற்கு அழகாகவும் பளிச்சென்ற கண்களும் மற்றவர்களுடன் எளிதில் பழகும் சுபாவமும் இவர்களுக்கு உண்டு. செல்வம் சேரும். படிப்பில் பாராட்டும்பரிசுகளும் பெறுவார்கள். நட்பு வட்டம் அதிகமாக இருக்கும். எல்லோரும் விரும்பும்படி இதமாகப் பேசுவார்கள். ஈகை குணம் கொண்டவர்கள். தர்மம் தலைகாக்கும் என்று நம்புபவர்கள். நொறுக்குத் தீனியை அதிகம் விரும்புபவர்கள். இனிப்பையும் லேசாகப் புளிக்கும் தயிரையும் விரும்பிச் சாப்பிடுவார்கள். புகழ்பட வாழ்வார்கள். சிறு வயதிலேயே சொந்த வீடு அமையும். 25, 28, 29, 95, 98, 44, 409, 59 வயதுகளில் இவர்கள் எதிலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. காதலித்துக் கல்யாணம் செய்துகொள்வார்கள். மனைவி மீது தீராத பாசம் வைத்திருப்பார்கள். ஆண், பெண் இருபால வாரிசுகளும் உண்டு. பிள்ளைகளை நாலும் தெரிந்தவர்களாக வளர்ப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரம் தருவார்கள். இந்தப் பாதத்தில் பிறந்தவர்களிடம் அவர்களுடைய சகோதரி பாசமாக இருப்பார். தாய்ப் பற்று இவர்களுக்கு அதிகம் உண்டு. உறவினர் புடைசூழ வாழ்வார்கள். பரிகாரம் கும்பகோணம் அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஒப்பில்லாப் பெருமாளை ஏகாதசி திதியில் சென்று வணங்குதல் நலம். 2 ம் பாதத்தினருக்கு உரிய விருட்சம் மகிழம் தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுங்கள். சில மரங்கள் -நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம்.அருகில் இருக்கும் சித்தமருத்து-வரையோ, அல்லது, கூகுள்லெயோ தேடிப்பாருங்கள் இல்லையா, அந்தநட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம். மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு.அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது, நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது.
மூன்றாம் பாதம் (கேது + செவ்வாய் + புதன்)
மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் நாசூக்காகப் பேசுவார்கள். நுண்ணறிவு படைத்தவர்கள். அதிகாரத்துக்கு அடிபணியாதவர்கள். அன்புக்குத் தலை வணங்குபவர்கள். அனைவரும் விரும்பும்படி நடந்து கொள்வார்கள். கல்வியில். குறிப்பாக கணிதம். உளவியல், வானவியல் ஆகியவற்றில் ஆர்வம் இருக்கும். பெற்றோரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டார்கள். ஆனால், அறிவுபூர்வமாக வாதிடுவார்கள் மனதாலும் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்க மாட்டார்கள். யாரேனும் இவர்களை அவதூறாகப் பேசினாலும் கலங்க மாட்டார்கள். நான்கு வயதுக்குள் ஜன்னி, நுரையீரல் கோளாறு வந்து நீங்கும். செஸ், பில்லியர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை விரும்புவார்கள். அவ்வப்போது இவர்களுக்கு தன்னை யாரும் மதிக்கவில்லையே' என்ற எண்ணம் வரும். வயலின் இசையை ரசிப்பவர்கள். அனேகர், பேராசிரியராகவோ கல்விக்கூட நிர்வாதியாகவோ சமூக விழிப்புணர்வுக்கு கவுன்சிலிங் தருபவராகவோ இருப்பார்கள். காதலில் விருப்பம் இருக்காது. சிலர் ஒருதலையாகக் காதலிப்பார்கள். சமூகத்தில் எதையாவது சாதித்த பிறகு திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று நினைத்து, தாமதமாகத் திருமணம் செய்து கொள்வார்கள். வசதி இருந்தும் எளிமையை எப்போதும் விரும்புவார்கள். சிலருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும். 14, 15, 19, 24, 22, 33, 32,42, 31, 32, 64 அகிய வயதில் திடீர்த் திருப்பங்கள் ஏற்படும். இவர்கள் அறிஞர் பெருமக்கள் மதிக்கும்படி வாழ்வார்கள். சிலர் கூடா பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவார்கள். பரிகாரம் திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் கோயிலில் அருள்பாலிக்கும் பிரயோகச் சக்கரம் ஏந்திய ஸ்ரீவரதராஜப் பெருமாளை இவர்கள் வணங்கலாம். 3 ம் பாதத்தினருக்கு உரிய விருட்சம் பாதாம். தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுங்கள். சில மரங்கள் -நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம்.அருகில் இருக்கும் சித்தமருத்து-வரையோ, அல்லது, கூகுள்லெயோ தேடிப்பாருங்கள் இல்லையா, அந்தநட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம். மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு.அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது, நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது.
நான்காம் பாதம் (கேது * செவ்வாய் + சந்திரன்)
நான்காம் பாதத்துக்கு அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்கள் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள். அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். நகைச்சுவையாகப் பேசுவார்கள். ஆடை, அணிகலன்களை விரும்பி அணிவார்கள். குலப் பெருமையை கட்டிக் காப்பவர்களாக இருப்பார்கள். தாய்ப் பாசம் இவாகளுக்கு அதிகமுண்டு. உயர் ரக வாகனங்கள் மீது நாட்டம் இருக்கும். உருண்டு திரண்ட தேகமும், தட்சண்யமான கண்களும், சிரித்தால் குழி விழும் கன்னங்களும் கொண்டவர்கள்; பார்ப்பதற்கு வசீகரமானவர்கள். பாசந்தி பபான்ற பால் வகை இனிப்புகளை விரும்பி உண்பார்கள். கடவுள் பக்தி அதிகம் உண்டு. கோயில் கும்பாபிஷேகம்கூட செய்வார்கள். அன்ன தானம், வஸ்திர தானம் செய்வார்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். சிறு வயதிலேயே சுறுசுறுப்பாக இருப்பவர்கள் ஆதலால், வயோதிகத்திலும் மற்றவர்களை அண்டி வாழமாட்டார்கள். படிப்பில் ஆர்வம் அதிகம் இருக்கும். அனிமேஷன், ஆடை வடிவமைப்பு, விளம்பரம், சுற்றுலா, சட்டம், ஓட்டல் மேனேஜ்மென்ட் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். பலர், இருபது வயதுக்குள்ளேயே புகழின் உச்சிக்கு செல்வார்கள். மனைவியை நண்பராக நடத்துவார்கள். குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவார்கள். 24, 25, 29, 33, 34, 39, 42, 43, 51, 52, 60 அகிய வயதில் அதிரடி. முன்னேற்றங்கள் உண்டாகும். மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வார்கள். பரிகாரம் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ வாராஹி அம்மனை வணங்குதல் நலம். 4 ம் பாதத்தினருக்கு உரிய விருட்சம் நண்டாஞ்சு தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுங்கள். சில மரங்கள் -நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம்.அருகில் இருக்கும் சித்தமருத்து-வரையோ, அல்லது, கூகுள்லெயோ தேடிப்பாருங்கள் இல்லையா, அந்தநட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம். மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு.அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது, நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது.
Similar Posts :
கேட்டை நட்சத்திர பரிகாரம்,
கேட்டை நட்சத்திர பரிகாரங்கள்,
அஸ்வினி நட்சத்திர பலன்கள்,
மாமனாருக்கு கண்டம் தரும் ஜாதகம்,
கிருத்திகை நட்சத்திர பலன்கள், See Also:
அசுவினி நட்சத்திரம்