ஜாதகம் பார்க்கும் முன்...ஒரு ஜாதகத்தை பார்த்து சொல்வதற்கு முன்பு அந்த ஜாதகத்தை அலசி ஆராய்ந்து சரி பார்த்து விட்டு பலன் சொல்ல வேண்டும். ஜாதகம் சரி பார்க்க பல வழிகள் இருப்பினும் அவற்றும் சில
- ஜாதகர் பகலில் பிறந்தவரா அல்லது இரவில் பிறந்தவரா என்பதைக் காணவேண்டும்.
- ஜாதகர் வளர்பிறையில் பிறந்த குழந்தையா அல்லது தேய்பிறையில் பிறந்த குழந்தையா என்பதை பார்க்க வேண்டும்
- ஜாதகர் உத்ராயணப் பிறப்பா அல்லது தட்சிணாயணப் பிறப்பா என்பதை அறிய வேண்டும். இதனை சூரியன் நின்ற மாதம் மற்றும் இராசியைக் கொண்டு அறியலாம்
- ராகு கேது எனப்படும் பாம்பு கிரகங்கள் தங்களுக்குள் சம்பந்தமாக அமைய குறிக்கப் பெற்றுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்
- சூரியனும் சுக்கிரனும் புதனும் சுமார் 2 இராசிகளுக்குல்ளேயே சூர்யன் இருக்கும் இடத்திலிருந்து அமையுமே தவிற அதற்கு மேல் தள்ளி அமையாது. இந்த அமைவு நியதிக்கு ஏற்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை காண வேண்டும்.
பிறகு கீழ்கண்டவைகளைக் காண்பது சிறப்பு
- ஜாதகத்தில் அதிர்ஷ்டப் புள்ளி உள்ளதா என்று பார்க்கலாம்
- ஜாதக லக்கினம் இந்து லக்கினமா என்று பார்க்கலாம்
- ஜாதகம் ஷேத்திர ஸ்புடமா (பெண்ணா) அல்லது பீஜஸ்புடமா (ஆணா) என்று பார்க்க வேண்டும்
Similar Posts :
ஜாதகத்தை பார்த்து சொல்வதற்கு முன்பு, See Also:
astrology-preliminaries