அகப்பேய் சித்தர்
ஐயாரப்பர் கோவிலில் சண்டேசுவரர் சன்னதி பக்கம் மேற்கு நோக்கிய சன்னதியில் சிவலிங்கப் பிரதிஷ்டையுடன் கூடிய சமாதி இருக்கிறது.
தியாகராஜ சுவாமிகள்
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இவரது சமாதி காவிரிக்கரையில் இருக்கிறது.சங்கீதத்துறையில் சாதிக்க விரும்புவோர்,இவரது ஜீவ சமாதியை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளுக்கு சுக்கிர ஓரையில்(காலை 6 முதல் 7 வரை;மதியம் 1 முதல் 2 வரை;இரவு 8 முதல் 9 வரை;) வழிபட்டுவரலாம்.
ஆட்கொண்டார் சாமி
திருவையாறு திருநெய்த்தானம் சாலை கல்கி அக்ரஹாரம் என வழங்கப்படுகிறது.சாலையின் வடபுறம் வரிசையில் ஆட்கொண்டார்சாமி கபால மோட்சம் எய்திய சமாதிக்கோவில் இருக்கிறது.
சுடுகாட்டுச்சாமி (எ) சதானந்த சாமிகள்
கல்கி அக்ரஹாரம் 41 ஆம் எண்ணில் சுடுகாட்டு சாமிகளில்ன் திரு மடம் இருக்கிறது.இந்த மடத்தின் முன்பகுதியில் அதிஷ்டானம் இருக்கிறது.
ஸ்ரீதம்பலசாமி
சுடுகாட்டுச்சாமி மடத்தை அடுத்து 42 ஆம் எண் உட்புறமுள்ள கொல்லையில் சமாதி மேடை இருக்கிறது.
ஸ்ரீசிவப்பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள்
காவிரியின் வடகரையில் தியாகராஜ சுவாமிகள் சமாதிக்குப் பின்புறம் சிறிய சமாதிக்கோவில் இருக்கிறது.இந்த ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பரமானந்த குரு (எ) அருள்சாமிகள்
திருவையாறு டூ கும்பகோணம் சாலையில் சப்த கன்னியர் கோவில் உள்ளது.அடுத்த கட்டடத்தின் மேற்புறம் சிறிய சந்தில் அருள்குரு பரமானந்த நிலையம் என்னும் சமாதிக்கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் சுவாதி நட்சத்திர நாளில் நடைபெற்றுவருகிறது.
சித்தேசர்
ஐயாரப்பர் கோவிலில் ஐயாரப்பர் சன்னதி எதிரில் சித்தேசர் ஆக லிங்கவடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சாமி(முருகேசன் சாமி)
புஷ்ய மண்டபக்கரை ஓரமாக அறுபத்துமூவர் மடம் இருக்கிறது.இந்த மடத்தினுள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
ஆண்டார் சமாதி
மேலமடவிளாகம் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்றம் இருக்குமிடத்தில் சிறிய கோவிலில் லிங்க வடிவில் சமாதி இருக்கிறது.
தாராசுரம் - ஒட்டக்கூத்தர்
தாராசுரம் வீரபத்ரன் கோவில் பின்புறம் சமாதி இருக்கிறது.