கரம்போக்குச் சித்தர்
திருவாவடுதுறை ஆதீன வளைவுக்கு எதிரில் உள்ள நடைப்பாதைக்குக் கீழ் உள்ள திடலில் இவருடைய ஞானச் சமாதித் திருக்கோயில் உள்ளது
கொங்கணச் சித்தர்
திருவாவடுதுறையில் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுள்ள தென்னந்தோப்பின் கீழ்ப்புறம் தாமரைக் குளத்திற்கு அருகில் இவருடைய ஞானச் சமாதித் திருக்கோயில் உள்ளது. இத்தோப்பிற்கு கொங்கணேஸ்வரர் தோப்பு என்ற பெயரும் உண்டு
முக்காடுச் சித்தர்
திருவாவடுதுறையிலிருந்து தேரெழுந்தூர் சாலையில் பிடாரி அம்மன் கோயிலுக்குச் சற்றுக் கீழ்ப்புறம் முக்காடுச் சித்தர் கோயில் உள்ளது. இக்கோயில் சீர்வளச்சீர் குரு மகாசன்னிதானம் அவர்களால் திருப்பணி நிறைவேற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைப்பெற்றது. இத் தோப்பிற்கு முக்காட்டுத் தோப்பு என்று பெயர்.
அரியகுடி சித்தர்
அரியாண்டிக் குளத்திற்கு ஈசான்ய மூலையில் திடலில் கோயில் இருந்தது. இத்திடல் அவுரித்திடல் என்றும் கொடிக்கால் திடல் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஒரு சிவலிங்கம் உள்ளது.
சிவஞானமுடையார்
திருவாவடுதுறை திருமஞ்சன வீதியில் திருக்கோயில் வடக்குச் சன்னதி அருகில் சிவஞானமுடையார் சமாதித் திருக்கோயில் உள்ளது
மறைஞானச் சித்தர்
பெரிய தோப்பின் நடுவில் மறைஞானச் சித்தர் வாழ்ந்தார். அவர் அங்கு பல மூலிகைகளை வளர்த்து மருத்துவம் செய்துள்ளார். அதற்கான தடையங்கள் காணப்படுகின்றன. இப் பெரிய தோப்பில் இரண்டாவது குரு மகாசன்னிதானம் அருள்திரு மறைஞான தேசிகர் ஞானச் சாமாதித் திருக்கோயிலும் உள்ளது. இத்தோப்பில் இன்றும் நள்ளிரவில் சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகக் கூறுகின்றார்கள்
திருமூலர்
திருவாவடுதுறை திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் யோகத்தில் அமர்ந்தார் என்பர். அவருடைய திருவுருவமும் திருக்கோயிலும் உள்ளது
திருமாளிகைத் தேவர்
இவர் போகரின் சீடர். திருவிசைப்பா பாடல்கள் அருளியவர். பல அற்புதங்களை நிகழ்த்தியவர். இவருடைய ஞானச் சாமாதித் திருக்கோயில் ஆதீனத் திருமடத்தில் உள்ளது.