SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
அகத்தியமகரிஷி அருளிய சிவராத்திரிவிரதம்
  • 2019-10-06 00:00:00
  • 1

அகத்தியமகரிஷி அருளிய சிவராத்திரிவிரதம்

அகத்தியமகரிஷி அருளிய சிவராத்திரி விரதம்

அகத்தியமகரிஷி அருளிய சிவராத்திரி விரதம் இருக்கும் முறை!!! (காலத்தால் மறைக்கப்பட்ட அபூர்வ சிவராத்திரி ரகசியங்கள்.)

(இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.21.2.2020 வெள்ளிக்கிழமை யோக சிவராத்திரியானது அகத்தியர் பெருமான் அருளால் உங்கள் தலையெழுத்தயே மாற்ற கூடிய அபூர்வ சிவராத்திரி.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஸ்ரீ அகத்தியர் விஜயம் என்ற அபூர்வ நூலில் தொடராக வெளிவந்த சிவராத்திரி ரகசியங்கள் பற்றிய அபூர்வ சித்த குறிப்புகளை தொகுத்து பகிர்கிறேன்.

அன்று முழுமையான சிவனருளை பெற சித்தர்களின் குரலோடு இணைத்து இருங்கள்.... அனைவருக்கும் பகிருங்கள் நன்மைகள் கோடி பெற!!!!!)

சித்தர்களின் தலைவராக இருப்பவரும்,தமிழ் மொழியை ஈசனிடம் இருந்து பெற்று பூமிக்குக் கொண்டு வந்தவரும்,ஜோதிடத்தின் தந்தையும், சித்த மருத்துவத்தின் தந்தையும்,மந்திரங்களின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷியின் அருளால் இந்த பதிவினை சித்தர்களின் குரலில் இன்று உங்களுக்கு வழங்குகிறோம்;

தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும்;அதுவும் எப்படி?

இதுவரையிலும் நாம் எத்தனை ஆயிரம் முறை அல்லது எத்தனை லட்சம் முறை மனிதப் பிறவி எடுத்திருப்போம் என்று நமக்குத் தெரியாது;

அத்தனை மனிதப் பிறவியிலும் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும்; அப்படி கரைந்து காணாமல் போவதால்,அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்தரகசியம் ஆகும்;

பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும்; ஏனென்றால்,பல சதுர்யுகங்கள் முடிந்து,பல கல்பங்கள் முடிந்து, இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள்; ஆகவே,சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி; ஆலமரத்தடியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி யோகத்தில் அமர்ந்திருப்பதற்குக் காரணமே சிவராத்திரி மகிமையை எடுத்துச் சொல்வதற்காகத்தான்;

வெள்ளிக்கிழமையன்று திரயோதசி திதியும் , சதுர்த்தசி திதியும் சேர்த்து வந்தால், அதாவது ஒரே நாளில் பிரதோஷமும் மஹா சிவரத்திரியும் சேர்ந்து வந்தால் அது யோக சிவராத்திரி ஆகும்; அதாவது,யோகியர் மறந்திடாத அபூர்வ சிவராத்திரி ஆகும்;

தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே பட்ச சிவராத்திரி ஆகும்; ஒரு (தமிழ்)வருடத்திற்கு 12 மாதங்கள்! ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள்! ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள்! அவை வளர்பிறை சதுர்த்தசி,தேய்பிறை சதுர்த்தசி ஆகும்;இது நித்திய சிவராத்திரி ஆகும்;

மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மகாசிவராத்திரி ஆகும். மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது; சிவராத்திரிகள் இப்படி ஐந்து விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன; ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன;

இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும்; மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என விளக்குகிறார் சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமிக்குக் கொண்டு வந்தருமான அகத்தியர்!!!

ஒரு மனிதன் சதுர்த்தசி திதியில் இயற்கையான முறையில் இறந்து,அமாவாசையன்று தகனம் செய்தால்,அந்த ஆன்மா சிவலோகத்தில் சிவகணமாக உயர்ந்த நிலையை அடைவார்; ஈசனை முழு முதற்கடவுளாக பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் இதைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை!

சில நேரங்களில் சிவராத்திரி திதி பகலிலும் வரும்; அப்படி வந்தால், அந்த சிவராத்திரி பூஜையை பகலில்தான் செய்ய வேண்டும்; சதுர்த்தசி திதி நேரத்தில் தான் சிவராத்திரி வரும்; மதியம் வரை திரயோதசி திதி இருந்து, அதன் பிறகு, சதுர்த்தசி திதி துவங்கினால், மதியத்திற்குள் உணவு உண்டுவிடவேண்டும்; மதியம் சதுர்த்தசி திதி ஆரம்பித்ததும், சிவராத்திரி பூஜைகளைச் செய்ய வேண்டும்; சிவராத்திரி என்பது இரவில் தான் வரவேண்டும் என்பது அல்ல;

இந்த சிவராத்திரி பூஜையால் கொடிய பாவங்கள் என்று நம் நூல்களில் சொல்ல படுகின்ற பெண்களுக்கு இழைத்த துரோகம்; பெண்களுக்கு செய்த சாபம்; பெண்களுக்கு இழைத்த கொடுமைகள் நீங்கும்; அதே போல, ஒரு பெண் தனது கணவனுக்கு துரோகம் செய்திருந்தால், தவறை உணர்ந்து திருந்தி, இந்த சிவராத்திரி பூஜையைச் செய்தால்,கணவனுக்கு செய்த துரோகம் மறைந்துவிடும்; என அகத்தியர் கூறுகிறார்.

மாதமும் சிவராத்திரியும்:-

அனைத்து புண்ணியப் பலன்களையும் இந்த வருடம் வரும் யோக சிவராத்திரி பூஜை தந்துவிடும்; அறிந்து பாவங்கள் செய்திருந்தாலும், அறியாமல் பாவங்கள் செய்திருந்தாலும் அனைத்து பாவங்களையும், கர்மவினைகளையும் அழித்துவிடும் இந்த மாத சிவராத்திரி.

சித்திரை மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரிகளிலும் ஒருவன்/ஒருத்தி தனது ஆயுள் முழுவதும் செய்து வந்தால், அங்கங்களின் குறைகள் நீங்கும்; உடலின் குறைகள் நீக்கப்பட்டு, ருத்திர கணங்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்;

வைகாசி மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நாம் சாப்பிடுகின்ற மருந்து நம் உடலில் ஒட்டும்; சாப்பிடுகின்ற மருந்து உடலில் ஒட்டினால் தான் நம் நோய் நீங்கி ஆரோக்கியம் வரும்;

ஆனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், தேவதைகள் எல்லாம் நடனம் ஆடி நம்மை வணங்கி தேவலோகத்திற்கு அழைப்பார்கள்:

ஆடி மாதத்தில் வரும் இரு சிவராத்திகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், அம்பிகையுடன் சேர்ந்து சிவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டும்;

ஆவணி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை செய்தால் வேதம் ஓதிய பலன் கிட்டும்; பூணூல் அணிந்து வேதம் ஓதிய பலன் கிட்டும்;மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்:

புரட்டாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,செல்வம் பெருகும்;

ஐப்பசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,நாம் என்றுமே பசியால் வாடித் தவித்து அலைய மாட்டோம்; வாழ்நாள் முழுவதும் பசியால் அவதிப்படமாட்டோம்; அதாவது உணவிற்காக என்றுமே கையேந்தி நிற்கும் நிலை வராது;

சிவபக்தன் என்று சொல்லிக் கொள்கின்ற ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டியது, கார்த்திகை மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளிலும் பூஜைகள் செய்திடவேண்டும்; சிவராத்திரி விரதம் இருந்திடல் வேண்டும்; கார்த்திகை மாதத்து சிவராத்திரி பூஜையைப் பற்றி விவரிக்க ஒரு 100 ஆண்டுகள் போதாது;

மார்கழி மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜையை ஆயுள் முழுக்க செய்தால், பிறருக்காக தவறுகள் செய்ய மாட்டார்கள்: ஒரு மனிதன் அதுவரை செய்த அனைத்துவிதமான தவறுகளையும் அழிக்கின்ற சிவராத்திரி மார்கழியில் வரும் சிவராத்திரியாகும்;

தை மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,நெல் முதலான தானியங்கள் நன் கு விளையும்;அள்ளி வழங்கிய தானப் பலன் கிடைக்கும்;

மாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜையை மனைவி செய்தால், பிற பெண்களை நாடும் கணவன் திருந்திவிடுவான்; கணவன் செய்தால், பிற மாதரை நாடும் எண்ணத்தில் இருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்;

பங்குனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,சிவபெருமானின் பங்குனி உத்திர நடனத்தைக் காணும் அளப்பரிய பாக்கியம் கிடைக்கும்; பங்குனி உத்திர நடனத்தைப் பார்ப்பதற்கு 3 கோடி முறை மனிதப் பிறப்பு எடுத்து சிவசிந்தையோடு வாழ்ந்தால் தான் கிட்டும்; அதை ஒரே ஒரு பிறவி பங்குனி மாத சிவராத்திரி பூஜைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கிடைத்துவிடுகின்றன;

நமது பிறந்த நட்சத்திரமும், சிவராத்திரியும் சேர்ந்து வரும் நாளில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தாலே போதும்; கலியுகத்தில் மானுடப் பிறவி எடுத்தமைக்கான லட்சியத்தை அடைந்துவிட்டதாக அர்த்தம்;

ஒருவேளை பிறந்த நட்சத்திரமும் சிவராத்திரியும் இணைந்து வராவிட்டாலும் கூட, பிறந்த கிழமையும் சிவராத்திரியும் இணைந்து வரும் நாளில் கூட சிவராத்திரி விரதம் இருந்து சிவபூஜை செய்வது மிகுந்த புண்ணியம் தரும்;

நட்சத்திரமும் சிவராத்திரியும்:-

அசுவினியும் சிவராத்திரியும்:

இந்த நாளில் சிவராத்திரி பூஜை செய்தால்,அற்புதமான வேலை கிடைக்கும்;(உங்களுக்குப் பிடித்தமான வேலை கிடைக்கும்)

பரணியும் சிவராத்திரியும்:

பெற்ற தாய்க்கு உத்தமமாய் கர்மம் செய்த பலன் களைக் கொடுக்கும்; கார்த்திகையும் சிவராத்திரியும்: முருகக் கடவுளுடன் சேர்ந்து ஈசனைக் கண்ட பலனைக் கொடுக்கும்;

ரோகிணியும் சிவராத்திரியும்:

திருமாலே நமக்கு வெண்சாமரம் வீசுவார்; மிருகசீரிடமும் சிவராத்திரியும்: பசுவிற்கு உணவு இட்ட பலன் கிட்டும்;கோ பூஜை செய்த பலன் கிட்டும்;

புனர்பூசமும் சிவராத்திரியும்:

மறுபிறவி(புனர் ஜன்மம்) எடுத்த பலன் கிட்டும்; பூசமும் சிவராத்திரியும்: ஈசன் அருகே இருக்கக் கூடிய அனுக்கிரகம் கிட்டும்; ஆயில்யமும் சிவராத்திரியும்: எவ்வளவு வேதனைகள் ஏற்பட்டாலும்,அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஈசனுக்கு திருப்பாதத் தொண்டு செய்யக் கூடிய மன நிலை கிட்டும்;

பூரமும் சிவராத்திரியும்:

நோய்கள் அணுகாது; உத்திரமும் சிவராத்திரியும்: லோபியாக(கஞ்சனாக) இருந்தாலும்,சாந்த நிலை அடைவார்; சித்திரையும் சிவராத்திரியும்: தேவப் பிறவி கிட்டும்;

பூராடமும் சிவராத்திரியும்:

யாரோடும் தேவையில்லாமல் நட்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்; சதயமும் சிவராத்திரியும்: சாத்திரமாய் இருப்பார்;

பூரட்டாதியும் சிவராத்திரியும்:

தேவர்களே வணங்குவர்; உத்திரட்டாதியும் சிவராத்திரியும்: கர்ப்பவாசத்தில் உழல மாட்டார்கள்;

ரேவதியும் சிவராத்திரியும்:

இனி பிறவியே எடுக்க மாட்டார்கள்: இம்மாதம் வருவது திருவோண நட்சத்திரத்தில் சிவராத்திரி:- இந்த நாளில் விரதமிருந்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று இந்த பூலோகத்தில் குபேரன் போன்ற வாழ்க்கை வாழ்வார்கள் என சிந்தாமணி நிகண்டு கூறுகிறது.

கிழமையும் சிவராத்திரியும்:-

திங்கள்:

சோம்பேறியாகத் திரியும் பிறவி எடுக்க மாட்டார்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள். கோவில் கட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கும்;

செவ்வாய்:

அரசாங்க வேலை கிடைக்கும்; சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்,மாநில அரசின் மந்திரி அல்லது மத்திய அரசின் மந்திரி பதவி கிடைக்கும்; (இப்பிறவியில் இப்பதவிகளில் இருப்பவர்கள் கடந்த ஐந்து பிறவிகளாக தொடர்ந்து இந்தக் கிழமையில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தவர்களே!!!)

புதன்:

திருமாலை பார்த்த பலன் கிட்டும்; அதாவது,திருமால் சங்கு சக்கரத்துடன் சாம கானம் ஓத, காட்சி அளித்து ஆசி கொடுப்பார்;

வியாழன்:

குரு கிட்டுவார்;குருவுடன் சேர்ந்து திருப்பணி செய்ய வாய்ப்பு கிட்டும்; சித்தர்கள் அனைவரும் ஆசி கூறுவார்கள்.

வெள்ளி;

ஆத்மவிசாரம் செய்வார்கள்; தான் யார் என்பதை உணர வெள்ளிக்கிழமைகளில் வரும் சிவராத்திரியன்று பூஜை+விரதம் இருக்க வேண்டும்; தான் யார்? என்பதை உணர்ந்தவர் ரமண மகரிஷி! தான் என்பது எங்கே இருக்கின்றது? மனதிற்குள் இருக்கின்றது; தான் எங்கிருந்து வருகின்றது? இருதயத்தில் இருந்துதான் வருகின்றது. வெள்ளிக்கிழமையும் சிவராத்திரியும் வரும் இரவில் தனியாக அண்ணாமலை கிரிவலம் வந்தால் ஆத்மவிசாரம்(நான் யார்? என்பதற்கான விடை) கிட்டும்; என திருவண்ணாமலை தல புராணம் சொல்கிறது.

சனி:

சனிபகவானால் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும்; ஆமாம்! சனிக்கிழமையன்று வரும் சிவராத்திரி விரதம்+பூஜை செய்தால் ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனியால் வரும் துயரம் சிறிதும் வராது;நெருங்காது;

ஞாயிறு:

சூரியதேவனாகப் பிறக்கலாம்; சூரியப் பதவி கிடைப்பது என்பது மிகவும் அரிதிலும் அரிதான அதிசயம்

தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரி என்பது மாசி மாதம் வரும் மஹாசிவராத்திரியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்; 12 தேய்பிறை சிவராத்திரிகள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;எக்காரணம் கொண்டும் இதில் இடைவெளி விழுந்துவிடக் கூடாது;

அதுவும் சிவராத்திரி இரவில் நள்ளிரவு 12 மணிக்கு கிரிவலம் புறப்பட்டு, மறுநாள் அதிகாலையில் 5.20 முதல் 6.20க்குள் அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்; பிறகே,சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்;

40 ஆண்டுகளுக்கு முன்பு,வாரம் ஒருமுறை குடும்பத்துடன் குலதெய்வம் இருக்கும் இடத்துக்குச் சென்று வழிபடுவது வழக்கமாக இருந்தது;

20 ஆண்டுகளுக்கு முன்பு, அதுவே மாதம் ஒரு நாள் என்று குறைந்துவிட்டது; இதெல்லாம் சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களால் மட்டுமே பின்பற்ற முடிந்தது; மாநகரங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களால் இதைக் கூட பின்பற்ற முடியாமல் போனது;

தற்போது, ஆண்டுக்கு ஒருமுறைதான் அதுவும் மஹாசிவராத்திரி எனப்படும் மாசி மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மட்டுமே குலதெய்வம் கோவிலுக்குச் செல்கிறார்கள்;

ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும்; நான்கு ஜாமப் பூஜைகள் சிவராத்திரி இரவில் நடைபெறும்; இதையே நான்கு காலப் பூஜை என்றும் அழைக்கின்றனர்;

முதல் ஜாமப்பூஜை என்ற முதல் கால பூஜை சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை செய்வர்;

இரண்டாம் ஜாமப்பூஜை என்ற இரண்டாம் கால பூஜை இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 மணி வரை செய்வர்;

மூன்றாம் ஜாமப்பூஜை என்ற மூன்றாம் கால பூஜை நள்ளிரவு மணி 12.01 முதல் பின்னிரவு 3.00 மணி வரை செய்வர்;

நான்காம் ஜாமப்பூஜை என்ற நான்காம் கால பூஜை பின்னிரவு மணி 3.01 முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை செய்வர்;

சிவராத்திரி இரவு முழுவதும் சிவாலயம் அல்லது குலதெய்வம் கோவிலில் பின்வரும் மந்திரங்களை ஜபிக்க வேண்டும்; சிவராத்திரிக்கு மறுநாள் பகல் முழுவதும் விழித்திருக்க வேண்டும்; அப்படி இருந்தால் மட்டுமே சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிட்டும்;

முதல் கால பூஜை

(சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) பசும்பால் (கிராமங்களில் தேடிப்பார்த்து வாங்குங்கள்; பாக்கெட் பால் உண்மையான பால் அல்ல); தேன், பசுநெய், பசும் சாணம், கோஜலம் (பசுவின் சிறுநீர்) இவைகள் ஐந்துமே பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது; சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பஞ்ச கவ்யம் அளித்தவர்கள் யாரும் பஞ்சத்தால் வாடமாட்டார்கள்; சிவலிங்கத்திற்கு சந்தனப்பூச்சு செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; இதனால், வேத நாயகனின் ஆசி கிட்டும்; பச்சைப்பயிறு நைவேத்தியமாக வைக்க வேண்டும்; இதனால், பெரும் புண்ணியம் கிட்டும்; இதனால்,அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள்; எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வார்கள்;

பஞ்சகவ்யம் வாங்கித்தர இயலாதவர்கள், சிவராத்திரி பூஜைக்கு உங்களால் முடிந்த உதவிகளை அருகில் உள்ள சிவாலயங்களுக்கு கொடுக்கலாம்; இந்த முதல் ஜாமப் பூஜையில் ரிக் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; ரிக் வேதம் சொல்லத் தெரியாவிட்டால், ரிக் வேதிகளை அழைத்து வந்து ஓதச் சொல்லலாம்; அதுவும் இயலாதவர்கள் ஓம் நமசிவாய என்ற ஸ்தூல பஞ்சாட்சரத்த்தை இந்த முதல் ஜாமம் முழுவதும் ஜபிக்க வேண்டும்; இதனால்,ருத்ரம், ரிக் வேதம், சாம வேதம் சொன்ன பலன் கிட்டும்; ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின் ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய்ப் புணர்ந்த பின் ஓம்நமச்சிவாயமே உணர்ந்து உட்கலந்து நிற்குமே! 

இரண்டாம் ஜாம(கால)பூஜை

(இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை)

இரண்டாம் ஜாமத்தில் ஈசனை தரிசித்தால், நம்முடைய பிறவி முடிந்து, மீண்டும் மறுபிறவி எடுத்த பலன் கிட்டுகின்றது; பால், தேன், சர்க்கரை, நெய், தயிர் கலந்த ரச பஞ்சாமிர்தம் ஆகும்; ஈசனாகிய சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும்; இந்த அபிஷேகத்திற்கு, பால் கொடுத்தால் தாய்ப்பால் இல்லாதவள், தாய்ப்பால் பெறுவாள்; சுத்தமான பசும்பாலில் தான் அபிஷேகம் செய்ய வேண்டும்; காரம்பசுவின் பால் எனில் மிகவும் சிறப்பு; கிறிஸ்தவ ஆங்கிலேயனின் 300 ஆண்டுச் சதிகளால் மாவட்டத்திற்கு ஒரு ஊரில் தான் காரம்பசுவே இருக்கின்றது; சர்க்கரை கொடுத்தவருக்கு சர்க்கரை நோய் வராது; தயிர் கொடுத்தவருக்கு தயிர் திரண்டு உருவாவது போல,செல்வம் பெருகும்; சிவலிங்கத்திற்கு அகில் குழம்பு பூச்சு சார்த்த வேண்டும்; இதனால்,லட்சுமிதேவி நம்மைவிட்டு விலகாமல் இருப்பாள்; தாமரைப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக பாயாசம் வைக்க வேண்டும்; நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்; இதன் மூலமாக நம்முடைய குழந்தைகள் நற்குணத்துடன் தானாய் வளரும்; இந்த இரண்டாம் கால பூஜை சமயத்தில் (இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை) யஜீர் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; க்ருஷ்ண யஜீர்,சுக்ல யஜீர் என்று இரு பெரும் யஜீர் வேதப்பிரிவுகள் இருக்கின்றன; இருவருமே கூடி அவரவர் யஜீர் வேதத்தை ஓத வேண்டும்; இதனால்,நாடு சுபிட்சமடையும்; நாமும் நன்றாக இருப்போம்; இன்று தேசபக்தியுடன் கூடிய தெய்வபக்திதான் தேவை; ஒருவேளை,யஜீர் வேதம் தெரியாவிட்டால் அல்லது யஜீர் வேதம் தெரிந்தவர்கள் கிடைக்காவிட்டால் வருத்தப்படவேண்டியதில்லை; சிவாய நம என்ற சூக்சும பஞ்சாட்சரத்தை இந்த இரண்டாம் காலம் முழுவதும் ஜபிக்க வேண்டும்; செம்பு பொன்னாகும் சிவாயநம வென்னீற் செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம் செம்பு பொன்னாகும் ஸ்ரீயும்,கிரீயுமெனச் செம்பு பொன்னான திரு அம்பலமே! இதையே நமது தாத்தா பாட்டிகள் பழமொழியாக எழுதி வைத்துள்ளனர்; சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு ஒரு நாளும் துன்பமில்லை;

மூன்றாம் ஜாம(கால) பூஜை

(நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3.00 மணி வரை) இந்த காலத்தில் சிவலிங்கத்திற்கு கொம்புத்தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்; சிவலிங்கத்திற்கு மேல் பூச்சு அரைத்த பச்சைக் கற்பூரம் சார்த்த வேண்டும்; வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக எள் சாதம் படையல் இடவேண்டும்; சாம வேதம் பாடவேண்டும்; சாமவேதம் தெரியாவிட்டால், சிவயசிவ காரண பஞ்சாட்சரத்தை நள்ளிரவு 12 முதல் பின்னிர்வு 3 மணி வரை ஜபிக்க வேண்டும்; போகின்ற உயிரை நிறுத்தவும், விரும்பிய துவாரத்தின் வழியாக உயிரைச் செலுத்தவும் வல்லது இந்த சிவயசிவ என்ற மந்திரமாகும்; இதில் இரவு 10.54 முதல் நள்ளிரவு 12.24 மணி வரையிலான நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என்று பெயர்;இந்த நேரத்தில் யார் “சிவயசிவ; சிவயசிவ” என்று ஓதுகிறார்களோ, அவர்களுடைய ஆவி பிரிகின்ற போது அளவற்ற சிவகடாட்சம் உண்டாகும்;

நான்காம் ஜாம(கால) பூஜை 

(பின்னிரவு 3.01 முதல் மறுநாள் காலை 6 மணி வரை) கரும்புச்சாறு கலந்த அபிஷேகம் சிவலிங்கத்திற்குச் செய்ய வேண்டும்; மேல் பூச்சு அரைத்த குங்குமப்பூ பூச வேண்டும்; வில்வத்தாலும், நீலோற்பவ மலர்களாலும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்; இன்று நைவேத்தியமாக சுத்தமான அன்னம் படையல் இடவேண்டும்; பச்சரிசி சாதம் வடித்து, அதில் குறைந்தது இரண்டு கரண்டி பசுநெய் விடவேண்டும்; இதுவே சுத்த அன்னம் இடவேண்டும்; அதர்வண வேதம் பாடவேண்டும்; அதர்வண வேதத்தை எட்டு வருடங்கள் குரு அருகில் இருந்தே ஜபித்துப் பழகவேண்டும்; குரு அருகில் இல்லாமல் இந்த அதர்வண வேதத்தின் ரகசிய மந்திரத்தை ஜபித்தால்,உடனே உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும்; அதர்வண வேதம் தெரியாவிட்டால், பின்வரும் திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பாடினால் போதுமானது; சிவசிவ என் கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிட தீவினை மாளும் சிவசிவ என்றிட தேவரும் ஆவர் சிவசிவ என்றிட சிவகதி தானே! இதையும் பாட இயலாதவர்கள் சிவசிவ என்ற அதி சூக்சும பஞ்சாட்சரத்தை ஜபித்தாலே போதுமானது; பின்னிரவு 3 மணி முதல் விடிகாலை 6 மணி வரை இப்படி ஜபிக்க வேண்டும்; இவ்வாறு நான்கு ஜாம(கால) பூஜைகளையும், சிவராத்திரி விரதங்களை யாரொருவர் ஆண்டுகள் செய்கின்றார்களோ, அவர்கள் இறுதியாக வேதியர்களுக்கு ஸ்வர்ண தானம், பூ தானம், கோதானங்களை அன்புடன் செய்ய வேண்டும்; அனைவருக்கும் அன்னதானம் போன்ற தான தருமங்களைச் செய்ய வேண்டும். அதுவும் சிவ தலங்களில் அன்னதானம் செய்ய வேண்டும்; இப்படிச் செய்து முடிப்பவர்கள் முக்தி அடைவார்; அவர்களின் பரம்பரையும் அகத்தியர் பெருமானின் குருவருளோடு சொர்க்கத்தை அடைவார்கள்; சிவராத்திரியின் மகிமையை சுக்ரதேசாத்திரியில் சாஸ்திரம் கூறுகின்றது; இதன் படி, மகாசிவ ஆகமங்களும்,சிவபுராணங்களும் விவரிக்கின்றன; சிவராத்திரி மகிமைகளைக் கேட்டவர் சிவனாய் ஆவார்; சொன்னவர் சிவன் நாமத்தில் என்றும் திளைப்பார்; கேட்டு மகிழ்கின்றவரும் சிவனாய் ஆவார்; இதனைச் செய்கின்றவர்களுக்கு சிவலோகப் பிராப்தம் உண்டு;

மூலம்: Whatsapp



Similar Posts : வேடன் சிவராத்திரி பலன் பெற்ற கதை, சிவராத்திரி, அகத்தியமகரிஷி அருளிய சிவராத்திரிவிரதம், அகத்தியமகரிஷி அருளிய சிவராத்திரி விரதம்,

See Also:சிவராத்திரி

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Best Software for Astrology
2025-01-23 00:00:00
fantastic cms
ஸ்ரீஅரவிந் கெஜ்ரிவால்
2025-02-03 00:00:00
fantastic cms
Types of Astrology
2025-02-07 00:00:00
fantastic cms
What is medical astrology and how does it work
2025-02-12 00:00:00
fantastic cms
Medical Astrology for cancer Natives -General Analysis
2025-02-12 00:00:00
fantastic cms
Cancer disease prediction using Medical Astrology
2025-02-12 00:00:00
fantastic cms
Thiruvallam Sri Parasurama Swamy Temple
2025-02-18 00:00:00
fantastic cms
Rishabananthar - A Legend Researcher in Mudaku Astrology
2025-02-23 00:00:00
fantastic cms
Astrology Myths vs Reality
2025-02-25 00:00:00
fantastic cms
Sithars Matrimony-Trusted Indian Matrimonial website
2025-02-26 00:00:00
  • Adi Shankara
  • Agni
  • Ascendant
  • Astrology
  • Astrology originate
  • astrology software
  • astronomy
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology Software
  • best-astrology-software
  • Bodhidharma Birth
  • Chandiran
  • Chandran
  • Chhajju Bania
  • Chhajju Bania's NDE
  • Chick
  • Chicken Biryani in English
  • Mangal Singh
  • Mangal Singh's NDE
  • medicine
  • NDE
  • Tamil astrology software
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com